Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளை கல்வித் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டு, காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக வரும் டிசம்பர் மாதத்திற்குள், இரண்டாம் பாகத்தையும் நடத்தி முடித்துவிட்டால், அரையாண்டு தேர்வுக்குப் பின் பொதுத் தேர்வு வரை தினசரி திருப்புதல் தேர்வுகள் நடத்தி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பிரெஞ்சு, ஜெர்மன் மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 14 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தப் பணிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இதன் மூலம், தமிழ் மொழியின் வளம் பற்றிய விழிப்புணர்வு உலகளவில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
மதுரையில் இருந்து, கிழக்கே, 15 கி.மீ., தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 2015 முதல் தொல்லியல் துறை, குழிகள் தோண்டி ஆய்வு நடத்தியது. இதில் உறைகிணறுகள், சுட்ட செங்கல் சுவர், சுடுமண் கூரை ஓடுகள், வெப்ப உலைகள் உள்ளிட்ட 3,000க்கும் அதிகமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கண்காணிப்பாளரும், கீழடி தொல்லியல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
குறைந்த விலையிலான ஆண்ட்ராய்டு போன்கள் வருகையால், இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 35 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில், 50 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் ஆசிய -பசிபிக் மொழிகளுக்கான தலைவர் ரிச்சா சிங், மத்திய பிரதேச மாநிலத்தின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
மும்பை காட்கோபர் பகுதியில், மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்து வருபவரின் மகன் ஜெயந்த். ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்த நிலையில், தனது தந்தை ரவீந்திராவுக்கு உதவியாக இருந்து வந்தார். தந்தை சேகரித்து வரும் மின்னணு கழிவுகளில் இருந்து, கம்ப்யூட்டர் தயாரிக்க தேவையான பாகங்களைத் தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டர்கள் செய்து வருகிறார். அறுவை சிகிச்சையின் போது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா மத்திய பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும், வீட்டுப்பாடம், தேர்வு அட்டவணை, தேர்வு முடிவுகள், உட்பட பல்வேறு தகவல்களை, பெற்றோர்கள் இணையம் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம், அறிந்துகொள்வதற்கான நடைமுறைகள் வர இருக்கின்றன. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
சமீபத்தில் ஆதார் எண்ணை பதிந்தால் மட்டுமே, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும், என மத்திய அரசு அறிவித்தது. இதனால், ஆதார் எண் இல்லாத பல லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., 'ஆதார் எண் இல்லை என, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மறுக்கக்கூடாது. ஆதார் எண் இல்லாதோர், முகவரி அடையாள ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
The Hawaiian crow is the latest animal to be added to the elite group of species that use tools. Scientists have recently documented, that these species employed sticks to extract small pieces of food particles stuck in wooden logs, which is a hard-to-do task for birds. These crows were able to do it in less than a minute.New Caledonia crow, closely related to the Hawaiian species are already known to be master toolmakers and users. Both species have large, mobile eyes and unusually straight bills. scientists believe that these are evolutionary adaptations that enable them to use tools, much like humans having opposable thumbs.However these remarkable skills are in danger of being lost. The Hawaiian crow is the most endangered corvid species and is already extinct in the wild due to habitat ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஇக்ளு பனி வீடுகளில் மனிதன் எப்படி வாழ முடிகிறது?ரா. தமிழமுதன், 8ஆம் வகுப்பு, அரசு நடுநிலைப்பள்ளி, அறந்தாங்கி.பனியால் கட்டிய வீடு என்றாலும், இக்ளு பனி வீடுகளில் வெளியில் இருப்பதைவிடக் குளிர் குறைவு. எல்லாம் இயற்பியல் கைங்கரியம்தான். இக்ளு பனி வீடுகள், சாதாரண பனியால் கட்டப்படுவதில்லை. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால் நாம் என்ன சொல்வோம்?! அதுதான் எங்களுக்குத் தெரியுமே என்றுதானே! சரிதான். உலகம் உருண்டை என்பதை முதன் முதலில் சொன்னவர் 'கலிலியோ'. இதை நீங்கள் படித்திருப்பீர்கள்! உலகம் உருண்டை என்பது, 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதற்கும் முன்பாகவே நம் இலக்கியத்தில் இதைச் சொல்லியிருக்கிறார்கள். என்ன! ஆச்சரியமாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
