இதிகாசங்களும், சாஸ்திரங்களும் மனித வாழ்வை செம்மைப்படுத்த, பல நல்ல வழிகளை சொல்லி, வழி காட்டுகின்றன. அவற்றின்படி நம்மால் நடக்க முடிகிறதோ இல்லையோ, அதன்படி நடந்தவர்கள், நன்மையே அடைந்துள்ளனர் என்பதை, நாம் தெரிந்து கொள்வதன் மூலம், நம் வாழ்வை நெறிபடுத்திக் கொள்ளலாம்.காசியில், தர்மபாலன் என்ற அந்தணர் இருந்தார். பெயருக்கு ஏற்றார் போல, நற்குணங்கள், நிறைந்தவர். அவரது மகன் ..
மார்ச் 14ம் - காரடையான் நோன்புதன் சமயோசித புத்தியால், கணவன் சத்தியவானின் விதியையே மாற்றி அமைத்தவள் சாவித்திரி. எமதர்மனிடமிருந்து, அவள், தன் கணவனின் உயிரை மீட்ட தினமே, காரடையான் நோன்பாக கொண்டாடப்படுகிறது.பிரம்மாவுக்கு சாவித்திரி என்ற பத்தினி உண்டு. இவர்களுக்கு, நான்கு வேதங்களும் ஆண் மக்கள் வடிவில் தோன்றின. அதைக் கொண்டே, பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்கிறார். இவ்வாறு, ..
மேஸ்திரிக்கு பிடித்த மல்லிகைப் பூ !இரு தினங்களுக்கு முன், நானும், என் குடும்பத்தாரும் கோவிலுக்கு சென்றிருந்தோம். கோவில் வாசலில், பூ கட்டி, விற்றுக் கொண்டிருந்த பெண்மணியிடம் ஒரு முழம் பூவுக்கு, பேரம் பேசியபடி, சித்தாள் வேலை செய்யும் பெண்கள், சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நகர்ந்ததும், நானும், பூ வாங்கியபடியே, மெல்ல சச்சரவுக்கான காரணம் குறித்து கேட்டேன்.அதற்கு ..
ஒருமுறை, காமராஜர் அரங்கத்தில் நடத்திய, சிவாஜியின் நினைவு அஞ்சலி விழாவில், நடிகை வைஜெயந்திமாலாவை கவுரவப்படுத்தி, நினைவுப் பரிசு வழங்கினோம். சிவாஜி மீது மிகுந்த மரியாதை கொண்டவர் வைஜெயந்திமாலா. விழாவின் போது, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து, இயக்கிய, இரும்புத் திரை படத்திலிருந்து, 'நெஞ்சில் குடியிருக்கும்...' என்ற பாடலை, இசைக் குழுவினர் பாடினர். திரைப்படத்தில், ..
'காந்தி குல்லாய்' என்று அழைக்கப்படும், வட மாநில காங்கிரசாரால் இன்றும் அணியப்படும் குல்லாய், எப்படி, எப்போது தோன்றியது என, குப்பண்ணாவிடம் கேட்டேன்.'அது பற்றி காந்திஜியே சொல்லி இருக்கிறாரே... இதோ, அவர் மொழியிலேயே கேள்...' என, கூற ஆரம்பித்தார்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அணியும் பல தலைப்பாகைகளைப் பற்றி சிந்திக்கலானேன். நம் உஷ்ண தேசத்தில், தலையின் மீது ஏதேனும் ..
டி.வினோத், விழுப்புரம்: வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் உண்டாக வழி என்ன?'நம்மால் முடிந்தாலும், முடியாவிட்டாலும், 'நம்மால் முடியும்' என்பதை, எப்போதும் உள்மனதில் வளர்க்க வேண்டும். நார்மன் பிராய்டு போன்ற அறிஞர்களின் புத்தகங்களை, சோர்வு ஏற்படும் போதெல்லாம் படிக்க வேண்டும். அவை ஊக்கத்தைத் தரும்; மனதில் ஊக்கம் இருக்கும்போது, உற்சாகம் தானே வரும்; முயன்று பாருங்கள். ..
வாரமலர் குற்றால டூர் நிகழ்ச்சிகள், எது எது எப்படி நடக்கணும்,எப்போது நடக்கணும் என்று, திட்டமிட்டு நடத்தி வந்தோம். ஆனால். 98-ம் வருடம். ஒரு சின்ன மாறுதலாகி விட்டது.'நீங்க உங்க திட்டத்தை தூக்கி குற்றால அருவியில போடுங்க. பேசாம நாங்க நடத்துறத பார்வையாளரா பார்த்துகிட்டு, 'கம்'ன்னு வாங்க...' என்று குரலெழுப்பி, நம்மை அடக்கி வைத்த வாசகர்கள், அந்த வருடம் நிறைய நிகழ்ச்சிகளை ..
