Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
வாகனப் புகையினால் ஏற்படும் மாசுகளைக் குறைப்பதற்காக இனி பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. 2040ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் வாகனங்களே இல்லாத நிலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பிரான்ஸ் சூழலியல் அமைச்சர் நிக்கோலஸ் வெளியிட்டுள்ளார். அதிக புகை வெளியிடும் வாகன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
மனித மூளையின் வெவ்வேறு பகுதிகளை, தொடர் பயிற்சிகளின் மூலம் மற்ற செயல்களையும் செய்ய வைக்க முடியும் என்று கனடாவின் மெக்கெல் பல்கலைக்கழக (McGill University) ஆய்வு நிறுவியுள்ளது. உதாரணத்திற்கு, மூளையின் மைய டெம்போரல் (Middle Temporal) எனும் பகுதி, நகரும் பொருட்களைப் பார்க்கும் திறனோடு தொடர்புடையது. ஒருவரது மூளையில் இப்பகுதி செயலிழந்து விட்டால், அவரால் நிலையாக இருக்கும் பொருட்களை நன்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
மஸ்தனம்மா (Karre Mastanamma) என்ற 106 வயது பாட்டியின் வீடியோக்கள் யூ ட்யூப் இணையதளத்தில் மிகவும் பிரபலம். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். ஆந்திர மாநிலம் கொபல்லே கிராமத்தை சேர்ந்தவர் மஸ்தானம்மா. வாழ்வில் அடுக்கடுக்காக தனக்கு நேர்ந்த துயரங்களை அலட்சியப்படுத்தியபடி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவரது கொள்ளுப்பேரன் லக்ஷ்மண் தனது நண்பர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
The National Zoological Park in New Delhi is exploring options to launch an animal adoption scheme for its inmates. It is a scheme where a citizen can choose an animal and 'adopt' it after paying a sum fixed by the zoo authorities. The money is usually spent by the zoo to buy food, medicines and to meet other expenses of the animal.In return, the person's name is displayed on the cage, gets an adoption certificate and free entry to the zoo for a year, among other facilities. Also, the adopter can celebrate birthdays of the animals in the zoo and in some cases he also gets exemption from Income- Tax. Zoo officials believe that this scheme will strengthen the bond between citizens and ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
ரத்தப் பரிசோதனைக்காக ஊசியால் குத்தி ரத்தம் எடுக்கும்போது பலரும் பயப்படுவர். அவர்களின் கவலையைத் தீர்த்து வைக்கிறது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆய்வு. ஒவ்வொரு முறையும் ரத்தம் எடுக்காமலேயே ரத்த பரிசோதனை முடிவுகளைக் கண்டறிய, நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் உடலில் டெர்மல் அப்யஸ் (Dermal Abyss) எனப்படும் நவீன டாட்டூவை வரைந்துகொள்வதுதான். இந்த டாட்டூ, பயோ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிவானில் மேகங்களின் நகர்வு எவ்வாறு நடைபெறுகிறது?ச.கீர்த்தனா, 4ம் வகுப்பு, வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம்.நிலப்பரப்பின் அனைத்துப் பகுதியும் சூரிய ஒளி பட்டுச் சம அளவில் சுடுவதில்லை. குறிப்பிட்ட பகுதி கூடுதல் சூடாகும்போது, கொதிக்கும் நீரில் குமிழி உருவாவது போல, வெப்பக்காற்றுக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
கிவிஆங்கிலப் பெயர்: 'கிவி' (Kiwi)உயிரியல் பெயர்: 'அப்டெரிக்ஸ் ஆஸ்ட்ராலிஸ்' (Apteryx Australis)'கிவி' கோழி இனத்தைச் சேர்ந்த பறவை. 'அப்டெரிகிடே' (Apterygidae) குடும்பத்தைச் சேர்ந்தது. கோழியின் அளவுதான் இருக்கும். இதன் இறக்கைகள், சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இறக்கைகள் வெளியே தெரியாத அளவுக்கு, மிகச் சிறியதாக இருக்கும். இறக்கைகள் இருந்தாலும் இவற்றால் பறக்க முடியாது. ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
பூக்களின் ரகசியம் புற ஊதா நிறத்தில் பூப்பூவாய் பூத்துக்குலுங்கும் இளவேனில் காலம். சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, இளம் மஞ்சள், வெளிர் நீலம் என, பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும் காட்சியை கண்டு மனம் பூரிக்காதவர் யார்? நமக்கு மஞ்சளாகத் தென்படும் அதே பூ, பூச்சிக்கு அதே நிறத்தில் தென்படுவதில்லை. மின்காந்த அலைகளில் 400 - 700 நானோமீட்டர் அலைநீளம் உடைய, காணுறு ஒளியை மட்டுமே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
குளவிகளில் 'இக்னியுமான்' (Ichneumon) என்ற ஒருவகைக் குளவி உள்ளது. இது, தன் குஞ்சுக்கு அது பிறப்பதற்கு முன்பே, தேவையான உணவை கூட்டுக்குள் கொண்டு வைத்து விடும்.இந்தக் குளவி முட்டையிடுவதற்கு முன்பே, தன் குஞ்சுக்கு இரையாகக் கூடிய வண்டு, சிலந்தி, கம்பளிப்புழு போன்றவைகளைத் தனது கொடுக்குகளால் கொட்டி மயக்கமடையச் செய்யும். ஆனால், அவற்றைச் சாகடிப்பது இல்லை. மயங்கிய நிலையில் அந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
