Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
பரபரப்பான வாழ்வில், உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாகும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் சாப்பிடும் போது, உடல் ஆரோக்கியம் நிலையாக இருக்கும். இதில், பாகற்காய், உடலுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சிலர் இதனை கசப்பு காய் என்று ஒதுக்கி வைப்பது வழக்கம். குழந்தைகளும் தயக்கம் இல்லாமல் பாகற்காயை சாப்பிட வேண்டும். கசப்பு சுவை மிகுந்த இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
அசைவ உணவுகளில் மீன் குழம்புக்கு தனி இடம் உண்டு. மீன் உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. தேவையான பொருள்கள்:குழம்பு மீன் - அரைகிலோதேங்காய் - 1 மூடிசின்ன வெங்காயம் - 50 கிராம்தக்காளி - 1மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லி துாள் - 2 ஸ்பூன்மஞ்சள் துாள் - அரை ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவுபுளி - சிறிதளவுமிளகு, சீரகம் மீன் குழம்பு மசாலா - 1 ஸ்பூன்செய்முறை * வெங்காயம், தக்காளி நறுக்கி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சி தரக்கூடியவை. செலவும் குறைவு தான். தயிரோடு சேர்க்கப்பட்ட வெள்ளரிக்காய் கிச்சடி செய்வது மிக எளிது. தேவையானவை: வெள்ளரிக்காய் (சிறிதாக நறுக்கியது) - 2 கப். தயிர் - 1 கப்துருவிய தேங்காய் - அரை கப், பச்சை மிளகாய் (சிறிதாக நறுக்கியது) - 3, சிறிய வெங்காயம் - 2சீரகம் - அரை தேக்கரண்டிகடுகு - அரை தேக்கரண்டிகறிவேப்பிலை, உப்பு - தேவையான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
அரிசி, கோதுமையை விட ராகி சத்து மிகுதியானதாகும். ராகியால் ரத்தம் சுத்தியாகி, எலும்பு உறுதிப்பட்டு சதை வலுவாகும். மலச்சிக்கல் நீங்கி, பசி தாங்கும். "ராகி' சத்து மிகுந்தது என்பதற்காக, அதனை அடிக்கடியும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் மாதம் இரு முறை எனவும், பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் களி ஒன்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
முக்கனிகளில் (மா, பலா, வாழை) ஒன்று பலா பழம். இது மிகுந்த இனிப்புச் சுவை கொண்டது. பழ வகைகளில் மிகவும் பெரிய பழம் இதுவே. இப்பழம் பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. பலா மரத்தின் இலை, காய், கனி, வேர் என அனைத்து பகுதிகளும் மருத்துவ பொருட்களாக பயன்படுகின்றன. பலா இலை மேற்பூச்சு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.இது தோல் நோய்களை கட்டுப்படுத்துகிறது. அதே போல் பால இலையை காய வைத்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
உயிரி எரிபொருளினால், உலகிலேயே அதிகம் விளைவிக்கப்படும் தானியமாக மக்காச்சோளமே உள்ளது. கோதுமை தான் முதலிடத்தில் இருந்தது. அந்த இடத்தை மக்காச்சோளம் பிடித்துள்ளது. இந்தியாவில் மக்காச்சோளத்தின் இலைகள் தான், பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டது. உலகின் மக்காச்சோள உற்பத்தியில் பெரும் பங்கு கால்நடைகளுக்கு உணவாகிறது. மீதி உயிரி எரிபொருளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 'மக்காச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
அன்றாட உணவில், கீரை இடம் பெற வேண்டும். தமிழகத்தில் கீரை வகைகளில் குறைவாக, அரிதாக சோர்க்கப்படும் கீரையாக, பசலைக் கீரை உள்ளது. பசலைக் கீரையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உணவு மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது. பசலைக் கீரையில் பிளேவோனாய்டு என்னும் முக்கிய பைட்டோ நியூட்ரியன்ட்கள் உள்ளன. புற்றுநோயை, குறிப்பாக விரைப்பை புற்று நோயை எதிர்க்கும் தன்மை பசலைக்கீரைக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
'கிரீன் டீ' பிரபலமான அளவுக்கு, 'கிரீன் காபி' பிரபலம் அடையவில்லை. காப்பி கொட்டையை வறுக்க வறுக்கத் தான் மணம். இந்த மணத்திற்காக தான் பலர் காபிக்கு அடிமை. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க 'கிரீன் காபி' உதவுகிறது. வறுக்காத காபி கொட்டையில் உள்ள குளோரோஜினிக் அமிலம், ரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
