Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
எல்லாருக்கும், ஒரு சக்தியை, கொடுத்திருக்கிறான் இறைவன். எந்த ஓர் ஆற்றலும் இல்லாமல், யாரையும், அவன் படைக்கவில்லை. நம்மிடம் உள்ள சக்தியை, நாம் உணர வேண்டும். உணர்ந்த பின், அந்த சக்தியை நல்ல வழியில் உபயோகப்படுத்த வேண்டும். அதைவிட்டு, சுயநலமாக, 'நான் மட்டும் வாழ வேண்டும், மற்றவர்கள் முன்னேறக் கூடாது...' என்று செயல்பட்டால், பெரும் தீங்கு விளையும் என்பதற்கு, இறைவனுடன், சலந்தரன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
ஜன 25., திருநீலகண்டர் குருபூஜைதவறு செய்வது மனித இயல்பு. ஆனால், அதற்காக வருந்தி, வாழும் காலத்திலேயே பிராயச்சித்தம் செய்து விட்டால், கடவுளின் மன்னிப்பை பெறலாம். இதற்கு உதாரணம் தான் திருநீலகண்டரின் வாழ்க்கை.சிதம்பரம் நகரில், நீலகண்டர் என்ற சிவனடியார் ஒருவர் வசித்து வந்தார். எப்போதும், 'திருநீலகண்டம்' என்ற சிவனின் திருப்பெயரையே சொல்லிக் கொண்டிருப்பார். 'கண்டம்' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
மணப்பெண் கேட்ட கேள்வி!சமீபத்தில், என் பெற்றோருடன் பெண் பார்க்க சென்றிருந்தேன். எனக்கு பெண்ணை பிடித்து போக, மற்ற விஷயங்களைப் பேசி விட்டு, திருப்தியுடன் ஊர் திரும்பினோம். மறுநாள் பெண் வீட்டாரிடம் இருந்து, திருமணத்தில் விருப்பமில்லை எனும் தகவல் வந்தது. திடீரென்று இப்படிச் சொல்லக் காரணம் என்னவென்று அறிந்து கொள்ள, பெண் வீட்டுக்கு சென்றேன். 'வரதட்சணை விஷயத்தில், நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
மலேசிய தமிழரான ப.சந்திரகாந்தம் எழுதிய, '200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்' என்ற நூலில், நேதாஜி பற்றி எழுதியிருந்த கட்டுரையின் தொகுப்பு இது:ஜன.,23, 1897ல், மேற்கு வங்காள மாநிலத்தில், பிறந்தவர் நேதாஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ். கோல்கட்டாவில் கல்லூரி படிப்பை முடித்து, இவர், மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
இமயம் படத்திற்காக, நேபாளம் காட்மண்டு நகரில், படப்பிடிப்பு நடத்தினார் முக்தா ஸ்ரீனிவாசன். அங்கு, 'மாயாலு' என்ற ஓட்டலில், நாங்கள் அனைவரும் தங்கினோம். சிவாஜியும், கமலாம்மாவும் மட்டும், சற்று தள்ளி இருந்த, 'சோல்டி ஓபராய்' என்ற நட்சத்திர ஓட்டலில், தங்க வைக்கப்பட்டனர். அங்கு தங்கிய, இரண்டாவது நாளே, சிவாஜி, 'நீங்கள் எல்லாம் ஜாலியாக ஒன்றாக தங்கியிருக்கீங்க. நான் மட்டும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
சமீபத்தில், அமெரிக்காவிலிருந்து வாசகி ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். இ-மெயில் பெருகி விட்ட இந்தக் காலத்தில், பேப்பரில் எழுதி, அஞ்சல் உறையிலிட்டு, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி இருக்கிறாரே என, ஆச்சரியப்பட்டு, கடிதத்தைப் படித்தேன்...டியர் அந்துமணி,நான் பல ஆண்டுகளாக உங்கள் எழுத்துகளின் தீவிர ரசிகை. இப்போது, அமெரிக்கா வந்தும், 'நெட்' மூலமாக, தொடர்ந்து, பா.கே.ப.,வைப் படித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
