Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
பக்திக்கு பணமோ, பொருளோ தேவையில்லை; சிவலிங்கத்தை வணங்க, சாக்கிய நாயனாருக்கு பூ கிடைக்கவில்லை. அதனால், கீழே கிடந்த கல்லை, பூவாகக் கருதி, லிங்கத்தின் மீது எறிந்து வழிபட்டார். அது, கல்லென்று கருதவில்லை, பரம்பொருள்; அவரது பக்தியின் ஆழத்தைத் தான் பார்த்தார். இதுபோல, குளிரில் நடுங்கிய பக்தர் ஒருவருக்கு, முருகப்பெருமான் சுருட்டு வழங்கிய சம்பவம், புதுக்கோட்டை மாவட்டம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
குழந்தையை தத்தெடுக்க போகிறீர்களா?அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லை. அதனால், இந்தியாவிற்கு வந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினார். அதன்படி, சமீபத்தில் இந்தியா வந்த நண்பரும். அவர் மனைவியும், இங்குள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று குழந்தைகளை பார்த்தனர். இறுதியாக, ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையை தத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
ஒரு சில படங்களில் மட்டுமே சந்திரபாபு நடித்து வந்த காலத்தில், ஒரு சினிமா பத்திரிகையில் அவரது பேட்டி வந்தது. அதில், தன் நிலை என்ன என்பதையும், புகழ் ஒரு மாயை என்பதையும் தெளிவாக புரிந்து வைத்திருந்ததுடன், அவரது தன்னம்பிக்கை சிறிதும் குறையவில்லை என்பதை அவரது பதில்கள் பிரதிபலித்தது...உங்களுக்கு திறமை இருந்தும், தமிழ் திரையில் நிரந்தர இடத்தை பிடிக்காதது ஏன்?நிரந்தர தன்மை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
அந்த ஊரில் உள்ள நம் அலுவலக விருந்தினர் இல்லத்தில் கடந்த வாரம் தங்கி இருந்தேன்; வேறு பணி இருந்ததால் லென்ஸ் மாமா உடன் வரவில்லை.அலுவலகப் பணியில் மூழ்கி இருந்த நேரம், விருந்தினர் இல்லப் பணியாளர், போனில் அழைத்து, 'ஒரு மேடம் பேசினாங்க... அவங்களோட போன் நம்பர் கொடுத்தாங்க... பேசச் சொன்னாங்க...' என்று கூறி, ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்.தொலைபேசியில் அழைத்தவர் ஒரு அரசு அதிகாரி; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
* ஆ.ராகேஷ், பெங்களூரு: எனக்கு ஒரு உபதேசம் செய்யுங்களேன்...அடடா... ஞானி லெவலுக்கு கொண்டு போய் விட்டீர்களே... போகட்டும்! 'நாளை செய்யலாம்' என சோம்பல்பட்டு, எந்த நல்ல செயலையும் தள்ளிப் போடாதீர்கள்; அந்த, 'நாளை' என்ற நாள் வராமலே போய் விட வாய்ப்புண்டு!ஆர்.விஜயா, சிவகங்கை: காதல் எப்போது உருவாகிறது?ஓர் ஆணிடம் ஒரு பெண் ஏமாறும்போது... ஒரு பெண்ணிடம் ஓர் ஆண் ஏமாறும் போது!வி.ஆனந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
''நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... இந்த வீட்டுல ஒரு நல்லது நடக்கப்போகுது...'' மாலதியின் வீட்டு வாசலில் நின்று சத்தமிட்டுக் கொண்டிருந்தான், குடுகுடுப்பைக்காரன். 'ஆமாம்... காலையிலேயே வந்துட்டான்... இதுங்க ரெண்டும் எப்போ வீட்டை விட்டு கிளம்புதுங்களோ அப்போதான் எனக்கு நல்ல காலம் பொறக்கும்; எல்லாம் என் தலையெழுத்து. மாமனார் - மாமியார் இல்லாத வீட்டுல தான் காலடி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!காமராஜரின் வாழ்க்கை வரலாறு கதையை படமாக்கிய பாலகிருஷ்ணன், தற்போது, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை படமாக்கி வருகிறார். எம்.ஜி.ஆர்., எழுதிய, 'நான் ஏன் பிறந்தேன்' கட்டுரை தொடரில் இருந்து பல விஷயங்கள் இப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாம். சதீஷ் என்பவர், எம்.ஜி.ஆராக நடிக்கும் இப்படத்தில், அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