காய்கறி, மளிகைப் பொருள் வாங்க பெரியவர்களுடனோ, தனியாகவோ கடைக்குப் போய் இருப்பீர்கள். நாம் வாங்கும் பொருளை கடைக்காரர் தராசில் வைத்து ஒருபுறம் எடைக்கல்லை வைப்பார். தராசின் தட்டுகள் மேலும், கீழுமாக அசையும். எடை அதிகமாக இருந்தால் பொருள் உள்ள தட்டு கீழிறங்கி இருக்கும். கொஞ்சம் பொருளை கடைக்காரர் எடுத்து விடுவார். எடை குறைவாக இருந்தால், எடைக்கல் உள்ள தட்டு கீழிறங்கி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
மீன்களில் வித்தியாசமானது 'ஈல்' என்னும் விலாங்கு மீன். உடல் பாம்பைப் போன்று உருளையாகவும் செவுள்கள் இல்லாமலும் இருக்கும். தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய வியப்பளிக்கும் இந்த மீன், தன் எதிரியின் உடலில் பட்டதும் மின்சாரம் பாய்ச்சக்கூடிய உயிரினமாக ஆச்சரியப்படுத்துகிறது. ஈல் மீன்கள் ஆற்று நன்னீரில் வாழக்கூடியவை. இருப்பினும் இவை குஞ்சு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
நூறு வருஷம் கழிச்சு நம்மை எல்லாம் எப்பிடி ஞாபகம் வெச்சுப்பாங்க? அதுக்கு ஏதாவது நாம செய்யவேணாமா?” என்று கவலையோடு கேட்டான் பாலு.“அப்பதான் நாம இருக்கமாட்டோமே. அதைப் பத்தி ஏன் கவலைப்படணும்?” என்றேன். “அப்பிடி இல்ல. எல்லாரும் நம்மை என்னவா ஞாபகம் வெச்சுக்கறாங்கங்கறது இப்ப நமக்கு முக்கியமா இருக்கு இல்ல, அதைப் போலத்தான் அப்புறமும்” என்று வாதிட்டான் பாலு. ஞாநி மாமா எங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
நம்முடைய மூக்கில் மில்லியன் கணக்கில் வாசனையை நுகரக் கூடிய செல்கள் இருக்கின்றன. அந்த செல்கள்தான், நமக்கு பொருட்களின் வெவ்வேறு வகையான வாசனையை அறிய காரணமாக இருக்கின்றன.இயற்கையில் லட்சத்துக்கும் மேற்பட்ட வாசனைகள் உள்ளன. ஒரு சராசரி மனிதனால் 100 முதல் 200 வகையான வாசனையை அறிய முடியும். ஆனால் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சுமார் 800 வகையான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
பல்லையோ நகத்தையோ கடிப்பது பொதுவாக நமக்கு கெட்ட பழக்கம். ஆனால் எலிகளுக்கு அது நல்ல பழக்கம். ஆம், எலிகள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் பற்களைக் கடிக்கின்றன. விளையாடும்பொழுது 'கிரீச் கிரீச்' என்ற சத்தத்தை எழுப்புகின்றன.எலிகள் தனித்து வசிப்பதில்லை. அவை குழுவாகவே வசிக்கின்றன. அப்படி தனியாக இருக்கும் பட்சத்தில் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. ஒரு முறை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய கனிகளில் கொய்யாப் பழமும் ஒன்று. இதில் ஏ, பி, சி, இ வைட்டமின்கள் இருக்கின்றன. ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு வைட்டமின் சி இருக்கிறது. அன்னாசியை விட மூன்று மடங்கு புரோட்டீனும், நான்கு மடங்கு நார் சத்தும் உள்ளது. வாழைப்பழத்தை விட கூடுதலாக பொட்டாசியம் உள்ளது. இதனால் கொய்யா 'சூப்பர் புரூட்' (Super fruit) என்று அழைக்கப்படுகிறது.நூறு கிராம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
முன்னமொரு காலத்தில் ஒரு பயங்கரமான விலங்கு இருந்ததாம். அதன் பெயர் டிராகன் (Dragon). அது மனிதர்கள் நிரம்பிய நகரத்தில் திரிந்தது. வவ்வாலைப் போன்ற, ஆனால் பிரமாண்டமான சிறகுகள் அதற்கு. அது சிறகை அடிக்கும் சத்தம் பல கிலோ மீட்டர்கள் தாண்டியும் கேட்கும். ஒரே அடியில் ஒரு காளையைக் கூடக் கொன்றுவிடும் அளவு பலம் வாய்ந்தது. அதன் சுவாசத்தில் இருந்து நெருப்பு வெளிவரும்!அந்த நகரத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
கல்கியின் எழுத்துகள் அலாதியான சுவை கொண்டவை. அவர் ஒரு கட்டுரையில் எழுதியது இது:வாஸ்கோடகாமா என்னும் பெயர் கொண்ட கப்பல் தலைவனைப்பற்றி எப்போதோ சரித்திரப் புத்தகத்தில் படித்திருப்பதாக ஞாபகம். அந்த தடியன் இப்போது என் முன் எதிர்ப்பட்டால் அவன் கன்னத்தில் நாலு அறை கொடுத்துவிட்டு மறு காரியம் பார்ப்பேன். ஆனால் அவன் இறந்து தொலைத்துவிட்டான். இறந்து போனவர்களின் விஷயத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
