Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்திய சுதந்திர தினவிழா நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டில்லி செங்கோட்டையில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ஏழை குடும்பங்களின் மருத்துவச் செலவுக்கு, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், தியாகிகள் ஓய்வூதியம் 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா, நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கு, 'கல்பனா சாவ்லா' விருது வழங்கி சிறப்பித்தார். பிராமண குடும்பத்தில் பிறந்தவரான ஜெயந்தி, கலாச்சாரக் கட்டுப்பாடுகளை உடைத்து சடலங்களை எரியூட்டும் பணியில் ஈடுபட்டுவருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம், 'மியுஆன்' துகள்களைப் (Muon Particles) பதிவு செய்யும் கருவியை, மதுரை அமெரிக்கன் கல்லுாரிக்கு வழங்கியுள்ளது. 'மியுஆன்', ஒரு நிலையற்ற அடிப்படை அணு துகள். இதன் ஆயுட்காலம் '2.2 மைக்ரோ நொடி' மட்டுமே. அதற்குள் இந்தக் கருவி செயல்பட்டு, 'மியுஆன்' துகள்களைப் பதிவு செய்யுமாம். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை முதலைப் பண்ணையில் முதலைகளுக்கு வழங்கப்படும் இறைச்சி உணவு போதுமானதாக இல்லாததால் இறைச்சி போடப்படும் போது, முதலைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்கின்றன. இதன் விளைவாகக் கடந்த 7 மாதங்களில், 50க்கும் மேற்பட்ட முதலைகள் காயமடைந்துள்ளன; 6 முதலைகள் பலியாகியுள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில், 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட, சுரங்க அறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் தற்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ், ராஜ்பவனின் பழைய ஊழியர்கள் கூறிய தகவல்கள் அடிப்படையில், சுரங்கப்பாதையைத் திறக்க உத்தரவிட்டார். சுரங்கப்பாதைக்குள் 5,000 சதுர அடிப்பரப்பில், 13 அறைகள் இருக்கின்றன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி தனது மந்திரி சபையை மாற்றி அமைத்தபோது, 75 வயதான நஜ்மா ஹெப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்தார். அசாம், பஞ்சாப், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.அசாம்: பன்வாரிலால் புரோகித்பஞ்சாப்: வி.பி.சிங் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
அமெரிக்காவில் தற்போது கோடைக்காலம். கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக ஏறத்தாழ 25 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிந்துவிட்டது. அந்தப் பகுதியில் வசிக்கும் 82 ஆயிரம் பேர் வெளியேற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
Trawling is an industrial fishing method where a large net with heavy weights is dragged across the seafloor, scooping up everything in its path - from the targeted fish to the incidentally caught marine organisms. This leads to the problem of Overfishing - catching more fish than the ocean can produce. Due to this, fish stocks have diminished affecting people's access to fish food in many poor countries. To monitor the issue, an international conservation organisation named Oceana, together with Google and SkyTruth, a nonprofit group has planned to launch a Global Fishing Tracker System. The online tracker system will help anyone with internet access to track fishing vessels worldwide, and keep a check on their activities. Marine conservationists see this as a step forward to ensure greater transparency in the ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
