Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம் ஜன.,2: மேகதாது அணைக்கு எதிராக லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.பி.,க்கள் 24 பேர் ஐந்து நாள் சஸ்பெண்ட். ஜன.,7: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து. *1998ல் பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டு சிறை. பதவி பறிபோனது. ஜன.,9: தமிழக அரசின் ரூ. 1000 பொங்கல் பரிசுக்கு உயர்நீதிமன்றம் தடை.ஜன.,21: விராலிமலை ஜல்லிக்கட்டில் 9 மணி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம்பிப்.,8: கொடநாடு கொலை வழக்கில் சயான் மற்றும் மனோஜூக்கு ஜாமீனை நீலகிரி நீதிமன்றம் ரத்து செய்தது.பிப்.,10: திருச்சி விமானநிலைய ஒருங்கிணைந்த கட்டடம், சென்னை, திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை, சென்னை வண்ணாரபேட்டை - டி.எம்.எஸ்., மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கினார். பிப்.,13: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ. ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கும் சட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம்மார்ச் 1 : அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல். *கன்னியாகுமரி நிகழ்ச்சியில் மதுரை - ராமநாதபுரம், பனகுடி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலைகள், மதுரை - சென்னை 'தேஜஸ்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கினார். மஹா...யோகா - மார்ச் 3: கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம்எம்.ஜி.ஆர்., கவுரவம் - ஏப்., 6: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர். இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த ரயில் நிலையம் 1873ல் தொடங்கப்பட்டது. 1931ல் மின்மயமாக்கம் செய்யப்பட்டது. 17 பிளாட்பார்ம்கள் உள்ளன.ஏப்.,8: சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை. ஏப்.,16: வாக்காளர்களுக்கு பணம் புகாரில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம்மே 6: தினகரன் ஆதரவு மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை. மே 23: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 37, அ.தி.மு.க., ஒரு இடத்தில் வெற்றி. *சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க., 12, அ.தி.மு.க., 9 இடத்தில் வெற்றி. அ.தி.மு.க., 125 எம்.எல்.ஏ.,க்க ளுடன் ஆட்சியை தக்க வைத்தது. இந்தியாமே 1: மஹாராஷ்டிராவின் கட்சிரோலி யில் நக்சலைட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம்ஜூன் 1: திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை துவக்கம். ஜூன் 4: ஒரே நாளில் 1573 அங்கன் வாடி ஊழியர்கள் பணி நியமன ஆணை வழங்கிய மதுரை கலெக்டர் நாகராஜன் வேறு துறைக்கு மாற்றம். ஜூன் 18: ஆவடி நகராட்சி, மாநக ராட்சியாக தரம் உயர்வு. ஜூன் 21: ரூ. 211 கோடியில் புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி துவக்கினார். ஜூன் 25: ஜூன் - ஜூலை மாதங்களுக் கான 40 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு திறக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம்ஜூலை 4: தி.மு.க., இளைஞரணி செயலராக உதயநிதி நியமனம். ஜூலை 6: பாலியல் வழக்கில் கைதான முகிலன், திருச்சி சிறையில் அடைப்பு. ஜூலை 11: ராஜ்யசபா எம்.பி.,யாக தி.மு.க., வின் வில்சன், சண்முகம், ம.தி.மு.க.,வின் வைகோ, பா.ம.க., அன்புமணி, அ.தி.மு.க.,வின் முகமது ஜான், சந்திரசேகரன் தேர்வு. தடை சரி - ஜூலை 11: தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜன., 1ல் அரசு தடை விதித்தது. இதை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம்ஆக.,7: தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கம். ஆக.,8: வேலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி. ஆக.,11: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 'கவனித்தல், கற்றல், தலைமையேற்றல்' புத்தகம் சென்னையில் வெளியீடு. 'வீரத் தம்பதி' - ஆக., 15: நெல்லை அம்பாசமுத்திரம் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை, வயதான சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம்செப்.,6: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா. செப்.,10: நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு. 'பேனர்' கொடுமை - செப்., 12: சென்னை பள்ளிக் கரணையில் டூவீலரில் சென்ற 'சாப்ட்வேர் இன்ஜினியர்' சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து, லாரி ஏறி மரணம். அனுமதியின்றி 'பேனர்' வைத்த அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது.செப்.,13: ஐந்து, எட்டாம் வகுப்புக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம்அக்.,2: திருச்சி லலிதா ஜூவல்லரி யில் ரூ. 13 கோடி நகை கொள்ளை அடித்தவர்கள் கைது. 24 கிலோ நகை மீட்பு. அக்.,3: ஊரகப்பகுதிகளில் சுகாதார தரம், உட்கட்டமைப்பில் சிறந்து விளங்குவதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது. அக்.,4: ராதாபுரம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., இன்பதுரை வெற்றியை எதிர்த்த தி.மு.