"என்ன சார்... எங்கே இவ்வளவு அவசரமா போறீங்க?'"சிவன் கோவில்ல இன்னிக்கு பிரதோஷம்... தீபாராதனை பார்க்கணும்; பிறகு பேசலாம்...' என்று சொல்லி, போய் விட்டார் நண்பர்.பிரதோஷ காலம் என்பது என்ன? சிவ தரிசனம் செய்ய, அது ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது?சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ ..
பிப். 20 மகாசிவராத்திரிஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ, அது, "சிவராத்திரி' இரவு ஆகும். இதை, "மாத சிவராத்திரி' என்பர். அந்த இரவுகளில், மாசி சிவராத்திரி மகிமை மிக்கதாக இருப்பதால், அது, "மகா சிவராத்திரி' எனப்படுகிறது.திருமாலை, "மகாவிஷ்ணு' என்பது போல சிவனை, "மகாசிவன்' என்பதில்லை. ஆனால், அவருக்கு விருப்பமான இரவு பொழுதுக்கு, "மகா' என்ற ..
அப்பா அடித்தாலும், அழுதாலும் அன்பென்றே அர்த்தம்!மதுரையிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றின், சுயநிதிப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். சமீபத்தில் முதலாமாண்டு மாணவர்கள் இருவர், கல்லூரிக்குள் மோதிக் கொண்டனர். அடித்த மாணவனையும், அடிபட்ட மாணவனையும் அழைத்து, விசாரித்துக் கொண்டிருந்தோம்.முதல் நாள் விசாரணை முடிந்திருந்த நிலையில், அடித்த மாணவன், அவன் வகுப்பைச் ..
அடக்கமாக இருப்பது ரொம்ப உயர்ந்த குணம் என்று, எல்லாராலும் பாராட்டப்படுகிறது.ஒரு காரியாலயத்தின் தலைவர் அல்லது முதலாளி அடக்கமானவராக, அதாவது ரொம்ப ஆடம்பரமோ, படாடோபமோ இல்லாமல் இருந்து தொலைத்து விட்டால், கீழே உள்ள சிப்பந்திகளின் பாடு, ரொம்ப பேஜாராகி விடும்!பெரியவர் ரொம்ப எளிமையாக, காலில் செருப்புக் கூட இல்லாமல் நடப்பவராக இருந்தால், அவர் கீழே வேலை பார்க்கும், அவரது ..
"பரீட்சை ரிசல்ட் வரும் நேரத்தில், பெயில் ஆகிப்போன பல பிள்ளைகள், வீட்டை விட்டு ஓடி விடுவர்...' என்றேன் குப்பண்ணாவிடம்."ஓடிப்போவது தான் போகட்டும்; துரைசாமியைப் போல், ஏதாவது ஒரு லட்சியத்துக்காக ஓடிப்போய் வந்தால் தேவலை...' என்றார்."புதிர் நெடி தாங்கலை; புரிகிற மாதிரி சொல்லுங்க...' என்றேன்."கோயம்புத்தூருக்குப் பக்கத்திலே கலங்கல், கலங்கல் என்று ஒரு கிராமம். அங்கே ..
*எஸ்.குருலட்சுமி, நரிமேடு: உங்களிடம் என்ன மாடல் கார் இருக்கிறது?என்னிடம் உள்ளது, ஒரு ஓட்டை, உடைசல் காயலான் கடை அட்லாஸ் மேக் சைக்கிள் தான் என்பது, ஊரே அறிந்த விஷயமாயிற்றே... தெரியாதா உங்களுக்கு!***** என்.ராமசாமி, சிவகாசி: மருத்துவத் துறையில், நம் நாடு நன்கு முன்னேறி விட்டது தானே?நகரங்களை பொறுத்தவரை, "ஆம்' என்று சொல்லித் தான் ஆக வேண்டும். கிராமப்புறங்களை இது, இன்னமும் எட்டி ..
இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வில், "மேக்-அப்' தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. திருமணம், பார்ட்டி, அலுவலகம் ஆகியவற்றுக்கு செல்லும் போது, எப்படி, வித்தியாசமாக மேக்-அப் போட்டுக் கொள்வது என, தங்களை அலங்கரித்துக் கொள்ளும் நடைமுறை அதிகரித்துள்ளது.ஐநூறு முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை, விதவிதமான பேக்கேஜ்களில், அழகுபடுத்துவதற்காகவே, நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம், ..
