Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
குரு என்றால் அவருக்கு சீடர்கள் இருக்க வேண்டும். குருவும், எல்லா கலைகளிலும் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்; தபோபலம் மிகுந்தவராக இருக்க வேண்டும். அப்படி ஒரு குரு இருந்தார். அவருக்கு, நான்கு சீடர்கள் இருந்தனர்.ஒரு நாள் சீடர்களைப் பார்த்து, "நான் காசிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்; என் னால் நடக்க முடியாது. என்னை, நீங்கள் நால்வரும் சுமந்து, காசியில் விட்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
பிப். 18 - காரியார் குருபூஜை!நாம் படிப்பது, கை நிறைய சம்பாதிக்க மட்டுமல்ல, தனக்குப் போக மிஞ்சியதை, தகுதியானவர்களுக்கு தர்மம் செய்வதற்கும் தான்! இதை, தன் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர், காரியார் எனும் புலவர்.திருக்கடையூர் எனும் திருத்தலத்தை அறியாதவர்கள் மிகக்குறைவே. அபிராமி பட்டர் என்பவர், இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாள் அபிராமியின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?குடும்ப சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி காரணமாக, என் தோழிக்கு, 35 வயதில் தான் திருமணம் நடந்தது. சமீபத்தில், அவளை பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தோம்.ஒரு பெண் டாக்டரும், இரண்டு நர்சுகளும் பரிசோதித்துவிட்டு, "ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும்...' என்றதுடன், போனசாக, "ஏன் காலாகாலத்துல கல்யாணத்தை பண்ண வேண்டியது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
ஒரு கதையோ, கட்டுரையோ எழுதுவதற்கு யோசிப்பதை விட, கிராப் வெட்டிக் கொள்ள அதிக நேரம் யோசிப்பது என் வழக்கமாகி விட்டது.எந்த சலூனுக்குப் போனாலும், வெட்டிக் கொண்டு வந்து விடலாம். ஆனால், அபூர்வமாகத்தான் மற்றவர்கள் நம் கிராப்பைப் பாராட்டுவர்.அப்படிப் பாராட்டப்பட்டவுடனே நமக்கு என்ன தோன்றுகிறது? "கடைசியாக எப்படியோ ஒரு நல்ல சலூனைக் கண்டுபிடித்து விட்டோம். ஆயுளுக்கும் அல்லது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுரை செல்லும் வாய்ப்பும், ஓய்வும் கிடைத்தது... ஓட்டல் ஒன்றில் தங்கினேன்.ஓட்டலா அது... பெரிய, பெரிய விசாலமான அறைகள்... இரண்டு அறையாக இருக்க வேண்டியது ஒரு அறையாக இருக்கிறது...அறையில் ஓடிக் கொண்டிருந்த, "டிவி'யை ஆப் செய்துவிட்டு, நான் எடுத்துச் சென்றிருந்த புத்தகங்களில் இருந்து, பழைய காங்கிரஸ் புள்ளியும், எழுத்தாளருமான சின்ன அண்ணாமலை எழுதிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
** ரா.சதீஷ்குமார், அணைப் பாளையம்: உலகில் குற்றவாளி - மிகக் கொடிய குற்றவாளி என எவர், எவரை வகை பிரிக்கிறீர்கள்?பொய் சாட்சி சொல்கிறவன் குற்றவாளி! நீதி தேவனின் முன், பொய் சாட்சி சொல்ல அனுமதிப் பவனே, மிகக் கொடிய குற்றவாளி - இவன், சகல துன்பங்களையும் அனுபவித்த பின்னே, "போய் சேர்வான்!'****வி.கந்தன், சங்கராபுரம்: கிரிக்கெட் விளையாட்டை சில நேரங்களில், ஐந்து நாட்கள் கூட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
""எனக்கு அமெரிக்க அரசாங்கம், இந்திய மதிப்பில், பெரிய தொகையாக பதிமூன்று கோடி பரிசளித்தது. அதற்கு இந்திய அரசாங்கம், வரிச் சலுகையும் அளித்தது. இந்த பரிசு ஏன், எதற்காக எனக்கு கொடுத்தனர் தெரியுமா... இருபத்தோராம் நூற்றாண்டின், மிகச் சிறந்த இளைஞனாக, சர்வதேச அளவில் நடந்த ஆய்வில், நான் தேர்வானதால் தரப்பட்டது...""எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. ஆனால், அந்தக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
ஊழல் எதிர்ப்பு படம்!தற்போது இயக்கி நடித்து வரும், விஸ்வரூபம் படத்தையடுத்து, அமர் ஹெய்ன் என்றொரு படத்தை தமிழ், இந்தியில் இயக்குகிறார் கமல். "இந்தியாவில் நடந்து வரும் ஊழலுக்கு எதிரான படம் இது...' என்று சொல்லு<ம் கமல், இரண்டு ஆண்டு களுக்கு முன்பே, இந்த கதையை தயார் செய்துள்ளார். இருப்பினும், தற்போதைய சூழலுக்கேற்ப, சில திருத்தங்களை செய்யவிருப்பதாக சொல்கிறார்.— சினிமா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
வாழைத்தோப்பு, மிக்க குளுமையுடன் நாத முனியை வரவேற்றது.நெருக்கமான வாழைகள், தன் காலுக்குக் கீழே, ஏகப்பட்ட குட்டி வாழைகளுக்கு இடம் கொடுத்து, வாழையடி வாழையாக பல்கிப் பெருகி நிற்கும் வாழைப் பரம்பரை.தன் இலை, கனி, காய், பூ, நார், மடல் என்று, சகலத்தையும் வினியோகித்து, நேயத்திற்கும், காருண்யத்திற்கும், சிறந்த சாட்சியாய் தலை நிமிர்ந்து நிற்கும் வாழைகள்.தனபால்! மகனை நினைத்ததும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு — என் வயது 23. நான் பிளஸ் 2 முடித்தவள். இப்போது, இளங்கலை தொழில் நிர்வாகம் இரண்டாம் ஆண்டு, தபாலில் படித்து வருகிறேன்.என் பெற்றோர், என் சிறுவயதிலேயே இறந்து விட்டனர். என் பெற்றோருக்கு மொத்தம், 14 குழந்தைகள். நான்கு குழந்தைகள் இறந்து விட்டன. ஐந்து அக்கா, நான்கு அண்ணன்கள். கடைக்குட்டி நான்.அப்பா பெரும் பணக்காரராய் இருந்தவர்; ஆகையால், வீட்டில் பணத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