மகத நாட்டில், வாருணம் என்ற நகரில், அங்கதன் என்பவர் வாழ்ந்து வந்தார். பெருமாள் பக்தரான இவர், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். இவரிடம், அபூர்வமான ஒரு வைரமணி இருந்தது. அதை, ஜகநாத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாளுக்கு அணிவிக்க, தீர்மானித்தார்.இதை அறிந்தார், அவரது மூத்த சகோதரர், ராஜசிங்கன். குருநில மன்னனான அவர், அந்த வைர மணியை தனக்கு தந்துவிடுமாறு... தம்பிக்கு தகவல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
அன்புள்ள அம்மா —நான், 30 வயது பெண்; 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் தந்தை விவசாய கூலி; வீட்டில் மாடு ஒன்றை வளர்த்து, பால் வியாபாரம் செய்கிறார், என் தாய். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். இரண்டு தங்கை; இரு தம்பிகள்.நான் மூத்தவள்; என், 18வது வயதில் திருமணமானது. எனக்கு மகன் மற்றும் மகள் என, இரு குழந்தைகள். திருமணமான ஆறாம் ஆண்டு, விபத்து ஒன்றில் இறந்து விட்டார், என் கணவர். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
அரங்கத்தில், போர் பற்றிய குறும்படம் காட்டப்பட்டது...அது, டிச., 4, 1971ம் ஆண்டு, நள்ளிரவு நேரம்... ராஜஸ்தான் மாநிலம், லோங்கேவாலா தார் பாலைவனத்தில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையில், மேஜர் குல்தீப் சிங் சாந்த்பூரி தலைமையில், 120 வீரர்கள் கொண்ட, 23வது பஞ்சாப் பட்டாலியன், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது.நுாற்றுக்கணக்கான பீரங்கிகளுடன், 3,000 பாகிஸ்தான் வீரர்கள் லோங்கேவாலாவை நோக்கி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
'ஆனந்த விகடன்' 1953, தீபாவளி மலரில், ராஜாஜி எழுதிய வாழ்த்து செய்தி:சிரிப்பு நல்ல வழியில் வர வேண்டும்; கோபச் சிரிப்பு, பொறாமை, துவேஷ சிரிப்பு உதவாது; வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த சிரிப்பே ஆரோக்கியச் சிரிப்பு; அதுவே, அச்சில் ஏற்றத்தக்க சிரிப்பு.நல்ல விகடங்களை எளிதில் அனுபவிக்கலாம். படித்தவுடனே, படத்தை பார்த்த உடனே சிரிக்கிறோம். ஆனால், அவற்றை கற்பனை செய்து, நல்ல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
எது அவமானம்? வீழ்வது அவமானமல்லவீழ்ந்தே கிடப்பது தான்அவமானம்!பொறுமை காப்பதுஅவமானமல்லசோம்பலாய் இருப்பது தான்அவமானம்!கோபம் கொள்வதுஅவமானமல்லகாரணமின்றி கோபப்படுவது தான்அவமானம்!ஆசைப்படுவது அவமானமல்லபேராசைப்படுவது தான்அவமானம்!பேசுவது ஒன்றும்அவமானமல்லதேவையற்றதை பேசுவது தான்அவமானம்!அறியாமை ஒன்றும்அவமானமல்லஅறிந்துகொள்ள முயலாதது தான்அவமானம்!தவறு செய்வது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
வெளிநாடுகளில், சில நுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடங்களைக் கூட, உலக அதிசயமாக போற்றுகின்றனர். ஆனால், கலைநயமும், அதிசயங்களும் நிறைந்த, நம் ஊர் கட்டடங்களோ உலகின் வெளிச்சத்துக்கு வராமலே உள்ளன.கல்லுக்குள் ஏழு ஸ்வரங்களை வைத்தவர்கள், நம் முன்னோர். இந்த அதிசயம், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் தான் உள்ளது. இங்குள்ள கல் துாணை தட்டினால், 'சரிகமபதநி' என்ற ஏழு இசை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
''தீபா... ஜன்னல் பக்கத்துல நின்னு, பொம்பள பிள்ள தெருவ வேடிக்கை பாக்கக் கூடாதுன்னு எத்தினி வாட்டி சொல்றது... வா, வந்து இந்த மசாலாவ அரைச்சுக் குடு,'' என்று சமையற்கட்டிலிருந்து கூச்சல் போட்டாள், விமலா. உடனே, சமையற்கட்டிற்கு விரைந்து, அம்மியின் முன் உட்கார்ந்து, இறுகிய முகத்துடன் மசாலாவை அரைக்கலானாள், தீபா.''என்னடி, உன் ஆத்திரத்த அம்மிக் குழவி மேல காட்டுறியா... மசாலா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில், மிகவும் பிரபலமான தெரு, கப்பாபாஷி தோகு சாலை. இத்தெருவின் இருபுறங்களிலும், 170க்கும் அதிகமான கடைகள் உள்ளன. சமையலுக்கு தேவையான, தேக்கரண்டி முதல் அண்டா, குண்டா, பிரியாணி டபரா செட்டிலிருந்து, பிளாஸ்டிக், பீங்கான் பாத்திரங்கள் வரை, அனைத்து சமையல் பாத்திரங்களும், உபகரணங்களும் இக்கடைகளில் விற்கப்படுகின்றன. ஒரே தெருவில் உள்ளதால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
