Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
நாமெல்லாம் பேப்பரில்தான் வண்ணம் பூசுவோம். ஆனால், 'ஹான்ஸ் கிறிஸ்டியன் கிராம்' (Hans Christian Gram) என்ற டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, 1882ஆம் ஆண்டில் நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களுக்கு வண்ணம் பூசும் முறையைக் கண்டறிந்தார். ஒரு கண்ணாடி ஸ்லைடில் (Slide), கொஞ்சம் பாக்டீரியாக்களை எடுத்துக் கொண்டு, அதை முதலில் உலர வைத்தார். அதன் மேல் கிராம், 'கிரிஸ்டல் வயலட்' (Crystal Violet) என்ற மையை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
தாவரங்களின் வழக்கமான உணவு 'ஸ்டார்ச்' (Starch). சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, தண்ணீர் இவைகளைக் கொண்டு தாவரங்கள் ஸ்டார்ச்சைத் தயாரித்துக் கொள்கின்றன. ஆனால், தாவரங்களில் அசைவ உணவு உண்ணும் ஒரு விசித்திரமான செடிதான் 'நெபந்தஸ்' (Nepenthes). இதன் இலைகளின் ஒரு பகுதி குவளை போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும். அதற்கு ஒரு மூடியும் இருக்கும். இந்தக் குவளை வடிவம் பல வண்ணங்களில், பல ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
நம் வீடுகளில் மின்சாரம் இல்லாமல் போனால் மோட்டார் வேலை செய்யாது; தண்ணீர் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவோம். தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி, நம் வீட்டு வேலைகளை முடிப்போம். உதாரணமாக, அரிசி களைவதற்கு, காய்கறிகள் கழுவிய நீரைப் பயன்படுத்துவோம்.அதேபோல் உடலில் நோய் போன்ற ஒரு திடீர் அழுத்தம் உண்டாகும்போது, உடலில் இருக்கும் 'குளூக்கோஸ்' (Glucose) உட்பட பிற சத்துப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
அமெரிக்காவில் பாட்டிகளால் மட்டுமே சமைத்து பரிமாறப்படும் உணவகம், பலரையும் கவர்ந்து வருகிறது.அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், 'எனோடெக்கா மரியா' உணவகம் உள்ளது. இங்கு, சமையல்காரர்கள், நிர்வாகிகள், உணவு பரிமாறுபவர்கள் என அனைவரும் பாட்டிகள்தான். இத்தாலி, போலந்து, சிரியா, பாலஸ்தீன், நைஜீரியா என உலக நாடுகளைச் சேர்ந்த 30 பாட்டிகள் இங்கு வேலை செய்து வருகின்றனர். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
தமிழக அரசு நடத்தும், 'இ-சேவை' மையத்தில் மனு அளிப்போருக்கு, அவர்களது மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.தமிழம் முழுவதும், சுமார் 10 ஆயிரம் இ - சேவை மையங்கள் உள்ளன. இங்கு, பிறப்பிட, இருப்பிட, ஜாதி, வருமான சான்றிதழ்கள் தருவது போன்ற 100க்கும் அதிகமான சேவைகள் வழங்கப்படுகின்றன.மனுதாரர்கள், அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா; ஒப்புதல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
ஆஸ்திரேலியா நாட்டின் கடல்பகுதியில் அமைந்துள்ள, உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான 'கிரேட் பேரியர்' அழிந்துவிட்டதாக வெளியான தகவலை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவின், யின்ஸ்லாந்து கடற்கரைப் பகுதியில், சுமார் 1400 மைல் நீளத்திற்கு 'கிரேட் பேரியர்' எனும் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. இது, பல ஆயிரம் வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் முக்கிய இடமாக திகழ்கிறது. கிரேட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் வாழ்ந்த வீட்டை இடிக்க, ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது. ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அடால்ஃப் ஹிட்லர். இவர் முதலாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தார்; இவருடைய கட்டுப்பட்டில் இருந்த நாஜி படைகள் உலக நாடுகளை கதி கலங்கச் செய்தன.ஹிட்லர், ஒருங்கிணைந்த ஹங்கேரியில் உள்ள பிரான்னா ஆம் இன் என்ற பகுதியில், 1889ம் ஆண்டு பிறந்தார். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
சீனாவில் 'சியாமென்' நகரில், 9வது பிரிக்ஸ் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, வருடந்தோறும் நடந்து வருகிறது. சுழற்சி முறையில், மாநாடு நடைபெறும் இடம், தேர்வு செய்யப்படுகிறது. இந்த ஆண்டின் பிரிக்ஸ் மாநாட்டை, கோவாவில் வெற்றிகரமாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
நாம் வாழும் சூழல் நான்கு பிரிவுகளையும், நான்கு அங்கங்களையும், இரண்டு வகைகளையும் உடையது. சுற்றுச்சூழல் சீராக அமைய, இவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.சுற்றுச்சூழலின் நான்கு பிரிவுகள்வளி மண்டலம்: புவியின் மேற்பரப்பில் 20,000 கி.மீ. வரை உள்ளது.நீர் மண்டலம்: கடல் நீர் - 97% பனி ஆறுகள் - 2% நில நீர் / நிலத்தடி நீர் - 1%நில மண்டலம்: மண், கற்பாறைகள், தனிமங்கள், கரிமங்கள்உயிரிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louise Carson) (1907 -1964) அமெரிக்க சூழலியல் அறிஞர்பூச்சிக்கொல்லி மருந்துகளே சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை, உலகிற்கு முதன்முதலாக தெரிவித்த பெண் சுற்றுச்சூழல் அறிஞர் ரேச்சல் லூயி கார்சன். இயற்கை ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ரேச்சல், அறிவியல் இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். இவர் 1951ல் எழுதிய 'நம்மைச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
அமில மழை (Acid Rain - ஆசிட் ரெயின்) என்பது அதிக அளவு அமிலத் தன்மை உடைய மழை. காற்றை மாசுபடுத்தும் சல்ஃபர் டை ஆக்ஸைடு (Sulphur Dioxide), நைட்ரஜன் ஆக்ஸைடு (Nitrogen Oxide) போன்றவை காற்றில் கலப்பதால் அமில மழை பெய்கிறது. சாதாரணமாகப் பெய்யும் மழையில் அமிலத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். வாகனங்களின் புகை, தொழிற்சாலைப் புகை, குப்பைகள் எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவை காற்றில் கலப்பதன் மூலம், அமில மழை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
தூக்கணாங்குருவியின் உயிரியல் பெயர் 'ப்ளோசியஸ் பிலிப்பினஸ்' (Ploceus philippinus). ஆங்கிலத்தில் 'வீவர் பேர்டு' (Weaver Bird) எனப்படுகிறது. அளவிலும் உடல் அமைப்பிலும் ஊர்க் குருவியைப் போல இருக்கும். இதன் தலையும் மார்பும் மஞ்சளாக இருக்கும். வயல்வெளியை ஒட்டிய இடங்களில் திரள்களாகக் கூடி வாழும். முருங்கை மரம், ஈச்ச மரம், கருவேல மரம், இலந்தை மரம், பனை மரம், மின் கம்பிகளில் சுரைக்காய் வடிவிலான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
“ஏய், கண்ணம்மா! நீ என்ன சொன்னாய்? நான் ஒரு பெரிய டாக்டர். வெளிநாடுகள் எல்லாம் சென்று வைத்தியம் பார்த்திருக்கிறேன். நான் உன் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டுமா? நீதான் என் பேச்சைக் கேட்க வேண்டும்!” “நான் யாருக்கும் அடிமையல்ல!” காகம் கண்ணம்மாவுக்குக் கோபம் வந்தது. “அப்புறம் நீ யார்? அரபுநாட்டு இளவரசியா? தெருக்கூட்டும் வேலைக்காரிதானே நீ?” “நான் ஒரு துப்புரவுப் பணியாளராக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
