Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
தாய்நாட்டை காக்கும் வீரர்களுக்காக...சமீபத்தில், விமானத்தில் டில்லிக்கு பயணிக்க நேர்ந்தது. விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருக்கும் போது, அவசர அவசரமாக, 15 இந்திய ராணுவ வீரர்கள் ஏறி, என் இருக்கையை சுற்றி அமர்ந்தனர். நான், அவர்களுடன் பேசிய போது, ஆக்ராவில் நடக்க இருக்கும், இரண்டு வார பயிற்சிக்கு பின், காஷ்மீர் எல்லையில், பாதுகாப்பு பணிக்காக செல்ல இருப்பதாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017ஆரியமாலா படத்தில், சின்னப்பா நடித்திருந்த பகுதிகளை, இயக்குனர் நந்தலாலுக்கு திரையிட்டு காட்டுகின்றனர் என்ற தகவல், என் காதுக்கு எட்டியது. என்ன நடக்கிறது என்பதை வெளியே இருந்து கவனித்தபடி இருந்தேன். அப்படக்காட்சி முடிந்ததும், 'ஜங்கிலி வாலா, ஜங்கிலி வாலா...' என்று கூறியவாறு, படக் கொட்டகையிலிருந்து வெளியே வந்து, கோட்டை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
நண்பர் ஒருவர் சிறு தொழில் ஒன்றை ஆரம்பிக்க எண்ணி, அதற்கான முயற்சியில், முழு மூச்சுடன் இறங்கினார்.நம்மூரில் ஒருவர் தொழில் துவங்க முனைந்தால், அவரை எல்லா வழிகளிலும் நோகடித்து, 'வேண்டாண்டா சாமி...' என, ஓட வைக்கும் கலையை, நன்கு அறிந்தவர்கள், நம் அரசுத்துறை அதிகாரிகள். உட்கார வேண்டுமா, அதற்கு ஒரு லைசன்ஸ். எழுந்திருக்க, பின்னால் திரும்பிப் பார்க்க, மேலே அண்ணாந்து பார்க்க என, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
எம்.சபீனா, கம்பம்: பெண்கள் அளவுக்கதிகமாக நகை அணிவது ஏன்?தற்பெருமையடித்துக் கொள்ள, தங்களிடம் உள்ள செல்வச் செழிப்பை வெளிப்படுத்தி, மற்ற பெண்களை,- தோழியரை - அக்கம், பக்கத்தாரை - உறவினர் பெண்களை பொறாமை கொள்ள வைக்க, - அதைப் பார்த்து இவர்கள் சந்தோஷம் கொள்ள, சில பெண்கள் இப்படி நகை அணிகின்றனர்! இதில், பரிதாபம் என்னவென்றால், இப்படி நகை அணிபவர்களில் பலருக்கு கழுத்தே இருப்பதில்லை. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
சைக்கிளை உருட்டியபடி, அந்த பெரிய வீட்டை கடந்து செல்லும் போது,''ரவி...'' என்று, ஒரு அதிகார குரல்! நிமிர்ந்தால், வீட்டு வாசலில், அருணின் அப்பா நின்றிருந்தார்.''என்ன மாமா?''''உள்ள வா... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.''சைக்கிளை ஓரங்கட்டி, உள்ளே நுழைந்தேன். நாற்காலியில் உட்கார சொன்னவர், ''உன் சினேகிதன், என்ன காரியம் செய்துகிட்டிருக்கான் தெரியுமா...'' என்றார்.''ஏன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
உலகம் முழுவதும், ஏப்., 2ம் தேதியை, உலக ஆட்டிச தினமாக அனுசரிக்கின்றனர்.கடந்த, 1940ல் முதன்முதலாக, 'ஆட்டிசம்' பற்றி கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து இதுகுறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த, லியோ கேனர் என்ற மருத்துவர், 1943ல், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட 11 குழந்தைகளை ஆய்வு செய்து, பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.'டிஸ்லெக்சியா' போன்று, ஆட்டிசமும் மரபணு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
தளபதி - 2ம் பாகத்தில் விஜய், விக்ரம்!ரஜினி - மம்மூட்டியை வைத்து, தான் இயக்கிய, தளபதி படத்தின், இரண்டாம் பாகத்தை எடுக்கயிருக்கிறார், மணிரத்னம். அதற்கான கதை விவாதத்தை துவங்கியுள்ளவர், அப்படத்தில் நடிக்க, சில பிரபல நடிகர்களிடம், கால்ஷீட் கேட்டு வந்தவர், தற்போது, விஜய் மற்றும் விக்ரமிடம் பேசியுள்ளார்; அவர்களும், சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில், ரஜினி கதாபாத்திரத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
சக்தியின் அருள் இல்லையெனில், இவ்வுலகில் எந்த உயிரும் இயங்க முடியாது. அத்தகைய சக்தி தேவியான அன்னையின் அருளை பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து சுவாமி தீட்சிதரின் வாழ்வில், நடந்த நிகழ்வு இது!அம்பிகையை நேரில் தரிசித்து, தேவியின் ஷோடசாட்சர மந்திரங்களையும், அம்மந்திர தேவதைகளின் தரிசனமும் பெற்றவர், முத்து சுவாமி தீட்சிதர். அத்துடன், திருத்தணியில், முருகப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
