Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
பூந்தொட்டிக்கு வரவேற்பு!எங்கள் பகுதியிலுள்ள கோவில் வாசலில், பிச்சைக்காரர்கள் தொந்தரவு அதிகமாக இருக்கும். சமீபத்தில் கோவிலுக்கு சென்ற போது, பிச்சைக்காரர்கள் அமர்ந்திருந்த இடத்தில், அழகான பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இதுபற்றி அருகில் பூக்கடை வைத்திருந்த பெண்மணியிடம் கேட்டதற்கு, 'கோவில் தர்மகர்த்தா, பிச்சைக்காரர்களிடம், 'நீங்க எல்லாரும் இங்கே உட்காந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
உங்களுக்கு பிடித்தமான வேலையில் தான் இருக்கிறீர்களா என்பதை, கீழேயுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து, அதை பரிசோதித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கேள்விக்கும், இரண்டு அல்லது மூன்று பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களது பதிலை, 'டிக்' செய்து வாருங்கள். இறுதியில், மொத்த மதிப்பெண் எப்படி என்று பார்ப்போம்!1. ஏழு மாடிக் கட்டடத்தை கட்டிக் கொண்டிருக்கும் ஆட்களிடம் சென்ற ஒருவன், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
சர்வதேச காற்றாடி திருவிழா, ஜன.,7லிருந்து 10ம் தேதி வரை, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடை பெறவிருக்கிறது.இந்த காற்றாடி திருவிழா, 1,000 ஆண்டுகளாக தொடர்ந்தாலும், எப்போது துவங்கியது என துல்லியமாக கூற முடியாது. பெர்ஷியாவிலிருந்து, இந்தியா வந்த இஸ்லாமியர்கள் அல்லது சீனாவிலிருந்து வந்த புத்த மதத்தினர் மூலம், இது பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்விழா, மகர சங்கராந்தி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், பின்னாளில் சட்ட மொழி பெயர்ப்புத் துறை தலைவராக பதவி வகித்தார். அப்போது, அவர் சொன்னது:ஷேக்ஸ்பியரின், 'கிங்லியர்' நூலை மொழி பெயர்க்கும் போது, எனக்கு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. இளவரசி கார்லியா இறந்து விட்டாள்; அவளுடைய பிரேதத்தை தூக்கிக் கொண்டு ஓடுகிறான் அரசன், லியர். அவனுக்கு, தன் அருமை மகள் இறந்திருக்க மாட்டாள் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
எம்.கணேஷன், பொள்ளாச்சி: மார்கழி மாதம் கோவிலுக்குப் போகும் கன்னிகளின் வேண்டுதல் என்ன?'அடக்கியாள ஒரு ஆம்பளை சீக்கிரம் கிடைக்கணும்...' என்பதாக இருக்கலாம்! ஜி.செந்தில்குமார், கீழக்கரை: கஜானா காலியாவதற்குரிய காரணங்கள் என்ன?'வந்த மாட்டை கட்டுபவர் இல்லை; போன மாட்டை தேடுபவர் இல்லை' என, கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. அதுபோல, ஆட்சியாளர்களுக்கு நாடு மற்றும் மக்கள் மீது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
நம் நன்றிக்குரியவர்கள் என்ற பட்டியலை, மனசாட்சியுடன் எழுதி வாசித்தால், அது, பெரும்பாலும், மிக நீண்டதாகவே இருக்கும்; சிறியது எனில், தயாரித்தவர் மனமும், சுருங்கியதாகவே இருக்கும்.பட்டியல் பெரிதோ, சிறிதோ, நம் நன்றியுணர்வை, உரிய காலத்தில், உரிய நேரத்தில், உரியவர்களிடம் தெரிவிக்க, ஏனோ பெரும்பாலும் தவறியிருக்கிறோம்.அதே நேரத்தில், நம் நன்றி உணர்வுகளை வாங்கிக் கொள்ளாமல், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
மூச்சிறைக்க, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான், டாக்டர் வீரா. மொபைல்போன் அதிர, டாக்டர் அசோக்கின் அழைப்பை பார்த்ததும், ''சொல்லு அசோக்...'' என்றான்.''வீரா... காலையிலேயே உன்னை தொந்தரவு செய்றதுக்கு மன்னிச்சுக்க. இப்ப நான் ஊர்ல இருக்கேன்; உடம்பு முடியாம இருந்த என் மாமனார் இறந்துட்டாரு,'' என்றான்.''அடடே... இப்ப, நான் அங்க வரவா?'' என்று கேட்டான்.''அதெல்லாம் வேணாம்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
