Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
சூரிய சக்தியில் இயங்கும் 'சோலார் இம்பல்ஸ் -II' விமானம், கடந்த 2015 மார்ச் 9ஆம் தேதி அபுதாபியில் இருந்து கிளம்பி உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது. 'பெட்ராண்ட் பிக்கார்டு' எனும் சுவிஸ் விமானி அந்த விமானத்தைச் செலுத்துகிறார். தற்போது, ஸ்பெயினில் இருந்து 11ஆம் தேதி புறப்பட்ட சோலார் விமானம், இரண்டு நாட்கள் பயணத்துக்குப் பின் நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோ வந்தடைந்தது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
உலக அளவில், 'பெர்சனல் கம்ப்யூட்டர்'கள் விற்பனை குறைந்துள்ளதாக, அமெரிக்க ஆய்வு நிறுவனமான, 'கார்ட்னர்' தெரிவித்து உள்ளது. நடப்பு ஆண்டில், ஜூன் மாத முடிவில், உலகில், 6.43 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இது, முந்தைய ஆண்டின் விற்பனையைவிட, 5.2 சதவீதம் குறைவு. அமெரிக்காவில், 1.52 கோடி; மத்திய கிழக்கு நாடுகளில், 1.78 கோடி; ஆசிய பசிபிக் நாடுகளில், 2.27 கோடி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
'ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறக் கூடாது' என்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் கோரிக்கையை, அந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏற்கவில்லை. இதை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக கேமரூன் அறிவித்தார். அவர் பதவி விலகுவதைத் தொடர்ந்து சக அமைச்சர்கள் சோகத்துடன் அவரை வழியனுப்பி வைத்தார்கள். பிரிட்டனின் அடுத்த பிரதமராக தெரசா மே, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில், 5 ஆண், 8 பெண் என, 13 சதுப்பு நில மான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில், பெண் மான் ஒன்று, ஆண் குட்டியை ஈன்றுள்ளது. வண்டலூர் பூங்காவில் இந்த வகை மான், குட்டி ஈனுவது இதுவே முதல் முறை. இதனால், பூங்காவில் உள்ள சதுப்பு நில மான்களின் எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்துள்ளது. சதுப்பு நில மான்கள், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களிலும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
ஹரியானா மாநிலம் குர்கானில், இண்டஸ் இண்ட் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில், 'டெபிட் கார்டு' மட்டுமின்றி, 'காசோலை (Cheque) மூலமாகவும் பணம் பெறும் வசதி அறிமுகமாகி உள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தில், காசோலையைச் செருகியதும், அது, அப்படியே 'ஸ்கேன்' செய்யப்பட்டு, வங்கி அலுவலரின் பார்வைக்குச் செல்லும். அவர், அதில் உள்ள கையெழுத்தை உறுதிசெய்து, அனுமதி அளித்த அடுத்த நொடியில், ஏ.டி.எம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
An analysis of ant colony behavior could yield better algorithms for network communication, say investigators. Biologists have long suspected that ants base their population-density estimates on the frequency with which they, literally bump into other ants while randomly exploring their environments. That theory gets new support from a theoretical paper. The paper shows that observations from random exploration of the environment converge very quickly on an accurate estimate of population density. Indeed, they converge about as quickly as is theoretically ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
வியாழன் கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2011 ல் ஜுனோ (Juno) விண்கலத்தைச் செலுத்தியது. இது தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு 2016 ஜூலை 4- அன்று வியாழனை அடைந்தது. தற்போது, வியாழன் கிரகத்தின் மூன்று நிலவுகளை முதன்முறையாகப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பி உள்ளது. ஜூனோவுடன் இணைக்கப்பட்டுள்ள உயர்திறன் கேமரா மூலம் 43 லட்சம் கி.மீ. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஒரு கார்ட்டூன் படத்தில் 'கிளவுட் சீடிங்' (Cloud Seeding) என்று காட்டினார்கள். அந்த முறையில் மழையை வரவழைக்க முடியுமா? அது எப்படி?R. ஜானேஷ் சரவணன், 5ஆம் வகுப்பு, சின்மயா வித்யாலயா, வடவள்ளி. கோவை.முடியும்! இதுதான் செயற்கை மழை. சிறுசிறு நீர் நுண் திவலைகள் திரவ நிலையில் அல்லது பனி நிலையில் குவிந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
