Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
உலகின் மிக வயதான பறவை, 41வது முறையாக முட்டை இட்டு, சாதனை படைத்துள்ளது. இது லேசான் அல்பட்ராஸ் (Laysan albatrus) வகையை சேர்ந்த பறவை. இதற்கு, 66 வயதாகிறது. இதன் பெயர் 'விஸ்டம்'. ஹவாய் தீவை ஒட்டி உள்ள மிட்வே பகுதியில் வசித்து வருகிறது. இந்த பறவையின் காலில், கடந்த 1954ல் பறவை ஆய்வாளர், அடையாளத்துக்காக வளையத்தை மாட்டிவிட்டார். அதுமுதல், விஸ்டம் பறவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது, 41 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
வர்தா புயல் குறித்த தகவலை சரியாக கொடுத்து, பெரும் சேதத்தை தடுக்க உதவிய, இஸ்ரோ செயற்கைக்கோள் பற்றி, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கக்கடலில் உருவான வர்தா புயல், கடந்த திங்களன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், கடும் சேதத்தை ஏற்படுத்தியது. முன்கூட்டியே புயல் குறித்த எச்சரிக்கை விடப்பட்டதால், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. புயல் மழைக்கு முன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
விண்வெளியில் உள்ள குப்பையை அழிக்கும் வகையில், ஜப்பான், சரக்கு விண்கலம் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த விண்கலத்துக்கு, கோனோடோரி (Kounotori) என்று பெயர். இந்த விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி, ஆய்வு மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகளுக்கு, உணவு, உடை, நீர் உள்ளிட்ட பொருட்களுடன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பொருட்களை வினியோகித்தவுடன், விண்வெளியில் சுற்றும் குப்பையை, புவி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
India is the top country of origin of international migrants, with 15.6 million Indians living abroad, according to a Pew research which said international migrants make up 3.3 per cent of the world's population. As of 2015, nearly 3.5 million Indians lived in the UAE, the world's second-largest migration corridor. The number of Indians living in the UAE and other Persian Gulf countries has increased substantially during the past decade, from 2 million in 1990 to more than eight million in 2015, Pew said. "Most have migrated for economic opportunities in these oil-rich countries," it added. Among destination countries, the US(46.6 million) has more international migrants than any other country. Other top destinations of migrants include Germany (12.0 million), Russia (11.6 million), Saudi Arabia (10.2 million) and the United Kingdom (8.5 million), Pew said. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
சிரியா நாட்டில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் தொடர்ந்து போர் நடக்கிறது. அலெப்போ நகரை மையமாக வைத்து, கடும் தாக்குதல் தொடர்கிறது. இதில் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போர் நிறுத்தப்பட்டு, அமைதி திரும்ப வேண்டும் என, உலக அளவில் கோரிக்கை எழுந்துள்ளது. அதை வலியுறுத்தும் விதமாக, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள, உலக புகழ்பெற்ற ஈஃபல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஎரி நட்சத்திரம் முழுவதுமாக எரிந்து காணாமல் போய்விடுமா?ராகவ், 11ம் வகுப்பு, ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.எரி நட்சத்திரம் என்பது, விண்மீன் அல்ல. அவை வானில் மிதக்கும் பாறைகள். சில சமயம் இந்தப் பாறைகள், பூமியின் ஈர்ப்பு விசையால் கவர்ந்திழுக்கப்படுகின்றன. அவ்வாறு பூமியை நோக்கி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
