Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
மனிதர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களில் முக்கியமானது இரக்க குணம். பிறர் துயர் கண்டு இரக்கம் கொள்வது மனிதத் தன்மை. இரக்கமில்லா நெஞ்சம் ஈரமில்லா நெஞ்சம். மனிதன், மனிதனிடம் இரக்கம் காட்டுவதை விட, பிற ஜீவன்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும்.மனிதனுக்கு பேச முடியும்; என்ன வேண்டுமென்று கேட்க முடியும்; துன்பங்களை வாய் விட்டுச் சொல்ல முடியும். இதர ஜீவன்களால் அப்படி செய்ய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
பிப்., 17 ரத சப்தமிபிள்ளைகள் இல்லாவிட்டால், முதியோர் இல்லங்களில் சேர்ந்து கடைசி காலத்தை ஓட்ட வேண்டியது தான். பிள்ளைகள் இருந்தும், முதியோர் இல்லத்தில் காலம் கழிக்கும் பெற்றோர் எத்தனையோ பேர் இருக்கின்றனர். பிதாமகர் பீஷ்மரின் வரலாறு தெரிந்தவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். அவர் உயிர் துறந்த தினம் ரதசப்தமி.சூரியன், தன் வடதிசை பயணத்தை துவங்கியது தை மாதத்தில். அவருக்குரிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
சபாஷ்... நல்ல யோசனை!என் தோழியின் கணவர், அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம், ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து வெளியே வருவாள் எதிர் வீட்டு பெண். வந்ததும், நைசாக தோழியின் கணவரை பார்ப்பாள்; அவரும் அந்த பெண்ணை பார்த்து, ஒரு வெட்டு வெட்டி விட்டு செல்லத் தவறுவதே இல்லை.மனதுக்குள் பொருமிய தோழி, விஷயத்தை என்னிடம் கூறினாள். நான் ஒரு யோசனை கூறினேன். அதன்படி, எதிர் வீட்டு பெண்ணின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
"சொர்க்கமே என்றாலும், அது, நம்ம ஊரைப் போல வருமா?' என்ற பழமொழி, எதற்கு பொருந்துமோ இல்லையோ, சாப்பாட்டு விஷயத்தில் கண்டிப்பாக பொருந்தும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என, வெளிநாடுகளில் தங்கி, கிடைத்ததை சாப்பிட்டு, காய்ந்து போய் இருப்பவர்களுக்கு... "ப்ரை' செய்த, "ஸ்பைசி'யான, காரசாரமான, அசத்தலான அயிட்டங்கள் கண்ணில் பட்டால்... அதுவும், சமையலுக்கு பெயர் பெற்ற, செட்டிநாடு சமையல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
அது ஒரு மாலை நேரம் — திருச்சி பெமினா ஓட்டலின், நியூ பிளாக்கில், நீச்சல் குளத்தை பார்த்து அமைந்த அறை...மூக்கு முட்ட மதியம், "வெட்டி' இருந்ததால், "உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு...' என அண்ணாதுரை சொன்னது போல, சுக தூக்கம் தூங்கி எழுந்தேன்.கண்ணாடி ஜன்னலை மறைத்திருந்த திரைச் சீலையை விலக்கி, நீச்சல் குளத்தைப் பார்த்தேன்...பளிங்கு போல உடலமைப்பு கொண்ட, 30 - 32 வயது மதிக்கத்தக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
