Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
திருமணத்தில் தாலி கட்டும்போது, மாப்பிள்ளை முதல் முடிச்சு போட, மணமகனின் சகோதரி - பெண்ணின் நாத்தனார், அடுத்த இரண்டு முடிச்சுகளை போடும் வழக்கம், தென் மாவட்டங்களில் உண்டு.ஆனால், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், பாபநாசநாதர் கோவில் உலகம்மன் சன்னிதி முன் நடக்கும் திருமணங்களில், நாத்தனார் தான் முடிச்சு போட வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனெனில், அம்பாளே பெண்ணுக்கு நாத்தனாராக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
மாமியார் - மருமகள் பிரச்னை தீர...கடந்த ஆண்டு திருமணமான உறவினரின் பெண்ணுக்கு, புகுந்த வீட்டில், ஏற்பட்ட அனுபவத்தை கூறினார். அதாவது, மருமகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணி, ஆரம்பத்திலிருந்தே கெடுபிடியாக இருந்துள்ளார், அவளது மாமியார். மருமகளும், சுபாவத்திலேயே அமைதியான பெண்ணாக இருந்ததால், மாமியாரின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்து, அனுசரணையாகவே இருந்துள்ளார்.ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
சாவித்திரியின் காலகட்டத்தில், கதைக்கு இருந்த முக்கியத்துவம், தன் காலத்தில், சதைக்கு மாறியதை புரிந்துகொள்ளவில்லை, சிலுக்கு. பணம், மிகவும் தேவையாக இருந்த நேரத்திலும் கீழே இறங்கி வரவில்லை.'நீங்க, தாலாட்டு கேட்குதம்மா படத்தில் நடிச்சா தான், எனக்கு, 'லைப்' மேடம்...' என்று, சிலுக்குக்காக காத்திருந்தார், ராஜ்கபூர்.'இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை. இனி, நடையை கட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
பா - கேநண்பர் ஒருவர் இல்ல விழாவுக்காக, இரண்டு நாள் பயணமாக, பெங்களூரு சென்றிருந்தேன்.விழா இனிதே முடிய, நண்பருடன், பெங்களூரை ஒரு, 'ரவுண்ட்' வந்தபோது, சில கடைகளின் பெயர்கள் வித்தியாசமாக இருந்தது. அதுபற்றி நண்பரிடம் கேட்டேன். அவர் கூறியது:ஒரு டீக்கடையின் பெயர், 'இன்பினிடியா டீ ரூம் அண்டு டீ ஸ்டோர்!''இன்பினிடி' என்றால், கணக்கில்லாத என்று பொருள். இங்கு, 120 வகையான டீ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
* மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை, கன்னியாகுமரி: எளிய வழியில், 'டாக்டர்' பட்டம் கிடைக்க, ஒரு வழி சொல்லுங்களேன்...ஒன்று: அரசியல்வாதியாக இருக்க வேண்டும்...இரண்டு: 'மணிபர்சை' காலியாக்க வேண்டும்!சமீபத்தில், 'டாக்டர்' பட்டம் பெற்ற உறவினரிடம், 'நீ... கல்வியிலே, 'லுாசு' ஆச்சே... 'டாக்டர்' பட்டம் எப்படி வாங்கினாய்?' எனக் கேட்டேன்!அதற்கு அவர், 'ரொம்ப சிம்பிள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
திருச்சி செல்லும் பேருந்தில், சுதாவை பார்த்ததும், ரொம்ப சந்தோஷமாக இருந்தது, சரண்யாவுக்கு. கிட்டத்தட்ட, 10 ஆண்டுக்கு மேலாகிறது, அவளை பார்த்து. கல்லுாரியில் இருவரும் நல்ல தோழிகள். திருமணத்திற்கு பின், பெண்கள் நட்பு அத்தனை ஆழமாய் நிலைபெற்று இருப்பதில்லை என்பதற்கு, இவர்கள் ஒரு உதாரணம்.''சுதா, இவர் தான், என் வீட்டுக்காரர், பரத்,'' என, பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தாள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
இயக்குனர்களை வியக்க வைத்த, அஜீத்!அஜீத் என்றாலே, சட்டையில் துாசு ஒட்டாமல் சண்டை போடக் கூடியவர் என்பது, பல இயக்குனர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த, 'இமேஜை' மாற்றும் முயற்சியாக, வலிமை படத்தில், அதிரடியான, 'ஆக் ஷன்' காட்சிகளில் நடித்து வரும், அஜீத், ஒரு காட்சியில், 100 அடி உயரத்தில் நின்றபடி, பறந்து பறந்து, சண்டை செய்திருக்கிறார். இப்படி, 'ரிஸ்க்' எடுத்து நடித்து வரும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
