Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் குழு நடத்திய ஆய்வில், 80 கோடி பேர் போதுமான உணவின்றி, பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் குழு (UN Food and Agriculture Organisation (FAO)) சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகில், உடல் பருமன் பாதிப்பால், 190 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முறையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், ஒரே நேரத்தில், 500 மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன் (Darren Lehman) பயிற்சி அளித்தார். மாணவர்களுடன் சேர்ந்து, ஆஸ்திரேலிய அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பயிற்சியாளர் கூறுகையில், ''30 நிமிடங்கள் தொடர்ந்து, பேட்டிங், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
இணையம் வழியாக, இந்தியர்களின் வங்கிக் கணக்குக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து, அமெரிக்காவை சேர்ந்த ஹேக்கர்கள் திருடுவதாக, இணைய பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் ஒன்று, தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. மளிகைப் பொருட்கள் வாங்குவதில் இருந்து, மருத்துவம், பயணம் போன்ற செலவுகளுக்கு, ஆன்லைனில் பணம் பரிவர்த்தனை நடக்கிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
நிலாவில் உலாவ குறைந்த செலவில் 'ரோபோ' அனுப்ப தொழில்நுட்ப நிறுவனம் முடிவு செய்துள்ளது.விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் டீம்இண்டஸ் (TeamIndus). இது, குறைந்த செலவில் நிலாவுக்கு 'ரோபோ' ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ -ISRO) ஒப்பந்தம் செய்துள்ளது.குறைந்த செலவில் நிலாவுக்கு 'ரோபோ' அனுப்புவது தொடர்பாக கூகுள் ஒரு போட்டியை (Google ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
For the first time, researchers have found evidence that underwater ecosystems have pollinators that perform the same task as bees on land. Over several years from 2009 to 2012, researchers from the National Autonomous University of Mexico filmed the spring nocturnal wanderings of crustaceans among beds of turtle seagrass, Thalassia testudinum. Looking through the videos, they spotted more invertebrates visiting male pollen -bearing flowers than those that lacked pollen - just like bees hovering around pollen-producing plants on land. The concept was so new, they invented a new term to describe it: zoobenthophilous pollination. Before that, researchers had never predicted that animals were involved in pollinating marine plants. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
கடலில் அலைகள் உருவாகக் காரணம் என்ன? பௌர்ணமி, அமாவாசை அன்று அலைகள் உயரமாக எழுவது ஏன்?பி. சௌஜன்யா, 7ம் வகுப்பு, பாரதிய வித்யா பவன், கோவைதரைப்பகுதியில் அடிக்கும் காற்றே, கடலில் அலைகளை ஏற்படுத்துகிறது. சாதாரணமாக உருவாகும் அலைகளுக்கும், பௌர்ணமி, அமாவாசை அன்று ஏற்படும் கடலேற்ற, கடலிறக்க நிகழ்வுகளுக்கும் வேறுபாடு உள்ளது. கடலேற்ற அலைகள் என்பவை, சூரியன், சந்திரனின் ஈர்ப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
