Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
கை, கால், காது, கண், நாக்கு, என, அனைத்து உறுப்புகளும் நன்றாக இருப்போர், அங்கஹீனம், காது கேளாமை, பேச்சு இழந்தோர், பார்வையற்றோர் ஆகியோரைப் பார்க்கும் போது, 'ஆண்டவா... எந்தக் குறையும் இல்லாமல் என்னைப் படைத்தாயே...' என்று, இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். அதே சமயம், தெருவில், யாராவது சிரித்து பேசி செல்வதைப் பார்த்தால், 'சிரிப்பைப் பார்... சிரிப்பை! என்ன சிரிப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
பிப்.15 மாசி மகம்'மாசி மகம் என்றாலே, கும்பகோணம் தான் நினைவுக்கு வரும். இங்குள்ள மகாமக குளத்தில், இந்நாளில், புனித நீராடுவது எல்லா பாவங்களையும் போக்கி விடும். பாவம் செய்தவர்களை, 'காசிக்குப் போய் கங்கையில் நீராடு' என்று பரிகாரம் சொல்வர். ஆனால், காசியில் பாவம் செய்தவன், கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால் தான், பாவம் தொலையும் என்கிறது கும்பகோணம் தல புராணம்.ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
மனைவியை ஏலம் விட்ட, 'மா மனிதர்!'நண்பரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவருடன், 'பாருக்கு' சென்றிருந்தேன். எனக்கு, மது அருந்தும் பழக்கமில்லாததால், 'சைடிஷ்' சாப்பிட்டுக் கொண்டு, சுற்றுப்புறத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்து டேபிளில், மூன்று வாலிபர்கள் வந்து அமர்ந்தனர். சரக்கு உள்ளே போகப்போக, பேச்சு விபரீதமாக போனது. பார்ட்டி கொடுத்தவன், புதிதாய் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
சிவாஜிக்கு மிகவும் பிடித்த டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர். இவர், சிவாஜி மீது அபரிமிதமான அன்பு வைத்திருந்தார். பல ஆண்டுகளுக்கு முன், 'பொம்மை' சினிமா இதழில், தான் இயக்கிய நடிகர்களை, ஒவ்வொரு விதமான பூவுடன் ஒப்பிட்டு, ஒரு தொடர் கட்டுரை எழுதியிருந்தார். அதில், எம்.ஜி.ஆரை குறிஞ்சி மலருக்கு ஒப்பிட்டிருந்தார். நான்கு வாரம் மற்ற எல்லா நடிகர்களைப் பற்றியும் எழுதிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
சிங்கப்பூரிலிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல். எழுதியவர் பெயர் - ஸ்ரீ. அஞ்சலின் முடிவில், 'நான் ஆணா, பெண்ணா என்று உங்களால் யூகிக்க முடியுமா?' என்று, ஒரு சுவாரசியமான கேள்வி. எனக்கு யோசிக்கவே தேவை ஏற்படவில்லை. 'நிச்சயமாக, நூற்றுக்கு நூறு நீங்கள் பெண்தான்...' என்று பதில் எழுதினேன்.'எப்படி கண்டுபிடித்தீர்கள்?''வேறு என்ன... எந்த ஆண், 'நான் ஆணா, பெண்ணா, சொல்லுங்கள், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
மு.ராஜேஸ்வரி, திருவொற்றியூர்: பக்கத்து வீட்டு பெண்களுடன் எப்போதும் சினேகத்துடன் இருக்க சிறந்த வழி என்ன?அவர்கள் அவ்வப்போது ஓ.சி., கேட்கும் போது, முகம் சுளிக்காமல் கொடுக்க வேண்டும். அவர்கள் வாங்கிய புதுச்சேலை, பிளவுஸ் போன்றவை நன்றாக இல்லாவிட்டாலும், 'ஆஹா...ஓஹோ' என்று புகழ்வதுடன், 'உங்களால்தான் இவ்வளவு,'சீப்'பாக அடித்துப் பேசி வாங்க முடியும்...' என்று சொல்ல வேண்டும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
கனகசபேசன், மனைவி ராஜேஸ்வரியுடன் சினிமா தியேட்டரை அடைந்தபோது, மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது. பழைய படம் என்பதால், கூட்டம் அவ்வளவாக இல்லை. டிக்கெட் வாங்க சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்தபோது, அவரை நெருங்கிய, இளைஞன் ஒருவன்,''சார்...”என்று, தயக்கத்துடன் அழைத்தான்.'என்ன?' என்கிற பாவனையில், அவனை ஏறிட்டுப் பார்த்தார் கனகசபேன்.''சார்... என் நண்பனுக்கும் சேர்த்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
அஜீத்தின் சம்பளம் கிடுகிடு உயர்வு!ஆரம்பம் படத்திற்கு பின், அஜீத்தின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. அதற்கு முன் வரை, விஜய், சூர்யா மாதிரியே சம்பளம் வாங்கி வந்தவர், இப்போது, தடாலடியாக, 25 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில், வசூலை குவித்து வரும் அவரது, வீரம் படம், தற்போது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