'ப்ளோவர்' (Plover)உயிரியல் பெயர்: 'ப்ளுவியனஸ் ஏகிப்டியஸ்' (Pluvianus Aegyptius)'ப்ளுவியானிடே' (Pluvianidae) குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப்பறவை. தலைப்பகுதி கறுப்பு நிறத்திலும், உடல் பழுப்பு நிறத்திலும் இருக்கும். கண்களைச் சுற்றி, முகமூடி அணிந்ததைப்போல கறுப்புப் பட்டை உண்டு. வயிற்றுப் பகுதி ஆரஞ்சு நிறத்திலும், கால்கள் நீல நிறத்திலும் இருக்கும். இந்தப் பறவையின் நீளம் சுமார் 21 செ.மீ. இவை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
பூமியில் விழுந்த விண்கற்களிலேயே மிகப் பெரியது, 'ஹோபா விண்கல்' (Hoba Meteorite - ஹோபா மெட்டியோரைட்). இது 1920ல் கண்டுபிடிக்கப்பட்டது. நமீபியா (Namibia) நாட்டில் உள்ள 'ஹோபா' என்னும் விவசாயப் பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 3 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், சுமார் ஒன்றரை மீட்டர் தடிமனும் கொண்டது. எடை 60 டன். இது சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
ஊசிப் பனைஆங்கிலப் பெயர்: 'நீடில் பாம்' (Needle Palm)தாவரவியல் பெயர்: 'ராபிடோபைலம் ஹிஸ்ட்ரிக்ஸ்' (Rhapidophyllum Hystrix)'அர்காசியே' (Arecaceae) குடும்பத்தைச் சேர்ந்த பனை வகைத் தாவரம். இது 'ராபிடோபைலம்' (Rhapidophyllum) பனை இனத்தில் உள்ள ஒரே வகை பனை. அதிக பனிப் பொழிவைத் தாங்கும் திறன் உடையது. ஏறக்குறைய மைனஸ் 20 டிகிரி வரை குளிரைத் தாங்கக்கூடியது. மூன்று மீட்டர் உயரம் வரை வளரும். சிறிய புதர் போன்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
பாலு ஒரே பரபரப்பாக ஓடிவந்தான். நானும் ஞாநி மாமாவும் கேரம் விளையாடிக் கொண்டிருந்தோம். வாலு இருவரும் ஜெயித்த காய்களை எல்லாம் கணக்கிட்டுக் கொண்டிருந்தது.“மாலு, இசை அமைக்க என்னவெல்லாம் தேவை, சொல்லு.” என்றான் பாலு. “இசையறிவு, கற்பனை, ஏதாவது ஒரு இசைக்கருவி இந்த மூன்றும் தேவை” என்றேன். “காது கேட்க வேண்டாமா?” என்று கேட்டான் பாலு.எனக்கு சிரிப்பு வந்தது. “காது கேட்காமல் எப்படி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஊர் ஆலம்பாறை; பழந்தமிழகத்தில் முக்கிய துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்துள்ளது. இந்த ஊர், இடைக்கழிநாடு என, சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலம்பாறையில், 17-ம் நூற்றாண்டில் முகலாயர்கள் கோட்டை கட்டினர்.செங்கற்களாலும், சுண்ணாம்பாலும் இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. 15 ஏக்கர் பரப்பில் சதுர வடிவில் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
ஆல மரத்தில் பழம் இருக்கும் வரை, பறவைகள் தன்னுடையவை என்று சொந்தம் கொண்டாடும். பட்டுப்போனால், எந்தப் பறவையும் அங்கு செல்லாது. அதுபோலவே மனிதர்களிடையே செல்வம் இருக்கும் வரை, சொந்தம் இருக்கும்; வறுமை வந்தால், யாரும் வர மாட்டார்கள் என்ற சமூக நிலையை மறைபொருளாக ஒரு பழம் பாடல் கூறுகிறது.அந்தப் பாடல்:'ஆல் இலை பூவும் காயும்அளிதரு பழமும் உண்டேல்சாலவே பட்சி எல்லாம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
