Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
பிப்., 17 - மகாசிவராத்திரிசிவராத்திரி என்பது விழா அல்ல! அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி. சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, குலதெய்வம் கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் புரிந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
பேச்சில் கவனம் இருக்கட்டும்!சமீபத்தில், நண்பர் ஒருவர், 'என் மகன் என்னோட பேச்சை துளி கூட மதிக்கிறதில்ல; தன் போக்கில திரியுறான். அந்தச் சனியனைப் படிக்க வைச்சு ஆளாக்கியதற்கு, ஒரு பன்றியை வளர்த்திருக்கலாம்; அதாவது, என் பேச்சை கேட்டிருக்கும்...' என்று சலித்துக் கொண்டார்.இது பற்றி அந்தப் பையனிடம் விசாரித்த போது, 'அங்கிள்... சிறு வயசிலிருந்து இப்ப வரைக்கும் ஒரு நாள் கூட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
தன் மனதில் பட்டதை, தயக்கமின்றி சொல்லி, தான் நினைத்தபடி வாழ்ந்தவர் எம்.ஆர்.ராதா. அதனால், கலகக்காரன் என்ற பெயர் எடுத்தவர். தன் கொள்கைகளில் முரட்டுத்தனமான பிடிவாதத்தை காட்டினாலும், சக நடிகர்களில் பலர் முன்னுக்கு வர காரணமாக இருந்தவர். தன் தொழிலை நேசித்தவர். நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் பிரிய வேண்டுமென்று ஆசைப்பட்டவர். திரைத்துறையில் அப்போது ஆட்சி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
அந்த இளம்பெண், 'மெடிக்கல் டிரான்ஸ் கிரிப்ஷன்' நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்; கிறிஸ்தவர். லென்ஸ் மாமாவுடன் நல்ல நட்பு!வயதானவராக, தமாஷ் பேர்வழியாக லென்ஸ் மாமா இருப்பதால், அவரிடம் எவரும் சுலபமாகப் பழகி விடுவர்; அப்பெண்ணும் தான்.அப்பெண்ணை முதன் முதலில் பார்த்த போது, 'இப்பெண், ரொம்ப கர்வம் பிடித்தவர் போல தெரிகிறதே...' என நினைத்து, நம்மை எல்லாம் எங்கே மதிக்கப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
ப.இளங்கோவன், வீரபாண்டி: சிகரெட், புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிப்பதின் மூலம் விற்பனை குறையுமா?வரி போட்டு அவற்றின் விற்பனையைக் குறைத்து, தீமையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கம் அரசுக்கு கிடையாது. என்ன வரி போட்டாலும், எவ்வளவு விலை உயர்ந்தாலும், இப்பழக்கங்களுக்கு அடிமையானவர் அவற்றை விட மாட்டார்கள் என்பது அரசுக்கு நன்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
''என்னங்க... கொஞ்சம் சீக்கிரம் எழுந்திரிங்களேன்,'' லீலாவதி உலுக்கிய உலுக்கலில், கனவில், செவ்வாய் கிரகத்தில் வாங்கிப் போட்ட இடத்தை ஒழுங்காய் கூட சுற்றிப் பார்க்காமல், குபீரென கண் விழித்தார் வரதராஜன்.''என்னாச்சுடி... உங்கப்பன் ரெண்டாம் கல்யாணம் கட்டிக்கிட்டாரா... இப்படி உயிர் போறாப்புல உலுக்கறே...'' கோபமாய் எழுந்து, போர்வையை அவள் முகத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
பல நாட்கள் முன்னதாகத் தெரிந்துவிட்டால், நீண்ட நெடிய பயணத்திற்குக் கூட, எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால், திடுதிப்பென்று சொன்னால், ஊர் எல்லையில் உள்ள இடத்திற்கு செல்லக் கூட, 'முடியாது... அசதியா இருக்கு; தூக்கமா வருது...' என்கிறோம்.இவ்வளவு ஏன்? வீட்டில், பரணில் இருப்பதை எடுத்துத் தரச் சொல்பவர்களுக்கும், கண்ணெதிரே இருக்கும் அலமாரியில், ஓர் பொருளைத் தேடித் தரச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
இந்தியில் படமாகும் ராஜேஷ்குமாரின் கதை!பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், இதுவரை, 1,500க்கும் மேற்பட்ட நாவல்களும், ஆயிரக்கணக்கான சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவர் எழுதிய, 'சிறுவாணி' மற்றும், 'அகராதி' போன்ற நாவல்கள், ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, இவரது, 'இரண்டாயிரம் அடி சொர்க்கம்' என்ற நாவலும் படமாகிறது. இந்நிலையில், இந்தியில், ஆக் ஷன் ஜாக்சன் படத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
களவாடப்பட்ட பொழுதுகள்!முன்பு...அலுவலகம் சென்றுவேலை பார்ப்பது என்றால்அனைவருக்குமேஅலாதி இன்பம் தான்!அலுவலகத்தில் நுழையும் போதே...ஆங்காங்கே புன்னகை தென்றலும்நட்பு மலர்களும் பூத்துநல்லிணக்க வாசம் வீசும்!சிறகடித்து பறக்கும்வண்ணத்துப் பூச்சிகளாய்இங்குமெங்கும் சுறுசுறுப்பாய்இயங்கும் காட்சிகாண்போர் விழிகளைவியக்க வைக்கும்!விதவிதமான அனுபவங்கள்வியக்க வைக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
அன்புள்ள அம்மா,என் வயது, 50; கணவர் வயது, 55. எங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். வீட்டு நிர்வாகம் முழுவதும் என்னுடையது. வீட்டுக்காக எவ்வளவோ உழைத்தும், நல்ல பேர் இல்லையே என்ற வருத்தம் உண்டு. கணவனின் பாராட்டும், அக்கறையும் ஒரு உற்சாக டானிக் என நினைப்பவள் நான். அது கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால், தற்போது, என் கணவர் எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டர், மொபைல்போன், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
