Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
"காளி!' இந்தப் பெயரைச் சொன்ன உடனே, பயங்கரமான உருவமும், பயமும் மனதில் தோன்றுவது உண்டு. "அவளா... அவ ஒரு காளி ஆத்தா!' என்று சிலரை பற்றிக் கூறுவதுண்டு. ஏதோ ஒரு பொல்லாத்தனத்தைப் பார்த்து இப்படிச் சொல்வர். காளி படம் வீட்டில் வைக்கலாமா, பூஜை செய்யலாமா என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி விடுவர். ஆனால், "காளி' என்பவள், அனுக்கிரக தெய்வம். காளியை உபாசிக்க ஆரம்பித்த பின், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
பிப்., 25 - மாசிமகம்கும்பகோணத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது மாசிமகத் திருநாள். இதற்கு காரணம்...முன்னொரு காலத்தில், தண்ணீரால் உலகம் அழிய இருந்தது. பிரம்மா, சிவனிடம் சென்று, உலகம் மீண்டும் உருவானதும், தன் படைப்புத் தொழிலை எங்கு ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், "கும்பம் ஒன்றில் அமுதத்தை நிரப்பி, படைப்புக்கலன்களை அதனுள் வைத்து நீரில் மிதக்க விடு. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
ஹாஸ்டல் பெண்களே....லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிப் பணிபுரியும் என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். லேடிஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த நான், அங்கு உலாவிக் கொண்டிருந்த சில பெண்களின் உடையை பார்த்ததும் அதிர்ந்து போனேன். மெல்லிய சிறு மேலாடைகள்; இடுப்பில், குட்டை பாவாடை போன்றவற்றை சிலர் அணிந்திருந்தனர். கையில்லாத பனியன் - லுங்கி போன்றவற்றுடனும் சிலர் இருந்தனர். என் தோழியிடம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
மண் எப்படியோ, அதே போல மக்களின் மனதும் மென்மையானது, மேன்மையானது. காட்டை திருத்தி நாடாக்கியவர்கள் நிறைந்த மண், தென்மாவட்டங்களிலேயே தொழில்வளம் நிறைந்த வளமையான பூமி. தியாகிகளும், நாட்டிற்கு உழைத்த நல்லவர்களும், கொடைத்தன்மை மிக்கவர்களும் நிறைந்த புண்ணிய பூமியும் கூட.மதுரையில் இருந்து, குற்றாலம் போகிறவர்களுக்கு, சீசனுக்கான தூரலைத் தந்து, ரம்மியமாக வரவேற்பது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
புதுச்சேரியில், பத்திரிகை தொழில் தொடர்புடைய இரண்டு நாள் கான்பிரன்ஸ். நானும், லென்ஸ் மாமாவும் சென்று இருந்தோம்!"ஹாய் மணி...' என்ற குரல் கேட்டு திரும்பினேன். புதுச்சேரியில் இயங்கி வரும் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நண்பர் நின்று இருந்தார். இவர், புதுவையில் உள்ள தற்கொலை தடுப்பு மையம் ஒன்றில் கவுன்சிலராகவும் உள்ளவர். எப்போதும், தற்கொலை எண்ணத்தால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
*என்.மோதிலால் பாபு, கோவை : எனக்கு மனைவி ஆகப் போகிறவள், திருமணத்திற்கு பின்பும் படிக்கப் போவதாகவும், படிப்பு முடியும் வரை குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் கண்டிஷன் போடுகிறாள். என்ன செய்யலாம்?உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள்; கல்யாணத்துக்கு முன்பே, தன் விருப்பங்களை, தேவைகளை ஓப்பனாக சொல்லும் பெண், எதையும் மறைக்க விரும்பாத பெண்ணாக இருப்பாள். பொறுப்பும் அதிகமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
பாரதி, இந்த நூற்றாண்டின் மாபெருங்கவிஞர். தன் தணல் வரிகளால் மொழிக்கும், நாட்டிற்கும் பெருந்தொண்டாற்றிய தீரர்.தன் வார்த்தைகளுக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாமல் வாழ்ந்த வீரர். தன்னலம் கருதாது, சமூக நலத்தையே தன் பாடுபொருளாகக் கொண்டு, சத்தியத்தையும், நேர்மையையும், உண்மையையும் மட்டுமே துணைகொண்டு, "உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை!' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
நடிகை சாவித்திரி, "பிராப்தம்' என்ற படத்தைத் தயாரித்தார். சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த, அந்த படத்தில், "தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும்... வெகு நாளாக என் ஆசை சின்னம்மா...' என்ற பாடலின் ஒலிப்பதிவு நடந்து கொண்டிருந்தது.டி.எம்.எஸ்., பாடிக் கொண்டிருந்தபோது, அந்த பாடலின் சரணத்தை, அவர் பாடி நிறுத்தியதும், அந்த இடத்தில், "கண்ணா' என்று உணர்வுப்பூர்வமாக சாவித்திரியின் குரல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