நம்மைப் போலவே மீன்களுக்கும் உயிர் வாழ ஆக்சிஜன் தேவை. ஆனால், தண்ணீருக்குள் எப்படி மீன்கள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெறுகின்றன? ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளால் நிறைந்தது தண்ணீர். அதைப் பிரித்து ஆக்சிஜனை மட்டும் தனியாக உட்கொள்ள முடியாது. பின் எப்படி நீருக்குள் இருக்கும் மீன்கள் ஆக்சிஜனைப் பெறுகின்றன? தண்ணீர் கலக்கப்படும்போதும், நீர்த் தாவரங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
மேல் பகுதியில் பசுமையான தடித்த இலைக் கொத்து. சொரசொரப்பான மேற்பகுதி. உள்ளே மஞ்சள் நிற சதைப்பகுதி. இனிப்பும், புளிப்புமாக சுவை கொடுக்கும் அன்னாசிப் பழத்தை (Pine Apple) எல்லோருக்கும் பிடிக்கும்தானே! 'அன்னாசி' என்பது போர்ச்சுக்கீசியச் மொழிச் சொல். பிரேசில் நாட்டைத் தாயகமாகக் கொண்ட அன்னாசிப் பழத்தைத் தமிழில் 'செந்தாழை' பழம் என்கிறோம். வெப்ப மண்டலப் பழமான அன்னாசி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
நமக்குள் சிறு வயதில் எத்தனையோ கனவுகள் இருக்கும். கடல்களைக் கடந்து புதிய தேசங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கொலம்பஸ் கண்ட கனவு! இத்தாலியின் ஜெனோவா (Genoa) நகரில் 1451ல் பிறந்தவர் 'கிறிஸ்டோபர் கொலம்பஸ்' (Christopher Columbus). தனது கனவு தந்த உந்துதலால் பதினான்கு வயதிலேயே மாலுமி ஆனார் கொலம்பஸ். கடல் வழிப் போக்குவரத்து அதிகம் இல்லாத அந்தக் காலத்தில் பண்ட மாற்றம், வணிகம் போன்றவை தரை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
நானும் வாலுவும் வயலின் வகுப்புக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தபோது பாலு சுருண்டு படுத்திருந்தான். வயிற்றுவலியாம். நான் வயலினில் புதிதாகக் கற்றுக் கொண்ட ஒரு பாட்டை வாசித்தேன்.பாலுவால் அதை ரசிக்க முடியவில்லை. “நீ என்ன, ரோம் பற்றி எரிகிறபோது வயலின் வாசித்த நீரோ மன்னன் மாதிரி, நான் வலியில் துடிக்கிறபோது வயலின் வாசிக்கிறாய்?” என்றான்.உடனே ஞாநி மாமா சொன்னார். “பாலு. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
'கரடிகை என்றால் என்ன?' என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? 'கரடியின் கை' என்பீர்களா?அது அல்ல விடை. கரடிகை என்பது ஓர் இசைக் கருவியின் பெயர். பழங்காலத்தில் பக்க வாத்தியமாகப் பயன்படுத்தப்பட்டது. கோயில், மேடை, விழாக்களில் இந்தக் கருவி இசைக்கப்பட்டிருக்கிறது. கரடி கத்துவது போல் ஓசை எழுப்பக் கூடியது என்பதால் இப்படி ஒரு பெயர்.இன்னொரு கருவி உண்டு. அதன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
'குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்' என்பது திருக்குறள்.இதில், குழல் இசையைக் கேட்டிருக்கிறோம். யாழ் இசை? கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால், இந்த இசைக் கருவியே இப்போது புழக்கத்தில் இல்லை. பழந்தமிழ் இலக்கியங்களில், யாழ் பற்றிய குறிப்புகள் உள்ளன. இது ஒரு நரம்பிசைக் கருவி. பல்வேறு கலாசாரங்களில் யாழ் இருந்துள்ளது. மூவாயிரம் வருடங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
மங்கள் பாண்டே பிறந்த தினம் ஜூலை 1919.07.1827 - 08.04.1857''சகோதர வீரர்களே! நம்மையும் நம் உணர்வுகளையும் மதிக்காமல் அவமதிக்கும் இந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்திடுவீர்! நம்மை அடிமைப்படுத்தி மிருகங்களைப் போல நடத்தும் இந்த அந்நியர்கள் மீது பாயுங்கள். இவர்களைத் துரத்தி நமது நாட்டை மீண்டும் பழைய உன்னத நிலைக்கு உயர்த்தச் செயல்படுங்கள்!” என்று உரக்கக் கூவி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
