Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
சிகரெட் புகைத்த பிறகு தூக்கி எறியப்படும் பஞ்சுத் துண்டுகள், நில மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக உள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 13 கோடி டன் அளவுக்கு சிகரெட் குப்பைகள் சேர்கின்றன. இவற்றைக் கையாள ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பேர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதுவழியைக் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக, ஆய்வுக்குழு தலைவர் அப்பாஸ் மொகாஜரணி கூறியதாவது, 'மெழுகு, தார் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
தெலங்கானா மாநிலத் தலைநகரான ஐதராபாத் அருகில், 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலைநயமிக்க ஆபரணங்களைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, தெலங்கானா தொல்லியல் துறை இயக்குனர் கூறும்போது, "நர்மெட்டா பகுதியில் பலகட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் எலும்புகளால் செய்யப்பட்ட கலைநயமிக்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை, 4 ஆயிரம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர்தான் பெர்முடா முக்கோணம். இதை, 'சாத்தானின் முக்கோணம்' என்றும் மக்கள் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாக மறைந்து போவதுதான். பெர்முடா முக்கோணத்தின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
சிறுவர்களால், பெரியவர்களைவிட எதையும் வேகமாகக் கற்றுக்கொள்ள முடியும். இதற்கு அவர்களின் மூளை, மிருதுத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருப்பதே காரணம். வயதாக வயதாக, மூளையின் நெகிழ்வுத்தன்மை குறைந்துகொண்டே வரும். அதனால்தான், சிறுவர்கள் அளவுக்குப் பெரியவர்களால், புதிய மொழியையோ, இசையையோ விரைவாகக் கற்க முடியாது.இந்நிலையில், ஆர்க் மைட் என்ற மரபணு மாற்ற சிகிச்சை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
Facebook announced its plans to launch Watch, its redesigned video platform aimed at rivaling YouTube. The new tab will offer a customised variety of shows based on the user's preferences and what their friends are watching. “Watching a show does not have to be passive,” said Facebook Founder Mark Zuckerberg.“It can be a chance to share an experience and bring people together who care about the same things.” The new feature is more structured than its earlier platform with categories, including “What friends are watching”, “most talked about”, and “what is making people laugh”. The social media giant has roped in content from Major League Baseball, Tastemade's Kitchen Little, parenting shows and a safari show from National ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்1. சில நிமிடங்களே உயிர்வாழும் ஈசல் பூச்சிகள், வெளிச்சத்தை நோக்கிச் சென்று உயிர்விடக் காரணம் என்ன?லோகநாயகி, மின்னஞ்சல்.ஒரு சோதனை செய்து பாருங்கள். இரவில் உங்கள் வலது கையை நிலவை நோக்கிப் பக்கவாட்டில் பிடித்து, 90 டிகிரி திசையில் நடக்கவும். நீங்கள் செல்லும் பாதை நேர்கோட்டில் அமைவதால், நிலவு எப்போதும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
மண்களால் அமைந்த கரையான் புற்றுகளை நாம் பார்த்திருப்போம். அதுபோலவே பாறைக் குகைகளின் தரைப்பகுதியில் உருவாகும் புற்றுதான் 'புற்றுப் பாறை' (Stalagmite - ஸ்டாலாக்மைட்) எனப்படுகிறது. பாறைக் குகைகளின் மேற்பகுதியில் இருக்கும் இடுக்குகளின் வழியாகக் தரையில் கசியும் நீருடன் கலந்த தனிமங்களால் இது உருவாகிறது. கரையான் புற்றுபோல தரையிலிருந்து இது மேல் நோக்கி வளரும். பாறைக் கசிவில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
உலகில் உள்ள பூக்களிலேயே மிகப்பெரிய பூ எது தெரியுமா? 'ரஃப்லேசியா அர்னால்டி' (Rafflesia Arnoldii) என்ற மலர்தான் இதுவரை இனம் காணப்பட்டுள்ளதில் பெரிய மலர். ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை வரையும் இருக்கக்கூடிய இம்மலர், சுமார் நான்கு கிலோ தேன் தாங்கி இருக்கும்.பார்ப்பதற்கு பெரிய மலர் என்றாலும், இதன் வாசனை நம்மை ஓடஓட விரட்டும். இந்த மலர் சிதைவடையும்போது, அழுகிய நாற்றம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
