தமிழகம்ஜன.5: தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை. * புதிய பார்லிமென்ட் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி.ஜன.13: தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லுார் உட்பட 7 இடங்களில் அகழாய்வை தொடர மத்திய அரசு ஒப்புதல்.ஜன. 14: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காங்., எம்.பி., ராகுல் நேரில் பார்த்தார்.ஜன. 16: மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கினர். ஜன. 16: ..
தமிழகம்பிப். 1: மதுரை கீழவெளி பகுதியில் பழமை யான கட்டட சுவர் இடிந்து மூவர் பலி. பிப். 4: ராஜிவ் கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கே அதி காரம் என தமிழக கவர்னர் உச்சநீதிமன்றத்தில் மனு.பிப். 5: கூட்டுறவு வங்கிகள் வழங்கிய ரூ. 12,110 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளு படி.பிப். 6: ஸ்ரீவில்லிபுத்துார்- மேகமலையை இணைத்து புலிகள் சரணாலயமாக்கி மத்திய அரசு அறிவிப்பு.பிப். 8: ..
தமிழகம்மார்ச் 11: புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை 'ஆல் பாஸ்'.மீனாட்சி தரிசனம்: ஏப். 1: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம். கோயிலின் முக்கியத்துவத்தை வருகை பதிவேட்டில் குறிப்பிட்டார். ஏப். 27: மதுரை கள்ளிக் குடியில் ஆம்னி வேன்--கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.ஏப். 27: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனாவுக்காக ..
தமிழகம்மே 2: கன்னியாகுமரி லோக்சபா தேர்தலில் விஜய் வசந்த் வெற்றி.நனவான கனவு: மே 7: பத்தாண்டுக்கு பின் தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்தது. தமிழகத்தின் 13வது முதல்வராக ஸ்டாலின் 68, பதவியேற்பு. மே 9: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் நியமனம். மே 10: தமிழகத்தில் முழு ஊரடங்கு (மே 10 - 24) அமல். மே 10: எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி (அ.தி.மு.க.,) தேர்வு. மே 12: தமிழக சட்டசபை ..
தமிழகம்ஜூன் 4: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு சிங்கம் பலி. ஜூன் 5: கொரோனா அச்சுறுத்தலால் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து.ஜூன் 7: சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்பு நிலம் மீட்பு. ஜூன் 9: இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நில உரிமை ஆவணம் இணையதளத்தில் வெளியீடு.ஜூன் 14: எதிர்க்கட்சி துணைத்தலைவராக அ.தி.மு.க.,வின் ..
தமிழகம்ஜூலை 2: சட்டசபை தேர்தலுக்கு ரூ. 666.43 கோடி செலவு என தமிழக தேர்தல் ஆணையம் தகவல்.ஜூலை 7: தமிழகத்தின் எல்.முருகன் மத்திய மீன் வள இணையமைச்சராக பதவியேற்பு.புதிய தலைவர்: ஜூலை 8: தமிழக பா.ஜ., தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை நியமனம்.ஜூலை 12: அரசியலுக்கான மக்கள் மன்றத்தை கலைத்தார் நடிகர் ரஜினி. ஜூலை 28: 'தகைசால் தமிழர்' விருது தொகை ரூ. 10 லட்சத்தை கொரோனா நிதிக்கு ..
தமிழகம்ஆக. 2: தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு. ஆக. 9: தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5.70 லட்சம் கோடி என நிதியமைச்சர் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியீடு. ஆக. 13: தமிழகத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல். ஆக. 14: தமிழகத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல். புதிய கவர்னர்: செப். 18: தமிழக கவர்னராக பீஹாரை சேர்ந்த ஆர்.என்.ரவி பதவியேற்பு. மத்திய உளவுத்துறை ..
தமிழகம்அக். 5: வள்ளலார் பிறந்த அக். 5, 'தனிப்பெருங்கருணை' நாளாக கடைபிடிக்கப்படும் என அரசு அறிவிப்பு. அக். 9: கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. அக். 11: கொலை வழக்கில் கடலுார் தி.மு.க., எம்.பி., ரமேஷ் சிறையில் அடைப்பு. அக். 22: நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல. உயர் ரத்த அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என மத்திய நோய் தடுப்பு ..
தமிழகம்நவ. 1: 1 - 8ம் வகுப்பு மாணவருக்கு 20 மாதத்துக்கு பின் ஷிப்ட் முறையில் பள்ளி திறப்பு. * வன்னியருக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. * கூட்டுறவு வங்கியில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி.நவ. 2: சென்னை கொளத்துாரில் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லுாரி துவக்கம். நவ. 3: போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு ..
தமிழகம்டிச. 3: அரசு பணிக்கான போட்டி தேர்வில் தமிழ் தகுதித் தாளில் தேர்ச்சி கட்டாயம் என அரசாணை வெளியீடு.இரட்டை தலைமை: டிச. 6: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி மீண்டும் தேர்வு. டிச. 10: சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்ல சாவி, அவரது வாரிசுகளான தீபா, தீபக்கிடம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்படைப்பு. டிச. 14: ..
ஜன. 1: மிஸ்டுகால் (84549 55555) தருவதன் மூலம் இன்டேன் காஸ் சிலிண்டர் புக்கிங் செய்யலாம். ஜன. 12: பயனாளிகளின் தனிப்பட்ட தகவலை பகிர மாட்டோம் என வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவிப்பு. ஜன. 29: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (2021-22) 11 சதவீதமாக இருக்கும் என தகவல். பிப். 1: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் (2021-2022) தாக்கல் செய்தார். ஏப். 2: 2021- 2022 நிதியாண்டில் அதிகபட்சமாக ஏப்ரலில் ரூ. 1.39 லட்சம் ..
மீண்டதுகொரோனா பிடியில் இருந்து தமிழ் சினிமா மீண்டது. படப்பிடிப்பு துவங்கியது. தீபாவளிக்கு 50 சதவீத இருக்கையுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆண்டு இறுதியில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.வசூலில் 'டாப்'விஜய்யின் 'மாஸ்டர்' ரூ. 300 கோடி, ரஜினியின் 'அண்ணாத்த' ரூ.220 கோடி,சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', சிம்புவின் மாநாடு ரூ. 100 கோடி, கர்ணன், அரண்மனை 3, ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.