Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
வடகிழக்கு பருவமழை 20ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை காலத்தில் தமிழகம் பெறும் இயல்பான மழை அளவு 44 செ.மீ ஆகும். இந்த ஆண்டு, 92 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த பருவமழை முடிவில், மத்திய இந்தியாவில் உயர் அழுத்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
மியான்மர் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi), திங்கட்கிழமை அக்டோபர் 17ம் தேதி இந்தியா வர உள்ளார். 19ம் தேதி வரை, இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சூகி சந்தித்துப் பேசுவார். இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
இந்தியாவில் தற்போதைய நடைமுறையில் மொபைல் போன்களுக்கு 10 இலக்க எண்கள் உள்ளன. தொலைத்தொடர்புத்துறை இதனை அடுத்த 30 ஆண்டுகளுக்கு பராமரிக்க நினைத்திருந்தது. ஆனால் மொபைல் போன் பயனாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், 10 இலக்க எண்களுக்கு பதிலாக 11 இலக்க எண்களை அறிமுகம் செய்யலாம் என்று முடிவு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
கொற்கை பாண்டியரின் 'செழியன்' பெயர் பொறித்த வெள்ளி நாணயத்தை தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்குழு தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். மதுரையில் வசிக்கும் நண்பர் ஒருவர் கிரேக்க நாணயம் என்று சிறிய வெள்ளித்துண்டுகளைக் கொடுத்ததாகவும், அதனை சென்னை கொண்டுவந்து, சுத்தம் செய்து, நீண்ட நாட்கள் ஆய்வு செய்தபின், இரண்டு வெள்ளித் தகடுகளில் ஒன்று சங்ககால வெள்ளி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
அமெரிக்கப் பாடலாசிரியர், பாப் டிலனுக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தத்துவம், அரசியல், சமூகம் சார்ந்த பாடல்களை பாப் டிலன் எழுதி, பாடி வருகிறார். அமெரிக்க கவிதை உலகில், அவர் புதிய நுட்பங்களை கையாண்டதற்காக, 2016ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் கோல்டன் குளோப் (Golden Globe), கிராம்மி (Grammy), ஆஸ்கார் (Oscar) விருதுகளைப் பெற்றுள்ள பாப் டிலன், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
Dennis Ritchie (aka dmr), the creator of the C programming language and codeveloper of the Unix operating system passed away on October 12th at the age of 70, leaving a legacy that casts a very long shadow. By creating C, Ritchie gave birth to the concept of open systems. C was developed so they could port Unix to any computer, and so that programs written on one platform (and the skills used to develop them) could be easily transferred to another. Ritchie died at his home over the weekend(Berkeley Heights, New Jersey). freeing programmers to create their dreams.” Source: ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
எந்தக் கருவியும் இல்லாமல், வெறும் கண்களால் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களை நம்மால் காண முடியும்! lஅக்.15: அதிகாலை சூரியன் உதிக்கும் முன், 5.30 மணிக்கு வியாழன் கோள் அடிவானில் இருந்து, 6 டிகிரி உயரத்தில் இருக்கும். அதற்கு அடுத்தடுத்த நாட்களில், அதே நேரத்தில் அடிவானில் இருந்து அது இருக்கும் உயரம் சிறிதுசிறிதாக அதிகரித்து வரும். (படம்: 2). lவெள்ளி, சனி, செவ்வாய் ஆகிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
சூரியனிடம் இருந்து கோள்கள் விலகினால், பூமியில் இருந்து அவற்றைப் பார்க்கும்போது, அடிவானில் இருந்து அவற்றின் உயரம் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். வியாழன், வெள்ளி விலகுவதால் அவை இருக்கும் உயரம் அதிகரிக்கிறது. மாறாக கோள்கள் சூரியனை நோக்கி நகர்ந்தால், பூமியில் இருந்து பார்க்கும்போது, அடிவானில் இருந்து அவை இருக்கும் உயரம் சிறிதுசிறிதாகக் குறையும். சனி இருக்கும் உயரம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