ராஜாஜியின் தினசரி நடவடிக்கைகள் என்ன? காலை ஆறு மணிக்கெல்லாம், சரியாக படுக்கையிலிருந்து எழுந்து விடுவார். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, காபி சாப்பிடுவார். 7.30 வரை தினசரிகளையும், சஞ்சிகைகளையும் தாமே படித்துப் பார்த்து, முக்கியமான இடங்களில் பென்சிலால், "மார்க்' செய்வார். சில பத்திரிகைச் செய்திகளுக்கு அவசியமானால், தாமே, தம் கைப்படக் குறிப்புகள் தயாரித்து ..
ஸ்ரேயாவுக்கு பாராட்டு!இந்தியில் அக்ஷய் கன்னா - ஸ்ரேயா நடித்துள்ள படம், ஹலி ஹலி சோர்ஹை. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கும் இப்படம், அன்னா ஹசாரேவுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது, ஸ்ரேயாவின் நடிப்பை, அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். "இந்த பாராட்டு, உலக விருதுகள் அனைத்தையும் விட பெருமைக்குரியது...' என்று சொல்கிறார் ஸ்ரேயா.— ..
அந்த அழகான இளம்பெண், உதவாக்கரை கணவனையும், ராட்சசி போன்ற மாமியாரையும் துறந்து வரும் தன் நிலை குறித்து, விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள், "டிவி' தொடரில்.ராஜேஸ்வரி இந்தத் தொடரைத் தொடர்ந்து பார்ப்பவள் அல்ல. இருந்தாலும், அவ்வப்போது பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில், கதையின் போக்கு அவளுக்கு பிடிபடாமல் இல்லை. தவிர இந்த, "மெகா தொடர்'களில் கதை, "மினி'யாகத் தானே ..
என் அன்பு மகளுக்கு, அன்பு கலந்த ஆசியுடன் எழுதுவது —நான் 71 வயது மூதாட்டி. மிக மிக, மன வருத்தத்துடனும், உன்னிடமிருந்து நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் எழுதுகிறேன். கணவர் வயது 73. அடுத்த சில மாதங்களில், ஐம்பதாவது திருமண நாள் வருகிறது. என் கணவர் ஒழுக்கமானவர் அல்ல என்ற விஷயம், எனக்கு மணமான சில மாதங்களிலேயே தெரிய வந்தது. என் பிறந்த வீட்டின் வறுமை, என் அம்மாவை ..
பொட்டல் காட்டையும், பொன் விளையும் பூமியாக்கும் வல்லமை படைத்தவர்கள் சீனர்கள். சீனா, நமக்கு பரம்பரை எதிரியாக இருந்தாலும், இதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ரஷ்ய கடற்படையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்த, "கியேவ்' என்ற விமானத்தாங்கி போர்க்கப்பல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பணியில் இருந்து ஓய்வு பெற்றது.கப்பலின் பல பகுதிகள், போரில் ஈடுபடுத்த முடியாத அளவுக்கு ..
""ஏங்க... நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே... கையிலே வெண்ணையை வச்சுகிட்டு, வீணா அலைவானேன்? பாங்க்ல கிடக்கிற பணத்தை எடுத்து வந்து, சிவசு கிட்டே குடுங்க. அவன் அலையறதை காண சகிக்கலைங்க,'' என்ற சரயுவை முறைத்தார் பாலசுப்ரமணியம்.""என்னடி பேசுற... அதத்தூக்கி குடுத்துட்டு, நாம தெருவுலே நிக்கணுமா?''""நாம ஏங்க தெருவுக்கு போறோம்... நாம பெத்த ..
நெதர்லாந்தை சேர்ந்த லாரா டக்கர், 16 வயது இளம் பெண், படகு மூலமாக தன்னந்தனியே உலகைச் சுற்றி, சாதனை படைத்துள்ளார். கடந்த 2010, ஆகஸ்ட் மாதம் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் துவங்கிய இவரது சாதனைப் பயணம், இந்தாண்டு ஜனவரியில், கரீபியன் கடற்பகுதியில் உள்ள சின்ட் மாட்ரிட் என்ற இடத்தில் முடிவடைந்தது.போர்ச்சுக்கல், பனாமா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் கடல் வழிகளை கடந்து, தன் ..
இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் மக்கள் தொகை அதிகம். அதற்கு தகுந்தாற்போல், போதிய போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. பணியை முடித்து விட்டு, வீடுகளுக்கு திரும்பும் மக்கள், ரயில் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர். "பிசி'யான நேரங்களில் புறப்படும் ரயில்களில், கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். ரயில் பெட்டிகள் நிரம்பியதும், ரயிலின் கூரை மீதும், பொதுமக்கள் ஏறி அமர்ந்து ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.