* ஆர்.வெங்கடேஷ், வாடிப்பட்டி: நான் ஒரு ஆசிரியன். கொஞ்சம் கலகலப்பான, நகைச்சுவையுள்ள, அலுவலக காரியங்கள் தெரிந்த, கதை, கவிதை, நாடகம் என, பல துறைகளில் கொஞ்சம் அதிகம் தெரிந்துள்ள காரணத்தால், பல பெண்களுடன் பழக, பேச வாய்ப்பு உள்ளது. ஆனால், என் இல்லாள், என் பழக்கம் மற்றும் அணுகுமுறைகளை தவறான கண்ணோட்டத்துடனே பார்ப்பதால், இல்லத்தில் எப்போதும் மன நிம்மதியின்றி ஓயாத சச்சரவு. இதில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
மங்களத்திற்கு நிலை கொள்ளவில்லை. வாசலுக்கும், உள்ளுக்குமாக ஆயிரம் முறை நடந்து விட்டாள்.""மங்களம் கொஞ்ச நேரம் அமைதியாயிறேன்... ஊரிலேருந்து வர வேண்டாமா?''""ஆமா, உங்களை சொல்லணும்... இவ்வளவு தூரத்துல கொண்டு போய் என் பொண்ணை கொடுத்திட்டு, ஒரு ஆத்திர அவசரத்துக்கு அவதான் உடனே வர முடியுதா அல்லது நாமதான் போயி பார்க்க முடியுதா?''""இதப்பார்டா... இருபது வருஷம் கழிச்சு பேசுற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
மீண்டும் நடிக்கும் பிரபுதேவா!தமிழில், போக்கிரி படம் மூலம் இயக்குனரான பிரபுதேவா, இந்திக்கு சென்று சல்மான்கான், அக்ஷய்குமார் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கி, பாலிவுட்டின் முன்னனி இயக்குனராகி விட்டார். இந்நிலையில், பிரபல நடன மாஸ்டர் ரெமோ டிசோசோ என்பவர் இயக்கத்தில், ஏபிசிடி என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். நடனத்தை உயிராக மதிக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
தாமதமாக உதித்த பனிகால சாது சூரியன், காவிரி ஆற்றை பளபளப்பாக்கி, ஒட்டி இருந்த அக்ரகாரத்தை ஆக்ரமித்திருந்த நேரம்.பெண்மணிகள் வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். தொலைதூரத்து கோவிலிலிருந்து, ஒலிபெருக்கியின் உதவியுடன், பக்திப்பாடல் மிதந்து வந்தது. ஓரிரு பால்காரர்கள் மணியடித்தனர்.பாகி மாமி, கோல மாவு டப்பாவை எடுக்க முனைந்த போது, ஆட்டோ ஒன்று வீட்டு வாசலில் வந்து நின்றது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
அன்புள்ள சகோதரிக்கு —நான் 33 வயது பெண். 17 வயதில் திருமணம் நடந்தது. நான் மிகவும் அழகாய் இருப்பதாலும், என் கணவர் என் மீது அளவுக்கு அதிகமாய் பாசம் வைத்து இருப்பதாலும், இவ்வளவு நாள் என் வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வந்தேன். எனக்கு ஒரு மகனும், மகளும் வாலிப வயதில் உள்ளனர். எனக்காகவும், என் குழந்தைகளுக்காகவும் என் கணவர் மிகவும் பாடுபட்டு, எங்களை நன்றாக வைத்து இருக்கிறார்.என் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
தென் அமெரிக்கா கண்டத்தின், பெரு நாட்டில் உள்ள பழங்குடியினர், எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாக்க, ஒரு வினோதமான நடைமுறையை பின்பற்றுகின்றனர். அந்த நடைமுறை, ஆச்சரியமானது மட்டுமல்ல; அதிசயமானதும் கூட. பெரு மற்றும் பொலிவியா நாடுகளின் எல்லையில், டீட்டிகாகா என்ற, அழகான, பிரமாண்டமான ஏரி உள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள, மிகப் பெரிய ஏரிகளில், இதற்கு முக்கிய இடம் <உண்டு. இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
