Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
பகவானை ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்றெல்லாம் சொல்கின்றனர். ஆபத்து காலத்தில் உதவக் கூடியவன் பகவான் தான் என்றும், நாதன் என்பதற்கிணங்க சமயத்தில் காப்பாற்ற கூடியவன் என்றும், பகவானை குறிப்பிடுகின்றனர். பகவானுக்கு ஆயிரம் நாமாக்கள் உள்ளன. அவைகளில் எதைச் சொல்லி கூப்பிட்டாலும் ஓடி வருவான். இதை சகஸ்ர நாமம் என்பர். இது தவிர, சுருக்கமாக அஷ்ட்டோத்ரம் என்று நூற்றியெட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
பிப்., - 2 தை அமாவாசை!மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது. ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசையை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
* மனைவிமார்களே...வெளிநாட்டு சம்பாத்தியத்திற்கு ஆசைப் பட்டு, வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பலரின் நிஜமான நிலைமை, சொந்தக் குடும்பங்களுக்கே தெரிவதில்லை. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களும், தாங்கள் அங்கு படும் பாடுகளையும், துயரங்களையும், அவப்பெயர்களையும் மறைத்து, கட்டிய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும், தங்கள் கஷ்டங்களை தெரியவிடாமல் பார்த்துக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
வாசகர் ஒருவர் எழுதிய ஜோக்... இவர், ரிட்டயர்டு பார்ட்டி என்றாலும் குசும்பு, குறும்பு தாண்டவமாடும் இளைஞர் தான்! இதோ அவரது ஜோக்... ஒரு அலுவலகத்தில் அதன் நிர்வாகி, தன் சிப்பந்திகள் லீவு கேட்டால் கொடுக்காமல், சமாதானமாக பேசி லீவு தராமல் வேலை பார்க்க வைத்து விடுவார். தலைவலி என்று லீவு கேட்டால், "எனக்கும் தான் லேசாக தலைவலி, தைலம் தடவிண்டு ஆபிஸ் வரலையா? போய் வேலையைப் பார்...' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
*எல்.எஸ்.பிச்சைமணி, பல்லடம்: எனக்கு ஒரே வாரிசு, என் மகன். அவனுக்கு, நான் எவ்வளவு சொத்து சேர்த்து வைக்க வேண்டும்?ஒரு காசு சேர்த்து வைக்காதீர்கள். அதற்கு பதில், நல்லா படிக்க வையுங்கள். நல்ல பழக்க, வழக்கங்களை கற்றுக் கொடுங்கள். பண்புள்ளவனாக, அனைவரையும் நேசிக்கும் குணம் கொண்டவனாக்குங்கள்.****எஸ்.பவித்ரா, திருத்தணி: உங்களுக்கு ஒரு காதல் கடிதம் எழுதி வைத்துள்ளேன். அதை போஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
இதுவரை:நரேன் - மதுரிமா திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சாண்டியாகோ நகரில் நடைபெற்றது. இனி, தன் வாழ்வில், தனக்கும், மதுரிமாவுக்கும் இடையே வைத்தீஸ்வரனோ, விமான பணிப்பெண் கவிதாவோ எந்தவித இடைஞ்சலையும் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தான் நரேன். லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்ப, இருவரும் தயாராக இருந்தபோது, மதுரிமாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது —சைகை மூலம் நரேன் என்னவென்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
குழந்தைகளுடன் எவ்வளவு நேரம் கழித்தோம் என்பதை விட, அதை எப்படிக் கழித்தோம் என்பதே முக்கியம். ஒருவர், தான் ஒரு உதாரணமாக இருப்பதன் மூலம் கற்பிக்கலாம். குழந்தைகள் எதையும் கூர்ந்து கவனிக்க கூடியவர்கள். ஏதாவது ஒன்று பொய்யானது அல்லது நடிக்கப்படுவது என்றால், அதை உடனே கண்டுபிடித்து விடுவர். அவர்கள், உன்னை நம்பி மகிழ்கின்றனர் என்றால், மிக இளம் வயதிலேயே உங்களுடன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
இசை ஆல்பம் தயாரிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்உலக அளவில் ஒரு இசை ஆல்பம் வெளியிட, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முகாமிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த ஆல்பத்தில், அவருக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற, "ஜெய்ஹோ' என்ற பாடலும் அடங்கும். அப்படத்தில் சுக்வந்தர்சிங் பாடிய இப்பாடலை, ஆல்பத்தில் பிரபல ஹாலிவுட் பாடகி நிகோல் ஷெர்சிங்கர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