மருவினிய சுற்றமும் வான் பொருளும் நல்லஉருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தைஆகும்போது அவளோடும் ஆகும் அவள்பிரிந்து போகும் போது அவளோடும் போம் - என்பது மூதுரை. சுற்றமும், நட்பும், செல்வமும், அழகும், குலப் பெருமையும், திருமகளாகிய லட்சுமிதேவி வரும் போது அவளோடு வரும். அவள் பிரிந்து சென்றாலோ அவளுடனே சென்று விடும். அதனால், அவளை மனதில் எப்போதும் பற்றுக் கோடாக கொண்டால், அவளின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
'இந்திய சிற்பக் கலை' நூலிலிருந்து: மத்தியப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற கஜுரஹோ கோவில்களைப் பற்றியும், சிருங்கார ரசம் வழியும் சிற்பங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கோவில்கள் பற்றிய வரலாற்றுக் கதை:காசியைச் சேர்ந்த கோவில் பூசாரியின் மகளான ஹேமாவதி, ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது, அவள் அழகில் மயங்கிய சந்திரன், பூமிக்கு வந்து, அவளுடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
வடபழனியில் உள்ள பிரதான மால் ஒன்றில், லதாவைச் சந்திப்போம் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை செல்வன். வட மாநிலத்தவர், வெளிநாட்டுக்காரர்கள், ஐ.டி., வண்டுகள், பர்பிக்கியூ பெண்கள் இவர்களை விலக்கி, அன்றலர்ந்த ஆம்பல் மலர் போல் வெளிப்பட்டு, இவனை நோக்கி வந்தாள் லதா. அவளைப் பார்த்ததும், பேசத் துளிர்த்த ஆசையை நசுக்கி, கூட்டத்தில் ஒளிவதற்குள், அவனைப் பார்த்து விட்ட லதா, ''ஏய் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
தமிழ் படங்களில், 200க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் பிரபல பின்னணி பாடகி ஜென்சி ஆன்டனி. கடந்த, 1978 முதல், 82ம் ஆண்டு வரை, தமிழ் ரசிகர்களை மகிழ்வித்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான இவர், தற்போது, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இளையராஜா இசையில், 65 பாடல்களை பாடியுள்ள ஜென்சி, தன்னுடைய முதல் பாடலுக்கு, 750 ரூபாய் வாங்கியதையும், தான் முதன் முதலாக பாடிய பாடலுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
கேரளாவில், தற்போது, கல்வித் திட்டத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படிப்புடன் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளிலும் மாணவர்களை உற்சாகப்படுத்துவதுடன், விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர். இதன் விளைவாக, மாணவர்களிடையே விவசாயம் செய்யும் ஆர்வம் ஏற்பட்டு, பள்ளிகளில் காய்கறிகள் பயிர் செய்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
தன் கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை மகிழச் செய்த சில்க் ஸ்மிதா, தற்கொலை செய்து, 18 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அவர், தற்கொலை செய்வதற்கு முன், பல முறை, ஒரு நடிகரை போனில் அழைத்து இருக்கிறார். ஆனால், அந்த நடிகருடன் பேச முடியவில்லை. சமீபத்தில், கன்னட முன்னணி நடிகர் ரவிச்சந்திரன், 'டிவி' சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், 'தற்கொலைக்கு முன், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
சில மாதங்களுக்கு முன் கணவரை இழந்த டிஸ்கோ சாந்தியின் இன்றைய வாழ்க்கை பற்றி அறிய, சமீபத்தில் பெண் நிருபர் ஒருவர் ஐதராபாத் சென்றிருந்தார். பங்களா முன் நின்றிருந்த பெண்ணிடம், 'டிஸ்கோவை பார்க்க வேண்டும்...' என்று கூறியிருக்கிறார். அந்தப் பெண், 'நான் தான் டிஸ்கோ சாந்தி...' என்றதும், மிகவும் அதிர்ந்து விட்டார் நிருபர். காரணம், அந்த அளவு உருமாறியிருந்தார் சாந்தி. அவரை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
இந்தியாவின் முதல் சவுண்டிங் ராக்கெட், திருவனந்தபுரம் - தும்பாவிலிருந்து தான் விண்ணில் ஏவப்பட்டது. இதன் ஆரம்ப வேலைகள், ஒரு சர்ச்சுக்குள் தான் நடந்தது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா!ராக்கெட் தளத்துக்கு ஒதுக்கப்பட்ட, 600 ஏக்கர் நிலத்தில், 'மேரி மக்தலின்' என்ற சர்ச் இருந்தது. அந்த சர்ச்சை அகற்ற வேண்டிய சூழ்நிலையில், விஞ்ஞானி விக்ரம் சாராபாய், வெள்ளையரான பிஷப், பீட்டர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
இந்தியா - நேபாள எல்லையில் உள்ள, ஒரு சிறு கால்வாய் தான் இரு நாடுகளையும் பிரிக்கிறது; இதன் மீது போடப்பட்டுள்ள பாலம் தான், இரு நாடுகளையும் இணைக்கிறது. காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, இவ்விரு நாடுகளில் இருந்தும், மக்கள் தடையின்றி சென்று வருவதுடன், பயணச் சான்றுகள் இன்றி நடமாடுகின்றனர். யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் பரிசோதனை செய்கின்றனர்.நம் நாட்டில் பண ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X