Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த விசித்திர குளவியை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மியான்மரில் உள்ள வனவிலங்கு சரணாலயமான ஹுக்காவுங் பள்ளத்தாக்கில், விஞ்ஞானிகள், அழிந்துபோன உயிரினங்கள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில், 10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குளவியினத்தை சேர்ந்த பூச்சியை, அவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். மரப்பிசினில் இயற்கையாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
சூப்பர் பக்ஸ் (Super Bugs) என அழைக்கப்படும், மருந்துகளுக்கு அடங்காத கொடிய பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி, டாஸ்மேனியன் டெவில் (Tasmanian devil) என்ற விலங்கின் பாலில் இருப்பது தெரியவந்துள்ளது. ஆன்ட்டி-பயாடிக் (Anti-Biotic) எனப்படும் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத கொடிய பாக்டீரியாக்கள், 'சூப்பர் பக்ஸ்' என அழைக்கப்படுகிறது. இவை, ஆன்டி-பயாடிக் மருந்துகளின் துஷ்பிரயோகத்தால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில், தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் சொற்களில் ஒன்றான 'ஐயோ' புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.முன்னணி ஆங்கில அகராதியாக, 150 ஆண்டுகால ஆக்ஸ்போர்டு அகராதி (OxfordEnglish Dictionary) திகழ்கிறது. 6 லட்சத்துக்கும் அதிகமான சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அதிர்ச்சியையோ, துக்கத்தையோ வெளிப்படுத்த, தமிழர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சொல்லான, 'ஐயோ' என்ற வார்த்தை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
இந்தியாவில், தனிநபருக்கு தேவைப்படும் முட்டையில், பாதியளவு கூட நிறைவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் பரிந்துரைப்படி, ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய, தனிநபருக்கு ஆண்டு ஒன்றுக்கு, 180 முட்டைகள் தேவைப்படுகின்றன. ஆனால், தற்போதுள்ள முட்டை உற்பத்தி அளவுப்படி, வருடத்துக்கு 63 முட்டைகள் மட்டுமே, தனிநபருக்கு சராசரியாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
நாடு முழுவதும், நெடுஞ்சாலைகளை விமான ஓடு தளங்களாக பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்துக்காக, மத்திய அரசு 22 இடங்களை தேர்வு செய்துள்ளது. விமான போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, தேசிய நெடுஞ்சாலைகளை, ராணுவ விமான ஓடுதளங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நாடு முழுவதும், 22 தேசிய நெடுஞ்சாலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
ரயில் நம்மை நோக்கி வரும்போது, அதன் ஹார்ன் ஒலியின் வலிமை கூடுவதையும், நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது வலிமை இழப்பதையும் கவனித்திருப்பீர்கள்? ஆஸ்திரிய அறிவியலாளர் கிறிஸ்டியன் டாப்ளர் (Christian Doppler) இது ஏன் இப்படி நடக்கிறது என்பதை ஊகித்து, 1842ஆம் ஆண்டில் ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். அந்தக் கோட்பாடு, டாப்ளர் விளைவு (Doppler effect டாப்ளர் எஃபெக்ட்) என்று அவர் பெயராலேயே இன்றும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
பிரஷர் குக்கரில் சமைத்தால், எரிபொருள் செலவைக் குறைத்து, விரைவாகச் சமைக்கலாம். இது எப்படி நிகழ்கிறது? குக்கருக்குள் உருவாகும் நீராவியின் அழுத்தமே, உணவு விரைவாக வேகக் காரணம். மூடப்படாத ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி, சாதாரண காற்றழுத்தச் சூழலில் சூடேற்றினால், நீர் 100 டிகிரி செல்சியஸில் கொதிக்கும். அதில் மூழ்கிக் கொதிக்கும் உணவுப் பொருளும் 100 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
வருடம்: 1901. :”ஊரில் உள்ள அனைவரும் ஆளுக்கொரு கையடக்க கருவி வைத்திருப்பார்கள். கம்பியில்லா (Wireless - வயர்லெஸ்) முறையில் அந்தக் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும். ஊரெங்கும் அலைவாங்கிகள் (Receiver ரிசீவர்) இருக்கும். கருவிகள் அனுப்பும் செய்திகளை அலைவாங்கிகள் பெற்று, அதற்கு உரியவரின் கைக்கருவிக்கு அனுப்பும். இப்படி ஒரு தொழில்நுட்பத்தை மின்காந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
