Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
'இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதும், ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கி, அதே முறையில் பணம் செலுத்துவதும் அதிகரித்துவருகிறது. இத்தகைய, டிஜிட்டல் பேமன்ட் புரட்சி ஒட்டுமொத்த மின்னணு வணிகத்தின் மிக விரைவான எழுச்சிக்கு வித்திடும். இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில், மின்னணு வணிகத் துறையில், 1.20 கோடி புதிய வேலைவாய்ப்புகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
'நாட்டில், நகரங்களை மேம்படுத்தும் 'அம்ருத்' திட்டத்தின் 500 நகரங்களின் பட்டியலில் ராமேஸ்வரமும் இணைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை ஒரு லட்சம் இருந்தால்தான் இந்தத் திட்டத்தில் சேர முடியும். ஆனால், அப்துல் கலாம் பிறந்த புண்ணிய பூமி என்பதால் விதிவிலக்கு அளிக்கப்பட்டது' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். ராமேஸ்வரம் 'பேக்கரும்பு' எனும் இடத்தில் கலாமின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
உற்பத்திப் பொருட்களின் தரத்தை அங்கீகரிக்கும் வகையில், இந்திய தர நிர்ணய ஆணையம், ஐ.எஸ்.ஐ. சான்று வழங்கிவருகிறது. இதற்கு, பல விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சென்னையில் உள்ள தென்மண்டல அலுவலகம் சார்பில் இந்தியாவில் முதல் முறையாக வறுத்த வேர்க்கடலைக்கு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று தரப்பட்டுள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த, 'சுவர்ணபூமி என்டர்பிரைசஸ்' நிறுவனம் இதைப் பெற்றுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
இந்தியாவின், முதல் விமானம் தாங்கிக் கப்பல் என்ற பெருமையை பெற்றது ஐ.என்.எஸ். விராட். இது, தன்னுடைய 30 ஆண்டு கால இந்திய கடற்படை சேவையை, மும்பையில் ஜூலை 22ல் தொடங்கி, கொச்சியில் ஜூலை 27ல் நிறைவு செய்தது. அந்தக் கப்பலை அருங்காட்சியகமாக மாற்ற ஆந்திரா உட்பட பல மாநிலங்கள் போட்டி போடுகின்றன. மத்திய அரசு அதுபற்றி இன்னும் முடிவு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ஆறு வகையான ஆமை இனங்கள் உள்ளன. அவற்றில் சிவப்புக்காது ஆமை 10 குஞ்சுகளும், இந்திய புள்ளி ஆமை 9 குஞ்சுகளும், இந்திய குளத்தாமை ஒரு குஞ்சும் பொரித்துள்ளன. பூங்கா தொடங்கப்பட்ட நாள் முதல் ஆமைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் குஞ்சுகள் பொரிப்பது இதுவே முதன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
பயணத்தின்போது இசையைக் கேட்பதுடன் அவசரச் செய்திகளையும் தெரிந்துகொள்ளும் வகையில், 1,000 ரயில்களில் ரேடியோ வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இந்த வருட ரயில்வே பட்ஜெட்டின்போது, 'ரயில் ரேடியோ அறிமுகம் செய்யப்படும்' என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தார். தற்போது, இந்தத் திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. 'விரைவில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
சூரிய சக்தியில் இயங்கும் 'இம்பல்ஸ்' சோலார் விமானத்தின் உலகப் பயணம் நிறைவடைந்தது. அபுதாபியில் தொடங்கி உலகம் முழுவதும் ஓராண்டு காலமாகப் பயணம் செய்து மீண்டும் அபுதாபியை வந்தடைந்தது. சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த கேப்டன் பெர்ட்ரான்ட் பிக்கார்ட், ஆந்தரே போர்ச்பெர்காரே ஆகியோர் இதில் பயணம் செய்தனர். அபுதாபியிலிருந்து மஸ்கட், ஆமதாபாத், வாரணாசி என உலகம் முழுவதும் சுமார் 43 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
