Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
கோவையைச் சேர்ந்த மென் பொறியாளர் விஜய், மனிதப் பண்புகள் கொண்ட புதியவகை 'ரோபோ'வை (humanoid robot) உருவாக்கியுள்ளார். மனிதனைப் போன்றே நடக்க, பேச, நடனமாட, பாட்டு பாடக்கூடிய இந்த வகை 'ரோபோ'க்களிடம், 19 மொழிகளில் கேள்வி கேட்கலாம். அதற்கு அது பதிலளிக்கும். வங்கிகள், ஹோட்டல்கள், கல்வி நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில், மக்களுக்கு உதவக்கூடிய வகையில், இந்த 'ரோபோ'க்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
கடந்த 1912ல், 1500 பயணிகளோடு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை, டூப்ளிக்கேட் செய்யும் பணியை, சீனாவில் உள்ள உச்சாங் என்ற கப்பல் கட்டுமான நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் வழங்கிய 1000 கோடி ரூபாய் நிதியில், இந்த கப்பல் உருவாக்கப் படுகிறது. 269 மீட்டர் நீளம், 28 மீட்டர் அகலம் கொண்ட இந்த கப்பலில், தூண், பிரம்மாண்ட அறைகள், நீச்சல் குளம், தியேட்டர் போன்றவை, அச்சு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
பொம்மைகள், காலத்துக்கேற்ப வடிவத்தில் மாற்றம் பெறுகின்றன. ஜெனிசிஸ் (Genesis) என்ற ஐரோப்பாவைச் சேர்ந்த பொம்மை தயாரிப்பு நிறுவனம், 'ஸ்மார்ட் பொம்மை' விற்பனையை கடந்த ஆண்டு தொடங்கியது. குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், அந்த பொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. பொம்மையில், இணைய வசதி, புளூடூத், கேமரா வசதி உண்டு. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, அமோக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
பி.எஸ்.எல்.வி. சி36 (PSLV- C36) ராக்கெட் உதவியுடன் ரிசோர்ஸ் சாட் -2ஏ (Resourcesat -2A) செயற்கைக்கோள், வெற்றிகரகமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, கடந்த புதனன்று இது விண்ணில் ஏவப்பட்டது.பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக, கடந்த 2003ம் அண்டு ரிசோர்ஸ் சாட்-1 செயற்கைக்கோளையும், 2011-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட் -2 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
For the first time, the feathered tail of a 99 -million -year -old dinosaur has been found preserved in amber. The 1.4- inch tail, described in a paper published in the journal Current Biology, is part of a treasure trove of fossils that paleontologist Lida Xing from the China University of Geosciences, discovered last year at an amber market in Myanmar, in Southeast Asia. The tail most likely belongs to a tiny feathered dino that was no bigger than a sparrow. The tail is so small that it suggests the dinosaur was a juvenile; the animal likely died in northwest Myanmar before tree resin encased its ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
அருகில் இருப்பவர் கொட்டாவி விடும்போது, நமக்கும் கொட்டாவி வருகிறதே ஏன்?K.தினேஷ், கோவை.கொட்டாவி விடும்போது, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதுடன், ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன் -டை- ஆக்ஸைடு, உடலில் இருந்து வெளியேறும் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், அது அறிவியல் உண்மையல்ல! 'களைப்படைந்த மூளையை சற்றே குளிரவைக்க, வாயைத் திறந்து, காற்றை உள்ளே இழுத்து, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