சேர அரசர் பெருஞ்சேரல் இரும்பொறையைக் காண விரும்பினார் புலவர் மோசிகீரனார். எழுத்தாணியும், ஓலைச்சுவடியுமாக அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார். நீண்ட பயணம் சோர்வைக் கொடுத்தது. களைப்பாறிச் செல்ல நேரம் இல்லை. தொடர்ந்து நடந்தார்.தளர்வுடன் வந்தவரை காவலர்கள் அடையாளம் கண்டு உள்ளே செல்ல அனுமதித்தனர். அரண்மனைக்குள் பிரவேசித்த புலவர், அங்கே இருந்த கட்டில் ஒன்றில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
ஓவியக் கலை பாரம்பரியமானது. ஓவியம் வரைதல் நாட்டுக்கு நாடு வேறுபடும். அந்தந்த பகுதியின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையிலும், மக்கள் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதாகவும் ஓவியங்கள் விளங்குகின்றன. நம் தஞ்சாவூர் ஓவியங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. அதுபோலவே பீஹார் மாநிலத்தில் உள்ள மதுபனி மாவட்டத்தில் தோன்றிய பாரம்பரியம் மிக்க ஓவியக்கலைதான் 'மதுபனி' (Madhubani). 'மதுர் பன்' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
சாந்தி: என்னாச்சு மஞ்சு... காலை சாய்ச்சு சாய்ச்சு கோணலா நடக்குற?மஞ்சு: என்னைப் பார்த்தா ப்ரேக் டான்ஸுக்கு ஸ்டெப் போடுற மாதிரி தெரியுதா? குதிரைல இருந்து கீழ விழுந்துட்டேண்டி... அதான் இப்பிடி.சா: ஓ... பீச்சுல போய் நீ போட்ட ஆட்டம் இதுதானா? குதிரை நல்லா இருக்கில்ல?ம: ஆமா ஆமா. குதிரைக்கு ஒண்ணும் ஆகலை. அலெக்ஸாண்டர் மாதிரி ஏற நெனச்சு, எனக்கு அடிபட்டதுதான் மிச்சம்.சா: அலெக்சாண்டர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
தும்பிகளைப் பிடித்து விளையாடுவது (Dragonfly) என்பது சிறுவர்களாகிய நமக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. நமக்கு இது விளையாட்டு என்றாலும், தும்பிகளுக்குத் துன்புறுத்தலாகவே இருக்கும். அதற்காக, நாமே நம் கைப்பட தும்பி பொம்மை செய்யக் கற்றுக்கொண்டால் அதை வைத்து மகிழ்ச்சியாக விளையாடலாம் அல்லவா!தேவையான பொருட்கள்1. OHP தாள் (கண்ணாடி போன்ற மெல்லிய பிளாஸ்டிக் தாள்)2. மர கிளிப் - 13. மஞ்சள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
சிப்பாய் புரட்சி எனப்படும் முதல் சுதந்திரப் போர் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னால் மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் பிறந்தேன். பத்து வயதில் அம்மாவையும் பதினாறு வயதில் அப்பாவையும் இழந்தேன். சிறு வயதில் இருந்தே அநீதிகளைக் கண்டால் எனக்கு கோபம் வந்துவிடும். அதனால்தான் நேர்மையையும் உண்மையையும் இறுதிவரை கடைப்பிடித்தேன்.பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் பூனா, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
உலகில் இருக்கும் பொருட்கள் எல்லாம் பல்வேறு தனிமங்களால் ஆனவை; தனிமங்கள் எல்லாம் மிகச் சிறிய அணுக்களால் ஆனவை என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். எழுதும்போது வைக்கும் ஒரு புள்ளிக்குள் 20 லட்சம் அணுக்களை அடக்கிவிடலாம். அணுவின் எடை அவ்வளவு குறைவு. ஹைட்ரஜன் அணுவின் எடை 1.673 X 10---24 கிராம் என்று சொல்கிறார்கள். அதாவது 1.673 என்ற எண்ணை, ஒன்றுக்குப் பக்கத்தில் 24 பூஜியங்கள் சேர்த்த ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
ஒரு பட்டுப் புடவை நெய்ய சுமார் 50,000 பட்டுப்பூச்சிகளைக் கொல்ல வேண்டும். 'இவ்வளவு பூச்சிகளைக் கொன்று நெய்யும் பட்டாடை தேவையா?' என்ற கேள்வி எழுகிறது. பட்டுப்பூச்சி கூட்டை உடைத்துக் கொண்டு வெளிவந்தால், கூட்டில் துளை ஏற்பட்டு, சுற்றி இருக்கும் பட்டு இழை சிதையும். இதனால், கொதிக்கும் நீரில் கூடுகளைப் போட்டுப் பூச்சிகளைக் கொன்றுவிட்டு, பட்டு இழை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
இந்தப் பூமியில் எந்த ஓர் உயிரினமும் தனித்து வாழவே முடியாது. மரம், செடி, கொடி, விலங்குகள் என்று ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ முடியும். இந்த உயிர்ச்சூழலைத்தான் 'பல்லுயிரியம்' என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். நிலத்தில் இருப்பது போலவே, கடலிலும் பல்லுயிரிய அமைப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் பவளப்பாறைகள் மிகவும் முக்கியமான ஓர் அமைப்பு. 'பவளம்' எனப்படும் ஒரு வகை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
