Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு; நன்று இதைத் தேர்ந்திடல் வேண்டும்; இந்த ஞானம் வந்த பின், நமக்கு எது வேண்டும்...' என்பது, தேசிய கவியின் வாக்கு.நம்மிடையே ஒற்றுமை இருந்தால், உலகையே நம் வசம் வளைக்கலாம். எத்தகைய இடர்பாடுகளையும், ஒற்றுமையினால் ஒன்றுமில்லாமல் செய்து விடலாம் என்பதற்கு, மகாபாரதத்தில் ஒரு காட்சி:பாண்டவர்கள், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
பிப்., 27-மகா சிவராத்திரி சக்திக்கு நவராத்திரி போல, சிவனுக்கு சிவராத்திரி. இந்த விரதம் மிகவும் எளிமையானது; அன்று இரவு முழுவதும் விழித்திருப்பது நன்மை தரும்.வேடுவன் ஒருவன் வேட்டைக்கு வந்தான். அன்று, அவனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. பகல் பொழுது கழிந்து, இரவு வேளை நெருங்கி விட்டது. வீட்டுக்கு வெறுங்கையோடு போனால், குடும்பத்தினர் எதை சாப்பிடுவர் என்று, ஏதேனும் மிருகம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
மனைவியை அலைபாய விடாதீர்!என் தோழியை, சமீபத்தில் சந்தித்தேன். மனம் விட்டு பேசிக் கொண்டிருந்த போது, பேச்சு, 'அந்த' விஷயத்திற்கு திரும்பியது. அவள் சொன்னதை, அப்படியே இங்கே தருகிறேன். 'இப்பெல்லாம், 'அந்த' விஷயத்துக்கு, நான் ரொம்ப ஏங்கறேன்டி... வெளிநாட்டுல வேலை பார்க்கறவரை கல்யாணம் செய்துகிட்டது, ஆரம்பத்துல சந்தோஷமா இருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு மாதம் தங்கியிருந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
சிவாஜி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும், கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ரஜினி, சிவாஜியின் பெரிய ரசிகர்.சென்னை விஜயா - வாஹினி ஸ்டுடியோவில், ரஜினியின், தனிக்காட்டு ராஜா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கன்னட தயாரிப்பாளர் ஒருவர், ரஜினியை சந்தித்து, சிவாஜி நடித்த, தெய்வ மகன் படத்தை, கன்னடத்தில், ரீ-மேக் செய்ய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
டீ வாங்க வெளியே வந்த போது, ஆபீஸ் கேட் ஓரமாக நின்று, வெற்றிலை, புகையிலை குதப்பலைத் துப்பிக் கொண்டிருந்த குப்பண்ணா கண்ணில் பட்டார்.ரொம்ப, 'ரிலாக்ஸ்டு' மூடில் இருந்தவரை அழைத்து, அமர வைத்தேன். அவரிடம் சந்தேகம் கேட்டு ரொம்ப நாளாகி விட்டதே என்று, 'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்று வள்ளுவர் சொன்னாரே... என்ன அர்த்தத்தில்?' என்று கேட்டேன்...'எண்ணிக் கொள்...' என்று, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
ஆர்.கனகலிங்கம், ஊத்துப்பட்டி: தேர்வு மட்டுமே மாணவர்களின் திறமையை வெளிக்காட்டுமா?நிச்சயம் இல்லை; உருப்போடுவதில் எவர் திறமையானவர் என்பதை, வெளிச்சம் போட உதவுவது தான் தேர்வு!என்.வி.கலா, பொள்ளாச்சி: என் கணவர் மீது அடிக்கடி சந்தேகம் கொள்கிறேன்; பிறகு வருத்தப்படுகிறேன். என்னை மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?உங்களது நிலையில் இருத்திப் பாருங்கள் உங்கள் கணவரை, தெளிவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
