Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
பெரியாறு புலிகள் சரணாலயத்தில் உள்ள புலிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தமிழக - கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இடுக்கியை ஒட்டி, சுமார் 925 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு, 2013ஆம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 40 புலிகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் மீண்டும் புலிகள் கணக்கெடுப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
அமெரிக்க எல்லையில், ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடத்தப்பட்ட 'ஒற்றுமை கச்சேரி'யில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமெரிக்காவில், வரும் நவம்பர் 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அதில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் முன்னணியில் உள்ளனர். இவர்கள், பொதுமக்களை சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்துக்காக, இரண்டு விஞ்ஞானிகளுடன், 'ஷெங்ஸோ--11' என்ற விண்கலத்தை, சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள், விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு மையத்தை அமைக்க, சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக, கடந்த 2013-ம் ஆண்டு 'டியாங்காங்-1' என்ற விண்கலத்தை, சீனா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
ஹாங்காங்கில், உலகின் மிக வயதான பாண்டா கரடி, மரணமடைந்த சம்பவம், பூங்கா நிர்வாகத்தினர் மற்றும் கரடி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காடுகளில் வாழும் பாண்டா கரடிகளுக்கு, சராசரி ஆயுட்காலம் 20 வருடங்களாகவும், பூங்காக்களில் உள்ள கரடிகளுக்கு 30 வருடங்களாகவும் உள்ளது. இந்நிலையில், ஹாங்காங்கில் உள்ள 'ஓஷன் பார்க்'(Ocean Park), கேளிக்கை பூங்காவில் வசித்து வந்த, 38 வயதான 'ஜியா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
இந்தியா, ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது அந்நியத் துணிகளை அணியக்கூடாது; அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கதர் துணிகளை அணிய வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவானதுதான் 'காதி'. இத்தகைய காதி தயாரிப்புகளை ஊக்குவிக்க, மத்திய அரசு, 'காதி கிராப்ட்'(Khadi Kraft) போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், காதி பொருட்களை, ஆன்லைன் மூலம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
2016ல் வேதியியல் நோபல் பரிசு இதற்காகத்தான்! வழக்கமாக, இயந்திர பொறியாளர்கள்தான் இயந்திரங்களை வடிவமைப்பார்கள். ஆனால், அந்த இயந்திரங்கள் நம் முடியை விட மெல்லிய அளவில் இருக்க வேண்டும் என்றால், அது வேதியியல் பொறியாளர்களால் மட்டுமே முடியும்!ரிச்சர்ட் ஃபெயன்மேன் என்ற இயற்பியலாளர், 1959ல், மிக மிகச் சிறிய அளவிலான இயந்திரங்களை உருவாக்க முடியும் என்ற சிந்தனையை முன் வைத்தார். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் (Elements எலிமென்ட்ஸ்) கலக்கும்போது, அவற்றின் இடையே வேதிப்பிணைப்பு ஏற்படுகிறது. இந்தப் பிணைப்பு ஒரு சேர்மத்தை (Compound காம்பௌண்ட்) உருவாக்குகிறது. அப்படி உருவாகும் சேர்மம், சில நேர்வுகளில், அதன் அடிப்படை தனிமங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட குணங்களைப் பெறுகிறது. உதாரணம்: தனிமங்களான ஹைட்ரஜன், ஆக்சிஜன் வாயுக்கள் ஒன்றாகக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
தனிமத்தின் மிகச்சிறிய அலகுதான் அணு! அணுவை புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற நுண்ணிய அணுத்துகள்களாக பிரிக்கலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை (Molecules / மாலிக்யூல்ஸ்) உருவாக்குகின்றன.ஒரு தனிமத்தின் அலகான அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டன்களின் எண்ணிக்கையைக் குறிப்பதுதான் அணு எண். மொத்தம் 118 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
சுவீடன் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus) உயிரினங்களின் வகைப்பாட்டை உருவாக்கியவர். தற்கால அறிவியல் வகைப்பாட்டு (Scientific Classification - சயின்டிஃபிக் கிளாசிபிகேஷன்) முறைக்கும், பெயர் முறைக்கும் (Nomenclature-நாமென்கிளேச்சர்) அடிப்படையை இவர் உருவாக்கினார். அழிந்துபோன மற்றும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிற உயிரினங்கள், தாவரங்களை வகைப்படுத்துதல் அறிவியல் வகைப்பாடு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