ஏரிஸ் (Eris)விட்டம்: 2,500 கி.மீ.சூரியனில் இருந்து இருக்கும் தொலைவு: 96.7 வானியல் அலகு (Astronomical Unit - அஸ்ட்ரோனாமிகல் யூனிட்)கண்டறியப்பட்ட ஆண்டு: 2005கண்டறிந்தவர்: மைக் பிரவுன் மற்றும் குழு, பலோமார் விண்வெளி ஆய்வு மையம், கலிபோர்னியா.சூரியக் குடும்பத்தில், சிறியதும் பெரியதுமாக பல குறுங்கோள்கள் (Dwarf Planet - ட்வார்ஃப் பிளானட்) உள்ளன. சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
சுதந்திர தினத்தை ஒட்டி உனக்கு ஒரு க்விஸ் வைக்கப் போகிறேன் என்றான் பாலு. சரி என்றேன். எங்கள் க்விஸ்சில் எப்போதும் வாலுவும் ஞாநி மாமாவும் ஒவ்வொரு கேள்விக்கும் உதவி செய்யலாம். இந்த முறை பாலு வித்தியாசமாக கேள்விகள் தயாரித்திருந்தான்.கேள்வி 1: ஏன் ஆகஸ்ட் 14/15 நள்ளிரவில் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்? பகலில் கொடுத்திருக்கக் கூடாதா? எனக்குத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
1947 ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சென்னையில் எப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் நடைபெற்றன? ஆனந்த விகடன் உதவி ஆசிரியராக இருந்த கோபு (எஸ்.எஸ்.கோபாலகிருஷ்ணன்) 24 ஆகஸ்ட் 1947 இதழில் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது.அந்த வேளையில் தேனாம்பேட்டை ஆலயங்கள் எல்லாவற்றிலும் இருந்து நாகஸ்வரம் கம்பீரமாய் எழுந்தது. ஒவ்வொரு வீட்டிலும், ரேடியோ முழக்கம் செய்துகொண்டு இருந்தது. விடுதலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
'நேற்றைக்கு ஒரு நல்ல கதை படித்தேன். அருமையாக இருந்தது' என்கிறான் உங்கள் பள்ளித்தோழன்.இதைக்கேட்டதும், உங்களுக்கும் அந்தக் கதையைப் படிக்கவேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது, 'எந்தக் கதை? என்ன தலைப்பு?' என்று கேட்கிறீர்கள். உங்கள் நண்பன் அந்தக் கதையின் தலைப்பைச் சொல்கிறான்.'அட, அந்தக் கதையா? நானும் படித்துவிட்டேன். விறுவிறுப்பான திருப்பங்கள், பிரமாதமான வசனங்கள்' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
யுனெஸ்கோ நிறுவனம், குறிப்பிட்ட கால இடைவெளியில், மொழிகளுக்கான உலக வரைபடம் (Atlas) தயாரித்து வெளியிடுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மொழி வரைபடத்தில், பயன்பாட்டின் அடிப்படையில், மொழிகள் 6 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.vulnerable - பாதிக்கப்படும் நிலையில் இருப்பவை. அம்மொழி பேசும் மக்களில், பெரும்பாலான குழந்தைகளால் பேசப்படும் மொழி. அதேசமயம் குறுகிய பரப்புக்குள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
தமிழில் இரண்டு ர, ற எழுத்துகள் உள்ளன. சிலர் இதை, சின்ன ர பெரிய ற என்கிறார்கள். அப்படி சொல்லக் கூடாது. ர என்ற எழுத்து யரலவழள என்னும் இடையின எழுத்தாகும். அதனால் இதை “இடையின ர” என்று சொல்ல வேண்டும். இன்னொரு எழுத்து வல்லின ற. கசடதபற என்ற வரிசையில் வருகிறது. இதனை உச்சரிக்கும்போது, நன்கு அழுத்தி “ட்ர” என்று உச்சரிக்க வேண்டும். “ர்ர்ர” என்பது போலவும் உச்சரிக்கலாம். ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
ஆகஸ்ட் 15, 1947 - இந்திய சுதந்திர நாள்இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே அந்நிய தேசத்தவரிடம் நாம் அடிமைகளாக இருந்தோம். அதை எதிர்த்துப் போராடி, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து இந்தியா தனி சுதந்திர நாடானது. சுதந்திரத்தையும், அதற்காக இன்னுயிர் தந்த தியாகிகளையும் நினைவுகூர இந்த நாள் கொண்டாடப்படுகிறது.ஆகஸ்ட் 19, 1871 - ஆர்வில் ரைட் பிறந்தநாள்அமெரிக்காவைச் சேர்ந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
நெப்போலியன் போனபார்ட் 15.8.1769 - 5.5.1821கார்சிகா, பிரான்ஸ்.மாவீரர் என்ற சொல்லைக் கேட்டதும், முதலில் நம் நினைவுக்கு வருபவர் நெப்போலியன் போனபார்ட். சாதாரண போர் வீரராக இருந்து, பிரான்ஸ் பேரரசராக உயர்ந்தவர்.தாயின் ஒழுக்கமான வளர்ப்பும், கண்டிப்பான அணுகுமுறையும் வெற்றிகரமான ராணுவ வீரனாகத் திகழ நெப்போலியனுக்கு உதவின. பிரான்ஸ் ராணுவப் பள்ளியில் வரலாறு, புவியியல் பாடங்களில் மிகச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில், 8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' முறையை நீக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும், '8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யும் முறை'யை நீக்குவது சரியா என்று, செங்கல்பட்டு, லிட்டில் ஜாக்கி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் உரையாடினோம். மாணவர்கள் தங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X