பனங்காடை 'இன்டியன் ரோலர்' (Indian Roller)காகத்தைப் போல் ஒலி எழுப்பும் பறவை பனங்காடை. 'கோராசிடே' (Coraciidae) குடும்பத்தைச் சேர்ந்தது. பூச்சியுண்ணி வகைப் பறவை. நீலமும், பழுப்பும் கலந்த நிறத்தில் தோற்றமளிக்கும். கொண்டை, வால், இறக்கை ஆகிய பகுதிகள், நீல நிறத்திலும், கழுத்து, உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் கண்களைச் சுற்றியுள்ள பகுதி, காவி நிறத்தில் (Ochre - ஆச்சர்) ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
வெட்டிஆங்கிலப் பெயர்: 'கஸ்கஸ் கிராஸ்'(Cuscus Grass)தாவரவியல் பெயர்: 'கிரைசோபோகன் ஸிஸானியோய்ட்ஸ்'(Chrysopogon zizanioides)தாவரக்குடும்பம்: 'பொயாசியே'(Poaceae)வேறு பெயர்கள்: குருவேர், உசிர், வீரணம், விழல், விலாமிச்சை'வெட்டி', புல் இனத்தைச் சேர்ந்த தாவரம். இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. அனைத்து வகை மண்ணிலும் வளரும். மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் செழிப்பாக வளரும். நாணல், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
பூமியில் அதிக அளவில் நன்னீர், பனி ஆறுகளில்தான் இருப்பு உள்ளது (Glacier - கிளாசியர்). ஒரு குறிப்பிட்ட இடத்தில், பனிப் பொழிவின் வேகம், நீர் ஆவியாதலின் வேகத்தை விட அதிகமாக இருந்தால், அங்கு பனி ஆறு உருவாகும். உலகில் உள்ள மொத்த தண்ணீர் அளவில், கடல்களுக்கு அடுத்தபடியாக, அதிக அளவு தண்ணீர், பனி ஆறுகளில்தான் உள்ளது. துருவப் பகுதிகளின் பெரும் பகுதி, பனி ஆறுகளால் மூடப்பட்டிருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
பாலுவுக்கும், எனக்கும் தபால் தலை சேகரிப்பது, ஒரு பழைய பொழுதுபோக்கு. பழைய என்றுதான் சொல்ல வேண்டும். கூரியர் வந்ததிலிருந்து, தபால் ரொம்ப அடிபட்டுவிட்டது. கூரியர் கடித உறைகளில் ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கமே கிடையாது. அரசாங்கம் நடத்தும் அஞ்சல் துறையில் மட்டும்தான், இன்னமும் ஸ்டாம்ப் இருக்கிறது.ஏன் அதை ஸ்டாம்ப் என்று சொல்கிறோம் என்பது எனக்குத் தெரியும். ஸ்டாம்ப் என்றால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
அன்று நமது சிங்க அண்ணாச்சிக்குப் பொல்லாத நாள்.இரை தேடி அலைந்த சிங்க அண்ணாச்சியின் கண்ணில், ஒரு முயல் தட்டுப்பட்டது. முயல் போக்குக் காட்டி, தாவித் தாவி ஓடி, ஒரு புதருக்குள் போய்விட்டது. புதரில் பாய்ந்த சிங்க அண்ணாச்சிக்கு முயல் சிக்கவில்லை. அதற்கு பதிலாக, உள்ளங்காலில் ஒரு முள் தைத்ததுதான் மிச்சம். வலி தாங்காமல் கர்ஜித்தது சிங்க அண்ணாச்சி. எப்படி முயற்சி செய்தும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
இயல், இசை, நாடகம் என்று தமிழை மூன்றாகப் பிரிப்பார்கள். நாடகத் தமிழுக்கு அருந்தொண்டாற்ற முன்வருவது அந்த காலத்தில் மிகவும் அரிது. நாடகக் கலைக்கு, உயிரூட்டியவர்களில் ஒருவர், பம்மல் சம்பந்த முதலியார். இவரது வருகைக்குப் பின்னர்தான், நாடகத்தில் அரங்க நிர்மாணம், காட்சிப் பிரிப்பு, ஒளியமைப்பு போன்றவை நடைமுறைக்கு வந்தன. முறையான நாடகக் குழுக்களை அமைத்து, நாடகங்களை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
கடலில் முகந்த தண்ணீரை தரையில் கொட்டு மழைத்தாயே!உடலில் சுமந்த தண்ணீரை ஊரில் பெய்வாய் கருமுகிலே!பயிர்கள் வாடி வதங்குவதைபார்த்தும் பெய்யாதிருப்பாயா? முயல்கள் மான்கள் நீரின்றிமுடங்கிக் கிடத்தல் சரிதானா?மாதம் தோறும் மும்மாரிமண்ணில் பெய்தது அக்காலம்!மாதம் மூன்று கடந்தாலும் மழையே இன்றி வாடுகிறோம்!மனிதர் நிலத்தைத் துளையிட்டுமண்ணீர் இறைத்துக் குடிக்கின்றார். இனிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
