Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
பிறவி ஜென்மம் நன்றாக அமைய வேண்டும் என்று எல்லாரும் விரும்புவர்; ஆனால், அவரவர் விருப் பப்படி அது அமைவதில்லை. காரணம், பூர்வ ஜென்ம பாவ - புண்ணியங்கள்.புண்ணிய கர்மா செய்திருந்தால், அடுத்த ஜென்மாவில் குறை எதுவுமின்றி சுகமாக வாழலாம்; பாவ கர்மா செய்திருந்தால், ஏதோ ஒரு ஏழ்மையான இடத்தில் சில ஊனங்களுடன் பிறக்க வேண்டி இருக்கும். அப்போது தெய்வத்தை நிந்தித்து பயனில்லை. சிறு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
பிப். 7 தைப்பூசம்தைப்பூசத் திருவிழா, நம் சுமையை இறைவனிடம் ஒப்படைக்கும் நன்னாளாகத் திகழ்கிறது. வாழ்க்கையில் மனிதன், பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். அந்தக் கஷ்டத்தை சிலரிடம் சொல்லி, ஆறுதல் தேட முயற்சிக்கலாம். ஆனால், அந்த சிலர், எந்தளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பர்... அவர்கள், நம் கஷ்டத்தையே அவர்களுக்கு சாதகமாக்கி, ஆதாயம் தேட முயற்சிக்கலாம்; கேலி செய்யலாம்.ஆனால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
கடன் வாங்குபவர்களே... உஷார்!சமீபத்தில் வங்கி ஒன்றில், கடன் வாங்க மனு செய்திருந்தேன். நான் கொடுத்திருந்த பல தகவல்களை உறுதி செய்து கொண்ட பின், கடன் வழங்குதல் பற்றிய முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறினர்.ஒரு வாரம் சென்றதும், நான் 2008ல், ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கியிருந்த கடன் நிலுவையிலிருப்பதை, மனுவில் தெரிவிக்காமல் இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.நான், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
எஸ்.எல்.டி.இ., ஸ்கூல் என்று தான், எங்க கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்குப் பெயர்.அரசாங்கம் அளித்து வரும் மானியத்தில் நடக்கும் பள்ளியை, "எஸ்டேட் ஸ்கூல்' - அரசு உதவியில் நடைபெறும் பள்ளி என்பர்."ஸ்ரீ லட்சுமி தேவி எஸ்டேட் எலிமென்ட்டரி ஸ்கூல்' என்பதை, என் தந்தை நூறாண்டுகளுக்கு முன் நிறுவினார்.இந்த 2011ல், அதனுடைய நூற்றாண்டு விழா நடந்தேறியது. அப்பா இப்போது இல்லை, பள்ளியை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
குப்பண்ணா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். வீட்டுக்குள்ளிருந்து வெளிவந்த அவர் மனைவி, "நம்ம வீட்டு முன் கொஞ்சம் இடம் இருக்கிறதே, அதில் ஏதாவது காய்கறிப் போடலாம்...' என்று யோசனை கூறினார்.சென்னையை அடுத்து, திருநீர் மலையில் புது வீடு கட்டி இருக்கிறார் குப்பண்ணா."ஆமாம்... ஆட்டுக் குட்டிகளை துரத்திக் கொண்டிருக்க நான் இருக்கிறேனே!' என்று குப்பண்ணா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
*பே.புவனேஸ்வரி, அழகாபுரி: "நடப்பதெல்லாம் நன்மைக்கே...' என்று நினைக்கும் எனக்கு, நன்மையே நடப்பதில்லையே?நன்மையில்லாத விதத்தில் கை, கால், கண் ஏதும் போகலியே... நீங்கள் குடி இருக்கும் வீடு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படவில்லையே... நீங்கள் பார்க்கும் வேலை, பறி போய் விடவில்லையே... இதெல்லாம் இல்லாமல் இருப்பதே நன்மை தானே... இப்படிப்பட்ட சிந்தனைக்கு, மனதை பக்குவப்படுத்திக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