நாம் செய்யும், செயலை வைத்து தீர்மானிக்கப்படுவது அல்ல, பாவ-புண்ணியம்; செயலின் விளைவை வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. இதை விளக்கும் கதை இது:வேடன் ஒருவன், மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்தான். விலங்குகளை கொல்வதும், கண்ணி -வலைகளை வைத்து பறவைகளை பிடிப்பதும் தான், அவனின் தொழில்.ஒருநாள், காட்டில் வெகு துாரம் அலைந்து, திரிந்தும், வேடனுக்கு, அன்று ஏதும் கிடைக்கவில்லை. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
அன்புள்ள அம்மாவுக்கு—வயது: 32. கணவர், சமீபத்தில் விபத்தொன்றில் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை. எங்களது திருமண வாழ்வு, ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கணவருக்கு, இரு தம்பிகள். மூத்தவன், கல்லுாரியிலும்; இளையவன், பள்ளியிலும் படிக்கின்றனர்.மாமனார் உயிருடன் இல்லை. மாமியார் விபரம் தெரியாதவர்; அவருக்கு, வீடே உலகம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த கணவர் இறந்தபின், கருணை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்க்கைக்கு வழி காட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நேர்மையானவர்; தைரியமானவர். தவறு செய்பவர் யாராக இருப்பினும் தட்டிக் கேட்க தயங்காதவர்.உலகின் கொடுங்கோலன் என்று சொல்லப்படும், ஹிட்லர், 'எனது போராட்டம்' என்ற வாழ்க்கை நுாலில், இந்தியாவை பற்றி தவறாக எழுதியிருந்தார்.இச்செய்தி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
வீதியெல்லாம் குப்பையெனவாய் கூசாமல் கூறும் முன்வீட்டில் கூட்டிய குப்பையைவீதியில் வீசியெறிவதைமுதலில் நிறுத்துங்கள்!தடை செய்த நெகிழிப் பைகள்தாராளமாய் புழங்குவதாகபுலம்புவதற்கு முன்பூ வாங்க, பழம் வாங்கநெகிழி பை கேட்பதைமுதலில் நிறுத்துங்கள்!குடி குடியைக் கெடுக்குமெனஉபதேசம் செய்யும் முன்'மேலை நாகரிகம்' எனகுடித்து மகிழ்வதைமுதலில் நிறுத்துங்கள்!லஞ்ச ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
அண்டார்டிகா அழைத்து சென்ற கப்பல் ஊழியர்கள் சொன்னது போல, அந்த இரண்டு நாட்களும், கடலை கடக்கும்போது, பயமாக தான் இருந்தது. கப்பலை புரட்டி போடுவது போல, பெரிய அலைகள் வந்து அலைகழித்தது. ஒருநாள் முழுவதும் சாப்பிட முடியவில்லை. படுக்கையை ஒட்டியுள்ள கம்பியை பிடித்துக் கொண்டே தான் துாங்கினோம். அந்த கடல் பகுதியை தாண்டியதும், அண்டார்டிகா வந்தது.அண்டார்டிகா என்பது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
''ஆபீசுக்கு நேரமாச்சு, பத்மினி... சாப்பாடு பை மற்றும் வண்டி சாவியையும் எடுத்து வா,'' என்று குனிந்து, ஷூ லேசை கட்டியவன், மனைவியிடமிருந்து பதிலேதும் வராமல் போகவே, நிமிர்ந்து பார்த்தான். அவள் பார்வையும், கவனமும் எதிர் வீட்டிலேயே பதிந்திருந்தது. அவள் எதிர்பார்த்தது போலவே, எதிர் வீட்டு கதவு திறக்க, ''பத்திரம், அத்தை... போயிட்டு வர்றேன்... கதவை தாழ் போட்டுக்கோங்க... மறக்காம, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
ராஜஸ்தான் மாநிலம், பிப்லாந்திரி கிராமத்தில், தாய்க்குலங்கள், பெண் குழந்தை பிறந்தால், கூடையில் வைத்து, ஒரு விழாவை கொண்டாடி கவுரவிக்கின்றனர். இக்கிராமத்தில், ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதன் பெற்றோர், 111 மரக் கன்றுகளை நட வேண்டும். அத்துடன் குழந்தை பெயரில், 18 ஆண்டுகளுக்கு, 40 ஆயிரம் ரூபாய், 'டிபாசிட்' செய்யப்படும். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியவரின் பெயர், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள பேலஸ் தியேட்டரில், பல ஆண்டுகளாக நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் நடந்து வருகிறது. இந்த தியேட்டரின் உள் அரங்கத்தில், இரண்டு இருக்கைகள் எப்போதும் காலியாக வைக்கப்பட்டிருக்கும். காரணம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கும்போது, தியேட்டர் சார்ந்த சில ஆவிகள் வந்தமர்ந்து, ரசித்து செல்வதாக நம்பிக்கை. அவற்றிலும் குறிப்பாக, ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X