எட்டு வயது வரை வழக்கமான குறும்புக்கார சிறுவனாக இருந்தவன், ஒரு நாள் மாலை வேளையில், தன் வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டு இருந்த போது, மின் கம்பியில் சிக்கிக் கொண்ட பட்டத்தை, இரும்புக் கம்பியால் எடுக்க போன போது, படுபயங்கரமான மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவன்.நீண்ட மருத்துவ பயணத்திற்கு பின், பாதி ஆளாக பிழைத்துக் கொண்டான்.வலது கையில் தோள் வரையிலும், இடது கையில் முழங்கை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
இரும்பில் செய்த பூச்செண்டு...* நீ, என் அற்புதமான கனவுஆனால் நீ... * என் இருட்டு வானில்வெண்ணிலவாக வந்தாய்...என் கறுப்பு வாழ்வில்வானவில்லாக வந்தாய்!* ஆனால்,நிலவும், வானவில்லும்மறைவது போல்மறைந்து விட்டாய்!* உன் ஒரு சிரிப்புபல லட்சம் சந்தோஷம் தந்தது...உன் ஒரு பார்வைபல டன் நிம்மதி கொடுத்தது!* நீ நிமிர்ந்து பார்த்த போதுநட்சத்திரங்கள் தோன்றின...நீ புரிந்து கொண்ட போதுநிலா கூட ஒளிந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
சுவீடனைச் சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் சானா டுல்லாவே. உலக மக்களிடையே பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்திய, பழமை வாய்ந்த, பிரபலமான கறுப்பு வெள்ளை புகைப்படங்களை, கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உதவியுடன், வண்ணப் புகைப்படங்களாக மாற்றியுள்ளார்.இரண்டாம் உலகப் போரில், நேச நாடுகளிடம், ஜப்பான் சரண் அடைந்ததும், அமெரிக்காவில் இதன் வெற்றி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நியூயார்க் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
நான் வெளி நாடுகளுக்குப் போனதில்லை. அன்னியர் வீட்டில் நுழைந்து பார்த்து, "அங்கே அது இருக்கிறது; இது இருக்கிறது, நம்மிடம் அதெல்லாம் இல்லையே...' என்று, தம் வீட்டோடு ஒப்பிட்டு ஏங்கி, அங்கலாய்க்கும், அலையும் குணமே, வெளிநாடு சுற்றிப் பார்க்கும் பலரிடமும் நிறைந்திருப்பதாக, எனக்குத் தோன்றுகிறது.வேடிக்கை பார்ப்பதற்காகச் சிலர் செல்கின்றனர். எனக்கோ, நம் வீதிகளில் நடக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
பிரிட்டனில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில், வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இங்கு மிக பிரமாண்டமான ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது. இங்கு அதிக அளவில் வியாபாரம் நடப்பதை கவனித்து வந்த ஒரு திருட்டு கும்பல், கொள்ளையடிப்பதற்கு திட்டமிட்டது. ஷாப்பிங் மாலின் பின்புறத்தில், நூறு மீட்டர் தொலைவில், ஒரு சுரங்கப் பாதையை தோண்டினர். இந்த சுரங்கப்பாதை, ஷாப்பிங் மாலில், பணம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
நீர், நிலம், பனிக்கட்டி ஆகியவற்றில் செல்லக் கூடிய சூப்பர் காரை, சீனாவைச் சேர்ந்த, யுகான் ஜாங் என்ற இளைஞர் வடிவமைத்துள்ளார். நிலத்திலிருந்து நீருக்குள் செல்ல, காரில் உள்ள ஒரு இன்ஜினை இயக்கினால் போதும். காருக்கு அடியில், பலூன் போன்ற அமைப்பிலான, "ஏர்பேக்' உருவாகும். தண்ணீரில் இருந்து சாலைக்கு வரும் போது, இந்த, "ஏர்பேக்' சுருங்கி விடும். அடர்ந்த பனிக் கட்டியிலும், இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
அமெரிக்காவில் 18 வயதுக்கு குறைவானோர், பச்சை குத்திக் கொள்வது (டாட்டூஸ்) சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த நேப்பியர் என்ற பெண், பத்து வயதே நிரம்பிய காகுவான் என்ற தன் மகனை, டாட்டூஸ் பார்லருக்கு அழைத்துச் சென்று பச்சை குத்தியதாக, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.நேப்பியரின் மூத்த மகன், சில ஆண்டுகளுக்கு முன், விபத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் எகிப்தில், பழங்காலத்தில், அரசர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இறந்தால், அவர்களின் உடல்களை மூலிகைகளால் பதப்படுத்தி, பின், அவற்றை மரக் கட்டைகளால் மூடி, கல்லறைகளில் பாதுகாக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதை மம்மி என அழைக்கின்றனர்.சுவிட்சர்லாந்தை சேர்ந்த, பேசல் பல்கலை கழக மாணவர்கள் சிலர், சமீபத்தில் எகிப்தில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X