Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியால் சூழப்பட்ட பகுதி மஜுலி. மொத்தம் 352 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட மஜுலியை, 'உலகின் பெரிய ஆற்றுத் தீவு' என்று கின்னஸ் சாதனை புத்தகம், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அன்று அறிவித்தது. இந்நிலையில் செப்டம்பர் 8 அன்று, சர்வானந்த சோனோவால் தலைமையிலான அசாம் அரசு, மஜுலியை தனி மாவட்டமாகத் தரம் உயர்த்த ஒப்புதல் வழங்கியது. இதை அடுத்து, இந்தியாவின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு, ஒப்புதல் அளித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத் திருத்த மசோதா, 50 சதவீத மாநில சட்டப்பேரவைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்படும். இந்த மசோதாவுக்கு தற்போது 19 மாநிலங்களின் ஒப்புதல் கிடைத்துள்ள ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அன்று, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி-எஃப் 05 என்ற ராக்கெட், இன்சாட்-3டிஆர் என்ற செயற்கைக்கோளை, அதற்குரிய பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. 2,211 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், வானிலை நிலவரங்களை அதிநவீன முறையில் கண்டறிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த தன்னார்வலர் முரளி. இவர், சாலை விபத்துகளைத் தடுக்கும் தானியங்கி எச்சரிக்கைக் கருவியைத் தயாரித்துள்ளார். சூரிய மின் தகடுகளால் செயல்படும் இந்தக் கருவியின் உச்சியில், விட்டுவிட்டு ஒளிரும் சிவப்பு நிற எல்.இ.டி., விளக்குகளும், எச்சரிக்கை வாசகங்களைத் தொடர்ந்து ஒலிக்கும் ஒலிப்பான்களும் பொருத்தப்பட்டுள்ளன. தூரத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
ஆத்தூரைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி வாலிபர் மணி (26). படிப்பை முடித்துவிட்டு, தன் ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், 45 x 45 செ.மீ., அளவுள்ள தாளில், ஒரு செ.மீ., இடைவெளியில், இரண்டு குறள்கள் வீதம், 1,330 திருக்குறள்களையும், வலமிருந்து இடமாக, தலைகீழாக எழுதியுள்ளார். திருக்குறள் மட்டுமின்றி, கட்டுரைகளையும், தலைகீழாக எழுதி காண்போரை அசத்தி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
ரிலையன்ஸ் நிறுவனம் தனது, 'ஜியோ' மொபைல் ஃபோன் வர்த்தக சேவையை, செப்டம்பர் 5ஆம் தேதி அன்று, நாடு முழுவதும் துவக்கியது. வரும் டிசம்பர் வரை, அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இன்டர்நெட் டேட்டா' சேவைகள் அனைத்தும் இலவசம் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சலுகை காலத்துக்குப் பிறகும், எஸ்.டி.டி., லேண்ட் லைன், மொபைல் ஃபோன் உள்ளிட்ட அனைத்து அழைப்புகளையும் இலவசமாக வழங்கி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஸிகா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறது. டேவிட் ஜோலி எனும் குடியரசு கட்சி எம்.பி., ஸிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என, தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அன்று, அவர் 100 கொசுக்களை பாட்டிலில் அடைத்து நாடாளுமன்றத்துக்கு எடுத்து வந்து, தனது எதிர்ப்பை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
