Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
பிரிட்டனைச் சேர்ந்தவர் லிசா டென்னிஸ், 40. இவர், 83.98 நொடிகளில், 1,000 தட்டோடுகளை (டைல்ஸ்) வேகமாக உடைத்த பெண் என்ற சாதனையைப் புரிந்திருந்தார். இந்நிலையில், மேலும் ஒரு சாதனையாக, 60 நொடிகளில், 923 தட்டோடுகளை உடைத்து, புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பத்து பத்தாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டோடுகளை, மாறி மாறி இருகைகளாலும் உடைத்து தள்ளியது, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் குட்ஆல், 102. இந்த வயதிலும், ஆஸ்திரேலியாவில் உள்ள எடித் கோவான் பல்கலைக்கழகத்தில், ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வீட்டிலிருந்து நான்கு பேருந்துகள் மாறி, 90 நிமிடங்கள் பயணித்து, பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தார். இது டேவிட் குட்ஆலின் உடல்நலத்தை பாதிக்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கருதியதால், அவரை ஓய்வெடுக்கும்படி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
டில்லியில், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு, கட்டணத்தில், 75 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, காற்று மாசுபாட்டால் டில்லி நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதால், காற்று மாசை குறைக்க முடியும் என்று டில்லி அரசு நம்புகிறது. இதனால், புதிய சலுகைத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. டில்லியில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
பெங்களூருவில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை, முழுக்க முழுக்க ரோபோட்டுகளே வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்துள்ளன. ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் சுதிப்தா குமார் பாலா, 29, சரோஜித் அடாக், 35. இவர்களின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன. பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையை, மருத்துவர்களே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
அணு ஆயுதம் ஏந்தி, கண்டம் விட்டு கண்டம் தாக்கும் நிர்பாய் ஏவுகணை பரிசோதனை, நான்காவது முறையாக தோல்வியில் முடிந்துள்ளது. இந்தியா ஏவுகணை தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. அணு ஆயுதம் ஏந்தி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அதிநவீன நிர்பாய் (Nirbhay) என்ற ஏவுகணையை, இந்திய விஞ்ஞானிகள் தயாரித்தனர். டி.ஆர்.டி.ஓ. எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
A primary school, Shiksha Kuteer in the city of Ambikapur in Chhattisgarh is asking parents to simply plant a tree sapling instead of paying school fees.The parents have to take care of the sapling and plant a new one if it dies. 35 students between the ages of four and five are studying there. The initiative was set up by a group of local professionals and business owners in response to India's skyrocketing education fees. A national survey released last year showed that between 2008 and 2014, private expenditure has increased by 175 percent to Rs 6,788 per student each year. The lack of government spending is also damaging the education system too. But by offering an affordable way to get students into schools, Shiksha Kuteer is encouraging education for everyone. "Shiksha Kuteer has opened in the village for students who are poor and have no money to pay fees. Students are being taught in English medium" local villager, Sevak ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
இயற்கையில் கிடைக்கும் தேனைப் பாதுகாக்காமல் இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கிறதே எவ்வாறு?வி. சாந்தகோபாலன், மதுரை.ஆசிய நாடான ஜார்ஜியாவில், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், மண் குடுவையில் சேகரித்து வைக்கப்பட்ட தேன், கெடாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மலரிலிருந்து சேகரிக்கப்படும் தேனில் உள்ள நீரை, தமது சிறகை வேக வேகமாக அசைத்து தேனீக்கள் உலரச் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
மஞ்சள் மூக்கு ஆட்காட்டி ஆங்கிலப் பெயர்: 'யெல்லோ வாட்டில்டு லாப்விங்' (Yellow-wattled Lapwing)உயிரியல் பெயர்: 'வனேல்லஸ் மலாபரிகஸ்'(Vanellus Malabaricus)'சாரடிரிடே' (Charadridae) குடும்பத்தைச் சேர்ந்த பறவை. நீர்நிலைகள், திறந்தவெளிகள், புல்வெளிகள், முட்காடுகளில் அதிகம் காணப்படும்.* உடல் பழுப்பு நிறத்தில் இருக்கும்.* தலையின் உச்சிப் பகுதி, கறுப்பு நிறத்தில் காணப்படும்.* உடலின் பழுப்பு நிறத்திற்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
உலகம் முழுவதும் உள்ள, 'சிம்பன்சி' (Chimpanzee) என்னும் மனிதக் குரங்கு இனங்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், 'டேம் ஜேன் குட்ஆல்' (Dame Jane Goodall). தொல் உயிரியியல் ஆராய்ச்சியாளர். சிம்பன்சி பற்றிய இவரது ஆராய்ச்சி உலக அளவில் பிரபலமானது. தொடர்ந்து, 55 ஆண்டுகள் சிம்பன்சி பற்றி ஆய்வு செய்து வருகிறார். அவற்றைப் பாதுகாக்க முயற்சியும் எடுத்துள்ளார். சிம்பன்சி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
