Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
கோவில்களில், பகல், மாலை மற்றும் முன்னிரவு நேரங்களில் பூஜை நடத்தி, இரவு, 9:00 மணிக்குள் நடைசாத்தி விடுவது வழக்கம். ஆனால், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியன்று, நள்ளிரவில் பூஜை நடக்கிறது. இக்கோவிலில், அஷ்ட (எட்டு) பைரவர்களையும் தரிசிக்கலாம் என்பது தான் விசேஷம்.அசுரர்களால் துன்பப்பட்ட தேவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைக்கும், தஞ்சை பெரிய கோவிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தானே நினைக்கிறீர்கள்...இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள் தான், மிகப் பெரிய தத்துவத்தையே ஒளித்து வைத்துள்ளனர், நம் முன்னோர்.கொட்டாங்கச்சி எனப்படும் தேங்காய் சிரட்டையில் பாதியை எடுத்து, அதில், களி மண்ணை அடைத்து, தலையாட்டி பொம்மைகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
பயனுள்ள சேவை!சமீபத்தில், மார்க்கெட்டுக்கு சென்றிருந்தேன்; அங்கே, ஒரு பழைய பேப்பர் கடையில், வார - மாத இதழ்களை மட்டும் பிரித்து, அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார், ஓர் இளைஞர். பின், அவற்றை எடை போட்டு வாங்கினார். கடை உரிமையாளரும், அவர் கொடுத்த பணத்தை, எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.'இந்த இதழ்களை எதற்காக வாங்குகிறீர்கள்?' என, அந்த இளைஞரிடம் கேட்டேன். 'முதியோர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
தென் மாவட்டத்தில் இருந்து வாசகி ஒருவர், எழுதிய கடிதம்...திருமணம் முடிந்ததும், தனிக்குடித்தனம் செல்வதில் ஆவலாக உள்ளனர், இன்றைய இளம்பெண்கள். அது நல்லது தான்; ஆனால், தனிக்குடித்தனம் அனுப்பிய உடன், தங்கள் மகனுக்கு, தொழிலையும் பிரித்துக் கொடுத்து விடுகின்றனர், வீட்டுப் பெரியவர்கள். இங்கு தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.இளம் வயதில் மிகுந்த ஆர்வத்தோடு வியாபாரத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
* டி.எஸ்.பாலு, நாகப்பட்டினம்: பச்சோந்திக்கும், மனித குலத்திற்கும் ஒற்றுமை உண்டு என்கின்றனரே...உண்மை தான்; தன்னைச் சுற்றி உள்ள நிறத்திற்கு ஏற்றபடி, தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது, பச்சோந்தி. தான் பழகும் இடத்திற்கு ஒத்துப் போவது போல் குணத்தை மாற்றிக் கொள்கிறது மனித மனம்!ஆ.ராஜேந்திரன், பொள்ளாச்சி:புதிது புதிதாக, 'டிவி' சேனல்கள் ஆரம்பிக்கின்றனரே... இவர்கள் மக்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
'வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது...' என்று, 30 ஆண்டுகளுக்கு முன், லட்சுமி, தன்னிடம் சொன்ன இடத்தில், அவளுக்காக காத்திருந்தார், செல்வம். ''என்னோட வரவுக்காக, வழிமேல் விழி வெச்சு காத்திருக்கீங்க போல...'' என்ற குரலை நோக்கி, ஆர்வத்துடன் திரும்பிய செல்வத்தை பார்த்து, மென் முறுவல் பூத்தாள், லட்சுமி. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். முதிர்ச்சியின் அடையாளமாய், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
அரசியல் பிரவேசம்; கமல் புதிய முடிவு!கமலின் பிறந்த நாளின்போது, அவரது அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர், அப்போது எதுவும் வெளியிடவில்லை. இந்நிலையில், தற்போது, தான் நடித்துள்ள, விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு படங்களை வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார். இதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில், இந்தியன்  2 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
'குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே...' என்பர்.மதுரைக்கு அருகிலுள்ள சமய நல்லுாரில், ராமசாமி - திரிபுரசுந்தரி எனும் அந்தண தம்பதி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு மணமாகி பல ஆண்டுகள் கடந்தும், மகப்பேறு இல்லாததால், மதுரை மீனாட்சியம்மனை வேண்டினர்.ஒரு நாள், அவர்கள் வீட்டு வாசலில் ஒரு மரப்பாச்சி பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர், இரு குழந்தைகள். அவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
உள்ளதும், வெல்வதும்!சொந்த வீடு இல்லை...பறவைகள் கூடு கட்டுவதை பார்!உடுக்க துணி இல்லை...சிலந்தி கட்டும்இழைகளை பார்!உண்ண உணவு இல்லை...பறந்து திரியும்காக்கை கரைவதைப் பார்!உழைக்க வேலை இல்லை...சாரை சாரையாய்ஊர்ந்து செல்லும்எறும்புகளை பார்!இவைகளெல்லாம்யாருக்காகவும் காத்திருப்பதில்லையாரையும் எதிர்பார்ப்பதுமில்லை!உள்ளதை கொண்டுஉழைத்திட, அவைகள்யாரிடமும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