மாணவர்களின் கேள்விக்கு பதில் சொல்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிமழை பெய்யும்போது, எரிகின்ற கொள்ளிக்கட்டையை வானத்தை நோக்கிக் காண்பித்தால், மழை நிற்கும் என்கிறார்களே உண்மையா?தியா, திருப்பூர்.அப்படி எல்லாம் மழை நிற்காது! எவ்வளவு நேரம் மழை பொழியும் என்பது மழை மேகத்தின் அளவைப் பொறுத்தது. குறிப்பிட்ட அளவு மேக மூட்டம் இருக்கும் நேரத்தில், மழை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
விண்வெளியில் பல நட்சத்திரத் தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த நட்சத்திரக் கூட்டங்களை ஒன்றாகப் பார்ப்பது நமக்குப் பல உருவங்களை நினைவுபடுத்தும். நட்சத்திரப் புள்ளிகளை இணைத்து விதம் விதமாக உருவங்களைக் கற்பனை செய்து மகிழலாம். விண்வெளியின் வட பகுதியில் 88 நட்சத்திரத் தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு நட்சத்திரத் தொகுதி 'சிக்னஸ்' (Cygnus) எனப்படுகிறது. கிரேக்க மொழியில் 'சிக்னஸ்' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
வறண்ட நிலத்தில் அல்லது வெப்பமான நிலப்பகுதியில் மழை பெய்ததும், கொஞ்ச நேரத்தில் ஓர் அழகிய மணம் எழுவதை நாம் சுவாசித்திருப்போம். மழை நீரில் எதுவும் வாசனைத் திரவியம் எதுவும் கலந்து பெய்கிறதா?! நிலத்தில் 'ஸ்ட்ரெப்டோமைசிஸ்' (Streptomyces), 'ஆக்டினோமைசிஸ்' (Actinomyces) போன்ற எண்ணற்ற பாக்டீரியாக்களும் நுண்ணுயிரிகளும் உள்ளன. இவை வறண்ட நிலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஒரு கிராம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
பூக்களின் இனப்பெருக்கம் மகரந்தச் சேர்க்கையால் (Pollination) நிகழ்கிறது என்பது நமக்குத் தெரியும். பூக்கள் பல வண்ணங்களில் பூக்கின்றன. பகல் நேரத்தில் பூச்சிகளை ஈர்க்க பூவின் நிறம் பெரும் பங்காற்றும். ஆனால், இரவில் பூக்கும் பூக்களில் எப்படி மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது? இரவு நேரங்களில் வண்ணம் தெரியாது. அதற்குப் பதிலாக பூக்களில் இருந்து வெளிவரும் நறுமணம் பூச்சிகளைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
“எனக்கொரு கனவு நேத்து. டேபிள்ல ஒரு பக்கம் ஒரு பெரிய பக்கெட் நிறைய நட்டிமேனியா ஐஸ்க்ரீம். இன்னொரு பக்கம் இன்னொரு பக்கெட்ல வழிய வழிய உருளைக்கிழங்கு சிப்ஸ். ஒரு சிப்ஸைக் கடிச்சுட்டு ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் சாப்பிடறேன். அமிர்தமா இருக்கு. இப்பிடியே மொத்தம் சாப்பிட்டு முடிச்சு வாயத் துடைச்சுக்கறப்பதான், விழிப்பு வந்து இது கனவுன்னு உறைச்சுது” என்றான் பாலு.“உனக்கு இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
சின்ன வயசில் உங்களுக்கு சாப்பாடு ஊட்டும் போது ''இந்தா வெண்டைக்காய் பொரியல் சாப்பிடு, கணக்கு நல்லா வரும்'' என்று சொல்வதை கேட்டிருக்கீங்கதானே! கணக்கு நல்லா வரும் என்பதற்கான ஆதாரம் ஏதும் வெண்டைக்காயில் இல்லை. ஆனால் நம் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் இதில் இருப்பதால், அந்த சத்துகள் நம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவக்கூடும் என்பதால், பெற்றோர் கணக்கை காரணம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
