Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
'சூரியன் உதிப்பதை பார்ப்பவன் பாக்கியசாலி; பார்க்காதவன் துரதிர்ஷ்டசாலி...' என்பது கிராமத்து சொலவடை. சூரியன் உதிக்கும் முன் எழுந்து, சூரியதோயத்தை தரிசித்து, வணங்கி, தன் கடமையைச் செய்பவனின் வாழ்வில் வெற்றி குவியும். அதனால், அவன் வாழ்வு செழித்து பாக்கியசாலி ஆகிறான். 11:00 மணி வரை இழுத்துப் போர்த்தி தூங்கி, உழைக்கும் கடமையை மறப்பவன், வாழ்வில், உடலில் பல்வேறு நோய்களும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
பரிகார ராசியா, பரிகாச ராசியா?என் தோழியின் கணவருக்கு, ஜாதகப் பித்து அதிகம். சமீபத்தில், சனி பெயர்ச்சி பலன்களை படித்தவர், 'எனக்கு பிரச்னையில்லை; நல்ல பலன்கள் நடக்கப் போகுது. உனக்கு தான், பரிகார ராசி; வாயை திறந்தாலே வம்பு வருமாம். இனிமே, சாப்பிட மட்டும் வாயை திற...' என்று பரிகாசம் செய்ததோடு, 'உன்னை புடிச்ச கிரகம், எங்களையும் ஆட்டி வச்சு, கூத்து பாக்கப் போவுது...' என, வசவு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
மதுரை, 'ஸ்ரீபாலகான சபா' சென்னையில் முகாமிட்டிருந்த சமயம். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் தான் சகோதரர் எம்.ஜி.ஆர்., வீடு இருந்தது. காலையிலும், நாடகம் முடிந்த பின்பும் மற்றும் ஓய்வு நேரங்களிலும் அவரது வீட்டிற்குச் செல்வேன். அவரது அம்மா, என்னையும் ஒரு மகனாக எண்ணி பழகியதை, என்னால் மறக்க முடியாது.இரு மலர்களால் தொடுக்கப்பட்ட எங்களுடைய நட்பை பற்றி சொல்ல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
லென்ஸ் மாமாவின் நண்பர், அமெரிக்க அரசில் உயரதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் நம்மூர்க்காரர். சமீபத்தில், அவர் சென்னை வந்தபோது, லென்ஸ் மாமா அறிமுகம் செய்து வைத்தார்.பொதுவான அறிமுகத்திற்கு பின், என்னுடைய சந்தேகங்களை கேட்க ஆரம்பித்தேன். நேரமோ மாலை, 7:00 மணி. கடுப்பாகி விட்டார் மாமா. அமெரிக்க நண்பருடன் உற்சாகபான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நான், 'சப்ஜெக்ட்டிவ்' ஆக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
ஏ.சண்முகசுந்தரம், துவரிமான்: நண்பர்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?நாம் துன்பத்தில் இருக்கும் போது நம்மிடம் வருத்தப்படுவது போல் நடித்து, பிறரிடம் நம்மை கிண்டல் செய்து, நம் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள், ஒன்று! நம் துன்பத்தில் பங்கு கொண்டு துன்பத்தை நீக்க, வழி செய்யத் தெரியாதவர்கள், இரண்டு! துன்பம் நீங்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்பவர்கள், மூன்று! ஆக, நண்பர்களை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
'உங்களை பார்த்தா ஒரே பொறாமையா இருக்கு...' என, ஒரு முறையாவது சொல்லாதவர்கள் உண்டா? நம்மால் முடியாத ஒன்றை, பிறர் சாதிக்கும் போது, அதை பார்த்து வியப்பதை விடுத்து, 'நற நற' வென்று பல்லைக் கடிக்கிறோம் என்பதே உண்மை. இவ்விடத்தில் தான், பொறாமைத் தீ பற்றி எரிகிறது.'என்னோட படிச்சவன் இன்னைக்கு எவ்வளவு புகழோட இருக்கான்; நாமும் இருக்கிறோமே...' என்று எண்ணத் துவங்கி விட்டாலே, அது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