Three decades ago, Giraffe population was around 150,000 across Africa. Today, their numbers have declined down to 1,00,000 as their habitat has been turned over to agriculture. In spite of the steady decline, Giraffe were not included in the red list of endangered species. The reason was, as a single species, Giraffe's one lakh population strength was not too low to be considered as endangered species. However, a recent DNA analysis of all currently existing nine sub-species, revealed that that there is not just one species of giraffe, but they actually belong to four distinct species. Experts say that the differences are as large as those between brown bears and polar bears. In this case, the individual population count under the four categories will get reduced and giraffe are likely to be labelled endangered ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் மத்திய அரசு விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்இயற்கைப் பேரழிவுகளை விலங்குகளால் எப்படி உணர முடிகிறது?நா. சோபனா, 10ஆம் வகுப்பு, வேலம்மாள் வித்யாலயா, விரகனூர், மதுரை.'அகவொலி' எனப்படும் இன்ஃப்ராசவுண்ட் (Infrasound) அளவில் இருக்கும் நுண்ஒலியை கேட்கும் திறன், சில விலங்குகளுக்கு உள்ளது, என நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது. மனிதனின் காதுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
மிருகக்காட்சி சாலை, பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்குப் போவது என்றாலே நமக்கு ஜாலிதான். விலங்குகள், பறவைகள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். மிருகக்காட்சி சாலைகளிலேயே நாம் அணில்களையும் பார்த்திருப்போம். ஆனால், அணில்களுக்கென்று ஒரு சரணாலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 'ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில் வனவிலங்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
காற்றைக் கல் ஆக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்! சரி, காற்றை ஏன் கல் ஆக ஆக்க வேண்டும், அதனால் என்ன பயன் என்ற கேள்வி நமக்குள் எழும்! கரியமில வாயுவை (Carbon Di oxide) கல்லாக மாற்றுவதன் மூலம் பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம். இது புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள். காற்று எப்படிக் கல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
கடலில் வாழும் ஆமைகளில் மிகப்பெரியது பச்சைக் கடல் ஆமை. மிக அகலமான, வழுவழுப்பான ஓடுகள் கொண்ட இவை, வெப்ப மண்டலக் கடல் பகுதிகளில் காணப்படும். இவ்வகை ஆமைகளின் ஓட்டின் கீழ்ப்புறம் பச்சை நிறக் கொழுப்புப் பகுதி இருப்பதால், இதற்கு பச்சை ஆமை என்று பெயர். இதன் உடலின் அளவோடு ஒப்பிடும்போது இதன் தலை மிகச் சிறியது. சிறிய பச்சை ஆமைகள், சிறு நண்டு, ஜெல்லி மீன், கடல் பஞ்சு போன்றவற்றை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
“நான் ஒரு நாய் வளர்க்கப்போறேன்” என்று அறிவித்தான் பாலு.“உன்னை வளர்க்கறதே பெரிய பாடா இருக்கு எனக்கு. இதுல ஒரு நாய்க்குட்டி வேறவான்னு உங்கம்மா சொல்லியிருப்பாங்களே?” என்றார் ஞாநி மாமா. “அம்மா சொன்னதை அப்படியே அச்சா சொல்றீங்களே. எல்லாப் பெரிசும் ஒரே மாதிரிதான் யோசிப்பீங்க போலிருக்கு” என்றான் பாலு. “எங்கம்மாவும் என்கிட்ட இப்பிடிதான் சொல்லியிருக்காங்க பாலு” என்றார் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
