Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
சுயத்தை தொலைத்த தோழி!சில ஆண்டுகளுக்கு பின், என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். அவள் புகுந்த வீடு, நல்ல வசதியானது. அவள் கணவர், சொந்த தொழில் செய்கிறார்; நல்ல சம்பாத்தியம். எல்லா வசதிகளோடு அவள் வாழ்வதை பார்த்து, மிக மகிழ்ச்சியடைந்தேன்.ஆனால், அவளுடன் பேசும் போது தான் தெரிந்தது, அவள் தன் சுயத்தை தொலைத்தவள் என்பது! படிக்கும் போதே, கைவினை பொருட்கள் செய்வது, தையற்கலை என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு வெளியாகும் கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.படப்பிடிப்பு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன், எனக்கு, உடைகளை போட்டுப் பார்த்தனர். அப்போது, அருகில் நின்று கவனித்த இயக்குனர் நந்தலாலைப் பார்த்தேன். கழுத்து வலிக்கும் அளவுக்கு தலை நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் இருந்தார்.உடைகளுடன் நின்ற என்னை பார்த்த அவர், என்னிடம் ஏதும் கூறவில்லை. மற்றவர்களிடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
மதுரை அருகே உள்ள திருநகரில், லென்ஸ் மாமா உறவினர் வீட்டு விசேஷம்; என்னையும் அழைத்தார். மறுநாள் காலை மணி, 6:00 - 7:30க்கு விசேஷம்; இவர் அழைத்தது, முதல் நாள் மாலை, 6:00 மணி.'இனி ரயில் டிக்கெட் எடுக்க முடியாது; பஸ்சில் பயணிப்பது உயிருக்கு, 100 சதவீதம் உத்திரவாதமில்லாதது; என் காரும் சர்வீசுக்கு சென்றுள்ளது; என்ன செய்யலாம்...' என, கேட்டார் மாமா.'ஆபீஸ் காரை கேட்டுப் பாருங்க மாமா...' என, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
எல்.சங்கர், திருவள்ளூர்: நெருங்கிய உறவினர் ஒருவருக்கு நெருக்கடியான நேரத்தில் உதவி செய்தேன்; இப்போது, அவர், என்னைப் பார்த்தும், பார்க்காதது போல் செல்கிறாரே...இது தான் உலக நடப்பு. பிரதிபலன் எதிர்பாராமல் செய்வது தான் உதவி; எதிர்பார்ப்பு இருந்தால், ஏமாற்றம் தான் மிஞ்சும். எம்.பி.பார்த்தசாரதி, பழனி: போராட்டமே இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?உப்பு இல்லாத அவியல் போல், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
'ஐயோ... கோடைக்காலம் வந்து விட்டதே... வெயில் கொளுத்துமே... என்ன செய்யப் போறோம்...' என்று புலம்புகிறீர்களா?கொஞ்சம் இதை படித்து தான் பாருங்களேன்...* மழை மற்றும் குளிர் காலத்தில் பரவி இருக்கும் விஷக் கிருமிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிகள் கொளுத்தும் வெயிலில், தாக்கு பிடிக்க முடியாமல் அழிந்து விடும்.*வெயில் காலத்தில், நம் உடலில் உள்ள வியர்வை நாளங்கள் சரியாக வேலை செய்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
வ.உ.சிதம்பரனார் எழுதிய, 'திலகர் நினைவுகள்' எனும் கட்டுரையிலிருந்து: என் அரசியல் குரு, லோகமான்ய பால கங்காதர திலகர். என், 21வது வயதில் இருந்து, அதாவது, 1893ம் ஆண்டிலிருந்து, அவருடைய எழுத்தையும், பேச்சையும் படித்தும், கேட்டும் வந்துள்ளேன்.கடந்த, 1914ல், திலகர் உத்தரவின்படி, பூனாவுக்கு சென்று, அவர் வீட்டில் ஒரு வாரம் தங்கினேன். தினமும் காலை, 5:00 மணிக்கு என் அறைக்கு வந்து, தம் அறைக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
நாம் உடுத்தும் உடை துவங்கி, பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை, அனைத்தையும் தீர்மானிப்பது, நாம் தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறோம்; ஆனால், ஒரு குறிப்பிட்ட குழுவினர் தான், நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வங்கிகள் என, இந்த உலக நகர்வுக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் வீசிய, வர்தா புயலில் விழுந்த மரங்களை, மீண்டும் நட்டால் துளிர்க்குமா, துளிர்க்காதா என, 'ஏசி' அறையில் உட்கார்ந்து பேசுவோர் மத்தியில், தனி ஒரு மனிதராக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார், சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த, முல்லைவனம்.அன்று, விருகம்பாக்கத்தில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில், சில மரங்கள் இலைகள், கிளைகள் வெட்டப்பட்ட நிலையில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
'நார்வே' திரைப்பட விருது!நார்வே தலைநகர் ஆஸ்லோவில், எட்டாவது, நார்வே திரைப்பட விருது விழா, வருகிற ஏப்., 27ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில், தர்மதுரை படத்தில் நடித்த விஜயசேதுபதி மற்றும் தாரைத் தப்பட்டை படத்தில் நடித்த வரலட்சுமிக்கு விருது வழங்கப்பட இருக்கிறது. மேலும், சிறந்த இயக்குனருக்கான விருதை, விசாரணை படத்தை இயக்கிய, வெற்றிமாறன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