A robotic massage therapist developed by a Singapore-based start up may help relieve muscle strains and injuries. 'Expert Manipulative Massage Automation' (EMMA), a robotic arm with a 3D-printed massage tip, can resolve some of the challenges faced by sports therapy clinics, such as a shortage of trained therapists and a need to deliver high quality therapy consistently.Developed by AiTreat, founded by Nanyang Technological University (NTU Singapore) graduate Albert Zhang. 'EMMA' is undergoing user trials at a medical institution that offers sports injury rehabilitation and pain management. Emma has a user-friendly interface and recommended guidelines for various sports ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி ஹைட்ரஜன் (Hydrogen) நன்கு எரியும். ஆக்சிஜன் (Oxygen) எரிவதை ஊக்கப்படுத்தும். ஆனால் இது இரண்டும் கலந்த தண்ணீர் (H2O) ஏன் எரிவதில்லை.பிரணவ், 10ஆம் வகுப்பு, கோவை.உப்பில் உள்ள சோடியம் (Na) அல்லது குளோரின் (Cl) இரண்டும் உப்பு சுவை தருவதில்லை; ஆனால் இரண்டும் இணைந்து 'சோடியம் குளோரைடு' என்ற வேதிப்பொருள் ஆகும்போது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
1906: இந்தியாவின் முதல் தேசியக்கொடி 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது உருவாக்கப்பட்ட இந்தக் கொடி பார்ஸி பகன் சதுக்கத்தில் (Parsi Bagan Square) முதன் முறையாக ஏற்றப்பட்டது. இதை 'கல்கத்தா கொடி' என்ற பெயரிலும் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கொடியை வடிவமைத்தவர் சச்சிந்திர சந்திர போஸ்.1907: கல்கத்தா கொடியில் சில மாற்றங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
உலகின் மிகச் சிறிய ஜனநாயக நாடு 'சான் மரினோ' (San Marino). ஐரோப்பா கண்டத்தில் உள்ள இந்த நாடு சுற்றிலும் இத்தாலியால் சூழப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடுகளான வாட்டிகன் (Vatican City), மொனாகோ (Monaco) நாடுகளை விடச் சிறிய நாடு இது. சுமார் 30,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டின் மொத்தப் பரப்பளவு 62 சதுர கி.மீ. சான் மரினோ நாட்டை, நாடாளுமன்றத்தின் நிர்வாகக் குழு ஆட்சி செய்கிறது. இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
'இதெல்லாம் எனக்குத் தூசு மாதிரி' ஒரு வேலையை எளிதாகச் செய்துவிடுவேன் என்பதை இப்படிச் சொல்வோம். எடை அற்றது தூசு என்பதால் அப்படிச் சொல்கிறோம். தூசு என்றதும் சாலையில், வீடுகளில், பொது இடங்களில் பறக்கிற மண் புழுதி, வாகனங்களால் ஏற்படுகிற தூசு இவைதான் நம் நினைவுக்கு வரும். காற்றினால் கடத்திச் செல்லப்படும் மிக நுண்ணிய துகள்கள்தான் தூசு. உலர்ந்த மண்ணின் நுண் துகள்கள், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
மாமாவை திடீரென்று மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் செய்தி வந்ததும் உடனே நானும் பாலுவும் வாலுவும் வடபழனி 100 அடி சாலையில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கே போய் மாமாவைப் பார்த்தபோது, “வாங்க திரிமூர்த்திகளா” என்று உற்சாகமாக அழைத்தார். அப்புறம் எதற்கு மருத்துவமனைக்கு வந்தார் என்று குழப்பமாக இருந்தது.“ஞாநி, இவ்வளவு உற்சாகமாப் பேசறீங்க, எதுக்கு இங்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