இந்த வாக்கியம் சரிதானா?சத்தமாகச் சொல்லிப் பார்த்தாலே புரிந்துவிடும். “அதற்க்கு” என்ற இடம் கொஞ்சம் அதிகமாக நீண்டு அழுந்தி ஒலிக்கும். அது அவசியமற்றது.பேசும்போது நாம் “அதற்கு” என்றுதான் சொல்கிறோம். ஆனால், எழுதும்போதுமட்டும் “அதற்க்கு”, “இதற்க்கு”, “எதற்க்கு” என்றெல்லாம் எழுதிவிடுகிறோம்.இந்தப் பிழையைத் தவிர்க்க ஒரே வழி, இந்தச் சொல் எப்படி உருவானது என்பதைத் தெரிந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
நிறங்களின் பெயர்களை நாம் எவ்வாறு எழுதுகிறோம் என்று பார்ப்போம். வானவில்லைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒவ்வொரு நிறமாகச் சொல்லிப் பாருங்கள். வானவில்லில் இல்லாத இரண்டு நிறங்களும் உள்ளன. அவை கறுப்பும் வெள்ளையும். கறுப்பு வெள்ளை என்பவையே எல்லாவற்றுக்கும் அடிப்படையான நிறங்கள். இந்தத் தாள் வெள்ளை நிறம். இதில் அச்சாகியுள்ள எழுத்துகள் கறுப்பு நிறம். சூரிய ஒளியின் நிறம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
மாத்திரை என்றதும், காய்ச்சல் தலைவலிக்கு உட்கொள்ளும் மருந்துப் பொருள் நினைவுக்கு வரும். தமிழ் இலக்கணத்தில் மாத்திரை என்பது வேறொன்றைக் குறிக்கும். ஓர் எழுத்தை ஒலிப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் கால அளவு மாத்திரை எனப்படும். கால், அரை, ஒன்று, இரண்டு என்று மாத்திரையின் அளவுகள் எண்ணப்படும்.கண் இமைப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை. கைச்சொடுக்கும்போது எழும் ஒலியளவும் ஒரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
சில கண்டுபிடிப்புகளில் பலருடைய பங்களிப்பு இருக்கலாம். இருப்பினும், அதை செம்மையாக, ஒரு கோட்பாடாக ஒழுங்குபடுத்திய நபரையே அதைக் கண்டுபிடித்தவராக சொல்வது முறை. ஓர் ஊரில் நூறு குடும்பம் இருந்தன என்பதை, ஒரு படமாக விளக்க என்ன செய்வோம்? ஒரு வட்டம் போட்டு, அதற்குள் 100 என்று எழுதுவோம். இப்படி வட்டம் வரையும் பொதுப்பழக்கத்தை, ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்வதற்காக முதன்முதலில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
பட்டபுரம் என்ற நாட்டின் மீது, நாகபுரம் என்ற நாடு படையெடுக்க இருந்தது. பட்டபுரம் நாட்டு உளவுத் துறை, எதிரி நாட்டின் படை பலத்தை அறிந்து, மன்னருக்கு சங்கேத குறிப்புகளாக அனுப்பியது. அதில், படைகள் மொத்தம் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும், மொத்த வீரர்களின் எண்ணிக்கை 10,000 என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. நான்காம் படையை விட, முதல் படையில் 200 நபர்கள் அதிகம் என்றும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
நம் வீட்டின் அலமாரியில் துணிகளையும், பொருட்களையும் வெவ்வேறு தட்டுகளில் வரிசையாக அடுக்குகிறோம் அல்லவா. கணிதத்தில் இப்படி அடுக்குவதை 'அணி' (Matrix -மேட்ரிக்ஸ்) என்று அழைக்கிறோம். கிடைமட்ட வரிசைக்கு 'நிரை' (Row - ரோ) என்றும், செங்குத்து வரிசைக்கு 'நிரல்' (Column - காலம்) என்றும் பெயர். ஆக, அணிகள் குறிப்பிட்ட முறையில் பொருட்களை அடுக்கும் பண்பை வெளிப்படுத்துகின்றன.உங்களிடம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