அடியார்கள் என்பதற்கு, 'சுவாமியின் திருவடிகளில், ஆழமான பக்தி கொண்டவர்கள்' என்று பொருள்.உடல், சொல் மற்றும் மனதால் அடுத்தவர்களை நோகடிக்காதவர்களே அடியார்கள். அப்படிப்பட்ட ஒரு அடியாரின் வாழ்வில் நடந்த வரலாறு இது:'சாகித்திய கர்த்தாக்களில் தமிழ் மூவர்' என போற்றப்படும், மூவரில் ஒருவரான, முத்துத் தாண்டவர், ஒருநாள் இரவு, தன்னை அறியாமல், அம்பாள் ஆலயத்தில் உறங்கி விட்டார். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு — வணக்கம்; என் பெற்றோருக்கு, மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் என, ஆறு பிள்ளைகள். நான் தான், மூத்த மகள். அனைவருக்கும் திருமணம் ஆகி, நலமுடன் உள்ளனர்.ஆனால், பெற்றோரை யாரும் கவனிப்பதில்லை. அவர்கள், தற்போது, கடைசி மகனிடம் தான், இருக்கின்றனர். எங்களுக்கு சொந்தமாக, 12 ஏக்கர் நிலம் உள்ளது. வாய் வார்த்தையில், மூன்றாகப் பிரித்து, அவரவர் பங்கு நிலத்தை, தம்பிகள் பயிர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
தமிழ் படித்தவர்கள் அறிவர்... இரந்து பெறுதல் என்றால், கெஞ்சிப் பெறுவது!தன்மானத்தை விட்டுக் கொடுக்காத தகைமை என்பது, பண்டைய காலங்களில் பெரிதாக பேசப்பட்டது. இப்போதோ, 'தனக்கு ஆக வேண்டியது ஆனால் சரி... எது எக்கேடு கெட்டால் என்ன...' என்று, பலரும் எண்ணத் துவங்கி விட்டனர்.நல்ல வேலையாக வாங்கி தரக்கூடியவர் தான்; ஆனால், ஏனோ மனம் வைக்க மாட்டேன் என்கிறார். எப்போது கேட்டாலும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
மார்ச், 29 - தெலுங்கு புத்தாண்டுகடந்த ஆண்டில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள், புதிய ஆண்டில் நடக்கக்கூடாது; அப்படியே நடந்தாலும், அதை எதிர்கொள்ளும் தைரியத்தையும், பக்குவமாக சமாளிக்கும் திறமையையும் கடவுள் நமக்கு அருள வேண்டும் என்பதே தெலுங்கு புத்தாண்டு எனும் யுகாதி திருவிழாவின் நோக்கம். இதனால் தான், இந்நாளில் ராமாயணம் படிப்பது வழக்கமாக உள்ளது.சோதனைகளை சமாளிக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
உலகம் பார்க்க பிறந்தவன் நீ!குப்பையில் முளைத்தெழும்குன்றிமணியாய் இரு...தகரத்தை அல்லதங்கத்தை எடை போடபிறந்தவன் நீ!குடத்தினுள் முடங்கிக் கிடக்காமல்குன்றின் விளக்காய் இரு...உன்னடி இருட்டெனும் போதும்உலகுக்கேஒளி தர பிறந்தவன் நீ!ஓய்வின்றி ஓடிமுடிவில்கடலில் கலக்கும்ஆறாய் இரு...செல்லும் வழியெல்லாம்வளமாக்கப் பிறந்தவன் நீ!காற்றினிலே கரைந்து போகும்கற்பூரமாய் இரு...ஆலய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, தீ விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அச்சமயங்களில், என்னென்ன முன்னெச்சரிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வோமா...* உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்.* தரமான, மடிக்கக்கூடிய ஏணிகளை தயாராக வைத்திருப்பது நல்லது.* ஜன்னல் கதவுகளை உடனடியாக திறந்து வையுங்கள்.* திரைச்சீலைகள் சட்டென்று கழற்றப்பட கூடியதாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
''ஏங்க... எத்தனை நாளா சொல்றேன்... பெருசுக ரெண்டையும், வீட்டை காலி செய்ய சொல்லுங்கன்னு...'' என்று மனைவி சாரதா சொன்னதும், ''அவுக பாட்டுக்கு இருக்காங்க; நமக்கு என்ன தொந்தரவா கொடுக்கிறாங்க... சும்மா இதையே சொல்றே...'' என்றான் பரமசிவம்.''உங்களுக்கென்ன... வேலை, வெட்டின்னு போயிடுவீங்க... வீட்டுல இருக்கிற எனக்குல தெரியும்... தினம் ஏதாவது, சீனி, சீரகம்ன்னு கேட்டுட்டே இருக்குது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
விதவிதமான இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் என, நவீன குழந்தைகள், கார்ப்பரேட் இனிப்புகளுக்கு மாறிவரும் வேளையில், ஆறுதல் தருகிறது, நம் பாரம்பரிய இனிப்பான, கருப்பட்டி மற்றும் வெல்லத்தில் தயாரிக்கப்படும், சீரணி மிட்டாய்!விருதுநகர், மதுரை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட, தென் மாவட்டங்களில் இது பிரபலமானது என்பதால், 'தெக்கத்தி சீரணி மிட்டாய்' என இதைச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
பாம்பே ரவை வடாம்!தேவையான பொருட்கள்:பாம்பே ரவை - 1 கிலோபச்சைமிளகாய் - 200 கிராம்உப்பு - 2 மேஜைக்கரண்டிபெருங்காயத்தூள் - 2 மேஜைக்கரண்டிதண்ணீர் - 8 லிட்டர்செய்முறை: ரவையை சலித்து, சுத்தப்படுத்தவும். பச்சை மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக மிக்சியில் போட்டு, விழுதாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, பச்சைமிளகாய் விழுது சேர்த்து, அவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X