Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
இதுவரை தமிழக மக்கள், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களை, நேரடியாக ஓட்டு போட்டுத் தேர்வு செய்து வந்தனர். கடந்த ஜூன் மாதத்தில், மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கும் நேரடி தேர்தலை ரத்து செய்யும் சட்ட திருத்தம், கடந்த ஆகஸ்ட் 29 அன்று, சட்டசபையில் தாக்கல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் தற்காலிக ஆளுநராகப் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக ஆளுநராகப் பதவி வகித்த ரோசைய்யாவின் பதவிக் காலம், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதை அடுத்து, வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பாக, தமிழக ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், செப்டம்பர் 2 அன்று ஆளுநர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆகஸ்ட் 31 அன்று, சட்ட சபையில் அறிவித்தார். இதன் மூலம், மாணவர்களின் மனதில் நல்ல தமிழ்ச் சொற்களைப் பதிய வைக்கவும், வழக்கொழிந்து வரும் தமிழ்ச் சொற்கள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் முடியும் என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களில் 21 பேர் தலைமை ஆசிரியர்கள். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, செப்டம்பர் 5 அன்று டில்லியில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில், இந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த ஆகஸ்ட் 28 அன்று, வளி மண்டல ஆக்சிஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும், புதிய தொழில்நுட்ப ராக்கெட் இன்ஜின் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதன் மூலம், இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் நுழைந்த, நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. 'ஸ்க்ராம்ஜெட்' (Scramjet)எனும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ராக்கெட்டில், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
மேற்குவங்க மாநிலத்தின் பெயரை 'பங்லா' என்று மாற்ற, அந்த மாநிலத்தின் சட்டப்பேரவை, கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அன்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், இனி மேற்குவங்கம் ஆங்கிலத்தில், 'பெங்கால்' என்றும் வங்கமொழியில் 'பங்லா' என்றும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
பிரிட்டனில் வசித்துவரும் இந்திய வம்சாவளிச் சிறுவன், கிர்தின் நித்தியானந்தம். இவருக்கு 16 வயதுதான் ஆகிறது. மருந்துகளுக்குக் கட்டுப்படாத ஒரு வகை மார்பகப் புற்று நோய்க்கான சிகிச்சை முறையை இவர் கண்டறிந்துள்ளார். கிர்தின், 'டிரிபிள் நெகடிவ்' மார்பகப் புற்றுநோய்' எனப்படும் புற்றுநோய்க்குக் காரணமான புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிக்கும் வழிமுறையைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவும் கியூபாவும் பகை நாடுகளாக இருந்து வந்தன. தற்போது இருநாடுகளும் பகைமை மறந்து, நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மார்ச் மாதம் கியூபா சென்று, அந்நாட்டு அதிபர் ராவூல் காஸ்ட்ரோவை சந்தித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்குப் பிறகு, இரு நாடுகளிடையே தூதரக உறவுகள் புதுப்பிக்கப்பட்டன. தற்போது, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிவிண்வெளியில் இருந்து சீனப் பெருஞ்சுவரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என்பது உண்மையா? அங்கிருந்து வேறு என்னென்ன விஷயங்கள் நம் கண்களுக்குப் புலப்படும்?S. பத்ரி நாராயணன், 12ஆம் வகுப்பு, ஸ்ரீ சங்கர வித்யாலயா, புதுச்சேரி.'நிலவில் இருந்து பார்த்தால்கூட, சீனப் பெருஞ்சுவர் தென்படும்' என்பதெல்லாம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