ஞாயிற்றுக்கிழமை —பிரகாசம் மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டபின், மனைவி மரகதத்துடன், முற்றத்தில் அமர்ந்து, வழக்கம் போல் பேச்சுக் கச்சேரியை துவங்கினார். பொதுவாக, வெளிநாட்டில் இருக்கும் மகன், மருமகள், பேத்தி குறித்தும், வேலைக்காரி கேட்டிருக்கும் சம்பள உயர்வு, தங்கம் விலைச் சரிவு, சீனாவின் அத்துமீறல் என்று, விமர்சனம் போய்க் கொண்டிருக்கும்; இடையிடையே தன் சொந்த ஊரான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
ஒரு காலத்தில், 'சப்பைக்காலன்' என்ற பட்டப் பெயருடன் உதாசீனப்படுத்தப்பட்டவர் இன்று, ஊரே போற்றும் மதுரா டிராவல்சின் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து இருக்கிறார். அவர் பெயர், பூவரசு. இது, எப்படி சாத்தியமானது என்பதை, அவரே கூறுகிறார்:வேலூர் மாவட்டத்தில் உள்ள, வேடந்தாங்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் நான், போலியோவால் பாதிக்கப்பட்டு, ஒரு கையும், காலும் செயல்படாத நிலையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
கர்சன் பிரபு வைஸ்ராயாக இருந்த காலத்தில், 'வங்கப் பிரிவினை' ஏற்பட்டது. வங்கப் பிரிவினைக்குக் காரண கர்த்தாவாக இருந்தவரே, கர்சன் பிரபு தான்.பாரதியார், 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது, 'வங்கப் பிரிவினை - கர்சன் பிரபு, அகந்தையின் பேரில், இந்தியர்களுக்குச் செய்து விட்டுப் போன அநீதி...' என்று. ஆணித்தரமாக எழுதியதுடன், கர்சனின் யோக்கியதையைப் பற்றி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
அரசியல்வாதிகளை சாடும் ராஜ்கிரண்!வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பது என்ற, பாலிசியை கடைபிடித்து வரும் ராஜ்கிரண், சிவப்பு என்ற படத்தில், அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு, அடைக்கலம் கொடுக்கும், ஒரு கோனார் வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, சமீபகாலமாய், இலங்கை தமிழர்களை வைத்து, சிலர் அரசியல் செய்வதற்கும், இப்படத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ராஜ்கிரண். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
'குற்றால டூருக்கு ஒரு முறை வந்த வாசகர்கள் திரும்ப வருவதே இல்லையே... இது எப்படி சாத்தியம்...' என்று, பலர் நினைப்பது உண்டு. உண்மையில் இதை சாத்தியம் ஆக்கியவர்களும், சாத்தியமாக்கிக் கொண்டு இருப்போரும் உண்டு.குற்றால டூரின் இரண்டாவது நாளின் போது, அந்த பகுதியில் உள்ள புகழ் பெற்ற குற்றாலநாதர் கோவில், இலஞ்சி முருகன் கோவில், தென்காசி காசி விசுவநாதர் கோவில் என்று, ஏதாவது ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
அன்புள்ள சகோதரி — நான் அரசு ஊழியர்; என் தாய் மாமாவிற்கு நான்கு பெண்கள்; மூத்த பெண், அரசு மருத்துவமனையிலும், அடுத்த பெண், வீட்டு வசதி வாரியத்திலும் பணி செய்கின்றனர். மற்ற இரண்டு பெண்கள் படித்துக் கொண்டு இருந்தனர். இச்சம்பவம், 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.என் தாய்மாமா, தன் மூத்த மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னைக் கேட்டார். அப்போது, அந்தப் பெண்ணின் வயது 24; என் வயது 28. என் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