குத்துப் பாடல்களுக்கு தடை!இந்தியா முழுக்க, அனைத்து மொழி படங்களிலும், தற்போது குத்துப் பாடல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இப்பாடல்களில் கவர்ச்சி உடை தரித்து ஆடினால், அதிக பணம் கிடைக்கிறது என்பதால், நடிகையரும், குத்துப்பாட்டுக்கு ஆடுவதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, தணிக்கை குழு, இனி குத்துப்பாட்டு வைத்தால், அந்த படங்களுக்கு, "ஏ' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
காவியிலே அரசியலும் உண்டு; ஆன்மிகமும் உண்டு. விடலைப் பையன்கள் முதல் வேட்டி கட்டுகிற கேரளத்தில், வெள்ளை வேட்டிக்கும், லுங்கிக்கும் இடைப்பட்ட, வீட்டிலும், வெளியிலும் அணியத்தக்க, பொது உடையாக ஆவதும் உண்டு. வீட்டோடு சாமியாராக இருக்கிற சிவபாணச் சித்தரின் காவி, கல் - குருணை நீக்கப்பட்ட அக்மார்க் ஆன்மிகக் காவி. ருத்ராட்சம் - காவி தவிர, நீண்ட ஜடாமுடி, தனக்குத் தானே பேசிச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான் 25 வயது பெண். படித்திருக்கிறேன். திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளன. என் கணவர் கடை நடத்துகிறார். கடை யில் பெரும்பாலும் நானே இருப்பேன். குழந்தைகள் மீது அவருக்கு கொள்ளை பிரியம். நான் இல்லாமல் கூட இருப்பார்; குழந்தைகள் இல்லாமல் இருக்க மாட்டார். என் மீது அதிக பாசம் எல்லாம் கிடையாது. ஏதாவது கேட்டாலும் வாங்கித் தர மாட்டார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
மதுரை மாவட்டம், அய்யப்பன் நாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி. வழக்கமாய் மாலை வகுப்புகள் முடிந்ததும், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும், அவரவர் வீட்டிற்கு கிளம்பிச் செல்கின்றனர். ஆனால், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கில்பர்ட் வயது 47. இவர் மட்டும் அதற்கு பின், வகுப்பறைகள், பள்ளி வளாகம் போன்றவற்றை, குப்பைகள் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு, கூடுதலாக பள்ளியின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
அழைப்பு மணி ஓசை கேட்டு, கதவை திறந்த சங்கரி, ஒரு வினாடி திகைத்து நின்றாள். அவளுக்கு, தைலாவைப் பார்த்ததும், என்ன சொல்வது என்று புரியவில்லை.ஆனால், தைலாவோ, சங்கரியின் முகம் போன போக்கையோ, அவள் மனசில் ஓடும் எண்ணங்களையோ பற்றித் துளியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.எப்போதும் போல் புன்னகை தவழ, ""என்ன ஆன்ட்டி... அப்படியே திகைச்சுப் போய் நிக்கறீங்க... "உள்ள வா"ன்னு கூப்பிட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
அப்படியேதானிருக்கிறது!* அப்படியேதானிருக்கிறது...எல்லாமும் இன்னமும்அப்படியேதானிருக்கிறது!* அமர்ந்து பேச நமக்குசிம்மாசனமிட்ட ஆலமரத்து வேர்!* வியர்க்கிற போதுநாம் கேட்காமலேயேவேகமாய் விசிறிவிட்ட மரக்கிளைகள்!* நீருக்குள் தொங்கவிட்டஉன் பாதத்தைதொட்டுவிட்ட சேதியைசொல்லி மகிழ்ந்தாட”ழித்தோடும் வடவாற்று வெள்ளம்!* கால்கொலுசைகண்டுவிட்ட களிப்பில்நீருக்குமேலாய் துள்ளிக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள, மிஸ்வாகா நகரில், ஒரு வினோதமான உருவமுள்ள நாய், விலங்குகள் நல காப்பக அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த நாய்க்கு, 2 வயது தான் ஆகிறது. இதன் முகம், அச்சு அசலாக, மனிதர்களின் முகம் போல், காட்சி அளிக்கிறது. டிஜு-பிடுல் ஆகிய இரு, வெவ்வேறு ரக நாய்களின், கலப்பில் பிறந்த இந்த நாய்க்கு, "டோனிக்' என, பெயர் சூட்டியுள்ளனர்.டோனிக்கை, விரைவில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இளைஞர்களிடையே, தங்களின், முன்புற பற்களை அகற்றும் வினோதமான நடைமுறை, புது பேஷனாக உருவெடுத்துள்ளது. முன்புறத்தின், மேற்புறத்தில் உள்ள, இரண்டு அல்லது மூன்று பற்களை, பல் மருத்துவரிடம் சென்று, அகற்றி விட்டு, ஓட்டைப் பல் வாயர்களைப் போல், காட்சி அளிக்கின்றனர்."இப்படி, வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிப்பதால், இளம் பெண்கள், எங்களை பார்க்கின்றனர்; ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X