புவியின் உள் அமைப்பு (Earth Internal Structure - எர்த் இன்டர்னல் ஸ்ட்ரக்சர்) பற்றிய கோட்பாட்டை, முதன் முதலில் உருவாக்கியவர் 'ஐசக் நியூட்டன்' (Issac Newton). பூமியின் உட்பகுதி, வேதிப் பொருட்களின் கட்டமைப்பு மற்றும் அதன் பண்புகளால் பிரிக்கப்படுகிறது. புவியின் உள் அமைப்பு மூன்று அடுக்குகளாக உள்ளது.1. மேல் ஓடு (Crust - கிரஸ்ட்)இது புவியின் மேற்பரப்பு. 'நிலக்கோளம்' (Lithosphere - லித்தோஸ்பியர்) என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
'பைக்நோநோடிடே' குடும்பத்தைச் சேர்ந்த பாடும் பறவை. உடலின் அடிப்பகுதி வெண்மை நிறத்திலும், மேற்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும். கொண்டை, சிவப்பு நிற மீசையை உடையது. மரக்கிளைகளில் அமர்ந்தபடி, சத்தமாகப் பாடுவது போல ஒலி எழுப்பும். பழங்களையும், சிறு பூச்சிகளையும், மலர்களில் உள்ள தேனையும் முதன்மை உணவாகக் கொள்கிறது. விஷத்தன்மை உடைய விதைகளையும் உண்கிறது. பெரும்பாலும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
பாலு இன்று முழுக்க என்னை நிற்கவைத்ததில், கால்வலி வந்துவிட்டது. கட்டுமான நிபுணர் ஈஃபல் பிறந்த நாள் இந்த வாரம் வருகிறது. அதையொட்டி அவர் உருவாக்கிய சிலையைப் போல தானும் ஒன்றைச் செய்யப் போவதாகவும், அதற்கு நான் தான் மாடலாக நிற்க வேண்டுமென்றும் நச்சரித்தான்.எந்தச் சிலை என்று கேட்டேன். அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவி சிலை என்றான். அதை உருவாக்கிய சிற்பி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
உலகின் பழமையான நகரங்களெல்லாம், ஆறு, கடல், மலை ஆகியவற்றின் அருகிலேயே அமைந்திருக்கின்றன. மிகப்பழைய ஊர்களில் ஒன்றான மதுரை, வைகை ஆற்றின் கரையிலும் திருப்பரங்குன்றம், பசுமலை, சமண மலை, நாகமலை, அழகர் மலை, ஆனைமலை ஆகிய குன்றுகளின் சூழலிலும் அமைந்த ஊர்.பெயர்க் காரணம்மதுரை என்று இன்று அழைக்கப்படும் ஊர், கல்வெட்டுகளில் மத்திரை என்றும், பிறகு மதிரை என்றும், பின்னர் மதுரை என்றும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
மணி என்றதும், உடனே நினைவுக்கு வருவது காலத்தின் அளவு. அறுபது நிமிடங்கள் சேர்ந்தது ஒரு மணி நேரம் (One Hour). ஒருநாளை இருபத்து நான்கு மணி நேரங்களாகப் பகுத்து வைத்திருக்கிறோம். ஒவ்வொரு மணி நேரத்துக்கும், ஓர் எண்ணுப்பெயர் வைத்திருக்கிறோம். நள்ளிரவிலிருந்து நாளின் முற்பாதி பன்னிரண்டு மணிநேரங்களும், நடுப்பகலில் இருந்து நாளின் பிற்பாதி பன்னிரண்டு மணி நேரங்களும் கொண்டதுதான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
மேலோட்டமாக ஒரு பொருளும், உற்று நோக்கினால் வேறு பொருளும் வரும்படி, ரசித்து பாடல்கள் எழுதினார்கள் புலவர்கள். காளமேகப்புலவர், கம்பர், ஔவையார் என, பலர் இப்படி பாடல் புனைவதில், திறமையானவர்கள். இந்த வகையில், கம்பர் எழுதிய பாடல்களில் ஒன்று:வெற்றிபுனை தாதகிக்கும் வேம்புக்கும் பெண்ணைக்கும்சுற்றும் பெருநிழலாய்த் தோன்றுமே- கற்றோர்திறந்தாங்கும் மன்னு செகந் தாங்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
அது என்ன ஆதீண்டு குற்றி? இது தமிழ்ச்சொல்தான். முன்னோர் வகுத்த 32 அறங்களுள் ஒன்று, ஆதீண்டு குற்றி. அதன் வேறு பெயர்கள், தன்மத்தறி, நடுதறி, ஆவுரிஞ்சி, ஆவுரிஞ்சு தறி, ஆதீண்டு கல், ஆவோஞ்சிக்கல், மாடுசுரகல்.ஆ என்ற சொல், இலக்கியங்களில் பசுக்களை, பொதுவாக கால்நடைகளைக் குறிக்கிறது. கால்நடைகளுக்கு, உடம்பில் தினவெடுக்கும் பொழுது, அந்தத் தினவைப் போக்கிக் கொள்வதற்காக, நடப்பட்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