கரம்போலா (Carombola)ஆங்கிலப் பெயர்கள்: ஸ்டார் ஃபுருட் (Star Fruit), பெலிம்பிங் மானிஸ் (Belimbing Manis)தாவரவியல் பெயர்: அவர்ஹோ கரம்போலா (Averrhoa Carambola)தமிழ்ப் பெயர்: தமாரத்தம் பழம்இது 'ஆக்சாலிடாசியே' (Oxalidaceae) குடும்பத்தைச் சேர்ந்த மரம். குளிர்ந்த மலைப்பகுதிகளில் செழித்து வளரும். சமவெளிப் பகுதிகளில் வளராது. மரம் 30 அடி உயரம் வரை வளரும். அதிகக் கிளைகளுடன் பசுமையாக இருக்கும். கருநீல நிறத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
பாலு, பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போதே, கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில்தான் வந்தான். வந்ததும், அவசர அவசரமாக தொப்பி, தாடி மீசையை எல்லாம் நீக்கிவிட்டு, எதையோ நினைத்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான்.“அப்படி என்ன விஷயம் பாலு; நினைத்து நினைத்து சிரிக்கிற மாதிரி?” என்று நானும், ஞாநி மாமாவும் திரும்பத் திரும்பக் கேட்டோம். “அப்பறம் சொல்றேன்” என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
1946 - இந்தியாவின் முதல் நர்சிங் கல்லூரி1948 - ஆசியாவிலேயே முதன்முதலாக, நரம்பியல் துறை1971 - இந்தியாவிலேயே முதன் முதலாக, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எம்.சி). இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மிகவும் மதிக்கப்படும் மருத்துவக் கல்வி நிலையமாக விளங்குகிறது. இந்தியாவின் சிறந்த மருத்துவக்கல்வி நிறுவனங்களின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
(பாரதியார், அவர் மனைவி செல்லம்மாள் இருவரும் வீட்டின் அறையில் அமர்ந்திருக்கிறார்கள். செல்லம்மாள் பனையோலை விசிறியை சரி செய்தபடி பேசுகிறார்)செல்லம்மாள்: கவிஞர் ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறார்? என்ன சிந்தனை?பாரதியார்: ஒன்றும் இல்லை செல்லம்மா. இன்று தெருவில் நான்கைந்து சிறுவர்களைப் பார்த்தேன். அவர்கள் வேப்பம் பழங்களை பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.செல்லம்மாள்: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
கூவல் என்பதை, கோழி கூவுவதாக நினைக்க வேண்டாம். கூவல் என்பது, கிணற்றை குறிக்கும். கிணற்றுக்கு, அசும்பு, உறவி, குழி, கூபம், கேணி, பூவல், வாவி, துரவு என்ற பெயர்களும் உள்ளன. நீர் நிலைகளைப் பற்றி அறியும் நூல், கூவ நூல் என்று அழைக்கப்படுகிறது. 'வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி' (நற்றிணை) எனும் பாடலில், காட்டிடையே பயணம் போவோர், கூவல், நீரைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
டிசம்பர் 26, 1791: சார்லஸ் பாபேஜ் பிறந்த நாள்கணினியின் தந்தை. நவீன கணினிகளின் முன்னோடியான எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தார். கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்து, 'பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை உருவாக்கினார். டிசம்பர் 26, 1893: மா சே துங் பிறந்த நாள்சீன வல்லரசின் சிற்பியாகப் போற்றப்படுகிறார். இவரது ஆட்சிக் காலத்தில், தொழில்மயமாக்கல், கல்வி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
வாழ்ந்த காலம்: 27.12.1571 - 15.11.1630பிறந்த ஊர்: வைல் டர் ஸ்டாட், ஜெர்மனிசாதனை: கோள்களின் சுற்று விதிகளைக் கணித்தது* கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கான கண்ணாடிகளைக் கண்டறிந்தார். * நட்சத்திரங்களின் தொலைவைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். * கிறிஸ்து பிறந்த ஆண்டை கணக்கிட்டுக் கூறினார்.கெப்ளர் சிறுவனாக இருந்தபோது, அவரது தந்தை ஹென்ரிச், வான்வெளியைப் பற்றியும், சந்திர கிரகணம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
தமிழகத்தின் தலைநகரம் சென்னை. பெரும்பாலும் தமிழர்கள் வாழ்கின்ற ஊர். ஆனால், இந்த ஊருக்கு ஒருகாலத்தில், ஆந்திரா உரிமை கோரியது . 'மதராஸ் மனதே' என்பதுதான் அந்தப் போராட்டத்தின் முழக்கம். தெலுங்கு மொழியில் இதன் பொருள், 'மதராஸ் (சென்னையின் அன்றைய பெயர்) எங்களுடையது.'இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது, ஆந்திரம் என்ற மாநிலமே இல்லை. 1952ம் ஆண்டுதான், தெலுங்கு பேசும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
வீட்டில் மின்சார அட்டையை எடுத்துப் பாருங்கள், அதில் 'மின் வாரியம்' என்று குறிப்பிட்டிருப்பார்கள்.'வாரியம்' என்றால், குழு அல்லது அமைப்பு என்று பொருள். மின்சாரம் தொடர்பான விஷயங்களைக் கவனித்துக் கொள்வதால், அது 'மின் வாரியம்', இதேபோல் குடிநீர் வாரியம், வீட்டுவசதி வாரியம் என்று பல குழுக்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும், அந்தந்தத் துறையைக் கவனித்துக் கொள்கின்றன.இது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
தஞ்சையை 15ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்களில் ஒருவர் ரகுநாத நாயக்கர். இசைத் துறையில் பல புதுமைகள் செய்தவர். 'சங்கீத சுதா' என்னும் இசை நூல், சரசுவதி மகால் நூலகத்திலுள்ளது. இதை இயற்றியவர் ரகுநாத நாயக்கர். இதில், இசை, இசைக்கருவிகள் பற்றிய நுட்பங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. 'ஜெயந்த சேனா' என்ற ராகத்தையும், 'ராமாநந்தா' என்னும் தாளத்தையும், ரகுநாத நாயக்கர் அறிமுகம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X