""ம்... பேஷன்ட் பேரு சொல்லுங்க,'' ரிசப்ஷனில், பீமனுக்கு தங்கை மாதிரி இருந்த நர்சு, கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்துக் கொண்டே இந்தியில் கேட்டாள்.சொன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தார் ராஜாராமன். பதில் வராமல் போகவே, திடீரென நிமிர்ந்தாள்.""ம்... அது வந்து... பிரியம்வதா ராஜாராமன்.''குனிந்தாள். நான்கு நொடிகள் சென்றதும், மீண்டும் நிமிர்ந்தாள். இந்த முறை ஆங்கிலம், ""ரூம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
"மூழ்கவே மூழ்காத மிதக்கும் சொர்க்கம்' என, புகழப்பட்ட, சொகுசு கப்பலான டைட்டானிக், ஏப்., 15, 1912ல் வடக்கு அட்லாண்டிக் கடலில், பனிப்பாறையில் மோதி, கடலுக்குள் மூழ்கியது. உலக மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இவ்விபத்தில், 1,500க்கும் மேற்பட்டோர் பலி யாயினர். சில ஆண்டுகளுக்கு பின், கடலியல் ஆராச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள், கப்பலில் இருந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
கமல்- அஜீத் புதிய கூட்டணி!கமல் நடித்த தசாவதாரம் படத்தை தயாரித்த, ஆஸ்கர் பிலிம்ஸ், மீண்டும் கமலை வைத்து, ஒரு படம் தயாரிக்கிறது. இதில், கமலுடன் அஜீத்தும் இணைகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், கமல் நடித்து வரும் விஸ்வரூபம், அஜீத் நடித்து வரும் பில்லா 2, படப்பிடிப்புகள் முடிந்ததும் தொடங்கும்.— சினிமா பொன்னையா.நடிகை தேடும் விதார்த்!"மனசுக்கு பிடித்த நடிகையை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
அமெரிக்காவின் புகழ்பெற்ற விளம்பர நிறுவனத் தலைவர், "டேவிட் ஒ கில்வி' தன் சுயசரிதையில் எழுதுகிறார்:ஈடுபட்டு உழைப்பவர்களை நான் வியந்து பாராட்டுகிறேன். துடுப்பெடுத்து வலிக்காமல், படகிலே உட்கார்ந்து பயணம் செய்வோரை எனக்கு பிடிக்காது. உள்ளதற்கும் குறைவாக வேலை செய்வதை காட்டிலும், உள்ளதற்கும் அதிகமாக வேலை செய்வது தான் உற்சாகம். அதிகமாக உழைக்க உழைக்க வேலையாட்களின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
பனிக்கட்டிகளால் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்காகவே ஜப்பான், கனடா, நார்வே, சீனா போன்ற நாடுகளில், உறை பனிக் காலங்களில் சர்வதேச அளவிலான திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அழகான வளைவுகள், தத்ரூபமான உருவங்கள், கண்களையும், மனதையும் கொள்ளையடிக்கும், பல்வேறு வண்ண ஒளி பாயும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த பனிச் சிற்பங்களை, "ஜில்'லிடச் செய்யும் மைனஸ் டிகிரி செல்சியசில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
"குறையொன்று மில்லை, மறைமூர்த்தி கண்ணா...'காற்றில் கலந்து வந்த பாடல் வரிகள், காதில் தேன் பாய செய்தது.இந்த ஆண்டு, நடந்து முடிந்த சென்னை புத்தக திருவிழாவில், புத்தகம் தேடுவதை மறந்து, குரல் வந்த திசைநோக்கி மக்கள் கூடினர்.பாடல் முடிந்து, பலத்த கை தட்டல் எழுந்தது, அந்த கரகோஷம் அடங்கவும், "இப்போது பாடிக்கொண்டு இருப்பவர்கள், "ப்ரீடம் அறக்கட்டளை' யைச் சேர்ந்த, "தர்ஷன்' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