ஆகஸ்டு 6ஆம் தேதி, 1945ஆம் ஆண்டு - 'அறிவியல் முன்னேற்றத்தை அழிவுக்குப் பயன்படுத்தக்கூடாது' என்ற அமைதிக் கோட்பாடு உலகில் வலுப்பெறக் காரணமான தினம். அன்றைக்குத்தான், இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரத்தில் அணுகுண்டு வீசியது. இந்தக் கோர சம்பவம் நடந்து, இந்த வருடத்துடன் 71 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அணுகுண்டு விழுந்தவுடன் வெளிப்பட்ட 4,000 டிகிரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
நீர்ச் சுழற்சிக்கு முக்கிய காரணம் மழை. மழை இல்லாது போனால் நதிகள், ஆறுகள், குளம், குட்டை எதுவுமே இல்லை. வள்ளுவர் மழையை 'வான் அமுதம்' என்று குறிப்பிடுகிறார்.மழையை அளக்கும் கருவிக்கு ரெயின் கேஜ் (Rain gauge), உடோமீட்டர் (Udometer), ப்லுவியோ மீட்டர் (Pluviometer), ஓம்ப்ரோ மீட்டர் (Ombrometer) என்று விதவிதமான பெயர் உண்டு.மழை அளவு: மழை சென்டி மீட்டர் அளவில் குறிக்கப்படுகிறது. 20 முதல் 30 கி.மீ. தூரத்துக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
வரலாறு பாடத்தில் இருந்து, 'அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யார்?' என்று கேள்வி கேட்டால் 'கொலம்பஸ்' என்று ஒரே குரலில் சொல்லிவிடுவோம்! எப்படிக் கண்டுபிடித்தார் என்று தெரியுமா? ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ், 1492ல் “இந்தியாவைக் காணப் புறப்படுகிறேன்” என்று சொல்லிவிட்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்தார். அமெரிக்க நிலப்பரப்பைப் பார்த்துவிட்டு, அதுவே இந்தியா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
மதிய உணவு இடை வேளையில் மாணவர்கள், வகுப்பில் ஒரு விநோதமான விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார்கள். மேசையில் இருந்த ஒரு குடுவையில், வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் பெயர்களும் சிறு சிறு சீட்டுகளில் எழுதப்பட்டுப் போடப்பட்டிருந்தன. ஒரு மாணவன் அந்தக் குடுவையில் இருக்கும் சீட்டுகளில் ஒன்றை எடுத்து அதில் எழுதியிருக்கும் பெயருக்கு அனைத்து மாணவர்களின் முன்னிலையில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
சிரம் என்பது தலை என உங்கள் எல்லோருக்கும் புரியும். சிரச்சேதம்? அது தலையைத் துண்டிக்கும் ஒரு தண்டனை. கேட்கவே பயங்கரமா இருக்கு இல்ல. பண்டைக்காலத்தில் இந்தத் தண்டனை சர்வசாதாரணம். இன்னும்கூட, சவுதி அரேபியா நாட்டில் பொது இடத்தில் சிரச்சேத தண்டனை நடைமுறையில் இருக்கிறது.பிரான்சில் அரசாட்சிக்கு எதிராக புரட்சிப் படையினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் மன்னர் பதினாறாம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
சாந்தி: ஹாய் மஞ்சு! எப்பவும் நெருப்பா இருப்ப, இப்போ என்ன வெறுப்பா இருக்குற?மஞ்சு: கடுப்பா இருக்கும்போது நெருப்பு, வெறுப்புன்னு அடுக்குமொழி பேசாதடீ!சா: சரி சரி! இயல்பு நிலைக்குத் திரும்பு, என்ன நடந்துச்சுன்னு சொல்லு?ம: நான் இன்ஜினியர் ஆகணும்னு அப்பா ஆசைப்படுறார். டாக்டர் ஆகணும்னு அம்மா சொல்றாங்க. ஆறாவது படிக்கிற நமக்கு இதெல்லாம் தேவையா? சா: இப்போதான் சொல்றாங்களா? ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
சிறிய கருங்கல்லை அழகிய 'பேப்பர் வெயிட்' ஆக எளிதாகச் செய்யலாம்!தேவையான பொருட்கள்:1. சிறிய கருங்கல்2. வண்ணக் களிமண் (Moulding Clay)3. சிறிய கத்திவண்ணக் களிமண்ணை விதவிதமாக உருட்டிக்கொள்ள வேண்டும்.அந்த உருண்டையில் இலை போலவும், பூ போலவும் செய்து கொள்ளவும்.இலை, பூ வடிவங்களை கல்லில் ஒட்ட வேண்டும். லேசாக அழுத்தினாலே ஒட்டிக்கொள்ளும்.இப்போது அழகிய 'பேப்பர் வெயிட்' தயார்! இதைச் செய்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