சாந்தி: மஞ்சு! நீ மஞ்சுதானா?மஞ்சு: நீ சாந்திதான? இங்க வா. தலைல ஏதும் அடிபட்டிருக்கான்னு பாக்கலாம்.சா: விளையாடாத. கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ மஞ்சுதான?ம: ஆமாப்பா... ஆமா. நான்தான் மஞ்சு. உனக்கு என்னாச்சு. நேத்துவரைக்கும் நல்லாதான இருந்த?சா: நான் நல்லாதான் இருக்கேன். நீ மஞ்சுதான்னு நிருபிக்க என்ன ஆதாரம் இருக்கு? ம: அதான் ஸ்கூல் ஐடி கார்டு இருக்கே. வேற ஆதாரம் கேட்டா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
உலகிற்கு வெளிச்சம் தந்த நான் லண்டனில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். அப்பா ஒரு கொல்லர். இளம் வயதிலிருந்தே எனது படிப்புக்கு ஆகும் செலவுக்காக நான் வேலை பார்க்கவேண்டி இருந்தது. ஆகவே, பழைய புத்தகங்கள் வாங்கி, பைண்டிங் செய்து விற்று வந்தவரிடம் உதவியாளராக 14 வயதில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே வேலை பார்த்த 7 வருடங்களில் ஏறக்குறைய எல்லாப் புத்தகங்களையும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
இசைக் கருவிகளை வாசிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் பெரும் பாலானவர்கள், 'நமக்கு எங்கே வரப்போகிறது?' என்று முயற்சி செய்யத்தான் தயக்கம் காட்டுவார்கள். அதுவே ஓர் இசைக் கருவியை, நாமே நம் கைப்பட செய்ய முடியும் என்றால், உண்மையில் அவ்வளவாக வாசிக்கத் தெரியவில்லை என்றாலும் மகிழ்ச்சி உறுதி! எளிமையான முறையில் மவுத் ஆர்கன் ஒன்றை செய்து இசைத்துப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் 9,000 சதுர கி.மீ. பரப்பளவில் ஒரு மாபெரும் சரணாலயம் இருக்கிறது. யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா (Yellowstone National Park) என்று அதற்குப் பெயர்.பிரமாண்டமான ஆறுகளையும், பாறைக்குடைவுகளையும் (Canyons), காடுகளையும் உள்ளடக்கிய பகுதி இது. நூற்றுக்கணக்கான விலங்கினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கிறது. உலகின் முதல் தேசியப் பூங்கா இதுதான். அதைவிட விசேஷம், இந்தப் பூங்கா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், பெரும்பாலும் தொழிற்சாலைகளில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்படி இயந்திரங்களைக் கொண்டு தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி செய்யும் முறை, 18ஆம் நூற்றாண்டின் மத்தியில், இங்கிலாந்தில் தொடங்கியது. அங்கு தொழிற்சாலை மயமான முதல் தொழில், ஆடை உற்பத்தித் தொழில்தான். 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. இதன் அசல் நீளம் 13 கி.மீ., சென்னை துறைமுகத்தில் தொடங்கி பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் வரை நீள்கிறது.காலப்போக்கில் கடற்கரையை மறைத்தபடி கட்டடங்கள் வந்துவிட்டதால், தற்போது இருக்கும் கடற்கரைச் சாலையை ஒட்டித்தான் இன்று கடலைப் பார்க்க முடிகிறது. இந்தப் பகுதியைத்தான் 'மெரினா' என்கிறோம். இதன் நீளம் 6 கி.மீ.சென்னை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
நாம் ஊருக்குச் செல்ல பேருந்து, ரயில், கார், விமானம் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துகிறோம். அதுவே நம் தாத்தா பாட்டி காலத்தில், போக்குவரத்து அவ்வளவாக முன்னேற்றம் அடையவில்லை. அவர்கள் வெளியூர் போகவும், பொதிகளைச் சுமந்து செல்லவும் மாட்டு வண்டிகளையே பெரிதும் பயன்படுத்தினார்கள்.மாட்டு வண்டிகளில் ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி என இரண்டு விதம் உண்டு. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
எண்கள் ஏராளம். ஆனால் ஏழு என்ற எண்ணிற்கு மட்டும் உலகில் நிறைய சிறப்பிடம் உண்டு. உலக அதிசயங்கள் ஏழு, வாரத்தின் நாட்கள் ஏழு, வானவில்லின் நிறங்கள் ஏழு என்பதில் இருந்து இந்த ௭ஐ மக்கள் செல்லமாகக் கொண்டாடுவதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அத்துடன் கடையேழு வள்ளல்கள் ஏழு, இசையில் ஸ்வரங்கள் ஏழு, திருவள்ளுவர் குறளில் தந்த சீர்கள் ஏழு எனவும் இந்தப் பட்டியலில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