வழுதுணங்காய் தெரியுமா? சாம்பராகவும், காரக்குழம்பாகவும், பொரியலாகவும், வறுவலாகவும் சமையலில் பயன்படுத்துகிறோம். நிறைய விளையும்போது, வற்றலாக்கிக் கொள்கிறோம். அனைவரும் அறிந்த கத்தரிக்காய்க்குத்தான், வழுதுணங்காய் என்று பெயர். வழுதலை, வழுதுணை என்றும் இதை அழைப்பர். இதன் இன்னொரு உட்பிரிவான கண்டங்கத்தரியையும், வழுதுணங்காய் என்றே கூறுவர். கண்டங்கத்தரி இயற்கை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
கல்லூரிகளில், இளநிலை கணித பட்டப்படிப்பு, மூன்று ஆண்டுகள் கற்பிக்கப்படுகிறது. இது கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை ஆழமாக கற்க உதவும். ஆனால், உலக அலவில் கணிதத்தில் நடக்கும் ஆய்வுகளைப் பற்றி தெரிந்துகொண்டு, சர்வதேச தரத்திலான ஆய்வுகள் செய்ய வாய்ப்பு வழங்காது. பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், ஐ.ஐ.எஸ்.சி., (IISc - Indian Institute of Science) நிறுவனம் இந்த வாய்ப்பை வழங்குகிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
500 ரூபாய் இருக்கிறது. குறிப்பிட்ட விகிதத்தில், இருவருக்கு பிரித்து தர வேண்டும். இப்படி, ஒரு குறிப்பிட்ட அளவை, கொடுத்த விகிதத்தில் பிரிக்கும் கணக்கீட்டை, ஆறாம் வகுப்பில் படிக்க நேர்கிறது. இரண்டு எளிய சூத்திரங்களைப் பயன்படுத்தி, எளிதாகப் பிரிக்கலாம். N என்ற அளவை a:b என்ற விகிதத்தில், இரு பிரிவுகளாக கண்டறிய கீழ்க்கண்ட இரண்டு சூத்திரங்களை பயன்படுத்தலாம். முதல் பிரிவு = ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு புத்தகத்தில், ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஏதாவது பத்து வரிக்குள் ஒரு வரியை தேர்ந்தெடுங்கள். அந்த வரியில் பத்து சொற்களுக்குள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, எத்தனையாவது சொல் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.(a) பக்க எண்ணை இரண்டால் பெருக்குங்கள்(b) விடையை ஐந்தால் பெருக்குங்கள்(c) இருபதை கூட்டுங்கள் (d) வரி எண்ணை கூட்டுங்கள்(e) ஐந்தை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
தேசிய கீதம் (National Anthem - நேஷனல் ஆன்தெம்) என்பது, ஒரு பகுதி மக்களின் பண்பாடு, கலாசாரம், ஒற்றுமை உணர்வு, புரட்சியில் கிடைத்த சுதந்திரம், வெற்றி, ஆகியவற்றை பெருமையுடன் உணர்த்தும் வரிகளைக் கொண்டது. அந்த வரிகளுக்கேற்ற இசையை அமைத்து, மக்கள் பாடத் தொடங்கினார்கள்.'நாடு' தேவையென்று, எல்லைகளைத் தீர்மானிக்கத் தொடங்கியபோது, அதற்கான தனி அடையாளத்தை வெளிப்படுத்த, தேசிய கீதம் என்பதை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
வால்ட் டிஸ்னி : 1901 - 1966பிறந்த ஊர்: சிகாகோ, ஐக்கிய அமெரிக்காசாதனை: புகழ்பெற்ற காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்; ஒரே ஆண்டில் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றவர்டிஸ்னி சிறுவனாக இருந்தபோது, ஏதாவது படம் வரைந்து பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் விற்பார். அதை அவரது தந்தை விரும்புவதில்லை; தாய் விரும்பி உற்சாகப்படுத்துவார். உயர்நிலைப் பள்ளியில் ஓவியம் கற்று, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
அக்காலத்தில், திருமணத்தை வதுவை, மன்றல், மணம் என்ற பெயர்களில் அழைத்தனர். ஆனால், ஆரம்பத்தில், திருமணம் என்ற பெயரில் சடங்கு இன்றி ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் முறை இருந்திருக்கிறது. ஏமாற்றுதல், நம்பிக்கையின்மை வந்த பிறகுதான், திருமண நடைமுறை உருவாகியுள்ளது.இதனை,'பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்ஐயர் யாத்தனர் கரணம் என்ப'என்னும் தொல்காப்பிய நூற்பா, திருமண விதிமுறைகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X