காகிதம் என்றாலே கப்பல்தான் செய்ய வேண்டுமா? கப்பலுக்குக் கீழே நீந்தும் மீனை ஏன் செய்து பார்க்ககூடாது? செய்து பார்க்கலாம் வாங்க!தேவையான பொருட்கள்: வண்ணக் காகிதங்கள், ஊசி, பசை, காந்தம்'மீன் உடலில் செதில் இருக்கும், சுருள் எப்படி வரும்?' என்று யோசிக்காமல், ஊசியை வைத்துக் காகிதங்களைச் சுருளாகச் சுற்றவும். வட்ட வடிவமாகச் சுற்றி, இறுதி முனையைப் பசையால் ஒட்டவும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
உலகின் சிறந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் தற்செயலாக நிகழும் என்பது என்னுடைய வாழ்விலும் நிஜமானது. அப்படி நான் கண்டுபிடித்த ஒன்று எண்ணற்ற மக்களின் உயிரைக் காக்கிறது என்பதுதான் எனக்குக் கிடைத்த மிகப் பெரியசந்தோஷம்!நான் பிறந்து வளர்ந்த நாடு ஸ்காட்லாந்து. இளம் வயதில் தந்தையை இழந்து, வறுமையான சூழலில் படித்து வந்தேன். பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு 16 வயதில் கப்பல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
வறட்சியைத் தாங்கி விளையும் தாவரங்களில் பருத்தி முக்கியமானது. அதனால்தான் நீர் வளம் குறைவான கரிசல் நிலங்களில் இது காணப்படுகிறது. பருத்தியின் தாவரவியல் பெயர் காசிப்பியம் லின் (Gossypium Linn). இது குத்துச் செடியாக வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும், வெளிர் கருஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். இதன் முற்றிய காய்களில் இருந்து பஞ்சு எடுத்து, நூல் நூற்று, ஆடை நெய்யப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
தண்டவாளத்தில் தடம் புரளாமல் ரயில் ஓடும் காட்சி, பார்க்க பிரமிப்பாக இருக்கும். ரயில், தண்டவாளம் - இவற்றில் எது முதலில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும்? சொல்லுங்கள் பார்ப்போம். 'தண்டவாளம்' என்பதே விடை. ரயில்கள் அறிமுகமாவதற்கு ஏறத்தாழ 2,400 ஆண்டுகளுக்கு முன்னரே தண்டவாளம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கு முன்னால், பண்டைய கிரேக்கர்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
மழைக்குக் குடை பிடிக்கிறோம். வெயிலுக்கும் குடை! பல்வேறு வண்ணங்களில், அளவுகளில் குடைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரியவர், சிறியவர் என வயதிற்கு ஏற்ற வடிவங்களில் கூட குடைகள் உள்ளன. நிழலுக்காக பெண்கள் பயன்படுத்தும் குடைக்கு பேராசோல் (parasol) என்று பெயர். இந்த வகைக் குடைகள் எடை குறைந்து இருக்கும். புகைப்பட நிறுவனங்களிலும், திரைப்படங்கள் தயாரிப்பிலும் குடைகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
''நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடு, ஒருபோதும் நண்பனை விட்டுக்கொடுக்காதே” என்று ஒரு பழமொழி இருக்கிறது. பெற்றோருக்குப் பிறகு மிக முக்கியமான உறவு நட்பு! நடக்கப் பழகி, தெருக்களில் விளையாட ஆரம்பிக்கும்போது நட்பு உருவாகி இருக்கும்! உடன் விளையாடவும் சண்டை போடவும் விடுமுறை நாட்களைக் கழிக்கவும் என ஒவ்வொரு நாளும் நண்பர்கள் இல்லாமல் நகராது. தனிமை என்னும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
'பவழக்கால் உள்ளான்' இது எதைக் குறிப்பிடுகிறது? இது ஒரு பறவை. இதன் கால்கள் பவழ நிறத்தில் இருக்கும். ஆங்கிலத்தில் stilt. இதன் இன்னொரு பெயர் பைட் ஸ்டில்ட் (pied stilt- வண்ண பொய்க்கால்). இதன் கால்கள் நீண்டும் மெல்லியதாக இருக்கும். இரு குச்சிகளை நட்டுவைத்தது போல் தோற்றம். அதன் மீது ஒரு சிறிய உருவம். கழுத்திலிருந்து வயிறு தொடங்கி வால் வரை வெள்ளையாகவும் முகுதுப் பகுதி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