என்.நாகராஜன், தேவனாம்பாளையம்: யாரையும் காதலிக்கக் கூடாது என்று வைராக்கியம் இருந்தாலும், சில நேரங்களில் மனசு சஞ்சலப்படுகிறதே...சஞ்சலம் என்று கூறாதீர்கள். அது, இயற்கை. அந்தந்தப் பருவத்தில் ஏற்படும் இயற்கை உணர்வுகள். அந்த உணர்வுக்கு மதிப்பளித்து, உண்மையாக, ஏமாற்றாமல் செயல்பட உங்களால் முடியும் என்றால் மட்டுமே காரியத்தில் இறங்குங்கள்; உங்களது ஒரு செயலால், பலர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
தலையில், கை வைத்து அமர்ந்திருந்தான் பசுபதி. டவுனில் துவங்கிய கமிஷன் கடையும், காலை வாரி விட்டது. பொருட்களுக்கு கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான் தரகன். விவசாயத்தை கைவிட்டு, இரண்டு ஏக்கர் நிலத்தை அம்போன்னு போட்டு விட்டு, விதவிதமாக தொழில் செய்து பார்த்தான் பசுபதி. எதுவும் செட்டாகவில்லை. கடைசியாக, கடன் வாங்கி, கமிஷன் மண்டி வைத்தான்; காசுடன் கம்பி நீட்டி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
ஷங்கர் படத்தில் மம்மூட்டி!விஜய்யின், ஜில்லா படத்தில் மோகன் லால் நடித்ததை அடுத்து, மம்மூட்டிக்கும், தமிழ்ப்படங்களில் நடிக்கும் ஆசை தலை தூக்கியுள்ளது. அதனால், சில முன்னணி இயக்குனர்களை தொடர்பு கொண்ட போது, ஐ படத்தையடுத்து, தான் இயக்கவிருக்கும், சரித்திர படத்தில் நடிப்பதற்கு, மம்மூட்டிக்கு சான்ஸ் கொடுத்துள்ளார் டைரக்டர் ஷங்கர். இப்படத்தில் கர்ணன் வேடத்தில் மம்மூட்டி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
புலியருவிக்கு குளிக்க சென்ற வாசகிகள், புலியருவிக்கு மேல் உள்ள அடர்ந்த காட்டிற்குள் விழும் அருவியில் குளிக்க செல்லும் வழி குறித்து விசாரித்தனர் என்று, போலீசார் கூறியதும், 'அங்கே யாருமே போகமாட்டார்களே... எப்படி தைரியமாக போனார்கள், பெயரிலேயே 'புலி'யிருக்கும் அருவியாயிற்றே! அந்த, 'கிலி'கூட இல்லாத வாசகிகளாக இருக்கின்றனரே...' என்றெல்லாம் மனதில் நினைத்து, 'சரி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
அன்பு சகோதரிக்கு,எனக்கு திருமணம் ஆகி, 17 ஆண்டுகள், ஆகிறது. எங்களுடையது காதல் திருமணம். இரு தரப்பையும் எதிர்த்து, திருமணம் முடித்தோம். 15 ஆண்டுகள், எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கை ஓடியது.நான் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையுடையவள். கணவரே உலகம் என்று வாழ்ந்தேன். அவர் மேல் வெறித்தனமான அன்பு வைத்திருந்தேன். இந்த சமயத்தில், என் கணவருடைய திடீர் நண்பன் ஒருவன், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