வெண் முதுகு வல்லூறு (White backed Vulture - ஒயிட் பேக்டு வல்ச்சர்)'ஆக்சிபிட்ரிடே' (Accipitridae) என்ற பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. வெண் முதுகு வல்லூறின் எடை 3.5 கிலோ முதல் 7.5 கிலோ வரை இருக்கும். நீளம் 75 முதல் 93 செ.மீ. வரை கொண்டது. விரிந்த நிலையில் இதன் இறக்கை 1.92 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை காணப்படும். * உயரமான மரங்களில் இவை கூடுகளை அமைக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தென் கிழக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
* டால்பின் (Dolphin) கடலில் வாழும் பாலூட்டி இனம் (Mammal - மம்மல்). இவை ஊன் உண்ணிகள் (Carnivorous - கார்னிவோரஸ்). இவற்றின் உடல் திமிங்கிலத்தின் உடல் அமைப்பைப் போலவே இருக்கும். கண்டத் திட்டுகளின் (Continental Shelf - கான்டினென்டல் ஷெல்ஃப்) ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணப்படும் இவை, 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. குறிப்பிட்ட சில ஆற்று நன்னீர்ப் பகுதிகளிலும் வாழ்கின்றன. அறிவுக்கூர்மை வாய்ந்த விலங்கான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
மரங்கள் இருக்கும் மலைப்பகுதிகளைத்தான் நாம் பார்த்திருப்போம். மரங்களே இல்லாமல் புல்வெளி மட்டும் பரவியிருக்கும் மலையைப் பார்த்திருக்கிறீர்களா? மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மரங்கள் நிறைந்த மலைப்பகுதிகள் அதிகளவில் உள்ளன.ஆனாலும் புல்வெளி மட்டுமே பரவியிருக்கும் மலையும் இருக்கிறது. தமிழகத்தின் வால்பாறையில்தான் புல்வெளியால் சூழ்ந்த மலை உள்ளது. இது ஆனைமலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
“இனி யாரும் வரமாட்டார்கள். எல்லோரையும் எப்படி அழைக்க முடியும்? இங்கே அதற்கேற்ற இடவசதி இல்லையே… அவர்கள் எல்லாம் பெரிய விலங்குகள் அல்லவா… இதற்குள் நுழையவே சிரமப்படுவார்கள்” என்றது கிக்கியம்மா..“அது சரிதான் டீச்சரம்மா.” அணில் அண்ணாச்சி ஏற்றுக் கொண்டது. “முடிந்தால் வர வேண்டும் என்று சேவல் செந்தாடியை மட்டும் அழைத்திருந்தேன். இவ்வளவு நேரமாகியும் ஆளைக் காணவில்லையே... ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
ஒரு பாட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று சென்ற வியாழன் 'பட்டம்' இதழில் பேச ஆரம்பித்தோம். சந்தம் என்பதைப் பற்றிச் சொன்னோம். 'இலையில் சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டு' - இந்த அடிகளில், போட்டு, ஓட்டு என்பது சந்தம் இல்லையா? இதை ஈஸியாக நாம் உருவாக்கலாம். இதற்கென அகராதிகளையோ பெரிய பெரிய புத்தகங்களையோ புரட்ட வேண்டியது இல்லை. நாம் தினமும் சாதாரணமாகப் பேசும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
ஒரு பையன் குடுகுடுவென்று ஓடிவருகிறான். அவனுடைய தலை நன்றாகக் கலைந்து போயிருக்கிறது.இதைப்பார்த்த அவனுடைய தாய் கோபிக்கிறார், 'டேய், தலைக்கு எண்ணெய் வெச்சியா, இல்லியா?'உடனே, அந்தப்பையனுக்கு ஒரு சந்தேகம், 'அம்மா, அது எண்ணெயா, எண்ணையா?''ரெண்டும் ஒண்ணுதானே?' என்கிறார் தாய்.'இல்லைம்மா, சொல்லும்போது, கேட்கும்போது ஒரேமாதிரிதான் இருக்கு. ஆனா எழுதும்போது, எண்ணெய் வேற, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
கடைவீதிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு போகப், பேருந்தில் ஏறினார்கள் சூர்யாவும், அவன் தங்கையும். அவர்களுடன் பெற்றோரும் இருந்தார்கள்..பேருந்தில் மூவர் இருக்கை மட்டுமே காலியாக இருக்க, நால்வர் எப்படி அமர்வது என்று யோசித்தனர். சூர்யாவின் தந்தை, எல்லாரும் கொஞ்சம் 'குறுக்கி' அமர்ந்தால் இடம் போதும் என்று சொல்ல, நால்வரும் மூவருக்கான இருக்கையில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