அஜித்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படமான, தீனாவில், அஜித் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால், அதன்பின், விஜயகாந்த், அமீர்கான், சிரஞ்சீவி மற்றும் விஜய் என, பல முன்னணி கதாநாயகர்களை அவர் இயக்கி விட்டபோதும், மீண்டும் அஜித்துடன் இணையவில்லை. இந்நிலையில், மீண்டும் அஜித்தை இயக்க விரும்பிய முருகதாஸ் அதுபற்றி அவரிடம் சொன்னதையடுத்து, 'என்னை அறிந்தால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
கடந்த, 1944ல், குண்டூர் கோபால் எழுதிய, 'நட்சத்திர மாலை' நூலிலிருந்து: டி.ஆர்.ராஜகுமாரி பிரபலமானதற்கு அவருடைய உருவத் தோற்றமே காரணம். ராஜகுமாரி பிரமாத பாடகியல்ல; நடிப்பிலும் அப்படித்தான்! அழகில் அவரை விடச் சிறந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இருப்பினும், ராஜகுமாரி என்றால், ரசிகர்களுக்கு ஒரு மயக்கம். அந்த மயக்கம் இருக்கும் வரையில், ராஜகுமாரி எது செய்தாலும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
அன்புள்ள மகளுக்கு,என் வயது 75; இறைவனுக்கும், மனசாட்சிக்கும் பயந்து எழுதப்பட்டுள்ள இந்த மனக் குமுறல்களில் ஒரு சொல் கூட, உண்மைக்குப் புறம்பானதென்று தயவு செய்து எண்ணி விட வேண்டாம்.பர்மாவில் பிறந்து, இரண்டாம் உலகப் போரில், நான்கு வயதிலேயே பெற்றோரை இழந்தேன். பாட்டியுடன் கோல்கட்டா வரை நடந்து, பின் தமிழகம் வந்து, ஆடு - மாடு மேய்த்து, சில மனித தெய்வங்களின் உதவியால், பள்ளியின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
கடந்த, 2011ல் குற்றாலம் வந்த வாசகர்களில் ஒருவர் டாக்டர் ரம்யா; கடலூரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, சாதாரண பள்ளியில் படித்து, மெரிட்டில் எம்.பி.பி.எஸ்.,எம்.டி(மகப்பேறு மருத்துவம்)முடித்தவர். அத்துடன், வேலூர் சி.எம்.சி.,யில், 'பெல்லோஷிப் ரீபுரோடக்டிவ் மெடிசின்' என்ற சிறப்பு படிப்பையும் படித்துள்ளார்.ஆயிரக்கணக்கான குழந்தை இல்லா தம்பதியினரின் புன்னகைக்கு காரணமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
'வேம்பின் இலையுள் கனியினும் வாழை தன் தீஞ்சுவை யாதும் திரியாதாம் - ஆங்கே இனந்தீதெனினும் இயல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்கம் அரிது' என்பது நாலடியார். வேப்ப இலைக்குள் வைத்து பழுக்க வைக்கப்பட்டாலும் வாழைப் பழமானது, எப்படி தன் இனிப்பு சுவையை இழப்பதில்லையோ, அதைப் போன்றே நல் இயல்பு கொண்ட நல்லவர்கள், எக்குடியில் பிறந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் தீய வழியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
சமாதி!தேசப் பிதாவே...உன் பிறந்த நாள்இறந்த நாள் மட்டுமேஉன்னை நினைவு கூர்கிறோம்!உன் சிலைக்குமாலையிடுகிறோம்வணங்கி மரியாதைசெலுத்துகிறோம்!பாடல்கள் பாடுகிறோம்பஜனைகள் செய்கிறோம்ராட்டை சுற்றுகிறோம்மத ஒற்றுமை பேசுகிறோம்!ஒரு நாள் மட்டுமேஇந்த நிகழ்வுகள்மறுநாளிலேயே உன்னைமறந்து விடுகிறோம்!என்ன செய்வது...எங்களால் உன்னைப் போல்எளிமையாக, இயல்பாகவாழ முடியாது!ராட்டைச் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
அந்த மாணவர் சந்திப்புக்கு பின், இடிந்து போனான் சரணவன். தமிழ் வருட பிறப்பு அன்று, பழைய மாணவர்களின் சந்திப்பு நடந்தது. அன்றிலிருந்து அவன் சோகத்தின் பிடியில்!இவனுடன் படித்த கணபதி, படித்து முடித்து, வேலை நிமித்தம் அமெரிக்கா சென்றான். திடீரென்று, அமெரிக்காவில் இருந்தே, உடன் படித்த மாணவர்கள், சிலரின் கைபேசி எண்களை சேகரித்து, ஒவ்வொருவருடனும் பேசி, அவர்களுடன் தொடர்பில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