ஓட்ஸ்: உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் ஓட்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் ரத்தநாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.பாதாம் பருப்பு: பாதாம் பருப்பை "இருதயத்தின் நண்பன்' என்று அழைக்கின்றனர். அந்தளவுக்கு, இதில் ஒமேகா 3:6 எனப்படும் நல்ல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
ஒரு முறை சமைத்த உணவை, மீண்டும் ஒரு முறை சூடாக்குவதால் உடலுக்கு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மீண்டும் சூடு செய்யக்கூடாத உணவுப் பொருட்களும் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொண்டால், பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம்.சிக்கன்: கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
காய்கறிகள்: டயட்டில் சரியான அளவு காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். இவை தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமாளிக்க உதவும். அதிகளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை சாப்பிடுவது நல்லது.தானியங்கள்: சிறு தானியங்களை சேர்த்து சப்பாத்தி செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது நல்லது.வேர்க்கடலை: பிராண வாயுவிற்கு வேர்க்கடலை சிறிதளவு உணவில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
இஞ்சி - பூண்டு - மிளகு ரசம் செய்து சாப்பிடுவது குளிர்காலத்துக்கு ஏற்றதாக இருக்கும். தேவையானவை: துவரம்பருப்பு வேகவைத்தது, தண்ணீர் - ஒன்றரை கப், பூண்டு - 6 பல், மிளகு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க, இஞ்சி - 2 அங்குலத் துண்டு, மஞ்சள் துாள் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்துாள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.தாளிக்க: ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியவை கீரைகள். குறிப்பாக, கரிசலாங்கண்ணி, கீரைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஓர் அரிய வகையான கீரை. இயற்கை வைத்திய முறைகளில், இதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. கரிசலாங்கண்ணி, மருந்துக்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தை சுத்தம் செய்கிறது. கண் பார்வையைத் தெளிவுபடுத்துகிறது. தசையை விரைக்க செய்யும் உபாதையை போக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து, ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருந்து. இதில் இருக்கும் நார்ச்சத்து, பசியை அடக்கி வைப்பதால், உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. கத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வை போக்கிப் புத்துணர்வைத் தரக்கூடியது, அது மட்டுமின்றி ஆன்தோ சயனின், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
இரண்டு, மூன்று மாங்காய்களை தோல் சீவி, துருவி, அதில் மஞ்சள் துாள், உப்பு, சேர்த்து வெயிலில் நன்றாக காய வைத்து, ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது, இதிலிருந்து சிறிது எடுத்து, வெந்நீரில் ஊற வைத்து, வழக்கம் போல நல்லெண்ணெய் தாளித்து, மாங்காய் தொக்கு செய்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
மசாலா தோசை, பொடி தோசை, ரவா தோசை என பலவிதமான தோசைகள் உள்ளன. இதில் அதிக சுவையுடன், சத்துக்கள் கொண்ட குதிரைவாலியில், தக்காளி தோசை செய்து சுவைத்துப் பாருங்கள். குதிரைவாலி தக்காளி தோசைக்கான ரெசிப்பி இதோ:தேவையான பொருள்குதிரைவாலி அரிசி - 4 கப், உளுந்து - 1 கப், தக்காளி - 2, இஞ்சி, சிறிய துண்டு வெங்காயம் - 1, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