'கெளகும்பர்' பச்சடி சாப்பிட்டிருக்கிறீர்களா? சாப்பிட்டிருப்பீர்கள். பச்சடியாக இல்லாமல் வெறுமனே கூட சாப்பிடலாம். 90 சதவீதம் நீர் சத்து நிரம்பியது. நார் சத்தும் நிறைந்தது. கெட்ட கொழுப்பைக் குறைக்கக் கூடியது. இரும்பு, வைட்டமின்கள், மெக்னீஷியம் போன்ற சத்துகள் உள்ளன. எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. கொழுப்பு குறைவு. உடலுக்கு குளிர்ச்சி தரும்.இவ்வளவு நன்மைகள் நிறைந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம் என்பது பழமொழி. மிளகின் விஷ முறிவு தன்மைக்காக இவ்வாறு சொல்லப்படுகிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மிளகு தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளது. மிளகின் தாயகம் இந்தியா.சங்க காலத்தில் காரத்துக்கு மிளகைத்தான் உரலில் இடித்துப் பயன்படுத்தினார்கள். பின் வந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து மிளகாய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
'காட்டு ராஜா சிங்கம்!' அதன் கம்பீரத்துக்காகவும் தைரியத்துக்காகவும் அப்படிச் சொல்கிறோம். சிங்கம் பற்றிய கதைகள் நிறையவே கேட்டிருக்கிறோம். உண்மையான தகவல்களைக் கொஞ்சம் அறிவோமா? ஆண் சிங்கம் 180 கிலோ எடையுள்ளது. பெண் சிங்கம் 130 கிலோ. இரண்டும் மணிக்கு 81 கி.மீ. வேகத்தில் ஓடும்.இதன் நிறம் இளம் பழுப்பு, இள மஞ்சள் கலந்த கலவை. வரிக்குதிரை, மான், ஒட்டகச்சிவிங்கி, எருமை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
எம்.எஸ். நூற்றாண்டு செப்டம்பர் 16அது 1966ஆம் ஆண்டு. நியூயார்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபை சந்திப்பு. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கூட்டம். 'வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி…' என்கிற சிலப்பதிகாரப் பாடல் கம்பீரமும் கனிவும் கலந்து ஒலிக்கிறது. பார்வையாளர்கள் மெய்மறந்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஆம், ஐ.நா. சபையில் பாடிய முதல் இந்தியப் பாடகி என்கிற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
அச்சிறுவனுக்கு ஐந்து வயதிருக்கும் போது, அவனுடைய அம்மா இறந்து விட்டாள். தாய் இறந்த காரணத்தால் பாட்டி வீட்டில் வளர்ந்தான் அச்சிறுவன். அவனுடைய தந்தைக்கு எட்டையபுர அரண்மனையில் பணி. தமிழ், ஆங்கிலம், கணக்கு மூன்றிலும் திறமையுடன் விளங்கினார் அவனது தந்தை. தன்னைப் போலவே தன் மகனும் கல்வியில் சிறப்புடன் விளங்க வேண்டும் என்று விரும்பினார் அவனது தந்தை. மிகவும் கண்டிப்பான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
சங்கர்: முன்னா... நீ யோசிச்சுக்கிட்டு இருக்கிறதப் பாத்தா என்னமோ பெருசா நடந்துருக்குபோல.முன்னா: பெருசா ஒண்ணும் இல்லடா. நம்ம கணக்கு வாத்தியாருக்கும் எனக்கும் பிரச்னை.ச: ஓ...! அவர்கூட என்னடா பிரச்னை?மு: என்கிட்ட ஒரு கணக்குக் கேட்டாரு. கரெக்ட்டா நான் பதில் சொன்னதுக்குத் தலையில கொட்டிட்டாரு.ச: கரெக்ட்டா சொன்னதுக்குக் கொட்டினாரா? அப்படின்னா பெரிய பிரச்னைதான். என்ன கேள்விடா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
அதிராம்பட்டினம் ஒரு சிற்றூர்அலைகடலோரம் நிற்கும் ஊர்குதிரைகள் உலவிய காலம்அதுகுளுகுளு மரங்கள் ஆடினவாம்மரங்கள் சூழ்ந்த திடல்ஒன்றுமறுநாள் சந்தை கூடும்என்றுகறிகள் காய்கனி மூட்டைகள்பரிமேல் வந்து குவிந்ததன்றுமிளகாய்ப் பழங்கள் சிலமூட்டைமிளகு, லவங்கம் மசால்பட்டைஇளநீர், தலையில் ஓர்ஓட்டை!இளைப்பை ஆற்றக் குவிந்தனவாம்உருளைக் கிழங்கு உருள்கிறதுசர்க்கரை வள்ளி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
இந்தியாவின் எதிர்காலத் தேவைகளுக்காக வியக்கவைக்கும் கட்டுமானப் பணிகளை உருவாக்கிய நான், கர்நாடகாவில் முட்டனஹள்ளி என்னும் ஊரில் பிறந்தேன். ஆரம்ப கல்வியை சிக்கபல்லபுராவிலும், உயர் கல்வியை பெங்களூரிலும் பயின்றேன். இளங்கலைப் பட்டப் படிப்பை, 1881ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்து, கட்டடப் பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்) கல்வியை புனே அறிவியல் கல்லூரியில் முடித்தேன். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
