Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
தேவையில்லாத நடைமுறையை மேற்கொள்ளாதீர்!சமீபத்தில், என் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமண மண்டபம், சந்தோஷத்தில் களை கட்டியிருந்தது; எல்லாம் தாலி கட்டும் வரை தான். திருமாங்கல்யம் கட்டப்போகும் நேரத்தில், உறவினர் ஒருவர், 'தாலி கட்டும்போது, வெடிப்பதற்கு பேப்பர் வெடி இல்லயா...' என்று கேட்க, அருகிலிருந்த மணப்பெண்ணின் சகோதரர், 'இல்லையே மச்சான்...' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
சிறுமி கோபிசாந்தா, செட்டியார் வீட்டில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில், கோபிசாந்தாவின் தாய், ராமமிர்தம் பணிபுரிந்த வீட்டில் ஏதோ பிரச்னை. அவரால் அங்கு வேலை பார்க்க முடியவில்லை. வேறு வழியின்றி, வேலையை விட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார், ராமமிர்தம். மகள் கோபிசாந்தா வேலை செய்யும் வீட்டுப் பக்கமாக வந்தவர், அப்படியே, மகளையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
ஒரு பெரியவருக்கு, 80ம் கல்யாணம்... 'கண்டிப்பாக வர வேண்டும்...' என, அமெரிக்காவில் வாழும் அவரது மகனும், மருமகளும் சென்னை வந்து அழைத்தனர்.அந்தப் பெரியவர் சிறந்த அறிவாளி, மனித நேயம் மிக்கவர் என்பது மட்டுமல்லாமல், என் மீது தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டவர்.குப்பண்ணாவுடன் அவ்விழாவுக்குச் சென்றேன். வேத விற்பன்னர்களின் சடங்குகள் முடிந்த பின், பெரியவரின் காலில் விழுந்து, ஆசி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
* ஆர்.தனபால், திண்டுக்கல்: ஒரு குடும்பத்தை குதுாகலமாக்குவது, கணவரின் வருமானமா அல்லது மனைவியின் நிர்வாகத் திறனா?சந்தேகமில்லாமல் இரண்டாவதே! எவ்வளவு குறைந்த வருமானம் கொண்டு வந்தாலும், அதில் கூட மிச்சம் வைக்கத் தெரிந்தவர்கள் பெண்கள். 99 சதவீத பெண்களுக்கு இது, கை வந்த கலை. பெண்களின் நிர்வாகத் திறமையே, குடும்பத்தில் குதுாகலம் நிலவக் காரணம்!டி.லலிதா, கோவை: இன்றைய இளைஞிகளின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
'அரசியல் தலைவர்கள் சுவையான சம்பவங்கள்' நுாலிலிருந்து: 'பாரதிதாசன் பாடல்களில் சிறந்து காணப்படுவது காதலா, வீரமா?' என்ற தலைப்பில், மதுரையில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக இருந்த, அப்போதைய அமைச்சர், முத்துசாமி பேசும்போது, 'கோழிகள் விடியற்காலையிலேயே கூவுகிற காரணத்தால், காதலர்களுக்கு இடையூறு நேருகிறது; ஆகவே, கோழிகள் விடியற் காலையில் கூவக் கூடாது என்று தமிழக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
எல்லாம் முடிந்து விட்டது; கால்கள் துணியாய் துவள, அந்த பருத்த மரத்தின் மீது சாய்ந்து நின்றாள், மீனாட்சி. அனிச்சையாக விழிகள் நீரை சிந்தின. துடைக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லை. சில பார்மாலிட்டிகளை முடிக்க, வக்கீலுடன் அப்பா போய் விட, தனியே நின்றாள், மீனாட்சி. 'மிச்சமிருக்கிற வாழ்க்கை மொத்தமும் தனியாத்தான் நிற்கணுமா...' உள்ளே ஏதோ புரண்டு வந்தது. எதிர்பார்த்த முடிவு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
ரஜினிகாந்துக்கு பலத்த செக்யூரிட்டி!காலா மற்றும் 2.0 படங்களைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார், ரஜினி. தமிழகத்தில், அடுத்து நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் வரை, தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். மேலும், தன் உதவியாளர்களுடன் படப்பிடிப்புகளுக்கு சென்று வரும் ரஜினி, தன் பாதுகாப்பு கருதி, இப்போது, பலத்த செக்யூரிட்டியுடன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