யுனானி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகியவற்றில், பேரீச்சம்பழம், முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில், இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் என, ஏராளமான சத்துகள் நிரம்பியுள்ளன. பார்வை குறைபாட்டை குணப்படுத்த சிறந்த மருந்தாக உள்ளது. வைட்டமின் "ஏ' அதிகமாக உள்ளதால், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தேனில், பேரீச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிட்டு வர, உடலுக்கு தேவையான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் பிஸ்தா பருப்பு சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இதன் மூலம், பல நோய் பிரச்னைகள் தீரும். பிஸ்தாவில், 30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 உள்ளதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கும். மேலும், உடல் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவும் செய்யும். வைட்டமின் பி6, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
உயிர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் மாம்பழம் முக்கியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் மாம்பழத்தில் வைட்டமின் “ஏ'வும், வைட்டமின் “சி'யும் அதிகம் உள்ளன. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலுக்கு கிடைத்து விடும். பலர், மாம்பழத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
ஆரோக்கியம் காக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது முக்கியம். உணவில் மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாமே இருக்க வேண்டிய விகிதங்களில் இருந்தால்தான் ஆரோக்கியம் வலுப்படும். ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு விதமான உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு பலனளிக்கும். ஒரு நாளில் ஒரு வேளை அரிசி சாதம் சாப்பிட்டால், இன்னொரு வேளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
மழை, குளிர்காலத்தில் ஏற்படும் நெஞ்சுசளியை குணப்படுத்தும் வல்லமை தினைக்கு உண்டு. மேலும், குளிர்ந்திருக்கும் உடலுக்கு தினை உஷ்ணத்தை தரும். ஆனால், 'அதிக அளவு உஷ்ணம் உடலுக்கு நல்லதல்ல' என்பதால், பால், நெய்யுடன் சேர்த்து தினையை சாப்பிடுவது நல்லது.தேவையானவை : தினை 1 கப், பாசிப்பயிறு - 1 கப், வெல்லம் - 2 கப், நெய் - 50 கிராம், முந்திரி - நான்கு, ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு.செய்முறை: தினை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
மூளை சீராக இயங்க அதிக ஆக்ஸிஜனும், சீரான ரத்த ஓட்டமும் அவசியம். எல்லா சத்துகளும் கொண்ட சமச்சீரான உணவு மட்டுமே மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். மூன்று வேளை சாப்பிட வேண்டும். என்ன காரணமாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலை உணவு தான் உடலுக்கு அதிக சக்தியைத் தருகிறது. காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். எளிதில் செரிக்கின்ற இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவை காலை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
மாலை நேரத்தில் சுண்டல், வேகவைத்த வேர்க்கடலை, பாதாம்பருப்பு, தேனில் ஊறவைத்த பேரீட்சை, அத்திப்பழம், முளைகட்டிய பயறுகள், காய்கறிசாலட், பழ சாலட் போன்றவற்றை சாப்பிடலாம். பாதாம் பருப்பில் உள்ள "செலினியம்" நினைவாற்றலுக்கு மிக நல்லது. ஊறவைத்த பாதாமை அரைத்து சூடான பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை குடிக்கலாம். பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
தேவையானவை: அரிசி - 2 கப், எள் - 2 தேக்கரண்டி, சுக்கு - ஒரு சிறிய துண்டு.தாளிக்க: கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்துாள், நல்லெண்ணெய் - ஒரு மேஜைக் கரண்டி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை, உதிரியாக சாதமாக வடித்து கொள்ளவும். எள்ளை, கடாயில் வறுத்து, தனியாக வைக்கவும். சுக்கை தட்டி, பொடி செய்யவும். கடாயில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
பாகற்காய் சாப்பிட்டால் வாய் கசக்கும்; ஆனால் வாழ்க்கை இனிக்கும் என்பதை அனுபவித்தவர்கள் அறிவார்கள். அதிகாலையில் வெறும் வயிற்றில், 3 முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால், குடல் நோய் பிரச்னைகள் உடனே தீரும். இதன் விதைகளை பொடி செய்து, சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். அறுசுவையில் ஒரு சுவை கசப்புதான் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. பாகற்காயை வாரத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