எந்த வேறுபாடும் இன்றி எல்லாரும் ரசிக்கும் ஒரே அதிசயம் இசை! கருவில் இருக்கும் குழந்தைகூட இசையை ரசிக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இத்தனை அதிசயங்களையும் கேட்டு மகிழ ஆரம்ப காலத்தில் பயன்பட்ட இசைக் கருவி கிராமபோன் (Gramophone)! டிஜிட்டல் வளர்ச்சியில் ரிக்கார்டு பிளேயர் என்றும் கேசட் என்றும் பரிணாம மாற்றம் நிகழ்ந்தது. அதன்பிறகு இசையை ஆட்சி செய்த DVD, CD கூட மொபைல் போன் வந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
நமக்குத் தெரிந்ததெல்லாம், சினிமா, டிவி... ஆனாலும், ஜெமினி சர்க்கஸ், ஜம்போ சர்க்கஸ் போன்ற பெயர்களையும் கேள்விப்படத்தான் செய்கிறோம். அபூர்வமாக இருந்தாலும்கூட, சர்க்கஸ் என்பது சாதாரணமானது அல்ல என்பது அதைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். இடைவிடாமல் இரண்டு மூன்று மணி நேரம், மனிதர்களும் விலங்குகளும் சாகச நிகழ்ச்சிகளை நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டுவது சர்க்கஸ். இந்தக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
நெல்சன் மண்டேலா பிறந்த தினம் ஜூலை 1818.07.1918 - 05.12.2013குழந்தைகள் தினம், பெண்கள் தினம் கொண்டாடுவது போல தனிமனிதர் ஒருவரின் பிறந்த நாளையும் ஐ.நா. அவரது பெயரிலேயே கொண்டாடுகிறது. அந்தப் பெருமைக்கு உரியவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). மனித உரிமைகள் மேம்பட, ஆண், பெண் சம உரிமை ஏற்பட, பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலரப் பாடுபட்டவர் மண்டேலா. அவர் பிறந்த ஜூலை 18ஆம் நாளைத்தான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
கலிஃபோர்னியாவில் யு.எஸ். ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், ஜப்பானின் கான்டா சுனேயமாவிடம் 10 - 21, 14 - 21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவில் உலகின் 'நம்பர் - 1' வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜெர்மனியின் கெர்பரை வீழ்த்தி, கோப்பை வென்றார். இது, இவரது 22ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன் மூலம், ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் (22பட்டம்), சாதனையைச் சமன் செய்தார்.* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 21ஆம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அனுபவ விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனான ராம்தின் நீக்கப்பட்டார். ஜேசன் ஹோல்டர் கேப்டனாக செயல்பட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
ஊக்க மருந்து பயன்படுத்திய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு, இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். இதன் மீதான முடிவு செப்டம்பர் 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஷரபோவா ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
பிரேஸில் ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் 5ல் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்தார் சிங் நீக்கப்பட்டார். இவர் சாதாரண வீரராக அணியில் தொடர்வார். கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் புதிய கேப்டனாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
பிரான்ஸில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் ஃபைனலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயம் அடைந்து பாதியில் வெளியேறினார். பின் கூடுதல் நேரத்தில் ஈடர் அசத்தல் கோல் அடிக்க, போர்ச்சுகல் அணி, 1 - 0 என பிரான்ஸை வீழ்த்தி, முதன் முறையாகக் கோப்பை வென்று சாதனை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்சச்சின் டெண்டுலகர் (இந்தியா) 259 இன்னிங்ஸ்சமீபத்திய இந்திய ஓபன் பாட்மின்டனில் பட்டம் வென்ற வீராங்கனைரட்சனோக் (தாய்லாந்து) எதிர் - சீனாவின் லி செயுரி2012 லண்டன் ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில் தங்கம் வென்ற அணிநெதர்லாந்து (எதிர் - ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X