கனவு நனவாகிறது!கடந்த, 1997ல் கமல் இயக்கி நடிக்கயிருந்த படம், மருதநாயகம். இப்படத்தின் பூஜை, சென்னை ஏவி.எம்., ஸ்டுடியோவில் நடைபெற்ற போது, இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆனால், அப்படம் பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில், பைனான்ஸ் பிரச்னையால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது, மீண்டும் அப்படம் துவங்கயிருப்பதாக கமல் தரப்பு கூறுகிறது. மருதநாயகம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
மனிதர்களாகிய நாம், எதன் பொருட்டெல்லாம், அழுத்தமான கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம்? கடவுளின் மீதான அன்பில் அந்த அழுத்தம் இருந்தால், பகவானே நம்மை தேடி வந்து அருள்வார் என்பதற்கு, இவ்வரலாற்று உண்மையே சான்று...ராமபிரான் மீது மிகுந்த பக்தியுடைய பக்தர் ஒருவர், அரங்கநாதரை தரிசிப்பதற்காக, திருவரங்கம் வந்தார். அப்போது, அங்கு சித்திரை விழா நடைபெற்றதால், தெற்கு வீதியில், தங்கக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது, 60; திருமணமாகி, 33 ஆண்டுகள் ஆகின்றன. 18 வயதில் கிராமத்திலிருந்து சென்னை வந்து, தனியார் தொழிற்சாலையில், அடிப்படை தொழிலாளியாக பணிபுரிந்து, மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன். சொந்த வீடு உள்ளது.என், 28 வயதில் திருமணம் ஆனது. வாலிபத்தில், முற்போக்கு சிந்தனையும், ஜோசியம், ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவனாகவும் இருந்தேன். என் மனைவியை பெண் பார்த்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
ஜன., 9 அனுமன் ஜெயந்திநம் புராணங்கள், ஏழு பேரை, சிரஞ்சீவிகள் (என்றும் நிலைத் திருப்போர்) எனக் கூறுகின்றன. அவர்களில் ஒருவர் அனுமன்!சுயநலமற்ற சேவையால் அனுமனும், அண்ணனாக இருப்பினும், நியாயத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனும், இறைவனுக்கு தன் உயிரையே அர்ப்பணம் செய்ததில் மகாபலி...இறைவன் மீது கொண்ட பக்தியினால், எமனையே வென்ற மார்க்கண்டேயரும், மகாபாரதம் எனும் அழியாக் காவியத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
'அண்ணாவின் சிந்தனைகள்' நூலிலிருந்து: இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓவியன் ஒருவன், 'உலகமெல்லாம் கிறிஸ்துவ மதம் பரவ வேண்டும்...' என்ற எண்ணத்தில், இயேசுவின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை ஓவியமாக வரைய ஆரம்பித்தான்.இயேசுநாதரின் அருள் நிறைந்த கண்கள், அன்பு ததும்பும் முகம் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை அவன் கற்பனை செய்து, அதைப் போன்ற முகத்தை தேடி, பல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —தேவரின் அசுர வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், அவருடைய தம்பி, இயக்குனர் எம்.ஏ.திருமுகம் திணறினார். தெய்வச் செயல் படத்தில் காட்டு விலங்குகளை வைத்து இயக்க வேண்டியிருப்பதுடன், தேவர் பிலிம்சில், மேஜர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
சென்னை அப்பல்லோ மருத்துவ குழுமத்தில், அட்வான்ஸ் பீவர் கிளினிக் பிரிவின் தலைவர், டாக்டர் டி.வி.தேவராஜன். மருத்துவ துறையில், எம்.பி.பி.எஸ்., - எம்.டி., - எப்.ஆர்.சி.பி., (ஜி) டி.எஸ்சி., என்று பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ள இவர், மருத்துவ சேவைக்காக, நாட்டின் உயர் விருதான பத்மஸ்ரீ மற்றும் அப்துல் கலாம் கையால், 'பி.சி.ராய்' விருதும், எப்.ஐ.சி.பி., எனப்படும் மருத்துவர்களுக்கு தரப்படும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