மழைக்காலங்களில் வானத்தில் வண்ணமாய்த் தோன்றுகிற வானவில்லைப் பார்த்து ரசித்திருப்போம். பார்த்தவுடன் நம்மைக் கவரும் அழகான வானவில் தோன்ற, மழை மட்டுமே காரணம் இல்லை. பனி மூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத தூசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகள் இவையும் முக்கியக் காரணம்! மழைக்காலத்தில் மேகங்களில் உள்ள நீர்த்துளிகளில் சூரிய ஒளி ஊடுருவும். அந்த ஒளி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
நிலா அழகாக இருக்கிறது. அதைத் தொலைவிலிருந்து மட்டுமே ரசிக்க முடியும். நிலாவிற்குச் சென்று நாம் வசிக்க முடியாது. ஏனென்றால் நிலாவில் காற்று கிடையாது. பூமியின் புவி ஈர்ப்பு விசையைக் காட்டிலும் நிலாவில் ஈர்ப்பு விசை ஆறு மடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால்தான் அந்த விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. அத்தகைய விசை சந்திரனுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
சோப்பை நீரில் குழைத்ததும் வாசனையோடு, வழவழவென நுரைக்குமிழ் பெருகும். பச்சை, சிகப்பு, மஞ்சள் என சோப்புக் கட்டிகள் பல நிறங்களில் கிடைக்கின்றன. சோப்பு எந்த நிறத்தில் இருந்தாலும் அவற்றின் நுரை மட்டும் வெண்மையாகவே இருப்பது ஏன் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?! சோப்பு நுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் சிறு அளவு காற்றை உள்ளடக்கி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
பாலு, வாலு, ஞாநி மாமா, நான் எல்லாரும் என் அறையில் நேற்று இரவு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. ஒரே இருட்டு. என் மேசை இழுப்பறையிலிருந்து ஒரு மெழுகுவர்த்தியையும் தீப்பெட்டியையும் எடுத்து பாலுவிடம் கொடுத்தேன். அவன் அதை ஏற்றிவிட்டு மாமாவிடம் கேட்டான்.“மாமா, இந்த நெருப்பிலிருந்து வெளிச்சமும் வருது. வெப்பமும் வருது. யார் இந்த நெருப்பை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
வயல்வரப்புகளில், சாலையோரங்களில் படர்ந்து வளரும் ஒரு வகை குட்டைச் செடிதான் தொட்டால் சிணுங்கி. குண்டு குண்டாய் ஊதா நிறப் பூவுடன், பார்க்க அழகாக இருக்கும். இந்தச் செடியைப் பார்க்கும் யாரும் இதை தொடாமல் போக மாட்டார்கள். தொட்டால், என்னை ஏன் தொடுகிறாய் என்பது போல் இதன் இலைகள் சட்டென்று சுருங்கிக் கொள்ளும். இப்படி சுருங்கிக் கொள்வதால் அதையே இதற்கு காரணப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
நமக்கெல்லாம வெங்காயம் தெரியும். வெங்காயத்துக்கு மேலே வளரும் இலைதான் வெங்காயத்தாள் என்றும் தெரியும். அந்த வெங்காயத்தாளில் என்னென்ன நன்மைகள் அடங்கி இருக்கின்றன என்பது மட்டும் பெரும்பாலும் தெரியாது. அதை தெரிந்து கொள்வோம்! வெங்காயத்தாளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவில் கந்தக சத்து (sulphur) நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, சி,கே, பி2, செம்பு, பாஸ்பரஸ், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
உலகில் உயர்ந்த சிகரம் (Peak) இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் (Everest Peak). இதன் உயரம் 8,848 கி.மீட்டர். சர் எட்மண்ட் பெர்சிவல் ஹில்லாரி (Sir Edmund Percival Hillary ) மற்றும் டென்ஸிங் நார்கே (Tenzing Norgay) இருவரும் இணைந்து 1953ல் இந்தச் சிகரத்தை அடைந்தார்கள். எட்மண்ட் ஹிலாரி 1919 ஜூலை 20ல் நியூசிலாந்து நாட்டில் பிறந்தார். மலையேறுவதில் அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்டவர். இரண்டாவது உலகப் போரின் போது, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