அமெரிக்காவின் பிரபல மாடலும், 'டிவி' மற்றும் திரைப்பட நடிகையுமான கிம் கர்தாஷியனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில், பிரிட்டனை சேர்ந்த ஜோர்டான் ஜேம்ஸ் பரோக் என்பவர், கிம்மின் வெறிப்பிடித்த ரசிகர். இத்தனைக்கும், இவர், பிரபலமான, 'மேக் - அப்' நிபுணரும் கூட. கிம்மின் மீது கொண்ட வெறியால், அவரைப் போலவே மாற வேண்டும் என்ற விபரீத ஆசை இவருக்கு வந்தது. இதற்காக, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
படத்தில் உள்ள மீன், நெத்திலி போன்று காட்சியளித்தாலும், இது நெத்திலி மீன் அல்ல; குழவால் மீன். வேறு எங்கும் காணப்படாத இம்மீன், கொல்லம் - அஷ்ட்டமுடி நீர்த்தேக்கத்தில் மட்டும் காணப்படுகிறது. அதுவும், மழைக் காலத்தில் மட்டுமே தென்படுகிறது.கேரள அரசின் முன்னாள் மீன் வள ஆராய்ச்சி கமிஷன் தலைவர் சஞ்ஜீவ் கோஷ் கூறுகையில், 'அஷ்ட்டமுடி காயலில், 39 வகை, இனத்தை சேர்ந்த, 97ரக மீன்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
மதுரா நகரில் உள்ள பிருந்தாவனம், கண்ணன் வாழ்ந்த இடம் என போற்றப்பட்டாலும், இன்று, 'விதவைகளின் நகரம்' என்றே அழைக்கப்படுகிறது. காரணம், இங்கு, 60,000க்கும் மேற்பட்ட வயதான விதவைகள் உள்ளனர்.'கண்ணன் காலடி பட்ட பூமியில் கால் வைப்பது புண்ணியம்...' என்று நினைக்கும் பக்தைகள், தங்களை கோபிகைகளாக நினைத்து இங்கு வருகின்றனர். மேலும், சிலர், தங்கள் வீட்டில் உள்ள வயதான விதவை பெண்களை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
கடவுள் இருப்பதாக, மக்களை நம்ப வைக்க, அனைத்து மதங்களும் போட்டி போடும் சூழ்நிலையில், புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ், 'கடவுள் இல்லை...' என்று அடித்துக் கூறுகிறார், சக்கர நாற்காலியில் தான் வாழ்க்கை என்ற நிலையிலுள்ள இவர், 'விஞ்ஞானத்தின் மகத்துவம் அறியாத காலத்தில் கடவுள் உண்டு என்ற நம்பிக்கை பரவியது. நான் நாத்திகன்; விஞ்ஞானத்தை வெல்ல எந்த மதங்களாலும் முடியாது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
ஹாலிவுட் படங்களில் ஆக் ஷன் வேடங்களில் வெளுத்து வாங்கும் டாம் குரூசை ஞாபகமிருக்கிறதா? 52 வயதானாலும், இவருக்கு ஹாலிவுட்டில் இன்னும் ரசிகைகள் அதிகம். ஏற்கனவே, மூன்று முறை திருமணமாகி, மூன்று மனைவிகளையும் விவாகரத்து செய்துள்ள டாம், தற்போது, மீண்டும் காதல் வலையில் விழுந்துள்ளார். இம்முறை, இவரின் வலையில் சிக்கியுள்ளவர், படப்பிடிப்புகளின்போது, இவருக்கு உதவியாளராக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
பஞ்சாப் மாநிலம் பதிந்தா பகுதியைச் சேர்ந்த ஹர்பிரித் தேவுக்கு, சின்ன வயதில் இருந்தே, காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) ஓட்ட வேண்டும் என்ற ஆசை. இளைஞரானதும், அந்த ஆசை விஸ்வரூபம் எடுத்தது. ஆள் இல்லாத சாலைகளில் காரை பின்னோக்கி செலுத்தி, கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். நன்றாக பயிற்சி பெற்றதும், முக்கிய சாலைகளிலும் காரை பின்னோக்கி ஓட்டிப் பழகினார். வாடகை கார் ஓட்டும் இவர், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
முன்னாள் ஓட்டப் பந்தய வீராங்கனை பி.டி.உஷா, விளையாட்டு பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சிறு வயதில், பய்யோளி கிராமத்தில் ஓட்டப் பயிற்சி செய்யும் போது, அவர் தந்தையும் ஒரு தடியுடன் அவர் பின்னாலேயே ஓடுவார். காரணம், இக்கிராமத்தில் நாய் தொல்லை அதிகம். யாராவது ஓடுவதை கண்டால் நாய்களும் துரத்திக் கொண்டு, ஓடுவது வழக்கம். இதைக் குறிப்பிட்ட உஷா, 'இப்படி தான் வேகமாக ஓட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X