ஹெப்பாட்டிடிஸ் தடுப்பூசி போட மாமாவுடன் மருத்துவமனைக்கு சென்றேன். தடுப்பூசி எனக்கு இல்லை. மாமாவுக்கு. ஆச்சரியமாக இருந்தது. குழந்தைகளுக்குத்தான் தடுப்பூசி போடுவார்கள் என்று நினைத்திருந்தேன். பெரியவர்களுக்கும் தேவைப்படும் என்று ஞாநி மாமா சொன்னார். சிறுநீரகத்துக்குப் பதிலாக செயற்கையாக ரத்த சுத்திகரிப்பு செய்யும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு இந்தத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
"நாம் வாழும் பூமியில் சொர்க்கம் ஒன்று இருக்கிறது என்பது உண்மையானால் அது ஜம்மு காஷ்மீரில் தான்” - உருது கவிதைஜம்மு-காஷ்மீர், என்ற பெயரைக் கேட்டால், எப்போதும் ஒருவித பதற்றத்துடனே இருக்கும் மாநிலம்; ராணுவம், போர், கலவரம் இவைதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், உண்மையில் அந்தப் பிரதேசம் பூலோக சொர்க்கம்தான். இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, காஷ்மீர் ஐந்து போர்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
உலகின் எந்தவொரு நாட்டையும் விட, கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த நாடு இந்தியா. தெருவில் விளையாடும் சாதாரண சிறுவன் கூட ஆட்ட நுணுக்கங்களை விரிவாக அலசும் அளவுக்கு இந்திய இளைஞர்களின் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது கிரிக்கெட்.ஆனால், இன்றைய இந்தியாவில் கிரிக்கெட் தாக்கம் செலுத்தும் அளவுக்கு 1970களில் இல்லை. பத்தோடு பதினொன்றாக இந்திய கிரிக்கெட் அணி இருந்தது. ஒருநாள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
வரலாற்று வகுப்பு. ஆசிரியர், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.அப்போது, ஒரு மாணவன் எழுந்து நின்று, 'ஐயா, இந்தியாவுக்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?' என்று கேட்டான்.ஆசிரியர் பதில் சொல்லவில்லை. அவனையே திருப்பிக்கேட்டார். 'நீ சொல், இந்தியாவுக்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?'இங்கே மாணவன், ஆசிரியர் இருவருமே ஒரே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
இரண்டு சொற்களுக்கு இடையே உருபுகள் மறைந்து வருவது வேற்றுமைத் தொகை எனப்படும். உதாரணத்துக்கு 'பாடல், பொருள் ' என்ற இரண்டு சொற்களை எடுத்துக்கொள்வோம். தனித்தனியாக உள்ள, இந்த இரண்டு சொற்களும் சேர்ந்தால், பாடல் பொருள் என்று ஆகும். இப்போது நாம் பாடல், பொருள் என்று எடுத்துக்கொள்வதா? பாடலின் பொருள் என்று எடுத்துக்கொள்வதா? பாடல் உணர்த்தும் பொருள் என்ற வகையில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
ராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என, மொத்தம் ஆறு காண்டங்கள் உள்ளன. காண்டம் என்பது நூலின் பெரும் பிரிவை குறிக்கும். சுந்தர காண்டம் பிரிவில் வரும், சுந்தர(ன்) என்னும் சொல், அனுமனைக் குறிப்பதாகும். அனுமனுக்கு சுந்தரன் என்றொரு பெயருண்டு. இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
ஜூலை 26, 1856 - ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த நாள்உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். இசை, இலக்கிய விமர்சகர். 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். நோபல் பரிசையும், ஆஸ்கர் விருதையும் பெற்ற ஒரே படைப்பாளி.ஜூலை 27, 1876 - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்த நாள்தமிழ்நாட்டின் 20ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் ஒருவர். பக்திப் பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
ஜே.ஆர்.டி. டாடா29.7.1904 - 29.11.1993பாரீஸ், பிரான்ஸ்விண்ணில் பறக்க வேண்டுமென்ற அவருடைய நீண்ட நாள் கனவும், ஆசையும் 1929ல் நிறைவேறியது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் முதல் விமானி என்ற பெருமையும் ஜே.ஆர்.டி. டாடாவுக்குக் கிடைத்தது. டாடாவின் தந்தை இந்தியர், தாய் பிரெஞ்சுக்காரர். அதனால் அவர் பிரான்சில் பிறந்து, வளர்ந்து அந்த நாட்டின் ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றினார். ஜெஹாங்கிர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
பயணங்கள் அறிவை விசாலமாக்கும். உலகத்தைப் பற்றிய பரந்த பார்வையை அடைய பயணங்கள் உதவுகின்றன. நம் ஒவ்வொருவரும் பல இடங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அங்கு பயணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருக்கும். நீங்கள் பார்க்க விரும்பும் இடம் எது என்று சென்னை, கொட்டிவாக்கம், நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடம் உரையாடினோம். ஆர்வமும், உற்சாகமுமாய் அவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X