Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
1950 இல் நடந்த வடகொரியா - தென்கொரியா போரால், பல ஆயிரம் குடும்பங்கள் பிரிந்தன. மீண்டும் தங்கள் குடும்பத்தினருடன் இணைய 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 89 குடும்பத்தினர், தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்தவாரம் நடந்தது. 4 வயதில் தன் தாய், தந்தையை விட்டுப்பிரிந்த ஷாங், வடகொரியாவில் வேறு ஒரு குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டார். அவரது தாய் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
தமிழக அரசின் 1997ஆம் ஆண்டு அரசாணையின் அடிப்படையில், 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ,'மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உடற்கல்வி அவசியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், படிப்பில் கவனம் செலுத்த முடியும். 5 வயது முதல் 18 வயது வரையிலான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
ஸ்ரீதர், தெலங்கானா மாநில அரசு ஊழியர். நிதித்துறையில் முதுநிலைக் கணக்காளராகப் பணிபுரிகிறார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள மிர்யலகுடா (Miryalaguda), ஸ்ரீதரின் சொந்த ஊர். உலகெங்கும் பரவியுள்ள இவ்வூர்வாசிகள் அனைவரையும் ஒன்று திரட்டி, மன மிர்யலகுடா (நமது மிர்யலகுடா) எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் கணக்குத் தொடங்கியுள்ளார் ஸ்ரீதர். அதன் மூலம் தங்கள் ஊரின் அரசுப் பள்ளிகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
கேட்கும் திறன் குறைபாடு கொண்ட, வாடகைக் கார் ஓட்டுநர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண, செயலி (App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயக்டஸ் (Coactus) எனும் தென் கொரிய நிறுவனம், அந்நாட்டின் தலைநகரான சியோலில் இச்சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த மென்பொருள், பேச்சை எழுத்தாக மாற்றும் (voice- to- text conversion) திறன் கொண்டது. வாடிக்கையாளர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடம், கட்டணம் செலுத்தும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
Billy Searle, a student from Loughborough Design School, is the creator of Mylo - a spherical games controller designed to help people with disabilities improve their mental fitness and dexterity levels. This unique games controller designed for both rehabilitation and entertainment purposes.The idea was inspired by Billy's sister, Jess, who has cerebral palsy. Billy came up with the concept of Mylo as a solution to help people like Jess improve muscle memory and ultimately overcome barriers and become more ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிபோன்சாய் மரங்களில் இருந்து ஆக்சிஜன் கிடைக்குமா?வீ.என். ரஞ்சனி, 11ஆம் வகுப்பு, அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா பள்ளி, சென்னை.போன்சாய் எனப்படும் குட்டைச் செடிகள் வளர்ப்பதும் ஒரு தோட்டக்கலையே! ஜப்பானிய மொழியில் 'போன்' என்றால் 'ஆழமற்ற தட்டுகள்' என்றும், 'சாய்' என்றால் 'செடிகள்' என்றும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
2050-ஆம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை, 900 கோடியாகப் பெருகும் என்பது ஒரு கணிப்பு. அந்தச் சூழலில், உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று. உலகில் வாழும் அனைத்து மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய, வேளாண்துறையால் மட்டும் முடியாது. எனவே, பிற வழிகளின் மூலம் மாற்று உணவைத் தேடவேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. அப்படிப்பட்ட மாற்று உணவாகப் பூச்சி உணவுகள் தற்போது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
'மிசஸ். ஹியூம்ஸ் பீஸன்ட்' (Mrs. Hume's Pheasant)உயிரியல் பெயர்: 'சிமாடிகஸ் ஹியுமியே' (Syrmaticus humiae)வேறு பெயர்: கம்பி வால் மயில் (Bar Tailed Pheasant)நீளம்: 90 செ.மீ.வால் நீளம்: 50 செ.மீ.எடை: 1 கி.வாழ்நாள்: 3 ஆண்டுகள்காட்டுப் பறவையான 'மிஸஸ் ஹியூம்ஸ் பீஸன்ட்', மயில் போன்ற தோற்றத்தை உடையது. தலைப்பகுதி சிவப்பு நிறத்திலும், உடல் பழுப்பு சாம்பல் நிறத்திலும் காணப்படும். வால் பகுதி நீளமாக சாம்பல், கருப்பு கலந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
மின் விலாங்குஆங்கிலப் பெயர்: 'எலெக்ட்ரிக் ஈல்' (Electric Eeel)உயிரியல் பெயர்: 'எலெக்ட்ரோபோரஸ் எலெக்ட்ரிகஸ்' (Electrophorus electricus)உயிரியல் குடும்பம்: 'ஜிம்னோடிடே' (Gymnotidae)நீளம்: 8 அடிஎடை: 20 கி.நீந்தும் வேகம்: மணிக்கு 8 கி.மீ.வாழ்நாள்: 22 ஆண்டுகள்எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்வதற்காக உடலில் மின்சாரம் உற்பத்தி செய்வதால், 'மின் விலாங்கு மீன்' என்று இதற்குப் பெயர். நீண்ட உருளை வடிவத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