கலைநயம் மிக்க ஒரு கட்டடம் கட்டி முடிக்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறீர்கள்?. உலக அதிசயங்கள் பட்டியலில் இருக்கும் பிரமிடுகள், தாஜ்மஹால் போன்ற கட்டடங்களைக் கட்டுவதற்கே 20 ஆண்டுகளுக்குள்தான் ஆனது என்று சொல்கிறார்கள். ஆனால் படத்தில் இருக்கும் இந்த தேவாலயம் 134 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வருகிறது. 'ல சக்ராடா ஃபமீலியா' (La Sagrada Família) என்பது இதன் பெயர். ஸ்பெயின் நாட்டின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
எந்தத் துறையிலும் முதலாவதாக சாதனை செய்பவர்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். அப்படி, மனித குலம் உள்ளவரை ஒருவரின் பெயர் புகழுடன் இருக்கப்போகிறது. அவர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong).நிலாவில் கால் பதித்துவிட்டு வந்தவர். அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் பிறந்தவர். ஆறு வயதில் விமானத்தில் பறந்தவருக்கு, தானும் விமானம் ஓட்டினால் என்ன என்ற ஆர்வம் பிறந்தது. தன் 16ஆம் வயதில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
இந்தியாவில் பிரிமியர் 'ஃபுட்சால்' (ஐவர் கால்பந்து) தொடர் நடந்தது. கோவாவில் நடந்த ஃபைனலில் மும்பை, கொச்சி அணிகள் மோதின. இதில் ஆட்ட நேர முடிவில் போட்டி 1 - 1 என சமநிலை அடைந்தது. இதனை அடுத்து, 'பெனால்டி ஷூட் - அவுட்' முறைக்கு போட்டி சென்றது. இதில் அசத்திய மும்பை அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட், ஆன்டிகுவாவில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் கேப்டன் கோஹ்லி இரட்டை சதம் அடிக்க இந்தியா 566, வெஸ்ட் இண்டீஸ் 243 ரன்கள் எடுத்தன. 'ஃபாலோ - ஆன்' பெற்ற வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதில் சதம் அடித்துடன், 7 விக்கெட் வீழ்த்திய ஆட்ட நாயகன், தமிழக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
லண்டனில், முல்லர் நினைவு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 19.89 வினாடியில் கடந்த, 'மின்னல் வேக மனிதன்' ஜமைக்காவின் உசைன் போல்ட் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். சமீபத்தில், தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்ட போல்ட், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. லண்டனில் தங்கம் வென்று, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
போலந்தில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் எறிந்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன் மூலம், ஈட்டி எறிதலில் அதிக தூரம் எறிந்து உலக சாதனை படைத்தார். தவிர, உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 17 பட்டம் வென்றவர். 2008ல் தங்கம் (பீஜிங், இரட்டையர்), 2012ல் வெள்ளி (லண்டன், ஒற்றையர்) என இரு ஒலிம்பிக் பதக்கம் வென்றார். இந்த நிலையில், முழங்கால் காயம் காரணமாக ரியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார். தவிர, இந்த ஆண்டு மீதமுள்ள போட்டிகளிலும் பங்கேற்க தன்னால் இயலாது என ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் சிறந்த ஒரு நாள் வீரர் விருதை இரு முறை வென்றவர்இந்திய கேப்டன், மகேந்திரசிங் தோனி (2008, 2009)ஸ்குவாஷ் விளையாட்டில் மத்திய அரசின் அர்ஜுனா விருது வென்ற முதல் நட்சத்திரம்சவுரவ் கோஷால் (2006)லண்டன் ஒலிம்பிக் (2012) டென்னிஸ் ஒற்றையரில் தங்கம் வென்ற வீராங்கனைசெரினா வில்லியம்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X