தேடுவதை நிறுத்துங்கள்....முயற்சியைமுடக்கிவிட்டுவெற்றியைதேடுவதை நிறுத்துங்கள்!நம்பிக்கையைநழுவ விட்டுஅதிர்ஷ்டத்தைதேடுவதை நிறுத்துங்கள்!மதியைமறைத்து வைத்துவிதியைவிமர்சிப்பதை நிறுத்துங்கள்!நிம்மதியைஒளித்து விட்டுசந்தோஷத்தைதேடுவதை நிறுத்துங்கள்!வாய்ப்புகளைதவற விட்டுதிறமையைதேடுவதை நிறுத்துங்கள்!பிறப்பை நரகமாக்கிஇறப்பில்சொர்க்கம்தேடுவதை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
அலுவல் வேலை காரணமாக, புனேவுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அருண். அவன் அருகில் வந்த ரேணு, ''நீங்க கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா?'' என்று கேட்டாள்.''எனக்கு மட்டும் உன்னையும், பூரணியையும் தனியே விட்டுட்டு, புனே போகணும்ன்னு ஆசையா? வேற வழி இல்லாமதான போறேன். மூணு நாளுதானே...ஓடி வந்துடுவேன்.''''அதுக்கு இல்லீங்க...நம்ம கல்யாண நாள் வேற வருது; அன்னைக்கு விருந்துக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
இரு சக்கர வாகனங்கள், கார்களின் டயர்களுக்கு, மூக்கால் காற்றடிக்கும் வித்தையை கற்று வைத்துள்ளார், சீனாவைச் சேர்ந்த, பொய்பிங், என்ற, 63 வயது முதியவர். சமீபத்தில், நான்கு டயர்களுக்கு, 21 நிமிடங்களில், தன் மூக்கின் மூலம், காற்றடித்து நிரப்பியுள்ளார். இதற்கான நிகழ்ச்சியின்போது, ரப்பர் குழாயை, தன் மூக்கில் பொருத்தி, நான்கு டயர்களின் மீதும், தலா இரண்டு பேரை நிற்க வைத்து, இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
தென் ஆப்பிரிக்காவில், லெசேகொ டேனியல் என்பவர், ஒரு அமைப்பை ஏற்படுத்தி, 'கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என, ஆசை உள்ளவர்களும், நோய்கள் தீர ஆர்வம் உள்ளவர்களும், இந்த அமைப்பில் சேரலாம்...' என, அறிவித்தார். அவரின் அறிவிப்பை கேட்டு, ஏராளமானோர், அந்த அமைப்பில் சேர்ந்தனர். கடவுளின் ஆசிர்வாதம் கிடைப்பதற்கும், நோய்கள் குணமாவதற்கும், இவரின் சிகிச்சை முறை என்ன தெரியுமா? ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
நெற்றியில் விபூதியை இட்டுக் கொள்ளும் போது, வறட்டு விபூதியாக இட்டுக் கொள்வதா, குழைத்து இட்டுக் கொள்வதா என்று ஒரு சந்தேகம். சாரி, மூன்று, நான்கு சந்தேகங்கள்.சந்தேகம் 1: 'வறட்டு'வுக்கு வல்லின, 'ற'வா, இடையின, 'ர'வா?சந்தேகம் 2: இட்டுக் கொள்வதில், கொள்வதற்கு எந்த, 'ள்'? தேள்க்கு வர்ற,'ள்'ளா? 'அல்வா'வுக்கு வர்ற, 'ல்'லா?சந்தேகம் 3: குழைத்தது சரியா? குளைத்து சரியா? ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
தங்கள் தயாரிப்புகளை, மக்களிடம் பிரபலப்படுத்துவதற்கு, தங்களால் முடிந்த அளவு தந்திரங்களை கையாண்டு வருகின்றன, தனியார் நிறுவனங்கள். இந்த விஷயத்தில், ஒரு சில நிறுவனங்கள், வரம்பு கடந்து செயல்படுவது, வழக்கமாகி விட்டது. சீனாவின், ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஒரு நகை கடை நிறுவனம், இந்த விஷயத்தில், அனைவரையும் அதிசயிக்க வைக்கும், தந்திரத்தை கையாண்டுள்ளது. மூன்று கிலோ தங்கத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X