மதிப்பிற்குரிய அம்மாவுக்கு —நான், 38 வயது பெண். அரசு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரி கிறேன். என் குடும்பம் நடுத்தர வர்க்கம். எனக்கு இரு சகோதரர்கள். என் திருமணத்திற்குரிய ஏற்பாடு களைச் செய்த போது, என் அப்பா தேர்ந்தெடுத்த வரையே மணந்து கொண்டேன். அவர், பணி நிலையில் எனக்கு குறைந்தவர். இருப்பினும், அதை யாரும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை; நானும், இதை குறைவாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
சீனாவில், அலுவலகங்களில் பணி புரியும் இளைஞர்கள், தங்கள் உயரதிகாரி களின் நெருக்கடிக்கு ஆளாவதாலும், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், ஆசிரியர்களின் நெருக்கடிக்கு ஆளாவதா லும், தங்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்படுவதாக புலம்புகின்றனர். இந்த மன அழுத்தத்தை போக்குவதற்காக, சமீபகாலமாக, "பில்லோ பைட்' என அழைக்கப்படும் தலையணைச் சண்டை என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
காலூன்றி நிற்கிறோம்!* விண்ணின் உச்சியில்வீதி வலம் வந்தாலும்,நிலவின் மத்தியில்நீ, நடந்து சென்றாலும்கடைசியில்...பூமியின் முதுகில்தான்காலூன்றி நிற்கிறோம்மறுக்க முடியுமா... மானிடனே!* மலர்கள் மலர்ந்தென்னவேர் பலா பழுத்தென்னமாரிப் பொழிந்தென்னமற்ற வளங்கள் நிறைந்தென்ன!* இலவசங்கள் வாங்குவதற்குஏந்தி நிற்கும் இரு கரங்கள்,கிட்டாத மக்களுக்கோ...வாடி நிற்கும் வண்ண முகங்கள்!* மண் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
அலுப்புடன் உள்ளே நுழைந்தாள் மைதிலி. ஆபீசில் வேலை அதிகம். ஆடிட்டிங் நடக்கிறது.ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டான் நவீன்.""நவீன், அம்மா இப்பதான் உள்ளே நுழையறா. போய் முகம், கை, கால் கழுவிட்டு, காபி குடிச்சுட்டு வரட்டும்பா. நீ நல்ல பிள்ளை தானே. பாட்டிகிட்டே வா. நான் உனக்கு கதை சொல்றேன். ஸ்கூலில் சொல்லிக் கொடுத்த ரைம்ஸ் சொல்லு பார்ப்போம்,'' ஒன்றாவது படிக்கும் பேரனை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
உலகின் மிக உயரமான தொங்கு பாலம், மெக்சிகோவில் அமைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் பலுவார்ட் ஆற்றின் குறுக்கே, இரண்டு மலை முகடுகளுக்கிடையில், அந்தரத்தில் இந்த பாலம் அமைக்கப் பட்டுள்ளது. பள்ளத்தாக்கின் அடியில் இருந்து, 403 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் மொத்த நீளம், 1,124 மீட்டர்.மலை முகடுகளின் இரு பக்கமும் அமைக்கப்பட்டுள்ள கேபிள்கள், இந்த பாலத்தை தாங்கி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
உலகின் மிகச் சிறிய மீன் தொட்டியை, ரஷ்யாவை சேர்ந்த ஓவியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். கண்ணாடியாலான இந்த சின்னஞ்சிறு மீன் தொட்டியை, உள்ளங்கையில் ஏந்த முடியும். இரண்டு தேக்கரண்டி அளவிலான தண்ணீரை மட்டுமே இதில் ஊற்ற முடியும். 30 மி.மீ., அகலமும், 24 மி.மீ., உயரமும் கொண்ட இந்த தொட்டிக்குள், மிகச் சிறிய அளவிலான தாவரம், கற்கள் ஆகியவையும் உள்ளன.மிகச் சிறிய அளவிலான ஓரிரண்டு மீன்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X