தாளை மடித்து உருவங்கள் செய்யும் ஓரிகாமி கலை போல, துணியை மடித்து உருவங்கள் செய்யும் கலை ஒன்றும் உள்ளது. இதற்கு பேப்ரிகாமி (Fabrigami) என்று பெயர். ஒரு சிறிய டர்க்கி டவலைச் சுருட்டி, ஒரு அழகிய கரடி பொம்மை செய்யப்போகிறோம்.தேவையான பொருட்கள்1. செவ்வக வடிவில் ஒரு டர்க்கி டவல்.2. ரப்பர்பேண்ட் - 33. பாசியுடன் கூடிய குண்டூசிகள் - 2, பட்டன்கள் - 2, அலங்கரிக்கப் பயன்படும் கற்கள். 4. பசை படத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
பொருள் உற்பத்தியும், வாணிபமும்தான் நாகரிகங்கள், அரசுகள் தோன்றுவதற்கான அடிப்படை. பண்டைத் தமிழகத்தில் வேளாண் உற்பத்தி பெருகி, வாணிபம் சிறப்பாக நடைபெற்றதால்தான், சேர, சோழ பாண்டிய அரசுகள் தோன்றின. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், தமிழக வணிகர்கள் எப்படி வணிகம் செய்தார்கள்? இந்தக் காலத்தைப் போலவே, அந்தக் காலத்திலும் வணிகம் தரைவழியாகவும், கடல்வழியாகவும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
உலக ஓசோன் பாதுகாப்பு தினம் செப்டம்பர் 16'ஓசோன்' என்பது, மூன்று ஆக்சிஜன் மூலக்கூறுகளைக் கொண்ட, ஒரு வகை ஆக்சிஜன் வாயு. 'O3' என்ற வேதியியல் குறியீட்டால் அழைக்கப்படுகிறது. ஒரு கோடி காற்று மூலக்கூறுகளில், மூன்றே ஓசோன் மூலக்கூறுகள்தான் இருக்குமாம். இவ்வளவு அரிதாகக் காணப்பட்டாலும், இந்த வாயு, பூமியில் இருந்து 15 கி.மீ., முதல் 60 கி.மீ., உயரம்வரை இருக்கும் 'ஸ்டிராட்டோஸ்பியர்' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
மணற்குவியல், தரையோடு இறுகாமல் இருக்கும் பாறைகள் போன்றவை சரிவதைப் பார்த்திருப்போம். நில அடுக்குகள் இறுக்கமாக இல்லாத பகுதிகளில், நிலப்பரப்புகள் சரிவதும் உண்டு. இந்த நிகழ்வை நிலச்சரிவு (Land slide / Land Slip) என்று சொல்கிறோம். பல காரணங்களால் நிலச்சரிவு ஏற்படுகிறது. நாம் அடிக்கடி கேள்விப்படும் மலைப்பகுதி நிலச்சரிவுகள், பெரும்பாலும் மழைக் காலங்களில் நடக்கின்றன. மலைச் சரிவுகளின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
தலைப்பே வித்தியாசமாய் இருந்தாலும் இது நிச்சயம் நாம் எல்லோரும் அறிந்த மரம்தான். அதுவும் வயல் ஓரங்களில் வீட்டுத் தோட்டத்தில், மலைப்பகுதிகளில் இப்படி எங்கும் பயிர் செய்யக் கூடியது. ஆம், வாழை மரத்துக்குத்தான் கதலி என்றொரு பெயர் உண்டு. சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களில் வாழை விளைகிறது. வாழை மரத்தின் எல்லா பகுதிகளும் மனிதனுக்கு பயன்தரக்கூடியது. பல்லாயிரக்கணக்கான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
அனைத்துலக மக்களாட்சி நாள் (International Day of Democracy) செப்டம்பர் 15மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பார்கள். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்கிற கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு 'மக்கள்' என்றும் கிராட்டோஸ் என்பதற்கு 'அதிகாரம்' அல்லது 'ஆட்சி' என்றும் பொருள்.தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி முறையே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
மான் குட்டியையோ, மானையோ பார்த்தால் மனதுக்குள் உற்சாகம் பிறக்கும். அருகே சென்று அதன் அழகை ரசிக்கத் தோன்றும். அப்படி நம்மை மிகவும் கவர்ந்த மானில் தோராயமாக 90 வகைகள் இருக்கின்றன. மான், செர்விடய் (Cervidae) எனும் பாலூட்டி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வாழ்நாள் சராசரியாக 2 லிருந்து 4 வருடங்கள் ஆகும். புல், பூண்டு, இலை, துளிர், மொட்டு, காய், கனிகள் சாப்பிடும் தாவர உண்ணி, மான். ஆண் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