பவள மல்லியின் தாவரப் பெயர் 'நிக்டாந்தஸ் அர்போர் டிரிஸ்ட்டிஸ்' (Nyctanthes arbortristis). மூன்று முதல் நான்கு மீட்டர் உயரமுள்ள சிறிய மரமாக வளரும். பவள மல்லிப் பூ சிவப்பு நிறக்காம்பும், ஐந்து முதல் ஏழு வெண்ணிற இதழ்களும் உடையது. நறுமணம் வீசும் பவழ மல்லிப் பூ பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரும். இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் கூரான முனைகளுடன் காணப்படும். கிளை நுனிகளில் பூக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
நாம் அருந்தும் பாலில் இல்லாத புளிப்புச் சுவை தயிரில் எப்படி உருவாகிறது?l காய்ச்சி ஆற வைத்த பாலில் கொஞ்சம் தயிர் சேர்த்த பின்னர் பாலில் நொதித்தல் வினை (Fermentation - ஃபெர்மென்டேஷன்) தொடங்குகிறது. l பாலில் 'லாக்டோஸ்' (Lactose) என்ற சர்க்கரைப் பொருள் உள்ளது. நொதித்தல் வினை நடக்கும்போது 'லாக்டோபாசில்லஸ்' (Lactobacillus) என்ற பாக்டீரியா (Bacteria) பாலில் இருக்கும் 'லாக்டோஸ்' சர்க்கரையை உண்டு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழர்களோ பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் 'வளரி' இது வளைந்த மரத்தடி போன்று இருக்கும். வளைந்த வடிவில் உள்ளதால் காற்றில் வேகமாகச் சுழன்று செல்லும். மான் வேட்டையின் போதும் இது பயன்படுத்தப்படும். இரும்பிலும் செய்யப்படும். ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட 'பூமராங்' (Boomerang) என்ற ஆயுதத்தின் வடிவமைப்பை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
வெள்ளி மறைப்பு என்பது, சூரிய கிரகணம் போன்ற ஒரு நிகழ்வு. சூரிய கிரகணத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும். அதுபோல வெள்ளி மறைப்பில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வெள்ளி கிரகம் வலம் வரும். இதன் காரணமாக வெள்ளி சின்ன கரும்புள்ளி போல சூரியனின் ஓரத்தில் மெல்ல சுற்றிச் செல்லும். சுமார் ஆறு மணி நேரம் வரை நிகழும் வெள்ளி மறைப்பை, நாம் கண்களால் காண முடியும். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
காகம் கண்ணம்மா வாயில், வந்தபடியெல்லாம் புனிதவதியைத் திட்டித் தீர்த்தது. அதைக் கேட்டு, போலீஸ் அதிகாரியான, நாய் பெரும்பல்லன் ஓடி வந்தது. அதைப்போன்று நேர்மையும் கடமை உணர்வும் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியை எங்குமே பார்க்க முடியாது. இரவு முழுதும் சற்றும் தூங்காமல் கிராமத்தைச் சுற்றி வந்து காவல் காத்துக்கொண்டிருக்கும். அதற்குத் தெரியாமல் ஒரு கொசுகூட கிராமத்தில் பறக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
“இங்குள்ள பலகாரங்கள் நெய்யினால் செய்யப்பட்டவை அல்ல” என்று கடைகளில் அறிவிப்பு வைத்திருப்பார்கள். அந்த அறிவிப்பில் 'அல்ல' என்பது மட்டும் சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும்.மேலோட்டமான பார்வைக்கு அந்த அறிவிப்பு 'இங்குள்ள பலகாரங்கள் நெய்யினால் செய்யப்பட்டவை' என்றே தோன்றும். ஏனென்றால், அதை எதிர்மறை வாக்கியமாக்கும் 'அல்ல' என்னும் சொல் சிறிதாய் இருப்பதே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
பத்திரிகை என்னும் சொல் 'அச்சடிக்கப்பட்ட தாள்' என்னும் பொருளில் பயன்படுத்தப்படுவது. அதனால்தான் விழாக்களுக்காக அச்சடிக்கப்படுவனவற்றையும் பத்திரிகைகள் என்கிறோம். அதற்கு 'அழைப்பிதழ்' என்னும் அழகிய தமிழ்ச்சொல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் இதழ்களைப் பற்றிக் குறிப்பிடும்போது பத்திரிகை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது.தனித்தமிழ்ப் பேராசிரியர் மறைமலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
நாம் இக்காலத்தில் பயன்படுத்துகிற தமிழுக்கும், சங்க காலத்தில் பயன்படுத்திய தமிழுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. நமக்கு நன்கு தெரிந்த பெயர்களில் ஒன்று இஞ்சி. சமையலுக்கும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.ஆனால், அந்தக் காலத்தில் இஞ்சி என்றால் எதைக் குறிக்கும் தெரியுமா? கோட்டையின் மதில் சுவரை குறிக்கும். 'இஞ்சி சூழ் தஞ்சை' என்று தேவாரத்தில் ஒரு வரி வருகிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
ஓர் ஊரில் மாயஜால வித்தைக்காரர் ஒருவர் இருந்தார். பணத்தையும், பொருட்களையும் இருமடங்காக்கும் வித்தை அவருக்கு தெரியும். ஏழை எளியவர்கள், கல்வி, மருத்துவச் செலவு போன்ற முக்கிய காரியங்களுக்காக செலவு செய்ய பணம் இல்லை என்று தன்னிடம் வந்தால், அவர்களிடம் இருக்கும் காசை இரட்டித்து தருவார். பணத்தாசை பிடித்தவர்களைப் புறக்கணித்துவிடுவார். ஒரு நாள், செல்வம் என்ற பேராசை பிடித்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