பாறைகளில் திரும்பிய பக்கமெல்லாம் சிற்பங்களாக இருப்பது ஊருக்கு அழகுதானே! அப்படி மலை முழுக்க சிற்பங்களால் சிறப்புப் பெறும் ஊர் மாமல்லபுரம். பல்லவர் காலத்தின் மிகப்பெரிய கலைச்சின்னம் அடங்கிய ஊர். கற்களை அடுக்கிக் கட்டாமல் பாறைகளைக் குடைந்து செதுக்கப்பட்டிருப்பது இங்குள்ள கோயில், சிற்பங்களின் சிறப்பு. மாமல்லபுரம் பல்லவ அரசர்களின் துறைமுகப் பட்டினம். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
பூமியில் கரியமில வாயு அதிகமானால் வாயு மண்டலத்தில் அதன் அளவு அதிகரிக்கும். அதனால் பூமியின் வெப்ப நிலை உயரும். நாம் உருவாக்கும் கரியமில வாயு வளி மண்டலத்தில் 200 வருடங்கள் வரை இருக்கும்.1860 ஆம் ஆண்டு முதல் வெப்ப நிலை அளக்கும் முறை ஏற்பட்டது. அப்போது பூமியின் சராசரி வெப்ப நிலை அளவு 0.78 செல்சியசாக இருந்தது.கரியமில வாயுவின் அடர்த்தியை PPMV (parts per million by volume) என்ற அளவில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
கஸ்தூரிபாவின் ஆங்கிலம்: ஒரு முறை கஸ்தூரிபா காந்தி தமிழ்நாட்டில் இருக்கும் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு வந்தார். அங்கே, கைத்தறித் துணிகளுக்கு சாயம் போடும் வேலையை ஆசிரமத் தொண்டர்கள் செய்துகொண்டு இருந்தனர். ஒரு துணியை எடுத்துப் பார்த்த கஸ்தூரிபா, அருகில் இருந்த ராஜாஜியிடம் அந்தத் துணியைக் காட்டி, “திஸ் கலர் கோ? (This color go?)” என்று கேட்டார். அதாவது, “இந்தத் துணி சாயம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
தகுந்த வரத்தை வாங்கிடவாதலைகீழாகத் தொங்குகிறாய்?பகலில் எவரோ திட்டினரா? இரவில் மட்டும் சுற்றுகிறாய்.குடைபோல் சிறகை விரித்தபடிகுழந்தை போலே ஆடுகிறாய்.குட்டிச் சத்தம் கேட்டாலும்'கூகீ' என்றே கத்துகிறாய்.பழந்தரும் மரத்தின் கிளைகளிலேபகலில் முழுக்க உறங்குகிறாய்.பார்ப்பதற்கு எலி முகமாய்ஏனோ தோற்றம் தருகின்றாய்முதுகில் எலும்பு இருக்கிறதே முயற்சிகள் உண்டா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
உங்கள் ஃப்ரெண்டைக் கூப்பிடுங்கள். “எனக்கு உன் மனசு தெரியும். நீ நினைப்பது தெரியும்” என்று சும்மாச் சொல்லுங்கள். ஃப்ரெண்ட் குழம்பும்போது, ஒரு வித்தையை ஆரம்பியுங்கள்.“உன் மனசுக்குள்ளே ஏதாவது ஒரு நம்பரை நினைச்சுக்கோ. அதை நான் சரியாச் சொல்றேன்' என்று சவால் விடுங்கள்.அடுத்தது வழிமுறை.(1) “ஒண்ணுலேருந்து ஒன்பதுக்குள்ளே ஏதாவது ஒரு நம்பரை நினைச்சுக்கோ.(2) அதை ரெண்டால ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
சங்கர்: என்னாச்சுடா முன்னா? கையையும் காலையும் ஒருபக்கமா வெட்டி வெட்டி இழுக்கிற?!முன்னா: ரோபோ டான்ஸ் ப்ராக்டிஸ் பண்றேன். டிஸ்டர்ப் பண்ணாம போடா.ச: ரோபோ டான்ஸா? இதுவா? ஹி... ஹி...மு: மெட்டல் பாடி இருந்தாதான் ரோபோ டான்ஸ் ஆடணுமா என்ன? பார்த்துக்கிட்டே இரு இன்னும் ரெண்டு நாள்ல நான் ஆடிக் காட்டுறேன். இல்லன்னா என் பேர மாத்திக்குறேன். ச: ஒரு ஐடியா சொல்றேன். டெர்மினேட்டர், ஐ ரோபோ, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
