Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
வாழ்க்கை, நீர்க்குமிழி போன்றது. வாழும் காலத்தில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தால், வாழ்க்கை பிரச்னை இல்லாமல், நிம்மதியாக இருக்கும். அப்படியில்லாமல், 'நான்' எனும் ஆணவத்தில், அகம்பாவத்துடன் நடந்து கொண்டால், அழிவு நிச்சயம். ஒரு அடர்ந்த காட்டில், பெரிய பெரிய மரங்கள் இருந்தன. அந்தக் காட்டை ஒட்டி, ஓடிக் கொண்டிருந்த நதிக்கரையில், நாணல்கள் நன்கு செழித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
ஜன.,11 வைகுண்ட ஏகாதசிஏகாதசி விரதமிருந்தால் மோட்சம் கிடைக்கும். 'வைகுண்ட ஏகாதசியன்று, மரணம் அடைபவர்கள் எவ்வளவு பாவம் செய்தவராக இருந்தாலும், வைகுண்டத்துக்கு சென்று விடுவார்களாமே... எனக்கு அந்த விரதம் பற்றி எதுவுமே தெரியாதே! சாப்பிடக்கூடாது, தூங்கக்கூடாது என்கின்றனர். இப்படி, கடுமையாக உடலை வருத்திக் கொண்டால் மட்டும் மோட்சம் கிடைத்து விடுமா என்ன...' என்று, பலர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
பெண்கள் என்றாலே போகப் பொருள் தானா!தோழியோடு அங்கப்பிரதட்சணம் செய்ய, கோவிலுக்கு சென்றிருந்தேன். ஈர உடையோடு, கோவிலை சுற்றி உருண்டு வரும் போது, இளைஞர்கள் சிலர், எங்களைப் பார்த்து, 'ஜொள்' விட்டதோடு, 'நல்ல தரிசனம் மச்சி...' என, கமென்ட்டும் அடித்தனர். ஏதோ பேசி விட்டு போகட்டும் என, கண்டுக்காமல் இருந்தாலும், அவர்கள் விடுவதாயில்லை. எங்களின் சேலை விலகுவதையும், ஈர உடையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
குற்றால டூர் வாசகர்களை, வேடிக்கையாக மிரட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நண்பர் வீரசின்னு, கொஞ்சம் கூடுதலாக உணர்ச்சி வசப்பட்ட நிலையில், கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால், என் தலையில் அடித்ததில், சட்டென கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. சுற்றிலும் இருப்பவர்கள் பேசுவது, ஏதோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல இருந்தது. கிட்டத்தட்ட மயங்கிய நிலையில், பஸ்சின் நடுவில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
எங்குமே பதிவு செய்யப்படாத, ஒரு சில சங்கங்கள் சென்னையில் உள்ளன. அதில் ஒன்று, 'மனைவியருக்கு பயந்த உ.பா., கணவர்கள் சங்கம்!' இதன் உறுப்பினர்கள், பெரும்பாலும் இன்ஜினியர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள். இத்துறையில் பணியாற்றுபவர்கள், திருமணமான புதிதில், மனைவியர் தலையில் மிளகாய் அரைத்து, 'இன்கம்டாக்ஸ் ஆபிசரைப் பார்க்கப் போகணும்; கிளயன்ட்டை மீட் பண்ணணும்...' என்றோ, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
ரா.ஜெயக்குமார், பீளமேடு: குடும்பப் பெண்கள் சிலர் இரவில் அணியும், நைட்டியை போட்டுக் கொண்டு, மார்க்கெட் போன்ற வெளியிடங்களுக்கு வருவது பற்றி... நம்மூர் ஆசாமிங்களோட இதே ரோதனையாப் போச்சு. 'பாவாடை தாவணி அணியாமல், சுரிதார் அணிகின்றனரே... தமிழ் பண்பாடே போச்சே...' என, ஒரு சாரார் புலம்புகின்றனர். 'ஜீன்ஸ் பேன்ட், மிடி அணிகின்றனரே' என இன்னொரு பக்கம். அம்மணிங்களுக்கு இந்த உடை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
''என்னால், இதற்கு மேல் ஈடு கொடுத்து இருக்க முடியாது. இதற்கு, ஒரு வழி செய்து தான் ஆக வேண்டும்,” என, புலம்பினாள் மைதிலி.''நீயே, இவ்வளவு சலித்துக் கொண்டால், என்ன செய்வது மைதிலி. உன்னுடைய பொறுமையால் தான், நான் இவ்வளவு நாள் ஓட்டினேன்,” என்றான் சிவராம். அவனின் இதமான பதில், மைதிலியின் ஆற்றாமையை தணித்தது. ''சாரிங்க... நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். செங்கல்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
இசைஞானி இளை யராஜா என் நெருங்கிய நண்பர். அவரது, 'பாவலர் பிரதர்ஸ்' ஆர்கெஸ்ட்ராவில் பலமுறை, ட்ரம்ஸ் வாசித்திருக்கிறேன். அதனால், இளையராஜா என்னை, 'டிரம்மர்' என்று தான் கூப்பிடுவார். இளையராஜா என்னிடம் பகிர்ந்து கொண்ட சுவையான நிகழ்ச்சி இது: கவரிமான் படத்தில், கச்சேரி பாணியில் அமைக்கப்பட்ட, 'ப்ரோவ பாரமா' என்ற பாடல் காட்சியில், சிவாஜி எப்படி நடிக்கிறார் என்று பார்க்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