அன்புள்ள அக்கா — எனக்கு வயது, 30; மூன்று குழந்தை களுக்கு தகப்பன் நான்.நான் இந்து; என் மனைவி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். என் மாமியார் கிறிஸ்துவர்; என் மாமனார் கோவில் பூசாரி. என் மாமனாரும், மாமியாரும் சில கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். என் மனைவியும், நானும் ஒருவருக்கொருவர் விரும்பினோம். பெண் வீட்டில் எதிர்ப்பு; என் மனைவியோ, 'என்னை தான் திருமணம் செய்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
சென்னை, கோடம்பாக்கம் வாசகி, விஜயா சுப்பிரமணியன், 97-ம் ஆண்டு டூரில், தன் மூன்று வயது மகள் திவ்யலட்சுமியுடன் கலந்து கொண்ட போது, அந்த குழந்தை செய்த சேட்டைகளை, கடந்த வாரம் சொல்லியிருந்தேன், அந்த குழந்தை வளர்ந்து, தற்போது, 19 வயது கல்லூரி மாணவியாக, வெள்ளி விழா டூரில் கலந்து கொள்ள போவதை அறிந்து, 'இப்ப குழந்தையிடம் குறும்புகள் குறைஞ்சுருக்கா?' என்று, கேட்டதும், 'என்ன சார் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
புரிந்து கொள்வாயா?நீநினைத்திருக்க மாட்டாய்...உன்னையேநான்நினைக்கிறேன் என்று!நீகண்டிருக்க மாட்டாய்...உன்னை நான்அணு அணுவாய்ரசிக்கிறேன் என்று!நீயோசித்திருக்க மாட்டாய்...உன்னைப் பற்றியோசிப்பதேஎன் வேலை என்று!நீதெரிந்திருக்க மாட்டாய்...உன் தேவைகள்அனைத்தும்எனக்குத் தெரியும் என்று!நீசிந்தித்திருக்க மாட்டாய்...உன்னைப் பற்றியசிந்தனைகளேஎன் சுவாசம் என்று!நீஅறிந்திருக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
சரவணன், ஆட்டோவிலிருந்து இறங்கி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நுழைய, இரண்டாவது பிளாட்பாரத்தில் தயாராக இருந்தது பாண்டியன் எக்ஸ்பிரஸ்.கையில் சூட்கேசும், தோளில் பையுமாக முன்னால் நடந்தான்.''என் கிட்ட ஒரு பைய கொடுப்பா... எல்லாத்தையும் நீயே சுமக்கணுமா,'' என்று அப்பா முத்து வினவ,''அப்பா... நீங்க அம்மாவ பத்திரமா கூட்டிட்டு வாங்க. இது ஒண்ணும் பெரிய சுமையில்ல. நம்மோட ரெண்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்: பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
அடுத்த உலக கால்பந்து போட்டி, பிரேசிலில் நடைபெற இருக்கிறது. இதற்காக, 12 மைதானங்கள் தேவைப்படுன்றன. ஏற்கனவே, ஐந்து மைதானங்கள் இருக்கின்றன. மேலும், ஏழு மைதானங்களில் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால், வேலைகள் மந்தமாக நடைபெற்றதால், நீதிமன்றம் தலையிட்டு, வேலைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. உலக கால்பந்து போட்டிக்காக, ஏராளமான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த முறை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர், ரொப் கிலெட். இவருக்கு, 25 வயது தான் ஆகிறது. ஆனால், 17 மாதங்களுக்கு முன், இவரின் எடை எவ்வளவு தெரியுமா? 260 கிலோ. கண்ணில் தென்படும் உணவுகளை எல்லாம், வாயில் போட்டு, கிரைண்டர் போல், அரைத்து தள்ளி விடுவார். அப்படி ஒரு அகோரப் பசி இவருக்கு. இதனால், இந்த இளம் வயதிலேயே, கண்டபடி, உடல் எடை எகிறி விட்டது. இவரை பார்ப்பவர்கள், 'மாமிச மலை' என, கிண்டலடிக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
உடலை ஜில்லிட வைக்கும் கடும் குளிரில், நடப்பதே சிரமம். ஆனால், சீனாவில், பூஜ்யம் டிகிரி வெப்ப நிலையில், கம்பு நடனமாடி (போல் டான்ஸ்) அசத்தியுள்ளனர், சில அழகிகள். சீனாவில் உள்ள டியாஜின் மாகாணத்தில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உறைந்து போன பனிக் கட்டியில், கம்பை நட்டு வைத்து, ஏராளமான அழகிகள், விதம் விதமாக உடையணிந்து, அந்தரத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
ஹாலிவுட் திரைப்படங்களில், சண்டை காட்சிகளில், கார்கள் பல்டி அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில், இது, ரொம்ப சிரமமான காரியம். கார் பந்தய வீரர்களால் கூட, காரை பல்டி அடிக்க வைக்க முடியாது. பிரான்சு நாட்டைச் சேர்ந்த, 34 வயதான குயர்லென் சிக்செரிட் என்பவர், இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். ஆல்ப்ஸ் மலைத் தொடரில், பனிக் கட்டியால் ஆன, சறுக்கல் மேடையை அமைத்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
பேஸ்புக்கில் நாலு வரி எழுதி விட்டு, அதற்கான பதிலை எதிர்பார்த்து, பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரை ஆன் செய்து, பேஸ்புக்கை பார்ப்பது வேடிக்கை தான். அவனவன் கோடி கோடியாக முதலீடு செய்து, திரைப்படம் எடுத்து விட்டு, பதற்றமில்லாமல் இருக்கிறானாம். இந்த நாலு வரி பிரம்மாக்களின் அலட்டல் தாங்கலைடா சாமி! (நான் கூட ஒரு நாலு வரி பிரம்மா தான்)-பாக்கியம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X