உமா மிஸ்ஸின் வகுப்பறைக்குள் நுழைந்தேன். ஓவியாவையும் என்னையும் இன்னும் ஒருசிலரையும் மிஸ் அழைத்திருந்தார். இன்டர்வெல்லுக்குப் பின்னர் விளையாட்டு பீரியட் என்பதால், கீழே இறங்கிப் போனோம். அவரது வகுப்பறை கரும்பலகையில், “மேதைமை மணித்துளிகளுக்கு வருக, வருக” என்று சாக்குக்கட்டியால் எழுதப்பட்டு, சுற்றி பல்வேறு வண்ணச் சாக்குக்கட்டிகளால் அவ்வளவு பூவேலைகள். வழக்கம்போல், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
அக்னிஜோ பானர்ஜி, லண்டனில் வசிக்கிறார். வயது 17. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரைப் பொறுத்தவரை கணிதம் மிகவும் விந்தையானது. காரணம், 'நமது பொதுப்புத்தி சொல்லும் பல விஷயங்கள், கணிதம் வழங்கும் தீர்வுகளோடு ஒத்துப்போவதில்லை. கணிதம் விசித்திரமான விடைகளையே வழங்கும்' என்கிறார். இளவயது கணிதமேதையான இவர், 12 வயதிலேயே, பிரபல IQ தேர்வான மென்சாவில், 162 புள்ளிகள் பெற்றுள்ளார். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
'ஜிங்கிள்பெல்' கேள்விப்பட்டிருப்போம். 'கெட்டில்பெல்' தெரியுமா? அது ஒரு விளையாட்டு. அதற்கு ஆசிய அளவில் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறதாம். அதில், தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஹரிஹரன் பங்கேற்று, தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் என்ற செய்தி ஆச்சரியத்தை அளித்தது. உடனே விக்னேஷ் ஹரிஹரனைத் தொடர்புகொண்டு 'கெட்டில்பெல்' என்பது என்ன விளையாட்டு? என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
தமிழில் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள் எவ்வாறு மிகுதியாக இருக்கின்றனவோ அவ்வாறே வடசொற்களும் மிகுதியாக இருக்கின்றன. 'அகம்பாவம்', 'அகந்தை', 'ஆங்காரம்', 'கர்வம்' ஆகியவை வடசொற்கள். 'செருக்கு', 'இறுமாப்பு' என்னும் பொருளில் அமைந்த சொற்கள் அவை. கால் என்பதிலிருந்து தோன்றியமையால் காலம் என்பதைத் தமிழ்ச்சொல் என்கிறோம். கால் என்பது காற்றைக் குறிக்கும். அதனால்தான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
ஆசியாவில் உள்ள பழமையான நூலகங்களில் ஒன்று தஞ்சையில் உள்ள சரசுவதி மகால் நூலகம். இது எந்த ஆண்டு நிறுவப்பட்டது என்பதற்கான சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால், ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகிறது. நூலகத்தைச் சோழர் காலத்தில் 'பண்டாரம்' என்று அழைத்தனர். பண்டாரம் என்றால் கருவூலம் என்று பொருள். சரஸ்வதி, கல்விக்கான கடவுளாகக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
ஆத்திசூடி தெரியுமா?ஓ, தெரியுமே! அறம் செய விரும்பு, ஆறுவது சினம்... அதுதானே?ஔவையார் எழுதிய ஆத்திசூடி அனைவருக்கும் தெரிந்தது. அந்நூல் எழுதப்பட்டுப் பல்லாண்டுகளுக்குப்பிறகு பாரதியாரும் ஓர் ஆத்திசூடி எழுதியிருக்கிறார். பாரதிதாசன் இரண்டு ஆத்திசூடி நூல்கள் எழுதியிருக்கிறார்: பெரியவர்களுக்கு ஒன்று, இளைஞர்களுக்கு ஒன்று!எடுத்துக்காட்டாக, பாரதிதாசனின் ஆத்திசூடி இப்படித் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
ஆகஸ்ட் 29, 2009 - சர்வதேச அணு ஆயுதச் சோதனை எதிர்ப்பு நாள் உலகம் முழுக்க நடத்தப்படும் அணு ஆயுதச் சோதனைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவுகள் பற்றியும், பரவலைத் தடுக்கவும், ஐ.நா. சார்பில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஆகஸ்ட் 29, 1905 - தயான் சந்த் பிறந்த நாள்ஹாக்கி வீரர். 1928, 1932, 1936 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்லக் காரணமாக இருந்தார். 1956இல் பத்மபூஷன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
எர்னெஸ்ட் ரூதர்ஃபோர்டு1871 - 1937பிரைட்வாட்டர், நியூசிலாந்து.அப்போது அவருக்கு வயது பத்து. கையில் கிடைத்த அறிவியல் புத்தகத்தில் இருந்த ஆய்வுகளை வேகவேகமாகச் செய்துகாட்டி, குடும்பத்தினரைப் பிரமிக்க வைத்தார். அப்படித்தான் ஒரு பொம்மை பீரங்கியை விளையாட்டுத்தனமாகச் செய்து, அது பெரும் சத்தத்துடன் வெடித்ததைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். அதே உற்சாகத்துடன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்தின் ஓர் உறுப்பினர் போலவே இடம்பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது தொலைக்காட்சி. பொழுதுபோக்கு, நாடகம், திரைப்படம் என, பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களை ஈர்க்கும் தொலைக்காட்சியைப் பார்க்காமல் இருப்பது என்பது சவாலான விஷயம்தான். பெரும்பாலான மாணவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்க்க நேரம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X