ஊன், ஊண்: இந்த இரு சொற்களுக்கும் என்ன வித்தியாசம்?ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம், ஆனால், இவற்றின் பொருள் முற்றிலும் மாறுபட்டது.'ஊன்' என்றால், மாமிசம், இறைச்சி என்று பொருள். 'ஊண்' என்றால், உணவு என்று பொருள்.மாமிசமும் ஓர் உணவுதான்; அதற்காக ஊனை, ஊண் என்று எழுதக்கூடாது.ஒருவர் பசியோடு இருக்கிறார். அவர் முன்னே தட்டில் உணவை வைத்து, 'உண்' என்கிறோம், அதாவது, 'சாப்பிடு' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டு, சிறப்பைக் கூறுவதுதான் உவமை. 'செல்விக்கு மான்விழி' என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். செல்வியின் விழிகள், மானின் விழிகளைப் போன்று இருந்தன. அதனால் செல்வியின் விழிக்கு, மானின் விழி உவமையாகக் கூறப்பட்டது. ஒன்றை விளக்கும்போது, உவமைகூறி விளக்குவதால், எளிதில் பொருள் விளங்கும். உவமைகூறி விளக்கும் மரபு, எல்லா மொழிகளிலும் தொன்றுதொட்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
டிசம்பர் 18, 1856 : ஜே.ஜே. தாம்சன் பிறந்த நாள்நவீன அணு இயற்பியலின் தந்தை. மின்னணுவியல், காந்தவியலில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் மின்னிறக்க குழாயில் மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைக் கண்டறிந்ததற்காக, 1906ல் நோபல் பரிசு பெற்று இருக்கிறார்.டிசம்பர் 18, 2000: சர்வதேச புலம் பெயர்ந்தோர் நாள்வேலைக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு, சட்டப்படியான உரிமைகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
வாழ்ந்த காலம்: 16.12.1770 - 26.03.1827பிறந்த ஊர்: பான், ஜெர்மனி.சாதனை: சிம்பொனி வழங்கிய இசை மேதைமொஸார்ட் எனும் மாமேதை போல, தன் மகனும் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில், கால் கடுக்க நிற்கவைத்து இசைப்பயிற்சி தந்தார் பீத்தோவனின் தந்தை ஜோகன். கால் வலிக்கிறது என்று அழுதால் அடிப்பாராம். கை விரல்களில் பிரம்பால் அடித்து இசையைக் கற்றுக்கொள்ள வைத்திருக்கிறார். கற்று முடித்த பிறகு, 17 வயதில் இசை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
பழந்தமிழகத்தில், ஏரி, குளம், கிணறு வெட்டுவதும், பராமரிப்பதும் பொது அறமாக கருதப்பட்டது. ஏரி, குளங்களை பராமரிக்க, நிலம் தானமாக வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவீரம் என்னும் குளத்தை வெட்டுவதற்கு, ராஜராஜ சோழனின் ஆட்சியில் உயர் அதிகாரியாக இருந்த காரஞ்சை நம்பிரான் கிரமவித்தன் என்பவர், தானம் வழங்கியுள்ளார். இந்த தகவல், மேக்கிரிமங்கலம் என்ற சிற்றூரில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
சங்க காலத்தில், பல போர்கள் நடைபெற்றிருக்கின்றன. அதில் தலையாலங்கானத்துப் போர் மிகப் பெரியது. தலையாலங்கானம் என்ற இடத்தில் நிகழ்ந்ததால், இப்பெயர் வந்தது. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு எதிராக, சேரனும் சோழனும் ஐந்து வேளிர்களைச் கூட்டாய்ச் சேர்த்துக் கொண்டு படையெடுத்து வந்தனர். நெடுஞ்செழியன், அப்போது இளைஞன். சின்னஞ்சிறியவனான செழியனை வென்று, பாண்டிய நாட்டைக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
மூங்கிலை நீளவாக்கில் மெல்லியதாக சீவி, அதிலிருந்து பின்னப்படும் பொருள்களில் ஒன்று முறம். பழந்தமிழகத்தில் அனைவர் வீட்டுக்குள்ளும் இருந்த அத்தியாவசியமான் பொருள் இருந்தது. இன்றும் கிராமத்தில் முறம் இருந்தாலும், அவற்றின் பயன்பாடு குறைந்துவிட்டது. நகரங்களில் மூங்கில் முறம் இல்லாமலே போய்விட்டது.அரிசி புடைக்கவும், கல் நீக்கவும், நொய் பிரிக்கவும், கீரை ஆய்வதற்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X