வீட்டு வரவேற்பறையில் புகைப்படங்கள் வைக்க, நிறைய செலவழித்துதான் ஃபோட்டோ ஃபிரேம்கள் வாங்க வேண்டும் என்றில்லை. குப்பைக்குப் போக வேண்டிய ஐஸ்கிரீம் குச்சிகளைச் வைத்துக்கூட எளிய ஃபோட்டோ ஃபிரேம்களைச் செய்யலாம். தேவையான பொருட்கள்:1. ஐஸ்கிரீம் குச்சிகள் - 15. உங்களுக்குப் பிடித்த வண்ணங்களைக் குச்சிகளில் தீட்டிக்கொள்ளுங்கள். நாங்கள் ஐஸ்கிரீமே சாப்பிட மாட்டோம் என்பவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கவிஞர், மேடைப் பேச்சாளர் என பன்முகத் திறன் கொண்ட எனக்கு சொந்த ஊர் காஞ்சிபுரத்தில் இருக்கும் துள்ளம். என் தந்தை ஆசிரியராகவும் இசை, இலக்கியப் பயிற்சி பெற்றவராகவும் இருந்ததால் அவரிடமே கல்வி கற்கத் தொடங்கினேன். பின்னர், சென்னை ராயப்பேட்டையில் தங்கி ஆரம்பக்கல்வி பயின்றேன்.புராணங்கள், இலக்கணம், வடமொழி, சைவ சமய நூல்கள், உபநிடதங்கள், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
கதை ஒன்றுஇந்தப் புகைப்படத்தில் இருப்பவர், முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் பகதூர் ஷா ஸாஃபர். மிகச் சிறந்த கவிஞர் இவர் . ஆயிரக்கணக்கில் கவிதைகளையும், கஜல் பாடல்களையும் எழுதி இருக்கிறார். முகலாய மன்னர்களிலேயே, புகைப்படம் எடுக்கப்பட்ட முதல் மற்றும் கடைசி மன்னர் என்ற பெருமை, இவருக்கு உண்டு. மன்னர் ஜஹாங்கீர், இவருடைய எள்ளுத் தாத்தா. அவர் 1613ஆம் ஆண்டில் கொடுத்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
உலகின் முதல் தொலைநோக்கியின் செயல்பாடு விளக்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 25இன்றைக்கு 'ஹப்புள்' (Hubble) மாதிரியான அதிநவீன தொலைநோக்கி, (Telescope) பூமிக்கு மேலே, 600 கி.மீ. உயரத்தில் பூமியை வலம் வந்து, கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள், தொலைதூர கேலக்ஸிகள் என்று பலவிதமான வான்பொருட்களைப் படம் எடுத்து அனுப்புகிறது. அவற்றைக் கொண்டு பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
கிரேக்க அறுவடைக் கடவுள், டிமிடர் (Demeter). அவர் மகள் பெர்சிபோன் (Persephone). ஒரு நாள் பூப்பறிப்பதற்காக அவள் தோட்டத்திற்குப் போனாள். ஒரு பூ கைதவறிக் கீழே விழுந்தது. அதை எடுக்க அவள் குனிந்தபோது பூமி பிளந்து அவளைப் பாதாளத்துக்கு உள்ளே இழுத்துக்கொண்டது. எதிரே பாதாளக் கடவுள் ஹேடஸ் (Hades) நின்றிருந்தார். பெர்சிபோனுக்குப் பாதாள உலகம் பிடிக்கவில்லை. அந்த அரசனையும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
இன்று, சென்னைக்கு வயது 377!சென்னையை அறிமுகம் செய்ய, சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் 16 மாடி எல்.ஐ.சி. கட்டடத்தையும்தான் பழைய தமிழ் சினிமாக்களில் முதலில் காட்டுவார்கள். ஆனால், பெரிய பெரிய ஷாப்பிங் மால்களும் மென்பொருள் நிறுவனங்களும்தான் இன்று சென்னையின் அடையாளங்கள்! குதிரை வண்டிகள் ஓடிய சாலையில் வெளிநாட்டு கார்கள் தவழ்கின்றன; மருத்துவம், தொழில்நுட்பம் என எல்லா நவீன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
அன்னை தெரசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26வெள்ளை நிறக் கைத்தறிச் சேலையின் ஓரத்தில் நீல நிறக் கரை; வரிவரியாகச் சுருக்கங்கள் நிறைந்த முகம்; கருணை நிறைந்த விழிகள்; இன, மத வேறுபாடு கடந்த சேவை மனப்பாங்கு, என அன்பின் மொத்த உருவமாகத் திகழ்ந்தவர் அன்னை தெரசா.தன்னுடைய 12 வயதில் துறவறம் போக முடிவு செய்து, 18ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். மாசிடோனியாவில் 1910 ஆகஸ்ட் 26ல் பிறந்தார். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