பள்ளிக்காலத்தில், மாணவர்களை நண்பராக பாவிக்கக்கூடிய ஆசிரியர்கள் வாய்ப்பது பெரும்பேறு. அப்படி எனக்கு அதிர்ஷ்டமாகக் கிடைத்த அரிய ஆசிரியர்தான் 'கேவிஆர்' என்று நாங்கள் அன்போடு குறிப்பிடும் கே.வெங்கடேச ரவி. மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர். வாசிப்பு, எழுத்து இரண்டின் மீதான ஆர்வம் பள்ளி நாட்களிலேயே ஏற்பட்டுவிட்ட என்னைப் போன்றவர்களுக்கு வீடும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
நான்காம் வகுப்பு அரையாண்டுத் தேர்வின்போது ஒரு நாள் தாத்தா என்னைச் சந்தைக்கு கூட்டி சென்றுவிட்டார். தலையில் வெண்டைக்காய் கூடையை சுமந்து கொண்டுபோய் சந்தையில் போட்டுவிட்டு, தாத்தா வாங்கிக்கொடுத்த நொறுக்குத் தீனியைத் தின்றபடி மாலையில் வீடு வந்து சேர்ந்தேன்.முதல்நாள் நான் வராததன் காரணத்தைக் ராமலிங்கம் சார், கேட்டார். விவரத்தைச் சொன்னேன். 'பரீட்சைக்கு வராம ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, புனித வளனார் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நான் படித்தேன். ஏழாம் வகுப்பு முடித்து, 8ஆம் வகுப்பு தொடங்கிய நாள் அது. பக்கத்து வகுப்புப் பிள்ளைகள், கமலா என்ற ஆங்கில ஆசிரியரைப் பற்றிக் குறை கூறிக்கொண்டிருந்தார்கள். 'அவர் தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசுவார்' என்பதுதான் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு. வகுப்புக்குச் சென்றபோது, 'இந்த வருடம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
ஒன்றாம் வகுப்பில் சேர என்னிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி, “அஞ்சு வயசு ஆகிடுச்சா?” முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு, அழுதுகொண்டே வரும் என் போன்றவர்களைச் சமாளிப்பது கடினம். எங்களையும் சமாளித்தவர் என் முதல் வகுப்பு ஆசிரியை தெய்வானை. அழுதால் மிட்டாய் தருவார் என்பதற்காக தினமும் அழுதுகொண்டே பள்ளிக்கூடம் வருவோம்.அவரைச் சுற்றி எங்களை வட்டமாக அமர வைத்து சைகைகள் காட்டிக் கதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
நான் ஒருபோதும் மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. நான் படித்த பள்ளியும் கல்லூரியும் அப்படிப்பட்டவை. பள்ளி செங்கல்பட்டில் இருக்கும் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி. கல்லூரி தாம்பரத்தில் இருக்கும் சென்னைக் கிறித்துவக் கல்லூரி. பள்ளியில் எனக்கு பல வருடங்கள் முன்னர் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் மாணவராக இருந்திருக்கிறார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
ஒண்ணாப்பு (ஒன்றாம் வகுப்பு என்று பொருள்): கிளி அந்தோணி டீச்சர். 'இந்த ராணிப் புத்தகத்த வீட்டுல குடுத்துட்டு வாடா' என்று அவர் கொடுத்த புத்தகத்தில், 'பழக்கடையில் பாம்பு அடிக்கும் சத்தம் கேட்டது' என்கிற வாக்கியத்தைப் படித்துக் குழம்பியிருக்கிறேன். வளர்ந்த பிறகு, அது, 'புழக்கடையில் பம்பு அடிக்கும் சத்தம்' என்று புரிந்தது.ரெண்டாப்பு: சுட்டுமணி வாத்தியார். அவர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
தமிழ் சரித்திரக் கதைகளின் முன்னோடியாகிய நான், தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் பிறந்தேன். அங்கு ஆரம்பக் கல்வி பயின்ற பிறகு, திருச்சி தேசியக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தேன். படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற்று சிறை சென்றேன். சிறையில் நான் எழுதிய முதல் நாவல் 'விமலா' சுதந்தரன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