கருணாநிதியை, ஒருநாள், மாலை நேரத்தில் சந்தித்தேன். ஆற்காடு வீராசாமியும் உடனிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆர்., பள்ளிக் குழந்தைகளுக்கு, இலவச சத்துணவுத் திட்டத்தை அறிவித்திருந்தார். கருணாநிதி, இதுபற்றி, எங்களிடம் கருத்து கேட்டார். நான் மனதில் பட்டதை தயங்காமல் சொன்னேன்... 'இது, பெற்றோர்களை குழந்தைகளுக்காக, உழைக்கும் கடமையிலிருந்தும், எண்ணத்திலிருந்தும், பொறுப்புணர்வினை ..
அன்பு சகோதரிக்கு —எனக்கு மூன்று மகன்கள்; அனைவரும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள். மூத்த மகன், தன்னைவிட நான்கு வயது மூத்த பெண்ணை விரும்புகிறான். அப்போது அவன் வயது, 21. நானும் என் கணவரும், வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், முதலில் இதை அறியவில்லை. மூன்று வருடங்களுக்குப் பிறகே தெரிய வந்தது. அவனிடம் விசாரித்து, அறிவுரை கூறினோம். இருந்தும், அவனால், அவளை மறக்க முடியவில்லை என்று, ..
சிம்பு படத்தில் அஜித் - விஜய்!'அஜித் தான், தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்...' என்று, முழக்கமிட்டு வரும் சிம்பு, 'அஜித்தின் அடுத்த வாரிசு நான் தான்...' என்றும் மார்தட்டி வருகிறார். இந்நிலையில், தான் நடித்து வரும், வாலு படத்தில், தன்னை மற்றவர்கள் அடையாளம் தெரிந்து கொள்ளாமலிருக்க, ஒரு காட்சியில், அஜித் மாஸ்க்கை அணிந்து, நடித்துள்ளார் சிம்பு. அதோடு, தன் கூடவே ..
சாவதைத்தவிர, வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தாள் கவுசல்யா. அப்பா வயலுக்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த, பாலிடால் டப்பாவை எடுத்து, யாருக்கும் தெரியாமல், ஒரு பைக்குள் வைத்துக் கொண்டாள். தன்னை புரிந்து கொள்ளாமல் பேசிய அப்பாவை நினைத்தபோது, அவளுக்கு அழுகை பீறிட்டது. அந்த வேதனையான நிகழ்ச்சிகள், மறுபடியும் மனசுக்குள் திரையிட்டன.அன்று, கம்ப்யூட்டர் சென்டரை ..
ஓவியங்கள் வரைவதற்கு தூரிகை என அழைக்கப்படும், பிரஷ் அவசியம். ஆனால், பிரஷ் இல்லாமல், விரல்களை மட்டுமே பயன்படுத்தி, காண்போரின் உள்ளங்களை கொள்ளைக் கொள்ளும் வகையிலான ஓவியங்களை வரைந்து, சாதனை புரிந்துள்ளார், அமெரிக்காவைச் சேர்ந்த, ஜாரியா போர்மென் என்ற இளம் பெண். கடல், அலை, நீர்வீழ்ச்சி, வனம், ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைத் தொடர் என, இவரின் விரல் ஜாலத்தில் உருவான ஓவியங்கள், ..
வி.ஐ.பி.,கள் பலர், வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அந்தந்த நாடுகளின், பாரம்பரிய நடனங்களை ஆடுவர். சமீபத்தில், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். அவரை வரவேற்கும் வகையில், அந்நாட்டின், பாரம்பரிய நடனமான வாள் ஏந்தி நடனமாடும் நிகழ்ச்சி நடந்தது. கூர்மையான வாளை, கையில் ஏந்தி, கலைஞர்கள் நடனமாடினர். இதற்கு, கடுமையான பயிற்சி அவசியம். பயிற்சி இல்லாமல், ..
வால்மீகி, கண்ணப்ப நாயனார், வேடுவராக இருந்தவர்கள்; சபரி, வேடுவ இனத்தை சேர்ந்த, ராம பக்தை. ராம பக்த குகன், வேடுவர். இப்படி, வேடுவ குல பக்தர்களை நினைவு கூறும் போது, ஜராசு என்ற என் பெயரின் முதல் இரண்டெழுத்தை, பெயராக கொண்ட ஒரு வேடுவன் பெயரும், ஞாபகத்துக்கு வந்தது. அவதார புருஷனான கண்ணன் யோகத்தில் ஆழ்ந்திருந்தான். ஜரா என்ற வேடுவன், பறவை என்று தவறுதலாக நினைத்து, அம்பை எய்தான். யோக ..
சீனாவைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ஆசிரியை, ஷியாங். இவருக்கு, அடர்த்தியான, கூந்தல் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன், அவரின் கூந்தல் உதிர துவங்கியது. இதற்காக கவலைப்படாமல், உதிர்ந்த முடிகளை எல்லாம், வீணாக்காமல், சேர்த்து வைத்தார். சமீபத்தில், அந்த முடிகளால், அழகிய மேலாடையையும், தொப்பியையும் தயாரித்து, அசத்தியுள்ளார்.'என் அடர்த்தியான கூந்தல் மீது, பலருக்கும் பொறாமை. என் கூந்தல் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.