சனீஸ்வரருக்கு உரிய நிறம் கறுப்பு; நவக்கிரக மண்டபம் மற்றும் சிவாலயங்களில் இருக்கும் சனீஸ்வரருக்கு கறுப்பு உடை அணிவிப்பர். கறுப்பு எள்ளும், நல்லெண்ணெயும் சேர்த்து தீபமேற்றுவது வழக்கம். ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கோனேரிராஜபுரம், உமாமகேஸ்வரர் ஆலயத்தில், வெள்ளை ஆடை அணிந்த சனீஸ்வரருக்கு வெள்ளை எள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படுகிறது. தன் குஷ்டநோய் தீர, இங்கு வந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலை, நமக்கு சாதகமாக பயன்படுத்தும் விதமாக, வடகம், வற்றல் போன்றவற்றை செய்துவிட வேண்டும். அதுமட்டுமல்ல, அவ்வப்போது, அவற்றை உலர்த்தி எடுத்து வைக்க வேண்டும். அப்போது தான் நமத்துப் போகாமல் இருக்கும்.ஜவ்வரிசி மற்றும் கூழ் வடகம் எதுவானாலும், கூழில் பால் சேர்த்தால், வடகம் வெள்ளை வெளேரென்று இருக்கும். எலுமிச்சம் பழச்சாறும் சேர்க்கலாம்; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
பிரதிபலன் எதிர்பாராமல் சக உயிர்களிடம் அன்பு செலுத்தும் போது, கூப்பிட்ட குரலுக்கு இறைவன் ஓடி வருவார் என்பதற்கு இந்த வரலாற்று சம்பவம், ஓர் உதாரணம்...உத்திரபிரதேசம் மாநிலம், காசி மாநகரில், நாராயண தீட்சிதர் என்பவர் வாழ்ந்து வந்தார். அன்னபூரணி தேவியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், தினமும், அன்னபூரணி வழிபாடு செய்து, சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளுக்கு உணவளித்து, அதன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
அன்பு சகோதரிக்கு —நான், கிராமத்து பெண்; வயது, 55. எழுதப் படிக்க தெரியும்; இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். நானும், என் கணவரும் விவசாய கூலிகள்; அதனால், குழந்தைகளை ஆரம்ப பள்ளி வரை மட்டுமே படிக்க வைக்க முடிந்தது. 19 வயதான மூத்த மகளை சென்னையில், வசதியான வீட்டுக்கு வேலைக்கு அனுப்ப முடியுமா என, கேட்டு வந்தார், துாரத்து உறவினர் ஒருவர்.ஏழ்மை காரணமாக, அவளாவது மூன்று வேளையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
விடியும் வரை காத்திருக்காதே!விடிவதற்குள் வேலையைஆரம்பித்து விடுவேலை இல்லை எனதுாங்கி சுகம் காணாதே!ஓடும் மனிதர்களோடுநீயும் சேர்ந்து கொள்எந்த வேலையும் இழிவல்லகுப்பையை சுமந்தாலும்கூலி கிடைக்கும்!பட்டதாரி என்பதை மறபலதரப்பட்ட வேலைகள்உன் முன்கொட்டிக் கிடக்கின்றன!சிறகடித்து பறந்துதிரிந்தால் தான்பறவைக்கும் உணவு கிடைக்கும்பதுங்கி, பாய்ந்து, ஓடிஉருண்டால் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
''பாரதி... நீங்க இந்த நிறுவனத்தில, 10 வருஷத்திற்கும் மேல வேலை பாக்குறீங்க... பல நிலைகளுக்கு உயர்ந்து, இன்று, உயர்ந்த பதவியில் இருக்கிறீங்க. பேச்சுத்திறமை உள்ளவரும் கூட. அதோடு, இந்த வேலைக்கே உங்கள அர்ப்பணிச்சுட்டது போல், திருமணம் கூட செய்துக்காம தனியா வாழ்றீங்க... நீங்க வந்து பேசினால், எங்க கிளப்பில் உள்ள பெண்கள், ஏன் ஆண்களுக்கு கூட உற்சாகமா இருக்கும்,'' என்று, ரோட்டரி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று, கஜகஸ்தான்; இங்கு வசிக்கும், எரினா எலிவெயன் என்ற, 22 வயது இளைஞர், அழகி போட்டி நடத்துபவர்களை, சமார்த்தியமாக ஏமாற்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இந்த இளைஞர், தன் உருவம் மற்றும் ஹேர் ஸ்டைலை பெண் போல மாற்றி, அழகி போட்டியில் பங்கேற்றார். ஒவ்வொரு சுற்றாக முடிந்து, இறுதிப் போட்டி வரை வந்து விட்டார். அதுவரை, இவர், ஆண் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
படத்தில் காணப்படும் இப்புதுமை பெண்களுக்கு, 'புல்லட்'டில் ஊர் சுற்றுவது தான் பொழுது போக்கு!கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர், ரோஜினா ரோஸ் மேத்யூ; பள்ளி ஆசிரியையான இவர், பள்ளிக்கு,'புல்லட்'டில் தான் வருவார். ஆண் பிள்ளையைப் போல் கம்பீரமாக அவர் வருவதைக் கண்ட மற்ற பெண்களுக்கும், புல்லட் மீது காதல் ஏற்படவே, இன்று, இவர்கள் அனைவரும், இந்தியா முழுவதும், புல்லட்டில் வலம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
மயில், நம்முடைய தேசிய பறவை; அதை, துன்புறுத்துவதோ, கொல்வதோ குற்றமாக கருதப்பட்டு வரும் நிலையில், வட மாநிலங்களில், சில இடங்களில், மயில்களை கொன்று, வறுத்து, அதிலிருந்து வெளிவரும் எண்ணெயை எடுத்து விற்பனை செய்கின்றனர். இக்கொடுமையை, வன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது! ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X