வீட்டு அலங்காரப் பொருட்களில், பூ ஜாடிக்கு எப்போதுமே தனி சிறப்பு உண்டு. ஒரு மருந்து பாட்டிலையும், டிஷ்யூ பேப்பரால் செய்த பூக்களையும் கொண்டு, எளிமையான அழகிய பூ ஜாடி செய்யப் போகிறோம். தேவையான பொருட்கள்1. சிரப் பாட்டில் - 1. 2. ஸ்வெட்டர் பின்னும் நூல் (2 நிறங்களில்).3. டிஷ்யூ தாள்கள் - 2. 4. பச்சை நிற ஃபிளோரல் டேப், அலுமினியக் கம்பிகள். (ஸ்டாக்கிங் பூக்கள் செய்வதற்கான பொருட்கள் இவை) 5. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
விண்வெளியில், பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஓர் ஆய்வு நிலையம், சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station). இதன் நீளம் 109 மீட்டர். இது ஏறத்தாழ ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்துக்குச் சமமானது. இதன் எடை 4,20,000 கிலோ. ஏறத்தாழ 320 கார்களுக்கு இணையான கனம்! இவ்வளவு பெரிய எடையைத் தூக்கிக்கொண்டு, இந்த விண்வெளி நிலையம் 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது. ஒரு நாளில் 16 முறை. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
இந்தக் காலத்தில் லைட்டரைக் கொண்டு, நொடியில் கேஸ் அடுப்பைப் பற்ற வைத்துவிடுகிறோம். லைட்டர், தீப்பெட்டி போன்றவை இல்லாத காலத்தில், மக்கள் எப்படி நெருப்பு மூட்டி இருப்பார்கள்? சமையல் செய்வதைவிட, நெருப்பு மூட்டுவதுதான் அவர்களுக்குப் பெரும் சுமையாக இருந்திருக்கும். தீ உண்டாக்க அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் சிலவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.தீக்கடைக்கோல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
டென்னிஸ் ரிட்ச்சி பிறந்த தினம் செப்டம்பர் 9ஆங்கில மொழியில் A,B,C... எழுத்துகள் தெரியும்! அது என்ன C என்றொரு கணினி மொழி?!மனிதன் கணிப்பொறியுடன் உரையாட அது புரிந்துகொள்ளும் வகையில் உயர்நிலை மொழிகள் (High Level Languages) தேவைப்பட்டன. பொறியியல் மற்றும் அறிவியல் பணிகளுக்காக ஃபோர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslation), வணிகத் துறைக்காக கோபால் (COBOL - COmmon Business Oriented Language) என ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு மொழி உருவானது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
படம் வரைய பேனா, பென்சில், வண்ணங்கள், தூரிகை (பிரஷ்) இப்படி ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். ஆனால் இது எதுவுமே இல்லாமல் கரித்துண்டை வைத்து ஓவியங்கள் வரைய கற்றிருக்கிறார் உலகப் புகழ்ப் பெற்ற ஓவியர் 'வின்சென்ட் வில்லியம் வான்கா' (Vincent Willem vanGogh). தெற்கு நெதர்லாந்தின் ஒரு சின்ன கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில், 1853 மார்ச் 30 அன்று பிறந்தார். இவரைப் பற்றிச் சொல்லும்போது ரசனையான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
சங்கப் புலவர்களில் புகழ் மிக்கவர் கபிலர். மலையும் மலை சார்ந்த இயற்கைச் சூழலையும் பற்றி அருமையாக எழுதக் கூடியவர். அதனால் 'குறிஞ்சிக் கபிலர்' என்று போற்றப்படுகிறார்.பல மன்னர்களைப் பற்றி இவர் பாடி இருந்தாலும், பாரி என்ற மன்னன் மீது மிகுந்த அன்பும் நட்பும் கொண்டிருந்தார்.பாரியின் பறம்பு மலை, மிகுந்த செல்வச் செழிப்பு உடையது. பாரியின் புகழ், சேர, சோழ, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் செப்டம்பர் 5'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற தொடரில் பெற்றோருக்கு அடுத்தபடியாக இருப்பது ஆசிரியர்கள்! எழுத்தறிவிக்கும் அவர்கள்தான், சிறந்த வழிகாட்டிகளாக இருந்து, கல்வி போதித்து, நம் திறமைகளை நமக்குப் புரிய வைக்கிறார்கள்! அதனால்தான், அவர்களுடைய பணியை 'புனிதமான தொழில்' (Noble Profession) என்கிறோம்.'