குழு என்பது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களைக் குறிக்கும். குறி என்பது குறிப்பிடு என்ற பொருளைத் தரும். குழுவும் குறியும் சேர்ந்ததுதான் குழூஉக்குறி.குழுவாக உள்ளவர்கள், தமக்கு மட்டும் பொருள் விளங்குமாறு, குறிப்பான சொற்களைக் கொண்டு பேசிக்கொள்வது குழூஉக்குறி.அந்த வகை சொற்கள், பொது வழக்கில் உள்ளவையாக இருக்கலாம். அல்லது உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் அவற்றின் பொருள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
நாம் அறிந்த ஒரு சொல், பிரிக்கும்படியும் இருக்கும். பிரிக்க முடியாதபடி ஒரே சொல்லாகவும் இருக்கும்.இன்று என்னென்ன சொற்களைச் சொன்னீர்கள் ? அல்லது கேட்டீர்கள் ? நினைவுபடுத்திப் பாருங்கள்.காலையில் நாளிதழ் வந்திருக்கும். அதில் செய்தி படித்திருப்பீர்கள். நாளிதழ் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். அது நாள்+இதழ் என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கை. நாள்தோறும் வருகின்ற இதழ் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
பகா எண்களை (Prime Numbers - ப்ரைம் நம்பர்ஸ்) பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒன்றாலும், தன்னாலும் மட்டுமே வகுபடும் எண்கள் அவை. 1, 7 ... போன்ற எண்கள். இரட்டை பகா எண்களை (Twin Primes - டிவின் ப்ரைம்ஸ்) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டு பகா எண்களுக்கு இடையேயான வேறுபாடு இரண்டாக இருந்தால், அவற்றை இரட்டை பகா எண்கள் என்கிறோம். இரட்டை பகா ஜோடிகள் எனவும் இவற்றை அழைக்கலாம். உதாரணமாக (3, 5) ஆகிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
உங்கள் வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை, ஒரு குவியலாகக் கற்பனை செய்யுங்கள். டி.வி., கம்ப்யூட்டர், ரேடியோ இவை எல்லாம் அந்தக் குவியலில் உறுப்புகளாக (Elements -- எலிமென்ட்ஸ்) இருக்கும். இவை முழுமையாக வரையறுக்கப்பட்ட உறுப்புகள். அதேபோல் உங்கள் வகுப்பில் இருக்கும் மாணவர்களை, ஒரு கும்பலாகக் கற்பனை செய்யுங்கள். அந்தக் கும்பலில் இருக்கும் ஒவ்வொரு மாணவரும், குழுவின் உறுப்பினர். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
(3, 5) என்ற முதல் இரட்டை பகா ஜோடி எண்களைத் தவிர, மற்ற இரட்டை பகா எண் ஜோடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜோடிகளின் கூடுதல் மதிப்பு பன்னிரெண்டால் வகுபடும். உதாரணமாக (17, 19) என்ற ஜோடியின் கூடுதல் மதிப்பு 36. இது பன்னிரெண்டால் வகுபடும். அதேபோல், இரட்டை பகா எண் ஜோடியில், பெரிய எண்ணின் வர்க்க மதிப்பிலிருந்து, சிறிய எண்ணின் வர்க்க மதிப்பை கழித்தால் கிடைக்கும் விடை, இருபத்து நான்கால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
சமீபகாலமாக, செய்தித்தாள்களிலும், ஊடகத்திலும் அடிக்கடி கேள்விப்படும் வார்த்தை 'காவிரி'. இந்த காவிரிப் பிரச்னையை முன்வைத்து, கர்நாடகாவில் பெரிய கலவரமே கடந்த மாதம் நடந்து முடிந்தது. தற்போது, தமிழகத்திலும், விவசாயிகள் பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டுகள் அமைதி, திடீரென்று சிக்கல் என முகம்மாறும் காவிரி நீர் பங்கீடு பிரச்னைக்கு பின்னால், 210 ஆண்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
ஹைதர் அலி கி.பி. 1720- - 1782உலகெங்கும் மன்னராட்சி என்பது, பரம்பரையாக தொடர்வதுதான் வழக்கம். விதிவிலக்காக சாதாரண குடும்பத்தில் பிறந்த சில மாவீரர்கள், தங்கள் திறமையால் மன்னராவதும் உண்டு. பதே ஹைதர் பஹதூர் (தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம்) என்ற பட்டப் பெயர் கொண்ட ஹைதர் அலி (கி.பி. 1720- - 1782 ) அத்தகைய மாவீரர்களில் ஒருவர்.மைசூர் மன்னர் சிக்க கிருஷ்ணராஜ உடையாரின் குதிரைப் படையில், சாதாரண ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
வாரன் ஹேஸ்டிங்ஸ் (warren hastings), கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்போது, 1772ல் வங்காளத்தின் ஆளுனராகப் பதவியேற்றார். அச்சமயத்தில் வரியை கம்பெனி வசூலித்துக்கொண்டு, ஆட்சியை நவாப் வசம் கொடுத்திருந்தது. ராபர்ட் கிளைவ் கொண்டுவந்த, இந்த இரட்டை ஆட்சி முறையினாலும், பஞ்சத்தினாலும், வங்கத்தின் பொருளாதார நிலை மிகவும் சீர்கெட்டிருந்தது. எனவே அரசியலமைப்பையும், ஆட்சித் துறையையும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X