இந்தியாவே ஆவலோடு எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த பி.வி. சிந்து இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை இழந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேஸில் ரியோ ஒலிம்பிக், பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் ஃபைனல் போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தரவரிசையில் 10ஆவது இடத்திலுள்ள இந்திய வீராங்கனை சிந்து, 'நம்பர்-1' வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
ரியோ மல்யுத்தப் போட்டியின் 'பிரீஸ்டைல்' 58 கிலோ எடைப் பிரிவின் 'ரெபிசேஜ்' வாய்ப்பில் அசத்தினார் இந்தியாவின் சாக் ஷி மாலிக். முதலில் மங்கோலியாவின் புரேவ்டோர்ஜினை சாய்த்தார். பின் வெண்கலத்திற்கான போட்டியில் கிர்கிஸ்தானின் ஐஸ்சுலுவை 8 - 5 என வென்றார். இதன் மூலம், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தந்தார். ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பதக்கம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
இந்திய வீராங்கனை திபா கர்மாகர் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சாதனை நிகழ்த்தியது ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. அற்புதமாகத் தனது திறமையை வெளிப்படுத்தினாலும் வெண்கலம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டு 4ஆவது இடம் பிடித்தார். தோல்வி குறித்து திபா கூறும்போது, “எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியுமோ அவ்வளவு சிறப்பாக செயல்பட்டேன். 5 அல்லது 6ஆவது இடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
பிரேஸில் ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தின் ஃபைனலில் 'மின்னல் வேக மனிதன்' ஜமைக்காவின் உசேன் போல்ட் (9.81 வினாடி) தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் 'ஹாட்ரிக்' தங்கம் (2008, 2012, 2016) வென்ற முதல் வீரர் என்ற சாதனை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
ஒலிம்பிக் நீச்சல் 4x100 மீட்டர் 'மெட்லே ரிலே' பிரிவு ஃபைனலில் அமெரிக்காவின் பெல்ப்ஸ் குழு தங்கம் வென்றது. இது, ஒலிம்பிக் அரங்கில் பெல்ப்ஸ் பெற்ற 23ஆவது தங்கம். ஒட்டுமொத்தமாக 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 28 பதக்கங்கள் கைப்பற்றி உள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 5 தங்கம், ஒரு வெள்ளி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 'ஸ்கிட்' பிரிவில் வெண்கலம் வென்றார் அமெரிக்க வீராங்கனை கிம்பெர்லி ரூடே. 1996ல் இருந்து பின் நடந்த எல்லா ஒலிம்பிக்கிலும் பதக்கம் கைப்பற்றினார். தொடர்ச்சியாக 6 ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற சாதனை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
ஆண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்தவர்வேடே வான், தென் ஆப்ரிக்கா (43.03 வினாடி)ரியோ ஒலிம்பிக் ஆண்கள் ரக்பி செவன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற அணிஃபிஜி அணி (எதிர் - பிரிட்டன்)ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஒற்றையரில் தங்கம் வென்றவர்ஆன்டி முர்ரே (பிரிட்டன்) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X