வாழைப்பழத்தை, ஏழைகளின் கனி என்று அழைக்கின்றனர், எல்லோருக்கும் எளிதாக, மலிவாக கிடைக்கும் பழம் வாழைப்பழம். அது மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம். நீரிழிவு நோயாளிகள் மட்டுமே வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. அவர்களும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்து, மிகவும் கனியாத பழத்தை கால் பங்கு சாப்பிடலாம் என்கின்றனர்.வாழை மரம், வாழைப்பழம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
ஆவியில் வேகவைக்கும் உணவுகள் பாதுகாப்பானவை. இவை ஜீரணத்தை எளிதாக்குவதுடன், கொழுப்பையும் கரைக்கும். அதிலும் கால்சியம் சத்தும், நோய் எதிர்ப்பு தன்மையும் நிறைந்த கேழ்வரகில், இட்லி செய்தால், சுவையும் நன்மையும் இரட்டிப்பாகும். குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உகந்தது, கேழ்வரகு இட்லி. தேவையான பொருட்கள்: கேழ்வரகு - 200 கிராம், அரிசி - 200 கிராம், உளுந்து - 400 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
உடலுக்கு வலுசேர்க்கும் உணவு அத்திக்காய் வடை. பொதுவாகவே, காய்கள் துவர்ப்பு தன்மையுடன் இருக்கும். அத்திக்காயில் துவர்ப்பு தன்மை சற்று அதிகம். இதை, பழமாக சாப்பிடுவதை விட, காயாக சாப்பிடுவது நல்லது. அத்திக்காய் வடை, ஜீரண உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். சிறுநீரகக்கற்கள் வராமல் தடுக்கும். மலச்சிக்கலையும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
மணத்தக்காளி கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த மருத்துவ குணம் உள்ள சத்துணவு. இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது மணத்தக்காளி. இக்கீரை உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது. மனசு காரணம் இன்றி சில நேரங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
செட்டிநாடு அசைவ உணவுகளுக்கு தனி சுவை உள்ளது. அசைவ உணவு பிரியர்களுக்கு செட்டிநாடு சிக்கன் கிரேவி மிகவும் பிடித்த உணவு. தேவையான பொருள்கள்சிக்கன்- அரைகிலோ, சின்ன வெங்காயம்-கால் கிலோ, இஞ்சி, பூண்டு விழுது- 3 ஸ்பூன், மஞ்சள் துாள்- 1 ஸ்பூன், மிளகாய் துாள் - 2 ஸ்பூன், மல்லித்துாள் - 2 ஸ்பூன், தேங்காய் பால் - 1 கப், உப்பு -- தேவையான அளவு, எண்ணெய்- - தேவையான அளவுசெய்முறை : குக்கரில் எண்ணெய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
கோவைக்காய் பச்சடி, சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து, தேவையான அளவு உப்பு கலந்து விட்டால், கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள், பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாக கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே, வாய்ப்புண் ஆறி விடும். வயிற்றுப்புண் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
தேவையானவை :உதிர் உதிரான சாதம் - ஒரு கப்மாதுளை முத்துக்கள் - 1/4 கப்நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்கடுகு - ஒரு டீஸ்பூன்வறுத்துப் பொடித்த மிளகுத்துாள், கொத்துமல்லித்தழை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவு. செய்முறை : பாத்திரத்தில் நெய்விட்டுக் காய்ந்ததும், கடுகைப் போட்டு தாளிக்கவும். வாயகன்ற பாத்திரம் ஒன்றில் சாதத்தை போட்டு அதனுடன் மிளகுத்துாள், உப்பு, தாளித்த கடுகு, மாதுளை முத்துகள், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
ஒரு கட்டு கொத்தமல்லியை நன்றாகக் கழுவி, தண்டுடன் பொடியாக நறுக்கி நீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இதனுடன் பீன்ஸ், முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், புதினா, பூண்டு, இஞ்சி, மிளகுத்தள், சீரகத்தூள் முளை தானியப்பால் சேர்த்து அருந்துங்கள். மருத்துவப் பலன்கள்: வாயுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், அஜீரணம், பித்தம் இவற்றைச் சரிசெய்யும். சளி, இருமல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