எல்லாருக்கும் விருப்ப மானது தான் வாழைப்பழம். அதே சமயம், அதன் தோலின் பலன்களை தெரிந்து கொண்டால், அதை, வீசி எறிய மாட்டீர்கள்.முள்ளை எடுக்க வேண்டுமா? கைகளிலோ, பாதத்திலோ மரச்சில்லு அல்லது முள் குத்தினால், அந்த இடத்தில் வாழைப் பழத்தோலை மெல்ல தடவுங்கள்; பின், அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால், எளிதில், முள் வெளி வந்துவிடும்.சொரியாசிஸ் பிரச்னையா...சொரியாசிஸ் போன்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
காட்டிலிருந்து ஊருக்குள் புகும் யானைகள், மனிதர்களை கொல்வதும், உடைமைகளை தகர்ப்பதும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. அதனால், கேரள விவசாய பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர், எஸ்.கோபகுமார், காட்டு யானை, ஊருக்குள் வரும்போது, 2 கி.மீ., தொலைவிலேயே மொபைல் போனில் தகவல் கிடைத்து விடும் விதமாக, ஒரு தொழில்நுட்பத்தை, உருவாக்கியுள்ளார். இந்த சக்தி வாய்ந்த கேமராக்கள், யானைகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
இந்திய தலைநகரான புதுடில்லியிலுள்ள, நொய்டா பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படிப்பவர், ஏஞ்சல் செவானி. இவர், விலை உயர்ந்த ஆடைகளை அணியும்போது, வறுமையில் வாடுவோரை நினைத்து வருந்துவார். அதன் விளைவாக, தான் ஓரிரண்டு முறை பயன்படுத்திய ஆடைகளில், ஏதாவது சித்திரம் வரைந்து, புதுத்துணி போல் மாற்றி, ஏழை பெண் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார்.'அவர்கள் இதை உடுத்தியிருப்பதை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
'தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்' என்பது, ஆங்கில பழமொழி. பிரதீப் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில், மாமரத்தில் இருந்து மாங்காய்களை பறித்துப் போட, இரண்டாயிரம் ரூபாய் கூலியாக கேட்டார், வேலையாள். இதனால், அதிர்ச்சியடைந்த பிரதீப், 150 ரூபாய் செலவில், கம்பிகளை வாங்கி, 'ப்ரூட் பிளக்கர்' என்று ஓர் எளிய கருவியை கண்டுபிடித்தார். இக்கருவியின் மூலம், உயரமான மரங்களில் இருந்து கூட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
ஜோத்பூரில் உள்ள கால்நடை ஆராய்ச்சியாளர் வி.கே.மாத்துார்; இவர், சில ஆண்டுகளுக்கு முன், தமிழகம் வந்து, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டார். அப்போது கோடை காலம் என்பதால், வெயில் சுட்டெரித்தது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள், சீமைகருவேல மரங்களில் இருந்து காய்ந்து விழும் விதைகளை தின்பதை பார்த்துள்ளார்.உடனே, அந்த விதைகளை எடுத்து ஆராய்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
நிலப்பரப்பில், உலகின் ஏழாவது பெரிய நாடு, இந்தியா. அடுத்த, சில ஆண்டுகளில், உலகில், மொத்த உழைக்கும் சக்தியில், கால் பங்கினர் இந்தியர்களாக தான் இருப்பர்.* கணிதத்தில், பை என்பதன் மதிப்பை கணக்கிட்டவர், பவ்தயானா. இவர்தான் இப்போதும் உபயோகத்தில் உள்ள பல்வேறு கணித முறைகளை கண்டுபிடித்தவர்.* உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறை இந்தியாவுக்கு சொந்தமானது. இன்றும், அஞ்சல் துறையை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
இன்றைய இளைஞர்கள், தங்கள் காதலிகளை கவர, வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சீனாவைச் சேர்ந்த, சென்மில் என்ற இளைஞர், நீண்ட காலமாக ஒரு பெண்ணை காதலித்தார்; ஆனால், அந்த பெண், அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.நண்பர்களின் உதவியுடன், அந்த பெண்ணை, ஒரு ரகசிய இடத்துக்கு வரவழைத்தார், சென் மில். அங்கு ஏற்கனவே, ஏராளமான ரோஜாப்பூக்களை கொட்டி, அதில், விலை உயர்ந்த, 25 ஐபோன்களை கொண்டு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X