சீனா, வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும் வகையில் பிரம்மாண்ட தொலைநோக்கி ஒன்றை சமீபத்தில் கட்டமைத்துள்ளது. 30 கால்பந்தாட்ட மைதானங்களை ஒன்றுசேர்த்தால், எவ்வளவு பெரியதாக இருக்குமோ, அந்தளவுக்கு அது பிரம்மாண்ட தொலைநோக்கி. அதன் குறுக்களவு, 500 மீட்டர். பொருட்செலவு என்று எடுத்துக்கொண்டால், இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்.ஏன் இவ்வளவு பெரிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
நாம் வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்ளக்கூடாது என உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்து வருகிறார். 'நாம் அவர்களோடு தொடர்பு கொண்டு, அவர்களை பூமிக்கு அழைத்தால், அது நமக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. காரணம் வேற்றுகிரகவாசிகள் நம்மைவிட புத்திசாலிகளாக இருந்துவிட்டால், அவர்கள் நம்மை அழிக்கவோ அல்லது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்தவோ கூடும். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
மனிதனின் அடிப்படை தேவைகளில் முக்கியமானவை உணவு, குடிநீர். இந்த இரண்டும் நமக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க, மழை வேண்டும்.மழை, குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே தொடர்ச்சியாகப் பெய்கிறது. அப்படி பெய்யும் மழையே, பருவமழை . மழை தரும் காலம், காற்று வீசும் தன்மையை கணக்கில் கொண்டு அவை தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என்று இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.தென் மேற்குப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
பிரிட்டன் பிரதமராக இருப்பவர் தெரசா மே. இவர் அந்த நாட்டின் பிரதமராக இந்த வருடம் ஜூலையில் பதவி ஏற்றார். அவருக்கு முன் டேவிட் கேமரூன் பதவியில் இருந்தார்.யூரோப்பியன் யூனியன் எனப்படும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகக் கூடாது என்றார் அப்போதைய பிரதமர் கேமரூன். விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்தார் தெரசா மே. அதற்கான வாக்கெடுப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
உலகக் கலாச்சாரங்களுள், பண்டைய கிரேக்க நாகரிகம் முக்கிய பங்களிப்பை செய்துள்ளது. அத்தகைய கிரேக்க நாட்டில் தோன்றிய சிந்தனையாளர்களில், சாக்ரடீஸ் தலைசிறந்தவர். இவர், ஏதென்ஸ் நகரில் (கி.மு. 470 - கி.மு. 399) வாழ்ந்தார்.உலகத் தத்துவ மரபின் முன்னோடிகளில் ஒருவர். தத்துவ ஞானி என்றால், அழுக்குப்பிடித்த ஆடைகளை உடுத்திக்கொண்டு, வேலைக்கு போகாமல், தத்துவம் பேசியவர் அல்ல. ராணுவத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
ஏதென்ஸ், 2500 வருடங்களுக்கு முன்...கிளாக்கன், துடிப்பான 20 வயது இளைஞன். ஏதென்ஸ் நகரின் கவர்னர் பதவி காலியானது. எப்படியாவது அந்த பதவியை பிடித்து விட ஆசைப்பட்டு, பார்ப்பவர்களிடம் எல்லாம் தன் ஆசையை வெளிப்படுத்தினான். ஆனால், அந்த பொறுப்புக்கு கிளாக்கன் தகுதி பெறவில்லை என்பதை சாக்ரடீஸ் அறிந்திருந்தார். இதை கிளாக்கனிடம் சாக்ரடீஸ் நேரடியாக சொல்லவில்லை. ஆனால், தான் அந்த பதவிக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
உலக கோப்பை (2018, ரஷ்யா) கால்பந்து தொடரின், ஐரோப்பிய பிரிவுக்கான தகுதிப் போட்டியில் பெல்ஜியம், ஜிப்ரால்டர் அணிகள் மோதின. மின்னல் வேகத்தில் பறந்த பெல்ஜியம் வீரர் கிறிஸ்டியன் பென்டிகே, 8.1 வினாடியில் முதல் கோலை பதிவு செய்தார். இது, 'ஃபிஃபா' நடத்தும் உலக கோப்பை கால்பந்து அரங்கில் அடிக்கப்பட்ட அதிவேக கோலாக அமைந்தது. இதில் பெல்ஜியம் 6 - 0 என்ற கணக்கில் வெற்றி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
