Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
மனிதர்கள் செய்யும் வேலைகளுக்கு ரோபோக்களை களத்தில் இறக்கும் நாடு ஜப்பான். அதே ஜப்பானில், ஓர் உணவு விடுதி, பரிமாறுபவராக குரங்குகளைப் பயன்படுத்துகிறது. தேவையான உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தால் போதும், சரியான மேசையை அடையாளம் கண்டு, வாடிக்கையாளர்கள் கேட்ட உணவை எடுத்துக்கொண்டுவந்து குரங்கு கொடுக்கிறது. இந்தப் புதுமையான அனுபவத்திற்காகவே இங்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
நகரத்தில் இருந்து பள்ளி விடுமுறைக்கு தன் கிராமமான புன்சாரி (Punsari) வருகிறான் ஹிமான்ஷு படேல். எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் தன் கிராமம் இருப்பதும், நகரத்தில் கிடைக்கும் வசதிகளும் அவன் மனத்தை உறுத்தின. வளர்ந்து பட்டதாரியான பின், நகரில் வேலை பார்த்துக்கொண்டு தங்கிவிடாமல், கிராமத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்று முடிவெடுத்து, கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
ஒரு மரத்தை வேருடன் இடம் மாற்றி வைக்கும் தொழில்நுட்பம் மேலைநாடுகளில் பிரபலம். இப்போது நம் நாட்டிலும் வந்துவிட்டது. ஐதராபாத்தை சேர்ந்த உதயகிருஷ்ணா என்பவர், வாதா அறக்கட்டளை (Vata Foundation) மூலம் இப்பணிகளைச் செய்கிறார்.நன்கு வளர்ந்த பெரிய மரங்களைக்கூட ஓரிடத்தில் இருந்து பெயர்த்து மற்றொரு இடத்துக்கு நகர்த்தி, நட்டு வளர்க்கிறார்கள். பெரும்பாலும் மரங்கள் புது இடத்திலும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
மனிதர்களுக்கு அறுவை சிகிச்சையின்போது, உடலுறுப்புகள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. இதற்கு மாற்றாக விலங்குகளின் உறுப்புகளைப் பொருத்துவது தொடர்பான மருத்துவ ஆய்வுகள் தொடர்கின்றன. இதில், அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், பன்றிகளின் உடலில் உள்ள 25 வைரஸ்களைக் கண்டுபிடித்து, நீக்கியுள்ளனர். புதியதாக க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
A traditional giant omelet made with 10,000 eggs in Belgium on 15th August amidst an egg contamination scare. In Europe, eggs have been found to contain fipronil, a substance used to kill lice on animals that is banned for use in the food industry. So the organizers are nervous, fearing that many citizens might spurn the egg, bacon and herb omelet, cooked in a 4m- wide (13ft) frying pan. But hundreds of people gathered in the eastern Belgian city of Malmedy undeterred by the scare. The giant omelet cooked successfully over an open fire by "The World Fraternity of Knights of the Giant Omelet", which was created in 1973. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட், பக்கவாட்டில் சாயாமல் செங்குத்தாக மேல் நோக்கி எப்படிச் செல்கிறது?ஜே.சி.தீபக், 6ம் வகுப்பு, ஆக்ஸ்ஃபோர்டு மெட்ரிக் பள்ளி, உடுமலைப்பேட்டை.நியூட்டனின் மூன்றாம் விதிதான், ராக்கெட் தத்துவத்தின் அடிப்படை. ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர்வினை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
'வுல்ஃபியா அர்ஹிசா' என்பதைப் படித்துவிட்டு, ஏதோ உங்களை வசை பாடுவதாக எண்ண வேண்டாம். 'லெம்மாசியே' தாவரக் குடும்பத்தைச் சார்ந்த 'வுல்ஃபியா அர்ஹிசா' (Wolffia Arrchiza) என்பதுதான், உலகிலேயே மிக மிகச் சிறிய மலர். இது நீரில் மிதந்து வளரும் தாவரம். ஓர் இலை மட்டும்தான் இருக்கும். அவை 1.5 மி.மீ. அளவு மட்டுமே இருக்கும். வேர்கள் கிடையாது. 'டக்வீட்' (Duckweed) என்பது இதன் ஆங்கிலப் பெயர். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
பார்ப்பதற்கு பூவைப் போலவே இருக்கும் கடல் தாமரை, ஒரு கடல்வாழ் மிதவை உயிரினம். அழகிய வண்ணத்தில் அசையும் பூக்களைப் போலத் தோற்றமளிக்கும். கடல்வாழ் உயிரினங்களான பவளம், ஜெல்லி மீன் வகையைச் சேர்ந்தது. இது ஒரு குழியுடல் உயிரி. அழகிய ஆரத்துடன் வட்ட வடிவத்தில் காணப்படும். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. கடலுக்கு அடியில் ஓரிடத்தில் வாழ்பவை. கால்களே இல்லை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
“ஏழை என்றும் அடிமை என்று எவரும் இல்லை பாரினில். இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே” என்று பாடிக்கொண்டே பாலு வந்தான். “என்ன பாட்டு பலமா இருக்கே?” என்று கேட்டார் ஞாநி மாமா.''பள்ளிக்கூட நாடகத்தில் வருகிற பாட்டு. பயிற்சி செய்கிறேன்” என்றான் பாலு. ''எதைப் பற்றி நாடகம்?” என்று கேட்டார் மாமா. ''அடிமைத்தனத்தை ஒழித்த ஆபிரகாம் லிங்கன் பற்றி நாடகம்” என்றான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