எப்போதும் இளமையாக இருக்க உணவில் சேர்க்க வேண்டியவை : * தினசரி பாதாம் பருப்பு, வேர்க்கடலை சேர்க்கவும். இதனால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையும்.* உணவில் வாரத்தில் இரண்டு முறை மீன் சேர்த்துக்கொள்ள வேண்டும். * மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.* தினந்தோறும் 5 வகை பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடும். காய்கறிகள் அதிகமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
பெரும்பாலானோர் சாப்பிட தொடங்கியவுடன், கறிவேப்பிலையைத் தான் எடுத்து வெளியே வைக்கின்றனர். ஆனால் கறிவேப்பிலை நமக்கு பல வழிகளில் நன்மை தருகிறது. இதில் தட்டை செய்தும் சாப்பிடலாம். இதற்கு தேவையானவை: * பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப்* எள், பொட்டுக்கடலை,* வறுத்த வேர்க்கடலை, * மிளகாய்த்துாள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் * கறிவேப்பிலை - கால் கப்* எண்ணெய் - பொரிப்பதற்கு * உப்பு - ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தொண்டைவலி வரும். சளி பிடிக்கும் என்பது முழுமையான உண்மையல்ல. ஐஸ்கிரீம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரமும், பாதுகாக்கப்படும் சூழலும் நன்றாக இருந்தால் ஐஸ்கிரீம் எந்த பிரச்னையையும் ஏற்படுத்துவதில்லை. எனவே தரமான ஐஸ்கிரீம்களையே தேர்ந்தெடுத்து பிரச்னைகளை தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீமில் வைட்டமின் பி12, வைட்டமின் கே ஆகியன உள்ளன. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
பனைநீரில் இருந்து பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது.பனங்கற்கண்டு வாத பித்தம் நீக்கும். பசியை துாண்டும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
'மொமார்டிகா டியுபரோசா' என்பது அதலைக்காயின் தாவரவியல் பெயர். அதலைக்காய், பாகற்காயுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட ஒரு தாவரம். அதலைக்காயில் கசப்பான கிளைக்கோசைடுகள், மொமார்டிக்கோசைடுகள், இன்சுலினுக்கு இணையான பண்புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன. அதலைக்காய், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும், சில ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
பாரம்பரியமாக பயன்படுத்திவரும் தானியங்களில் முக்கியமானது சோளம். இதில் அரிசி, கோதுமையை விட அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. சோளத்தில் சமைக்கப்படும் உணவுகள் ஜீரணத்தை எளிதாக்குகிறது. அனைத்து வயதினருக்கும் ஏற்றவை. நாட்டுச்சோளத்தில் சுவையான குழிப்பணியாரம் செய்யலாம். தேவையான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
வெயில் காலத்தில் முள்ளங்கி, கேரட், புதினா, முட்டைக்கோஸ், தக்காளி, வெள்ளரி போன்றவற்றைப் பயன் படுத்தி செய்யப்படும் சாலட்டுகள் சாப்பிடுவது, உடலுக்கு குளிர்ச்சி தரும். தற்போதுள்ள வேதியியல் மயமான வேளாண்மை விளை பொருட்களை, பச்சையாக உண்பதை தவிர்த்து விட வேண்டும்.ஏனெனில் எண்டோ சல்பான், கார்பமைட்ஸ், காரியம், ஆர்சானிக் போன்ற பூச்சிக் கொல்லிகள் சாலட்டிற்கு பயன்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
உடலுக்கு தேவையான நல்ல சத்துக்கள், காய்கறிகள், பழங்களில் மட்டும் அல்ல... நட்ஸ் வகைகளிலும் ஏராளமாக உள்ளன. பாதாம், முந்திரி, வால்நட், வேர்க்கடலை ஆகியவற்றில், அற்புத சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, வால்நட், உடலுக்கு நன்மை தரும் அரிய சத்துக்கள் உள்ளன.சிக்கிம், நேபாளம், இமாலயப்பகுதிகளில் வளரும் அக்ரூட் வகை மரங்களில் இருந்து கிடைக்கும் கொட்டைகளே வால்நட் எனப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
* தினசரி ஒரு கைப் பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதய நோய் அபாயம் வெகுவாக குறையும்.* உங்கள் உணவில் வாரத்தில் ஒரு முறை மீன் சேர்க்கவும். * ஒவ்வொரு வேளை உணவுக்கு இடையே 3 மணிநேர இடைவெளி அவசியம். * காலை உணவை முழு மையாக சாப்பிடுங்கள்.* தினந்தோறும் ஐந்து வகை பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடும். * தினசரி 18 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