வளைகோடுகளைப் பயன்படுத்தி, ஓர் இடத்தில் துவங்கி, அதே இடத்தில் முடியும் வகையில் வரையப்படும் வடிவங்கள், கணிதத்தில் சமச்சீர் தன்மையைப் பிரதிபலிக்கின்றன. தென்னிந்தியாவில், கோலம் இந்த வகையில் வரையப்படுகிறது.பண்டைய மக்கள், சுவரை அலங்கரிக்க, ஓர் அடிப்படையான வடிவத்தை முதலில் கருதிக்கொண்டு, அதை மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட வழிமுறையில் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டே வந்தனர். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
ஓர் எண்ணை, இன்னொரு இயல் எண்ணால் மீதம் இல்லாமல் வகுக்க முடியுமா என்று சோதித்து பார்க்கும் செயல்பாட்டுக்கு, வகுபடும் தன்மை சோதனை (Test of Divisibility -- டெஸ்ட் ஆஃப் டிவிசிபிலிட்டி) என்று பெயர். ஏழால் வகுபடும் தன்மையை பற்றி பார்க்கலாம். உதாரணமாக, 2,583 என்ற எண், ஏழால் வகுபடுமா? இல்லையா? என்பதை சிறிய செயல்முறை கொண்டு அறியலாம். மூன்று அறைகளை வரைந்து கொள்ளுங்கள். வகுத்தல் அறை, பெருக்கல் அறை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
டிசம்பர் 9, 2000 - சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்ஊழல் என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி, தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக் கொள்வதாகும். ஊழலற்ற சமுதாயத்தைப் படைக்க, ஐ.நா. சபையால் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.டிசம்பர் 10, 1948 - அனைத்துலக மனித உரிமைகள் நாள்தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், தலை நிமிர்ந்து வாழ வழி செய்வதே, மனித உரிமை. சாதி, மதம், இனம், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
வாழ்ந்த காலம்: 1878 - 1972பிறந்த ஊர்: கிருஷ்ணகிரி, தொரப்பள்ளி.சாதனை: அரசியலில் இருந்து கொண்டே, இலக்கியத்திற்கும் தொண்டாற்றியவர்.விருது: 1954ல் பாரத ரத்னா சி.ராஜகோபாலாச்சாரி என்பது ராஜாஜியின் இயற்பெயர். விடுதலைப் போராட்ட வீரர், வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். 1900ம் ஆண்டிலேயே, ஒரு வழக்குக்கு கட்டணமாக, 1000 ரூபாய் வாங்கிய வெற்றிகரமான வழக்கறிஞர். காந்திஜியின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
ராமலிங்கம்பிள்ளை: 1888 - 1972அது, 1914ம் ஆண்டு. கவிதைப் போட்டி பற்றி, ஓர் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில், 'நாட்டுப் பற்றுடன், பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். கும்மி மெட்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுதப்படும் பாடல் தொகுதிக்கு, 500 ரூபாய் பரிசு' என்று இருந்தது. அந்த அறிவிப்பை சுதந்திரப் போராட்ட வீரர் கோபாலகிருஷ்ண கோகலே தலைமையை ஏற்றவர்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
காவிரியின் குறுக்கே, கரிகாலன் கட்டிய கல்லணை பற்றி பெருமையாகப் பேசுகிறோம். அதை கரிகாலன் எப்படி கட்டினார்?நீர் பெருக்கெடுத்து ஓடும்போது, பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டுவந்து ஆற்றில் போடச் சொன்னார். அப்படி போடும்போது, கற்கள் ஒவ்வொன்றும் மணலுக்குள் புதையும். இப்படி புதையும் கற்கள் மீது, வரிசையாக கற்களை போட்டுத்தான் கரிகாலன் கல்லணையை கட்டினார் என்பதை, சர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X