அன்று, அலுவலக வேலையில் மூழ்கியிருந்த என்னை, இன்டர்காமில் அழைத்தார், நம் பத்திரிகை ஆசிரியர். அவர், அறைக்குள் நுழைந்ததும், 'ஆறுமுகம்... நீங்க ராஜஸ்தான் போயிருக்கீங்களா...' என்று கேட்டார். நான், 'இல்லை பாஸ்...' என்று கூறி, தலையசைக்கவும், 'சரி... சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் மையம் சார்பாக, முன்னணி நாளிதழ் மற்றும் வார இதழ்களின் நிருபர்கள் ராஜஸ்தான் போறாங்க; நம் பத்திரிகை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க., கட்சியைத் துவங்கி, முதன் முதலில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில் மாயத் தேவர் என்பவரை வேட்பாளராக நிறுத்தி, வெற்றி கண்டார். இரட்டை இலை சின்னம் கிடைத்த கதை பற்றி மாயத்தேவர் ஒரு கட்டுரையில் கூறியுள்ளது:திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தல், 1974ல் அறிவிக்கப்பட்டது. என்னை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
சந்திரபாபு இயக்குனராக அவதாரம் எடுத்தது பற்றி பலவிதமான பேச்சுகள் எழுந்தன.அவற்றில் எதிர்பார்ப்புகள் இருந்ததைப் போன்றே, 'மண்ணை கவ்வப் போகிறான்' என்ற எதிர் கருத்துகளும் இருந்தன.இந்நிலையில், 'பேசும் படம்' பத்திரிகைக்கு சந்திரபாபு அளித்த பேட்டி: நீங்க, இயக்குனர் ஆனதற்கு காரணம் என்ன?அது, பெரிய அதிசயம் இல்லயே... என் நெடு நாளைய ஆசை தான் அது.கே.சுப்ரமணியம்... கலைவாணி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு —வணக்கம்; நான், 26 வயது பெண். ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். என் பெற்றோருக்கு, நான், ஒரே மகள். என் தந்தை, டிராவல்ஸ் ஏஜென்சி நடத்துகிறார்; அம்மா இல்லத்தரசி.எனக்கு திருமணம் செய்ய, வரன் பார்த்து, நிச்சயமாகி, தை மாதம் திருமணம் என்று முடிவாகியிருந்தது. இந்நிலையில், என் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் கோவாவுக்கு நான்கு நாட்கள், 'டூர்' சென்றோம். பல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
''பால்காரரே... இன்னியிலிருந்து ஒரு மாசத்துக்கு, ரெண்டு லிட்டர் பால் சேர்த்து ஊத்துங்க...'' என்ற கோகிலாவின் முகத்தில், அப்படியொரு சந்தோஷம்!''என்ன கோகிலாம்மா... பையனும், பொண்ணும் குடும்பத்தோட வெளிநாட்டிலிருந்து வந்துருக்காங்க போல...'' என்றார், பாலை ஊற்றியபடி, பால்காரர். ''மூணு வருஷம் கழிச்சு, அண்ணனும், தங்கச்சியும் ஒண்ணா லீவு போட்டு வந்திருக்காங்க... ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
மத்திய அரசு, செல்லாது என அறிவித்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் ஆப்ரிக்கா நாட்டுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு டன் எடை கொண்ட நோட்டுகளின் விலை, 128 ரூபாய். இந்த நோட்டுகளை அரைத்து, அதிலிருந்து காகித அட்டைகள் தயாரிக்கின்றனர். அங்கு, 2019ல் பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது, கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய பதாகைகள் தேவைப்படுகின்றன. எனவே தான் அட்டைகளை இப்போதே தயார் செய்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
அரபு நாடான சவுதி அரேபியாவில், ஷோபியா என்ற ரோபோவுக்கு, குடியுரிமை வழங்கப்பட்டது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த ரோபோவுக்கு உணர்வுகள் இல்லை என்றாலும், மனிதர்களின் முகபாவனைகளை புரிந்து, அதற்கேற்ப பதில் அளிக்கும் ஆற்றல் உண்டு.சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த ரோபோவிடம், 'குடும்பம் என்றால் என்ன...' என்று ஒருவர், கேள்வி எழுப்பினார்.அவரது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
அந்தக் காலத்தில், எகிப்து நாட்டில் உள்ள பணக்கார பெண்கள், தங்கள், தலை அலங்காரம் கலையாமல் இருக்க, தலையணைக்கு பதிலாக இந்த ஸ்டாண்டை கழுத்துக்கு வைத்தபடி துாங்குவராம். இது எப்படி இருக்கு!— ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
சீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால், தலைச் சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.* திராட்சை ஜூஸுடன், சீரகம் கலந்து பருகி வர, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், மன நோய் குணமாகும். * சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால், நெஞ்சு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X