கோடை வெயில் தற்போதே தொடங்கி விட்டது. இந்த வெயில் காலத்தில் உடலுக்கு 'வைட்டமின் சி' மிகவும் தேவை. நோய் எதிர்ப்புசக்தியை வலுவாக்குகிறது. நுண்ணுயிர்த் தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராட, உடலுக்கு சக்தியை வழங்குகிறது. பழங்களில் இந்தச் சத்து கிடைக்கிறது.காலை உணவில் சரிபாதி, பழங்களாக எடுத்துக்கொள்வது நல்லது. நீர்ச்சத்து நிரம்பியுள்ள தர்பூசணி, திராட்சை, வெள்ளரி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2018 IST
வெயில்காலத்தில் எலுமிச்சம்பழத்தின் தேவை அதிகமாக உள்ளதால், விலையும் அதிகமாக இருக்கும். எலுமிச்சம்பழத்துக்கு மாற்றாக சிட்ரிக் அமிலத்தை பயன்படுத்துகின்றனர். செயற்கை குளிர்பானங்களில் புளிப்புச் சுவைக்காகவும், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளில் பதப்படுத்தும் பொருளாகவும் சிட்ரிக் அமிலமே சேர்க்கப்படுகிறது. வெண்ணிற படிகவடிவமுடைய இந்த சிட்ரிக் அமிலத்தின் அளவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
மாலை நேரத்தில் தேநீரோடு ஒரே விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடித்து விட்டதா? சுவையும் மொறுமொறுப்பும் கலந்த வெஜிடபிள் நக்கட்ஸ் செய்முறையை அளிக்கிறார், செப் கோபிநாத். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு: 3கேரட் : ½ கப் பட்டாணி: ½ கப் பச்சை மிளகாய் : 2மிளகாய் தூள் : 1 டீஸ்பூன்மிளகு தூள் : ¼ டீஸ்பூன்கரம் மசாலா : ¼ டீஸ்பூன்எண்ணெய் : 3 டீஸ்பூன்உப்பு : தேவைக்கேற்ப மைதா மாவு : 1 கப் முட்டை : ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
உணவில்லையேல் உயிர் இல்லை. இந்த உணவின் ஆதாரமாக இருக்கும் விவசாயத்தையும், விவசாகளையும் பற்றி, பொதுவாக நாம் அதிகமாக சிந்திப்பதில்லை. நம்முடைய ஒருவேளை உணவென்பது, அவர்களின் பல மாத உழைப்பு. ஆக, உணவு தரும் விவசாயியை, உணவுண்ணும் நேரத்தில் மனதில் நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வடபழனி, துரைசாமி சாலையில் இயங்கிவரும் உணவகம், 'ஹோட்டல் விவசாயி!''சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
வேப்பங்கொழுந்தை சாப்பிடுவதற்குள் வீட்டை இரண்டாக்கி விடுவார்கள் குழந்தைகள். ஆனால், வேப்பங்கொழுந்துடன் கருப்பட்டி சேர்த்து இனிப்பாக கொடுத்தால், நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறையேனும், ஐந்து உருண்டைகள் சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் தொல்லை நீங்கும்; நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கொழுந்து உருண்டை செய்முறையை வழங்குகிறார், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
கீரையில் பொதுவாக சத்துக்கள் அதிகம். குறிப்பாக முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. முருங்கை மரம் முழுவதும், மனிதனுக்கு பயனளிக்கும் மரமாகும். முருங்கை கீரையை வேக வைத்து, அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை, முருங்கைக் கீரை நீக்கும். அதனால், முருங்கையை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
அரிசி, கோதுமையை விட ராகி சத்து மிகுதியானது. ராகியால் ரத்தம் சுத்தியாகி, எலும்பு உறுதிப்பட்டு சதை வலுவாகும். மலச்சிக்கல் நீங்கி, பசி தாங்கும். "ராகி' சத்து மிகுந்தது என்பதற்காக, அதனை அடிக்கடியும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் மாதம் இரு முறை எனவும், பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் களி ஒன்று தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
குளிர் காலத்தில் பழங்கள் அதிகமாக விளையும். வெயில் காலத்தில் அதிகமாக வரும் பழவகை கொடுக்காய்புளி மெக்சிகோவை தாயகமாக கொண்ட இது தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் முக்கிய பணப்பயிர். அக்காலத்தில் இதற்கு உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அதிகமாக பயன்படுத்தப்படாததாலோ என்னவோ இது இயற்கை மருத்துவத்தில் நேர்மறை உணவுகளின் பட்டியலில் வருகிறது. அதனால் தான் பங்குனிப் பொங்கல் விரதம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X