ஜெயகாந்தன் எழுதுகிறார்: தமிழகத்தில் மெய்யாகவே மதுவிலக்குச் சட்டம் அமல் செய்யப்பட்ட காலம் இருந்தது. மீண்டும் தெருவெல்லாம், மதுக்கடைகள் பெயர் பலகை தாங்கி நிற்கும் என்று ஒருவரும், அந்த காலத்திலும் கற்பனை கூடச் செய்திருக்க முடியாது. மிகவும் மேல்மட்டத்திலும், மிகவும் கீழ்மட்டத்திலும் மது மறைந்து வாழ்ந்ததால், சமூக நாகரிகம் சற்று மேலானதாகவே இருந்தது. எனினும், சிற்சில ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
""இரண்டு நாளைக்கு முன் நாம பார்த்த பொண்ணும் அமையலைடா; நீ செய்யற வேலை பிடிக்கலையாம்; வேணாம்னுட்டாங்க,'' அம்மா சொன்னதும், சக்திவேலுவுக்கு வருத்தம் கொப்பளித்தது.""வேலைல என்னம்மா இருக்கு? மனசாட்சிக்கு விரோதமில்லாம செய்யற எல்லா தொழிலும், நல்ல தொழில்தானேம்மா?'' என்றான் சக்திவேல். ""பார்க்கலாண்டா கண்ணு; உனக்குன்னு ஒருத்தி எங்கேயாவது பிறக்காமலா போயிருப்பா?'' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
எங்கே தேடுவேன்?* புழுதிப்படர்ந்த சாலையில்வெப்பக் காற்றைஉள்வாங்கிநெருப்பை உமிழ்ந்துகொண்டே தேடுகிறேன்...* ஆடி ஓடி விளையாண்டஅகன்ற வீதிகளை...* பாதசாரிகள் படுத்துறங்கநிழல் தந்தபாதையோர புளியமரங்களை...* தும்பி பிடிக்கதம்பியர் புடைசூழ சென்றதான் தோன்றி மலையை...* காட்டுக் குயில்களின்கானம் ஒலித்தகருவேலம் காடுகளை...* அகன்று விரிந்துஆர்ப்பரித்துச் சென்றஆற்றுப் படுகையை...* காட்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
அமெரிக்காவைச் சேர்ந்த, இந்த பிரமாண்ட பெண்மணியின் பெயர், மைக்கேல் ரூபினெலி, வயது 39. இவர், உலகில் மிகவும், ஸ்பெஷலான பெண்மணியும் கூட. உலகிலேயே, மிக பிரமாண்டமான, பெரிய இடுப்பு உடைய பெண், இவர் தான். இவரது இடுப்பின் சுற்றளவு எவ்வளவு தெரியுமா? எட்டு அடி. "மெல்லிடையாள், கொடியிடையாள் ஆகியோரை மட்டும் தான், சாதனைப் பெண்களாக கருதுவீர்களா? என் போன்ற, பிரமாண்ட இடையாளையும், சாதனையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
"பாம்பு என்றால், படையும் நடுங்கும்' என்ற பழமொழியை, பொய்யாக்கி இருக் கிறான், சீனாவைச் சேர்ந்த இந்த சிறுவன். சீனாவின், டொங்கூன் என்ற பகுதியைச் சேர்ந்த, அஜெ லியு என்ற, 13 வயதுச் சிறுவன், 15 அடி நீளமுள்ள, மலைப் பாம்புடன், கொஞ்சி விளையாடியும், படுத்து உறங்கியும், மலைக்க வைக்கிறான்.இவன் பிறப்பதற்கு முன், இவனது தந்தை, வனப் பகுதிக்கு சென்றபோது, மலைப் பாம்பு முட்டை ஒன்றை எடுத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
வருடா வருடம், புத்தாண்டு சபதமாக, மும்பை பகுதியில், "துப்புவதற்கு குட்பை சொல்வோம்' என்ற சபதத்தை ஏற்பர். இருந்தாலும், இரண்டு நாட்களிலேயே அந்த சபதத்தை மறந்து விடுவர்!சமீபத்தில், புவனேஸ்வர் ரயில் நிலையத்தில், பிளாட்பார்மில் துப்பியவர்களுக்கு உடனடியாக, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வடக்கு கடற்கரை ரயில்வேயில் புவனேஸ்வர் முக்கிய, "ஏ' நகரம். "ஏ' நகரம் என்றால், 100 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X