வானம் வசப்படும்!கேள்விக்குறி போல்வளைந்து நெளிந்து போகாதேசற்று நிமிர்ந்து நில்எல்லாருக்கும் நீயே வியப்புக்குறி!கருவில் உருவாகும் போதேவாழ்க்கைப் பாடத்தின்கேள்வியும், பதிலும் எழுதப்பட்டு விடுகிறது...எந்தக் கேள்விக்கு எது பதில்எந்தப் பூட்டுக்கு எது சாவிகண்டுபிடிப்பதே வாழ்க்கைவாழ்க்கையை வென்று முடி!தம்மை புதைக்கப்பட்டதைஎண்ணி விதைகள்பூமிக்குள் முடங்கி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
இன்று மக்களிடையே மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மொபைல் போன் நிறுவனங்களுக்கு இடையே, கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இந்நிறுவனங்கள், புதுவித யுக்திகளை புகுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய துடிக்கின்றன.ஜப்பானை சேர்ந்த கொயோசெரா டெலிகாம் என்ற நிறுவனம், மற்ற நிறுவனங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக, 'டிக்கோ ரபேர்' என்ற பெயரில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
திருநெல்வேலி, சமூகரங்கபுரம் கிராமத்தை சேர்ந்த, எஸ்.டி.ரெட்டியார், 1855ல் வறுமையின் காரணமாக, பிழைப்பு தேடி, கேரளா சென்றார்.கொல்லம் என்ற ஊரில், சிறிய அச்சகம் ஒன்றை துவங்கி, பஞ்சாங்கம் அச்சிட்டு, விற்கத் துவங்கினார். அப்போது, மத தலைவரான நாராயண குருவின் நட்பு, அவருக்கு கிடைத்தது.'மக்களுக்கு பயன்படக் கூடிய நல்ல புத்தகங்களை அச்சிடவும்...' என, அவர் கூறியதை அடுத்து, முழுநேர ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
உலகில், அதிக உயரமான மக்கள் டச்சு நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். 200 ஆண்டுகளுக்கு முன் வரை, அமெரிக்கர்களை விட, குள்ளமாக இருந்த இவர்கள், தற்போது உயரமாக வளர்ந்துள்ளனர். 'பசுவின் பால் அதிகமாக பயன்படுத்துவதே இவர்களது உயரத்துக்கு காரணம்...' என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.நெதர்லாந்தில், 16 லட்சம் பசுக்களும், ஏராளமான மாட்டுப் பண்ணைகளும் இருப்பதால், இங்கு பால் முக்கிய உணவாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
கேரளாவில் உள்ள சுல்தான் பெத்தேரி, எச்.எஸ்.எஸ்.பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அபிஜித் மற்றும் முகமது ஆஷிக் என்ற மாணவர்கள், புது விதமான மோட்டார் சைக்கிளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் தயாரித்துள்ள, 'சுசூக்கி மாக்ஸ் 100' என்ற இந்த பைக்கில், ஐந்து டேங்குகள் அமைந்துள்ளன. அவற்றில், பெட்ரோல், டீசல், தண்ணீர், கால்சியம் கார்பைட் மற்றும் சிக்கன் வறுத்த பின் மீதமான எண்ணை ஆகியவற்றை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியின், இரண்டாவது குழந்தையான, சார்லட் தான், தற்போது, பிரிட்டன் மக்களின் செல்ல குழந்தை. இந்த குட்டி இளவரசி பிறந்து, ஒரு ஆண்டு நிறைவடையாத நிலையில், இதுவரை அதிக புகைப்படம் வெளியிடப்படாமல் இருந்தது. ஆனால், சமீபத்தில், இணையதளங்களில், குட்டி இளவரசியின் புகைப்படங்கள் சில வெளியாகின. குழந்தையை பார்த்த பிரிட்டன் மக்கள், 'இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
கடந்த, 45 ஆண்டுகளாக, 19 மொழிகளில் பாடி வருகிறார், 70 வயதான பாடகி, வாணி ஜெயராம். இவரது இயற்பெயர், கலைவாணி. சிறந்த பாடகியான இவர், ஓவிய கலையிலும் திறமைசாலி என்பதை, இங்கு காணப்படும் வசந்த் தேசாயின் ஓவியத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். பென்சிலால் வாணி வரைந்த ஓவியம் இதுதான்..— ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X