இரவு, "ஆப்÷ஷார் டீம்' உடன் பேசி முடித்து, படுக்க ரொம்பவுமே நேரமாகியிருந்தது. அதனால் காலையில், கண்ணே திறக்க முடியாத அளவு எரிச்சல் ரேவதிக்கு. இருந்தாலும், காலை ஒன்பது மணிக்கு இருந்த கிளையண்ட்டுடனான மீட்டிங் நினைவு, அவளை படுக்கையிலிருந்து பிடுங்கி எழுப்பி, கிளம்பச் சொன்னது. கார்ன் பிளேக்சை பால் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, இரவு சமைத்ததில் மீதமிருந்ததை, மதியத்துக்கு பேக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
சீனர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டம் தூள் பறக்கிறது. இது, அவர்களுக்கு முயல் ஆண்டு. எலி, எருது, புலி, முயல், கடல் நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி பெயர்களைக் கொண்ட சந்திரமுறை புத்தாண்டை அவர்கள் காலம் காலமாகக் கொண்டாடி வருகின்றனர். வசந்த விழா என்றும் இது வழங்கப்படுகிறது. சீனர்களின் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கும் புராதன ஆண்டுக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
அன்புள்ள அம்மா —நான் ஒரு பெண்; வயது 27. பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், "சிஸ்டம் அனலிஸ்ட்'டாக பணிபுரிகிறேன். சமீரா ரெட்டி போல உயரமாய் இருப்பேன். ரெட் ஒயின் சூப்பும் பழக்கம் உண்டு. புகைக்கும் ஆண் நண்பர்கள் உடனிருக்கும் போது, அவர்களின் சிகரட்களை வாங்கி, புகைத்து பார்த்தது உண்டு. திருமணத்திற்கு முன், பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பது என் கொள்கை. என் அப்பா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
- ஆர்.சீனிவாசன் வாழ்க்கையில் பிரகாசிக்க, ஊனம் ஒரு தடையில்லை என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண் சுவேதா. இவரின் தந்தை கணேசன், இந்து மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர். தாய் டெய்சி, பெருங்குடி பஞ்சாயத்து பள்ளி ஆசிரியை. சுவேதா, தற்போது, அரசு கவின் கல்லூரியின் இரண்டாம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
* நீண்ட நகங்கள்... - இப்படியும் சாதனை!கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக, ஒவ்வொருவரும் விதவிதமான சாதனைகளைச் செய்வர். அமெரிக்காவில் ஒரு பெண், தன் கை விரல்களில் நீண்ட நகங்களை வளர்த்து சாதனை படைத் துள்ளார்.அந்த பெண்ணின் பெயர் லீ ரெட்மான்ட். இளம் வயது முதலே ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என நினைத்தார். கை விரல்களில் மிக நீண்ட நகம் வளர்த்து, புது சாதனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள் லலிதா. தினசரி பூஜையை முடித்திருந்தார் விசு.""ஏன்னா... நாலு பாக்கெட் பால் வாங்கிண்டு வந்துடறேளா?''""பால்காரன் பால் போடலயா?''""எக்ஸ்ட்ரா பாலுன்னா... கொழந்தேல்லாம் வர்றதோன்னோ?''""ஓ... சரி போயிட்டு வந்துடறேன்!''மணி பதினொன்று ஆகிவிட்டது. லலிதாவும், விசுவும் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை வாசலை எட்டி பார்த்தபடி இருந்தனர்.வாசலில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2011 IST
* பொய்யெனும் கற்பனைக்குப்பூவைத்து அழகு பார்ப்பவன் கவிஞன்...உண்மைகளைக் கூர் தீட்டிகுறிவைத்து வீசுபவனும் அவன்தான்!* கோடி பணம் கொடுத்தாலும்விஷ விருட்சங்களுக்குவேர்களாக மாட்டான்...அவன் —பாதையோர வேலியில்படரும் பூங்கொடி போல்சுதந்திரம் பழகியவன்!* கவிஞன் —வார்த்தைகளை வசப்படுத்திக் கொண்டுசிந்தனை உளியால்சிற்பம் செதுக்குவான்...தனிமை தவமிருந்துஇனிமை கவிதைகளை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X