இங்கிலாந்து, வங்கதேச அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டகாங்கில் நடந்தது. முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணி, 277 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில்லிங்ஸ் (62), டக்கெட் (63) எடுக்க, 47.5 ஓவரில் 278/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2 - 1 எனக் கைப்பற்றி, இங்கிலாந்து கோப்பை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடந்தது. இது, ஒரு நாள் அரங்கில் இந்திய அணி பங்கேற்ற 900ஆவது போட்டி. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, அறிமுக வீரர் பாண்ட்யா வேகத்தில் பணிந்தது. இவர், 3 விக்கெட் வீழ்த்த, 43.5 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின் எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கோஹ்லி அரை சதம் (85*) கடந்து கைகொடுத்தார். 33.1 ஓவரில் 4 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
நியூசிலாந்துக்கு எதிராக இந்தூரில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அசத்திய இந்திய கேப்டன் கோஹ்லி (211 ரன்கள்) இரட்டை சதம் அடித்தார். இது, டெஸ்டில், இவர் அடிக்கும் 2ஆவது இரட்டை சதம். இவரது அபார ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 3 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் மீண்டும் இந்தியா 'நம்பர் - 1' இடத்தை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
ஜப்பான், சுசூகா நகரில் நடப்பு ஆண்டின் 17ஆவது 'ஃபார்முலா - 1' கார் பந்தயம் நடந்தது. இதில் பந்தய தூரத்தை (307 கி.மீ.) ஒரு மணி நேரம், 26 நிமிடம், 43.333 வினாடியில் கடந்த மெர்சிடஸ் அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் முதலிடம் பிடித்து, கோப்பை வென்றார். இது, இந்த ஆண்டு ராஸ்பர்க் வென்ற 9ஆவது பட்டம். ரெட் புல் ரேசிங் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாபன், மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் முறையே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
மும்பையில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2ஆவது சுற்று 'பி' பிரிவு லீக் போட்டியில் மகாராஷ்டிரா, டில்லி அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸில் கேப்டன் ஸ்வப்னில் குகாலே (351*) அன்கித் பாவ்னே (258*) அசத்தினார்கள். 3ஆவது விக்கெட்டுக்கு 594 ரன்கள் சேர்த்து அவுட் ஆகாமல் இருந்ததன் மூலம், ஒட்டுமொத்த முதல்தர போட்டி வரலாற்றில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த 2ஆவது ஜோடியானது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
சர்வதேச 'டுவென்டி - 20' போட்டியில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த வீரர் ஆரோன் ஃபின்ச்ஆஸ்திரேலியா 14 சிக்ஸர், எதிர் - இங்கிலாந்து, 2013, சவுத்தாம்ப்டன்இந்த ஆண்டுக்கான 'அர்ஜுனா' விருது பெற்ற குத்துச்சண்டை வீரர்ஷிவ் தபா ஆண்களுக்கான 'போல்வால்ட்' போட்டியில் ஒலிம்பிக் சாதனை படைத்தவர்தியாகோ ப்ராஸ் டா சில்வா பிரேஸில் 6.03 மீட்டர், 2016, ரியோ ஒலிம்பிக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X