1. இலக்கங்களின் கூடுதல் மதிப்பு, சமமாக அமையும்படி ஈரிலக்க எண்கள் இரண்டை நினைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக 83, 29 .(8+3=11; 2+9=11.)2. பெரிய எண்ணிலிருந்து, சிறிய எண்ணைக் கழித்தால், எப்பொழுதும் ஒன்பதின் மடங்கே கிடைக்கும். 83 - 29 = 54 = 9 x 6வேறு ஈரிலக்க எண்கள் இந்த விதிக்குக் கட்டுப்படுகிறதா என்பதை சரிபார்த்து மகிழ்வீர்! மேலும், இது எதனால் நிகழ்கிறது என்பதையும் அறிய முயற்சிக்கலாமே!- மனோஜ்கணித ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
கோள்கள், நீள்வட்டப் பாதையில்தான் (Elliptical path- எலிப்டிகல் பாத்) சூரியனைச் சுற்றுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். இந்த நீள்வட்டம் எப்படி உருவாகிறது என்று பார்ப்போமா? படம்-1ல் இருப்பதுபோல, ஒரு இரட்டை கூம்பை (Double cone-டபுள் கோன்), ஒரு தளம் (Plane-ப்ளேன்) குறிப்பிட்ட விதத்தில் வெட்டும்போது கிடைக்கும் வெட்டு முகம்தான் நீள்வட்டம். அதேபோல் வேறொரு குறிப்பிட்ட விதத்தில் வெட்டினால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
இணையதள உலகம் விசித்திரமானது. ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் இருந்தாலும், இன்னொரு பக்கம் தொல்லைகள் தரும் விஷயங்களும் இருக்கின்றன. இணையதளத்தில் நடக்கும் குற்றங்களைப் பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும், சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் நடந்த தேசிய சைபர் பாதுகாப்பு மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. 'நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ்' (National ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், எந்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று வருகின்றன. இன்னும் சில வருடங்களில் மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு, ரோபோக்களின் வளர்ச்சி இருக்கும் எனத் தோன்றுகிறது! அந்த வகையில் மருத்துவ துறையிலும் ரோபோக்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளன.இங்கிலாந்து, ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள ஒரு தேவாலயத்தில், துணை பாதிரியாராக பணியாற்றுபவர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
கணிதத்தில் ஆர்வம் உடையவர்களுக்கான இணையதளம் Underground Mathematics! இதனை உலகப் புகழ் பெற்ற, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதில், கணிதப் பாடங்களும், அடிப்படை கணித கருத்துகளும், சூத்திரங்களும் வண்ணப் படங்கள் வாயிலாக சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளன. பாடங்களின் முக்கிய கேள்விகள், வழிகாட்டிகள் என பாடம் சார்ந்த விஷயங்களோடு, சிந்தனையைத் தூண்டும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
துங்கபத்திரை ஆற்றின் கரையில் தோன்றிய விஜயநகர ஆட்சி காவிரியைத்தாண்டி, வைகை வரைக்கும் விரிந்திருந்தது. தற்போதைய கர்நாடகாவில் உள்ள ஹம்பிதான் (Hampi) அப்போதைய விஜயநகரத்தின் தலைநகர். தற்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.விஜயநகரப் பேரரசில் பெரும்புகழ் பெற்று விளங்கிய மன்னர் கிருஷ்ண தேவராயர். அவரது ஆட்சிக்காலத்தில் கோயில் கட்டடக் கலையில் ஒரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
'என் வாழ்க்கைதான் என் செய்தி” (my life is my messsage) என்று சொன்னவர் காந்தி. அவர் வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கும் சில செய்திகள் இவை.காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்திருந்தார். அவர் வழக்கறிஞர் என்பதால், 'நேட்டால்' நகரில் உள்ள வழக்கறிஞர்கள், 'பிரிவு உபசார விழா' நடத்தினார்கள். நிறைய பரிசு பொருட்களை கொடுத்தார்கள். காந்தி மறுப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
தேசத்தின் விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நாடு சுதந்திரம் பெற, ராணுவ பலம் தேவை என்று கருதியவர். ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் ஜனவரி 23, 1897ல் பிறந்தார். ஆரம்ப, கல்லூரி படிப்பை இந்தியாவில் முடித்தவர், லண்டன் சென்று ஐ.சி.எஸ். (Indian Civil Services -இண்டியன் சிவில் சர்வீஸ்) படித்தார். அதற்கான நுழைவுத் தேர்வில், தேர்ச்சியும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X