இந்த ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தில் நம் பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்கின்றன. நமக்கு வெளியில் இருந்து தாக்குதல் அதிகம். 'Rogue planets' (ரோக் பிளானட்ஸ்) எனப்படும் அராத்துக் கோள்கள் திடீர் திடீரென்று பறந்து வரும். அதேபோல் பேரழிவை உண்டாக்கக் கூடிய விண்கற்கள் விண்வெளியில் நிறைய உண்டு. இவை அவ்வப்போது தாறுமாறாய் பூமியை நோக்கி வந்துகொண்டுதான் இருக்கின்றன. பல்லாயிரம் கிலோ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
கைதேர்ந்த சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான சிற்பங்கள், சிலைகள் போலக் காணப்படும் அழகிய போரா குகைகளின் அமைப்பு அனைவரையும் கவரக்கூடியது. 'போரா குஹாலு' என்று தெலுங்கு மொழியில் அழைக்கப் படும் போரா குகைகள் (Borra Caves) இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்று. சுண்ணாம்புப் பாறை அடுக்குகளால் இயற்கையாக உருவாகி உள்ள இந்தக் குகைகளின் உள்ளே 'ஸ்பீலியோதெம்' (Speleothems) எனப்படும் கனிமப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
கடலில் இருக்கும் பவளப் பாறைகளில் 'பாலிப்' (Polyp) என்ற உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்த உயிரினங்கள் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன. இவை உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும். 'பாலிப்' உயிரினங்கள் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
இயற்கைச் சூழல் மாற்றங்கள் காரணமாகவும், கோள்கள் சுற்றுப்பாதையில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களின் விளைவாகவும் பூமியில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. எதிர்காலத்தில் பூமியின் நிலை என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். பூமியின் எதிர்காலம் சூரியனைச் சார்ந்து உள்ளது. சூரியனுடைய உட்கருவில் சேர்ந்து வரும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
உலகின் வெப்பத்தில் 93 சதவீதத்தை கடல் தனக்குள் உறிஞ்சிக்கொள்கிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் வெப்பத்தை ஓரளவு குறைப்பதற்கு இதுவே காரணமாகிறது. கடலின் வெப்ப நிலை அதிகரிப்பதும் இயற்கைக்குக் கேடு விளைவிக்கும் செயல்தான்.நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனின் பெரும்பங்கை கடல்களே வழங்குகின்றன. கடல் புவியின் பெரும்பங்கு வெப்பத்தை உறிஞ்சுவதால் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
பாட்டி, பேரன், பேத்தி என்று மூன்று பேர் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள். அந்தப் பாட்டிக்கு, பிறர் வீடுகளில் பாத்திரம் தேய்த்துக் கொடுத்து அதில் கிடைக்கும் கூலிதான் ஒரே வருமானம். மாதம் பூராவும் வேலை செய்தால் பாட்டிக்கு சொற்பமாக (கொஞ்சமாக) பணம் கிடைக்கும்.இப்படிக் கிடைத்த சம்பளத்தோடு ஒரு நாள் வீடு திரும்பினார் பாட்டி. ஒரு வீட்டில் மட்டும், பணத்துக்குப் பதிலாக கொஞ்சம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
பழைய ஒலி நாடாவில் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்...' என்று பாடிய பெண்மணியின் குரலை, யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இன்றைக்கும் சுதந்திர தினத்தன்று வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும், இந்த ஒலி நாடாவைக் கேட்க முடியும். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று, வானொலியில் ஒலிபரப்பப்பட்ட பாடல் இது! இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியைத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