விநியோகஸ்தர்களிடம் புலம்பும் விஷால்!விஷால், அதிக நம்பிக்கையுடன், மூன்று வேடங்களில் நடித்த படம், மதகஜ ராஜா. ஆனால், இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதனால், தன் சொந்தப் பணம், ஐந்து கோடியை செலவு செய்து, ரிலீஸ் செய்ய களமிறங்கிய விஷால், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, ப்ரஷர் அதிகமாகி, மருத்துவமனையில், 'அட்மிட்' ஆனது தான் மிச்சம். இன்று வரை, படம் திரைக்கு வந்தபாடில்லை. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
அன்புள்ள அம்மா —கல்லூரியில் படிக்கும் மாணவி நான். பள்ளியில் படிக்கும் போது, நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், அது இனக்கவர்ச்சி என்று, இப்போது புரிந்து கொண்டேன். நானும், அவனும் காதலித்த காலத்தில், பல இடங்களில் சுற்றியுள்ளோம். இந்த விஷயம், வீட்டில் தெரிந்து, என்னை கண்டித்தனர். அப்பொழுதும் என் மனம், அவனையே நினைத்துக் கொண்டிருந்தது. மறுபடியும், அவனுடன், பல இடங்களில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
புதிய விடியல்! ஓ மானிடனே... இந்நாள் வரை...பூமிப்பந்தின் வயிற்றுக்குள் நச்சுக் காற்றை புகுத்திநதித் தாயின் உடலில் சாயக் கழிவுகள் பூசி அழகு மரங்களை கொள்ளை அடித்து பச்சை வயல் பரப்பினில் மிச்சமின்றி கட்டடம் எழுப்பி இயற்கையின் ஈரத்தை மலடாக்கி செயற்கையில் அக மகிழ்ந்தோம்! பள்ளி செல்லும் பிள்ளைகள்துள்ளி மகிழும் காலம் பறித்துமுதியோர் புரிதல் புறந்தள்ளி அவசர கதியில் வாழ்வு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
பத்மினியின் வரவு, எங்கள் அலுவலகத்திற்கே, ஒரு புதிய ஒளியைக் கொடுத்தது. அவள் இளமையும், அழகும் பார்ப்பவர்களை, இன்னொரு முறை பார்க்க தூண்டும். அத்தனை அழகான முகம். இன்னும் கொஞ்சம் நேரம், நம்முடன் பேச மாட்டாளா என்ற ஏக்கத்தை உண்டு பண்ணும், இனிய குரல்.பத்மினி, வேலையிலும் நல்ல திறமைசாலி. அழகு, அறிவு நிறைந்த, இருபத்தி ஐந்து வயது இளமங்கையான அவள், என்னிடம் மட்டும், கொஞ்சம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
காது கேளாதவன், உலகத்தைப் பார்க்கிறான்; ஆனால், எதையும் கேட்க முடியவில்லை. திடீரென்று காது கேட்கிறது. 'இதுவரை, இத்தனை சத்தம் எங்கிருந்தது... நான் கேட்கவில்லையே...' என்று ஆச்சரியப்படுகிறான்.அதேபோல், உலகத்தில் உலவும் நல்ல எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் அறியக் கூடிய, சக்தியில்லாதபடி, ஆன்ம செவிட்டுத் தன்மை நமக்கு உள்ளது.இந்த ஆன்ம செவிட்டுத் தன்மையை, அகற்றி விட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
பிரேசிலை சேர்ந்த பிரபல மாடல் அழகி, ஜிஸ்லே பன்ட்சன். ஐரோப்பிய நாடுகளில் இவர் நடிக்கும் விளம்பரங்களுக்கு, கடும் கிராக்கி உண்டு. இதனால், எப்போதும், ஏதாவது ஒரு நாட்டுக்கு, விமானத்தில் பறந்து கொண்டு தான், இருப்பார். சமீபத்தில், ஒரு விளம்பர படப் பிடிப்பிற்காக, 'மேக்-அப்' போடும் போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை, இணையதளத்தில், இவர் வெளியிட்டுள்ளார். அதில், ஒருவர், இவரின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
நீச்சலடிப்பதில், சிலருக்கு அலாதி பிரியம் உண்டு. 'டப்பு' அதிகம் இருப்பவர்கள், தங்கள் வீடுகளிலேயே, சிறிய அளவில், நீச்சல் குளங்களை அமைப்பது வழக்கம். அதனால், இதுபோன்ற நீச்சல் பிரியர்களின் வசதிக்காகவே, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான, சிலியில், பிரமாண்ட நீச்சல் குளத்தை அமைத்துள்ளனர். இந்த நீச்சல் குளத்தை நேரில் பார்ப்பவர்கள், 'இதை, பிரமாண்டம் என்ற சாதாரண வார்த்தையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
புன்னகை அரசி, மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர், லியோனார்டா டாவின்சி. இந்த மென்மையான புன்னகை அரசி ஓவியத்தை வரைந்ததால், அவரை, ரொம்ப மென்மையானவர் என்று, நினைத்து விட வேண்டாம். யுத்த காலத்தில், பீரங்கிக்குள் விஷக் கிருமிகளை திரட்டி வைத்து, எதிரி நாட்டில், பீரங்கி மூலம் வீசி எறியும் யுத்த கால போர் முறையை, அவர் தான் கண்டுபிடித்தார். அதற்கு முன், அழுகிய பிராணிகளிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X