ஈ.வெ.ரா. பெரியார் பிறந்த தினம் செப்டம்பர் 17“தொண்டு செய்து பழுத்த பழம்தூய தாடி மார்பில் விழும்மண்டைச் சுரப்பை உலகு தொழும்மனக்குகையில் சிறுத்தை எழும்அவர்தாம் பெரியார்”என்று சொன்னவர் பாவேந்தர் பாரதிதாசன்!யார் இந்தப் பெரியார்? மேலே பாட்டில் வருவதுபோல தூய வெந்நிற தாடியுடன், பழுத்த பழமாக இருக்கும் முதியவரைத்தான் பெரியார் என்கிறோமா? இல்லை!சமூக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
ஆஸ்திரேலிய மண்ணில் நான்கு நாடுகள் பங்கேற்ற ஒருநாள் தொடர் நடந்தது. குயின்ஸ்லாந்தில் நடந்த ஃபைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதின. இந்திய 'ஏ' அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய 'ஏ' அணி 209 ரன்கள் மட்டும் எடுத்துத் தோற்றது. 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 'ஏ' அணி கோப்பை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
கோபா அமெரிக்கா கால்பந்து ஃபைனலில் சிலியிடம், அர்ஜென்டினா வீழ்ந்தது. இந்த விரக்தியில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி, ஓய்வை அறிவித்தார். இந்த முடிவை மாற்றும்படி ரசிகர்கள் வலியுறுத்த, மீண்டும் கால்பந்து களத்தில் கால்பதித்தார். உலக கோப்பை கால்பந்துத் தொடருக்கான (2018) தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்றார். இதில் மெஸ்சி ஒரு கோல் அடிக்க, அர்ஜென்டினா 1 - 0 என உருகுவே அணியை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
நியூயார்க்கில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்றில் உலகின் 'நம்பர் - 1' வீராங்கனையான அமெரிக்காவின் செரினா, கஜகஸ்தானின் ஷிவ்டோவாவைச் சந்தித்தார். அபாரமாகச் செயல்பட்ட செரினா வெற்றி பெற்றார். இதன் மூலம், 'கிராண்ட்ஸ்லாம்' ஒற்றையர் பிரிவில் ('ஓபன் எரா') அதிக வெற்றி (308) பெற்ற நட்சத்திரம் என்ற சாதனை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
மும்பையில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்துப் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த பியுர்டோ ரிகோ அணியைச் சந்தித்தது. உள்ளூர் ரசிகர்கள் முன் இந்திய வீரர்கள் அசத்தினார்கள். முடிவில், இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா. பீஜிங் ஒலிம்பிக் (2008) 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார். சமீபத்திய ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்ட இவர், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
நியூயார்க் நகரில், யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால், பிரான்ஸின் லூகாஸ் பவுலே மோதினார்கள். இதில் ஏமாற்றிய நடால் தோல்வியடைந்தார். கடந்த 2004க்குப் பின் ஓர் ஆண்டில் நடக்கும் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றில் கூட காலிறுதிக்கு முன்னேறாமல் நடால் ஏமாற்றுவது, இதுவே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
2014, காமன்வெல்த் விளையாட்டில் அதிகப் பதக்கங்கள் வென்ற அணி?இங்கிலாந்து 174 (58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம்) கேல் ரத்னா விருது பெற்ற முதல் டென்னிஸ் நட்சத்திரம்?லியாண்டர் பயஸ் (1996 - 1997)சர்வதேச 'டுவென்டி - 20' போட்டியில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த வீரர்?ஆரோன் பின்ச், ஆஸ்திரேலியா (156 ரன்கள், எதிர் - இங்கிலாந்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X