“நம்ம ஊர்ல ஓர் இடத்துல பார்த்தா உணவு அளவுக்கு மீறி இருக்கு. இன்னொரு இடத்துல பசியால தவிச்சுப்போறாங்க. இந்த இரண்டையும் இணைக்க முடிஞ்சா எப்படி இருக்கும்? கஷ்டப்பட்டு தயாரிக்கப்படற உணவு, வீணாகணும்னு யாரும் நினைக்க மாட்டாங்க. மீதமாகும் உணவை யார்கிட்ட, எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதுன்னு தெரியலை. அதனால தான் உணவைக் குப்பைத் தொட்டியில போடறாங்க. இதுக்கு ஏதாச்சும் ஒரு வழி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
எழினி என்பது தகடூரை ஆண்ட அரசர் ஒருவரின் பெயர். அதிகமான் எழினி என்று அழைக்கப்பட்டார். பல்வேல் எழினி, நெடும்பூண் எழினி, பொலம்பூண் எழினி என்ற பெயர்களில் அரசர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றி, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. எழினி என்பது, அரசர்களின் பெயராக மட்டும் அல்ல; திரைச் சீலையைக் குறிக்கும் சொல்லாகவும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
ஒன்றைச் சொன்னால் அதற்கு ஒரேயொரு பொருள்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரே சொல்லுக்கும் ஒரே சொற்றொடருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களும் இருக்கலாம். தமிழில் அவ்வாறுதான் இருக்கின்றன. 'கலம்' என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு உண்கின்ற பாத்திரம் என்று ஒரு பொருள் உண்டு. கப்பல் என்கின்ற பொருளும் உண்டு. ஆக, ஒரு சொல்லே பலப்பல பொருள்களைத் தரவல்லது. அப்படி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
உங்கள் வகுப்பில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். எல்லாரும் ஒரே மாதிரியா தோன்றுகிறார்கள்?ம்ஹூம், இல்லை; ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். சிலர் குள்ளம், சிலர் உயரம், சிலர் ஒல்லி, சிலர் குண்டு, சிலர் வெள்ளை, சிலர் கருப்பு, சிலர் சுறுசுறுப்பு, சிலர் சோம்பல்.கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்கினால், அதில் எல்லாப் பக்கங்களும் ஒரேமாதிரி அளவோடு இருக்கவேண்டும் என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
சுப்பையா சிவசங்கர நாராயணப் பிள்ளைபிறப்பு : ஏப்ரல் 5, 1901மறைவு: ஆகஸ்ட் 31, 1950பெற்றோர் : சுப்பையா பிள்ளை; கோமதி அம்மாள்1770ம் ஆண்டில், எட்வர்ட் வேரிங் (Edward Waring) என்ற கணித மேதை ஒரு கருத்தை வெளியிட்டார். Meditationes algebraicae என்ற தனது புத்தகத்தில், 'ஒவ்வொரு எண்ணையும் அதிகபட்சமாக 4 வர்க்கங்களின் (Squares) கூடுதலாக, 9 முப்படிகளின் (Cubes) கூடுதலாக, 19 நாற்படிகளின் (4th powers) கூடுதலாக, 35 ஐம்படிகளின் (5th powers) கூடுதலாக, 73 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
ஆகஸ்ட் 21, 1907 - ப.ஜீவானந்தம் பிறந்த நாள்நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பொதுவுடைமைத் தலைவர். 'ஜீவா' என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடினார். கம்யூனிச இயக்கத்தில் பிரபலமானவராகவும் 'ஜனசக்தி' இதழ் ஆசிரியராகவும் இருந்தார்.ஆகஸ்ட் 22, 2004 - சென்னை நாள்1639, ஆகஸ்ட் 22ம் தேதி மதராசபட்டினம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
கிரிக்கெட் விளையாட்டின் மீது அந்தச் சிறுவனுக்கு தீவிரமான வெறி இருந்தது. ஸ்டம்புகள் தெறிக்கும் அவனது மின்னல் வேகப் பந்து வீச்சைப் பார்த்து வியந்த பள்ளி ஆசிரியர், ஓட்டப்பந்தயம் நோக்கி அவனைத் திசை திருப்பினார். அதன்பிறகு அவனுடைய கால்கள் தரையில் நடக்கவில்லை; பறந்தன. அந்த 'புல்லட்' வேகத்துக்குச் சொந்தக்காரன் உசேன் போல்ட்.சிறுவயதில் 'விளையாட்டாக' ஓடத் தொடங்கிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
நவீன கற்பித்தல் முறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, திறன் பலகை கற்பித்தல் முறை (Smart Board Education) பல பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாடங்களைக் காட்சி வடிவிலும், காணொளி வாயிலாகவும் கற்பிக்கும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் கற்றலை மேலும் எளிமையாக்குமா? என்று சென்னை, போலச்சேரி, மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களுடன் உரையாடினோம். திறன் பலகையில் பாடங்களைப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X