க.,வின் அப்பாவு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறுவாக்கு எண்ணிக்கை. முடிவை வெளியிட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம்நவ.,1: 'தமிழ்நாடு' மாநிலம் உருவான தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டது. நவ.,5: 'அம்மா ஆம்புலன்ஸ்' சேவையை முதல்வர் பழனிசாமி துவக்கம். நவ.,7: கோவையில் 2010ல் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளி மனோகரின் துாக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நவ.,8: துணை முதல்வர் பன்னீர் செல்வம், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். *மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகம்டிச.,1: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக அன்பு நியமனம். பொன் மாணிக்கவேல் ஓய்வு. உயிரை பறித்த 'சுவர்' - டிச., 2: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கனமழையால், சுப்ரமணியன் வீட்டின் பெரிய சுற்றுச்சுவர் இடிந்து, அருகிலுள்ள நான்கு வீடுகளின் மேல் விழுந்தது. துாங்கிக் கொண்டிருந்த நான்கு சிறுவர் உட்பட 17 பேர் பலி. டிச.,3: மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக கடனுதவி வழங்கியதற்காக, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
தமிழகத்தில் முதலீடுஜன., 23: தமிழக அரசு சார்பில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ரூ. 3 லட்சத்து, 431 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டதாக முதல்வர் பழனிசாமி தகவல். பட்ஜெட்டில் சலுகை பிப்., 11: இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் பியூஷ் கோயல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு அளித்த முக்கிய தீர்ப்புகள்.கட்டலாம் ராமர் கோயில்நவ., 9: 'அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்' என்ற மேல்முறையீட்டு வழக்கில், 'நிலத்தின் உரிமை மத்திய அரசிடம் இருக்க வேண்டும். அதில் ராமர் கோயில் கட்ட மூன்று மாதங்களில் அறக்கட்டளை அமைத்து, அதனிடம் இடத்தை வழங்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
கருந்துளை அதிசயம்ஏப்., 10: ஒவ்வொரு சூரிய குடும்பத்தின் நடுவிலும் ஒரு கருந்துளை (பிளாக்ேஹால்) இருக்கிறது. இதன் புவி ஈர்ப்பு விசை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு சக்தி வாய்ந்தது. இந்நிலையில் நாசாவுடன் இணைந்து ஹாரிசன் தொலைநோக்கி திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி உலகில் எட்டு இடங்களில் தொலைநோக்கிகளை நிறுவி, கருந்துளையை முதன்முதலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
'குளோபல் கோல்கீப்பர்' மோடிசெப்., 24: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் 'குளோபல் கோல்கீப்பர்' விருது இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.பாரத ரத்னாஆக., 8: நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 'பாரதிய ஜனசங்' தலைவர் மறைந்த நானாஜி தேஷ்முக், மறைந்த பாடகர் பூபென் ஹசரிகா ஆகியோருக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
ஓயாத ஹாங்காங் போராட்டம்சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிரதேசம் ஹாங்காங். இங்கு கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை, சீனாவுக்கு நாடு கடத்தி வழக்கு விசாரணையை நடத்தும் வகையிலான மசோதா கொண்டு வருவதற்க்கு எதிராக மார்ச் 15ல் முதன்முதலாக போராட்டம் நடத்தப்பட்டது. பின் ஏப்., 28ல் இரண்டாவது முறை போராட்டம் நடந்தது. ஹாங்காங் பார்லி மென்டில் ஜூன் 9ல் இந்த மசோதா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
'பாடும்' கண்ணாடிநவீன காலத்தில், வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள, நாகரிகத்திற்காக கண்ணாடி அணிகின்றனர். இதன் அடுத்த தொழில்நுட்பம் வெளிவந்துவிட்டது. 'போஸ் பிரேம்ஸ்' என்ற கண்ணாடி அணிந்தால் பாடல் கேட்க 'ஹெட்போன்' தேவையில்லை. இதில் உள்ள 'புளூடூத்' வசதி வழியே, உங்களின் அலைபேசியை தொடர்பு கொள்ளலாம். கண்ணாடியின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள 'ஸ்பீக்கர்' வழியாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
அமர்க்கள ஆரம்பம்ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஒரே நாளில் வெளியானது. இதில் உலகளவில் பேட்ட படமும், தமிழக அளவில் விஸ்வாசம் படத்திற்கும் மவுசு அதிகம் இருந்தது. காமெடி 'கிங்'யோகம் நிறைந்த ஆண்டாக யோகிபாபுவுக்கு இருந்தது. இவர் 31 படங்களில் நடித்துள்ளார். இதில் தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார்.வசூலில் 'டாப்'வசூலில் விஜய் நடித்த பிகில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2020 IST
ஜனவரிஜன.,5: புரோ கபடி, குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு சாம்பியன். அதிக கோல் - ஜன. 6 ஆசிய கால்பந்து தொடரில் இந்தியா (4-1) தாய்லாந்தை வென்றது. இந்தியாவின் சுனில் செத்ரி 2 கோல் அடித்தார். 115 போட்டியில் 72 கோல் அடித்த இவர், தற்போது அதிக கோல் அடித்த வீரர்களில் 2வது இடம் பிடித்தார். ரொனால்டோ (போர்ச்சுக்கல், 164ல் 99) முதலிடத்தில் உள்ளார்.ஜன.,10: உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீராங்கனை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X