இரவில் வானம் முழுக்க மின்னும் நட்சத்திரங்களை நீங்கள் ரசித்திருப்பீர்கள்.சூரியனை விடவும் பல கோடி மைல்களுக்கு அப்பால் நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதனால் நம் கண்களுக்கு அவை குட்டியாகத் தெரிகின்றன. சூரியனைப் போல் 20 முதல் 100 மடங்கு பெரிய விண்மீன்கள் வானில் உள்ளன. சூரியன்தான் நமக்கு அருகில் உள்ள நட்சத்திரம். சூரியனுக்கு அடுத்து உள்ளது பிராக்சிமா சென்டாரி ( Proxima Centauri) ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் செப்டம்பர் 19விண்வெளியில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு பூமிக்கு வருகிறது. அந்த அழைப்பில், விண்வெளியில் இருந்து தான் காணும் காட்சிகளை பெற்றோருடன் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!அன்று, டிசம்பர் 9, 2006ஆம் ஆண்டு இரவு 8.47 மணிக்கு அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து கம்பீரமாகச் சீறிப்பாய்ந்தது டிஸ்கவரி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
ரியோவில் பாராலிம்பிக் போட்டி நடந்தது. பெண்களுக்கான குண்டு எறிதல் 'எஃப்-53' பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தீபா மாலிக் பங்கேற்றார். 4.61 மீ. தூரத்திற்கு குண்டு எறிந்த இவர், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இதன் மூலம் பாராலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
பிரேஸில் தலைநகர் ரியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடந்தது. இதன் ஆண்கள் உயரம் தாண்டுதல் 'டி - 42' பிரிவில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அபாரமாகச் செயல்பட்ட தமிழக வீரர் மாரியப்பன் 1.89 மீ. தூரம் தாண்டி தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலம் முறையே அமெரிக்காவின் சாம், வருண் சிங் பெற்றார்கள். இதன் மூலம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
ரியோ பாராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் 'எஃப் - 46' பிரிவில் இந்தியா சார்பில் தேவேந்திரா ஜஜாரியா பங்கேற்றார். இதில் அதிகபட்சமாக 63.97 மீ. தூரம் எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார். ஏற்கனவே, கடந்த ஏதென்ஸ் (2004) பாராலிம்பிக்கில் அசத்தியிருந்த ஜஜாரியா, பாராலிம்பிக் அரங்கில் 2 தங்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற சாதனை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
நியூயார்க்கில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் ஜெர்மனியின் கெர்பர், செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மோதினார்கள். துடிப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்று, இந்தத் தொடரில் முதல் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றினார். உலக தரவரிசையில் முதல் முறையாக 'நம்பர்-1' இடத்தையும் பிடித்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், உலக '6 - ரெட்' ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் அத்வானி, சீனாவின் டிங் ஜூன்ஹுயைச் சந்தித்தார். இதில் 4 - 7 என்ற 'பிரேம்' கணக்கில் தோல்வியடைந்த அத்வானி வெண்கலப்பதக்கம் பெற்றார். இதன் மூலம், இந்தத் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற வரலாறு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
இந்தியா 'ரெட்' மற்றும் 'புளூ' அணிகள் மோதிய துலீப் டிராபி கிரிக்கெட் ஃபைனல் (பகலிரவு) நொய்டாவில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 'புளூ' 693/6 ('டிக்ளேர்'), இந்தியா 'ரெட்' 356 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 'புளூ' அணி 179 ரன்களுக்கு 'டிக்ளேர்' செய்தது. 517 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய, இந்தியா 'ரெட்' அணி 2வது இன்னிங்சில் 161 ரன்கள் மட்டும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
இந்த மாதம் இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 22ல் கான்பூரில் துவங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கோஹ்லி தலைமையிலான அணியில் தமிழகத்தின் முரளி விஜய், அஷ்வின் இடம் பெற்றுள்ளனர். சமீபகாலமாக 'பார்ம்' இல்லாமல் தவிக்கும் ரோகித் சர்மாவுக்கு இடம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
கிராண்ட்ஸ்லாம் பெண்கள் இரட்டையரில் அதிக பட்டம் வென்றவர்? மார்டினா நவரத்திலோவா, அமெரிக்கா (31 பட்டம்)டெஸ்ட் போட்டியில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்? கும்ப்ளே (35 முறை, 132 போட்டிகள்)சமீபத்திய (2016, அமெரிக்கா) கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்தவர்?எட்வர்டோ வர்காஸ், சிலி (6 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X