அ... ஆ...' என்று கைபிடித்து எழுதப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயல்படும் இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் 'கேல் ரத்னா' விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கு ரியோ ஒலிம்பிக்கில் அசத்திய சிந்து (பாட்மின்டன், வெள்ளி), சாக் ஷி (மல்யுத்தம், வெண்கலம்), திபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ஜித்து ராய் (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். தேசிய விளையாட்டு தினத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் லண்டன் ஒலிம்பிக் (2012) 'ஃப்ரீஸ்டைல்' 60 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்யாவின் பெசிக் குடுகோவிடம் வீழ்ந்தார். பின் 'ரெபிசேஜ்' முறையில் யோகேஷ்வர் வெண்கலம் வென்றார். ஃபைனலுக்கு முன்னேறிய பெசிக், வெள்ளி கைப்பற்றினார். ஒலிம்பிக்கின்போது இவரிடம் எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியில் ஊக்கமருந்து இருந்தது சமீபத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளில் சிறப்பாகச் செயல்படும் வீரருக்கு ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது தரப்படும். 2015 - 2016ஆம் ஆண்டுக்கான உத்தேச பட்டியலில் போர்ச்சுகலின் ரொனால்டோ, வேல்ஸ் அணியின் கேரத் பேல், பிரான்ஸின் கிரைஜ்மான் இடம்பெற்றனர். இதற்கான ஓட்டுப்பதிவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், இரண்டாவது முறையாக (2013 - 2014, 2015 - 2016) இந்த விருதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட 'டுவென்டி - 20' தொடர் அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது. முதல் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இரு அணிகள் மோதிய 2ஆவது போட்டியில் முதலில் 'பேட்டிங்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தபோது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
அமெரிக்காவில், பெண்களுக்கான நியூ ஹெவன் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் சானியா, ருமேனியாவின் மோனிகா நிகுலஸ்கு ஜோடி, உக்ரைனின் கடேரினா, சீன தைபேயின் சியா - ஜங் ஜோடியைச் சந்தித்தது. அபாரமாகச் செயல்பட்ட சானியா, மோனிகா ஜோடி 7 - 4, 6 - 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இது, இந்த ஆண்டில் பெண்கள் இரட்டையர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
இலங்கை அணி 'ஆல் - ரவுண்டர்' தில்ஷன், கடந்த 1999ல் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இதுவரை 87 டெஸ்ட் (5492 ரன்), 329 ஒரு நாள் (10248), 78 'டுவென்டி - 20'யில் (1884) விளையாடி உள்ளார். சர்வதேச 'டுவென்டி - 20' அரங்கில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. 2013ல் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், சமீபத்திய ஆஸ்திரேலிய தொடருடன் ஒரு நாள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது போட்டி நாட்டிங்காமில் நடந்தது. முதலில் 'பேட்டிங்' செய்த இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் அதிரடி காட்ட, 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 444 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்து, தொடரையும் கைப்பற்றியது. கடின இலக்கை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
கிரிக்கெட், ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 300 விக்கெட் வீழ்த்தியவர்?பிரட் லீ (171 போட்டி), ஆஸ்திரேலியா.அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த மயாமி ஓபன் டென்னிசில் கோப்பை கைப்பற்றியவர்?நோவக் ஜோகோவிச் (செர்பியா)ரியோ ஒலிம்பிக்கில் 112 ஆண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்ட கோல்ஃப் விளையாட்டில் தங்கம் வென்ற வீரர்?ஜஸ்டின் ரோஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X