வாழ்க்கை அர்த்தப்படும்! தனிமரம் தோப்பாவதில்லை...ஒரு கை தட்டிஓசை எழுவதில்லை!சொர்க்கம் விண்ணிலில்லை - அதுஉறவுகளோடு மனிதன் மண்ணில்கூடி வாழ்கிற வாழ்வே!நரகம் வேறில்லை - அதுஉறவுகளைத் தொலைத்தமனித வாழ்வே!உலகையே மனிதன்உரிதாக்கிக் கொண்டாலும்உறவுகள் இல்லையேல்பயனேதும் இல்லை!உறவு மலர்கள் பூத்தாடும் வாழ்க்கை மணம் வீசும் இன்ப மலர்ச்சோலை!உறவற்ற வாழ்க்கைதனிமை, வெறுமை எனும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
நேரு இறந்த போது, காமராஜர் தமிழகத்தில் இருந்தார். மைசூர் மாநிலத்திலிருந்த நிஜலிங்கப்பாவும், அதுல்யாவும் சென்னையில் காமராஜரோடு சேர்ந்து, தனி விமானத்தில் தலைநகர் சென்றனர். ஆந்திராவில், குக்கிராமத்தில் மாட்டிக் கொண்டார் சஞ்சீவ ரெட்டி. லண்டனிலிருந்து சிவராஜ் பாட்டீல், அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு அமைச்சர் சவான் ஆகியோர் பறந்து வந்தனர்.மொரார்ஜி தேசாய், தன் மகனுடன், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
கோபத்தின் உச்சியில் இருந்தாள் கவிதா. அவளது கோபத்தை அறிந்தும் பேப்பர் படிப்பது போல், பாவனை செய்து கொண்டிருந்தான் சரவணன். எப்போது வேண்டுமானாலும், கவிதா பொங்கி எழக் கூடும் என்பதால், எப்படி அவளை சமாதானப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அதேசமயம், அவனுக்கு, தன் தம்பி செல்வத்தின் மீதும், கோபமாக வந்தது.முதலிலே இருவரும் பேசி முடிவெடுத்த பின், இப்போது வந்து,'என் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
கனடாவைச் சேர்ந்த, பிரபல நடிகையும், மாடல் அழகியுமான, சன்னி லியோன், 32. ஏடாகூடமான படங்களில் நடித்து பெயர் பெற்றவர். சமீபகாலமாக, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில், ஒரு ஹாலிவுட் படத்தில், குத்துச் சண்டை வீராங்கனையாக நடிப்பதற்கு, அங்குள்ள பிரபலமான குத்துச் சண்டை வீரர் ஒருவரிடம் பயிற்சி பெற்றுள்ளார். அந்த பயிற்சி மையத்துக்கு, அதிகமான வாடிக்கையாளர்கள் வருவதை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
ஜப்பானியர்கள், எதையுமே சற்று மாற்றி யோசிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சிறு குழந்தைகளின் பயத்தை போக்குவதற்கு, அவர்கள் கண்டுபிடித்திருக்கும் டெக்னிக்கை பார்த்தால், அதிர்ச்சியில், நாம், மயக்கம் போட்டு விழுந்து விடுவோம். ஜப்பானின், கொயட்டோ என்ற நகரில், குழந்தைகளின் பயத்தை போக்குவதற்காகவே, பிரத்யேகமாக ஒரு ரயில் ஓடுகிறது. இந்த ரயிலின் உள்ளே சென்றால், ஏதோ, ஆவிகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
'பெரியவருக்கு வழி விடுப்பா...' என்று, பஸ்சில் என் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டதும், நான், வழி விட்டு விலகினேன். ஆனால், எனக்கு பின்னால் எந்தப் பெரியவரும் இல்லை. நான் தான், அந்தப் பெரியவர் என்று அறிந்த போது, மனசு துணுக்குற்றது. நான் எப்போது பெரியவர் ஆனேன் என்று தெரியாமலேயே, நான் பெரியவராகி விட்டேன். வீட்டுக்கு வந்ததும், இன்னிக்கு ஒரு தமாஷ் என்று, பஸ்சில் நடந்ததை என் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X