தேவையான பொருட்கள் 1. பாம் பாம் பந்துகள் சில (-பெரிய மற்றும் சிறிய அளவுகளில்) 2. அலங்கரிக்கும் ஸ்டோன் 3. அனபாண்ட் பசை (இந்தப் பசையை கையாளும்போது கவனம் தேவை! கைகளில் பசை படாத வண்ணம் கையாள வேண்டும்.)நம்மில் சிலர் பெரிய கரடி பொம்மையைக் கட்டிப்பிடித்து விளையாடி இருப்போம். உள்ளங்கை அளவே, இருக்கும் ஒரு குட்டிக் கரடி பொம்மையை பார்த்திருக்கிறீர்களா? அதைத்தான் இந்த வாரம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
சுற்றுலாத் தலம் என்றதும் பலரது நினைவுக்கு முதலில் வருவது மலைப்பிரதேசங்கள்தான்! தமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளின் வரிசையில் பார்க்க வேண்டிய இடம் ஏற்காடு. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கும் சேர்வராயன் மலையில் அமைந்திருக்கும் ஏற்காடு, சேலத்தில் இருந்து 36 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இதன் வெப்பநிலை குளிர் காலத்தில் 13 டிகிரியும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
“நாளையில இருந்து டான்ஸ் கிளாஸ் இருக்கும்மா. 'தேவையான கவரிங் நகை எல்லாம் வாங்கணும், தொகை கொண்டு வாங்க'ன்னு டான்ஸ் மிஸ் சொன்னாங்கம்மா...” என்றாள் கிருத்திகா. கிருத்திகாவின் அம்மா சாந்திக்கு சிரிப்பு வந்துவிட்டது. “என்ன, 'தொகை' கொண்டு போகணுமா?” என்றார்.கிருத்திகாவும் புன்னகை செய்தபடியே, “எங்க மிஸ் 'அமௌன்ட்'னுதான் சொன்னாங்க. நான்தான் தமிழ் பயிற்சியா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
சரியான வேலையைச் செய்வது - வேலையைச் சரியாகச் செய்வது என்று இரண்டு விஷயங்கள் உண்டு. எது சரியான வேலை? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு எந்த வேலை முக்கியமோ அது சரியாக நடக்கும் விதத்தில் செயல்படுவது - சரியான வேலை. உதாரணம் ஒன்றைப் பார்க்கலாம். பிராக்டிகல் தேர்வுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். அப்போது, தொலைக்காட்சியில், உங்களுக்குப் பிடித்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
அக்டோபர் 14உலக தர நிர்ணய நாள் - உலகில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சேவைகளின் தரம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.அக்டோபர் 15ஆவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் பிறந்த நாள் - இந்தியாவின் முக்கியமான விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், 11ஆவது குடியரசு தலைவர், சிறந்த ஆசிரியர் என இளைஞர்களுக்கு உந்துசக்தியாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
நாடுகள் பெரும்பாலும் இனம், மொழி, மதம், கலாச்சாரங்களை அடிப்படையாக வைத்தே தோன்றி இருக்கின்றன. அப்படி தோன்றிய நாடுகளில் ஒன்று வங்க தேசம் (Bangladesh - பங்களாதேஷ்). இந்தியாவிடமிருந்து பிரிந்த பாகிஸ்தான், அப்போது கிழக்கு, மேற்கு என இரு நிலப்பகுதிகளாக இருந்தன. புவியியல் அடிப்படையில் இரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், வெவ்வேறு இடங்களில் இருந்தன.1948ல் டாக்காவுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
வரலாற்றியலின் தந்தை ஹெரோடோடஸ் (Herodotus). கிரேக்கத்தைச் சேர்ந்தவர். கி.மு.484ஆம் ஆண்டில் பிறந்தவர். பெரிக்ளஸ் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். அவர் பக்கத்து நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்து, அவருடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார். அதுவே வரலாற்று நூல்களுக்கான தொடக்கமாக அமைந்தது.வரலாற்றியலின் தந்தையாக போற்றப்பட்டாலும், அவர் எழுதிய அனைத்தும் அப்படியே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
ஜெர்மனியின் அதிபராக இருந்தவர் அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler). சர்வாதிகார ஆட்சி செய்தவர். இரண்டாம் உலகப் போர் நடக்க முக்கிய காரணமாக இருந்தவர். பல்லாயிரக்கணக்கான மக்களை ராணுவத்தின் மூலம் கொன்று குவித்தவர். இப்படி கொடூர மனம் கொண்ட ஹிட்லர் ஓவியராகவும் இருந்தார். ஓர் ஏழைக் குடும்பத்தில் ஏப்ரல் 20, 1889ல் பிறந்த ஹிட்லர், அம்மா மீது அதிக அன்பு வைத்திருந்தார். அதே அளவு அன்பை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X