தோல்விகளை அலசும் பழக்கம், நம்மவர்களிடம் அதிகமாக இல்லை என்பது, ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய உண்மை.மேலை நாடுகளில், தோல்வியை அலசுதல் என்பதை, தொழில் சார்ந்த விஷயத்தில், அதிகமாக கடைப்பிடிப்பதோடு, மிகுந்த முக்கியத்துவமும் கொடுக்கின்றனர்.முதல் திருமணம், தோல்வியில் முடிந்த நிலையில், இரண்டாவது திருமணம், பலரது வாழ்க்கையில், வெற்றியாக அமைய என்ன காரணம்?'முதல் திருமணம் ஏன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு —எனக்கு திருமணமாகி, 12 மற்றும் 8 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.என் கணவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வேலை விஷயமாக, அடிக்கடி வெளியூர் செல்வார். அமைதியாக சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில், கடந்த மூன்று மாதங்களாக, அவரது போக்கில், மாற்றம்.அவர் பர்சில், ஒரு பெண்ணின் பெயர் மற்றும் முகவரி இருந்தது. அடிக்கடி இரவு, 11:00 மணிக்கு மேல், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
ஏப்., 5 - ராமநவமிராமன் பிறந்தது, புனர்பூச நட்சத்திரம், நவமி திதியில்!இன்று, ஜென்ம நட்சத்திரத்துக்கே முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால், முன்பு, ராமன், கிருஷ்ணர் போன்றோரின் திதிக்கே முக்கியத்துவம் தரப்பட்டது.அயோத்தி மன்னர் தசரதருக்கு கவுசல்யா, கைகேயி மற்றும் சுமித்திரை என, மூன்று மனைவியர். ஆனாலும், குழந்தை பாக்கியம் இல்லை. தனக்குப் பின், நாடாள பிள்ளை வேண்டுமே என்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
உன் பெயரையே விரும்புகிறேன்என்னை குளிர்வித்தல் பொருட்டுநேற்றிரவு கனமழையைநீ தான் அனுப்பி வைத்தாயா?நான் மலர்தல் வேண்டிசெடிகளில் குலுங்கும்பூக்களுக்கு சிரிப்பைநீ தான் அள்ளி வீசினாயா?நிலவு எனக்கு பிடிக்கும் என்பதால் தான்அதன் காலடியில்நட்சத்திர முத்தங்களைஅடுக்கி வைத்திருக்கிறாயா?இருள் கண்டு பயம் கொள்ளும்குழந்தை நானென உணர்ந்து தான்ஊர்தோறும் கோவில் எழுப்பிஎன்னை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
காந்திஜி பற்றி, ஆவணப்படம் தயாரித்த, ஏ.கே.செட்டியார் ஒரு கட்டுரையில்: குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்த, சபர்மதி ஆசிரமத்தில், காந்திஜி பற்றி ஆவணப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம்; கேமராமேனாக, டாக்டர் பதி பணியாற்றினார்.காலைப் பொழுதில் காந்திஜி நடந்து வருவது போலவும், அப்போது, எதிரே வருவோருக்கு வணக்கம் தெரிவிப்பது போன்றும் படமாக்க திட்டமிட்டோம். அதனால், காந்திஜி நடந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
காளிமுத்துவை போட்டுத் தள்ளுவது என்று தீர்மானித்தனர், மாயாண்டியும், அய்யாத்துரையும்! ஜாதி கவுரவத்தை காப்பாற்றுவதற்கு, அதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.''முதல்ல நீ ஆதிலட்சுமிய தூக்கிட்டுப் போயி, கல்யாணம் செய்துக்கோ பங்காளி; உன் மாமன நாங்க சமாளிச்சுக்கிறோம். அதுக்கப்புறம், நம்ம ஆளுங்கள அனுப்பி, காளிமுத்த தீர்த்து கட்டிடலாம்,'' என்றான் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
கிர்ணிபழ ஜூஸ்!நறுக்கிய கிர்ணிப்பழம் துண்டுகள் - 1 கப், நீங்கள் விரும்பும் பழத்துண்டுகள்  - 1 கப் மற்றும் ஐஸ் கட்டிகள் - 1 கப் ஆகியவற்றை மிக்சியில் போட்டு, நுரைக்க அடித்து பரிமாறவும். இதனுடன், தண்ணீர் சேர்க்க வேண்டாம். விரும்பினால், 1 சிட்டிகை சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.ஸ்வீட் லஸ்சி!இரண்டு கப் கெட்டி தயிரை, மெல்லிய துணியில் போட்டு, கட்டி தொங்க விடவும். தண்ணீர் முழுவதும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
நடுங்க வைக்கும் குளிருக்கு இதமாக, சூடாக ஒரு டீயோ, காபியோ சாப்பிட்டால் எப்படி இருக்கும்... கூடவே, கரகர, மொறுமொறு என, ஒரு வர்க்கியை டீயில் தொட்டு சாப்பிட்டால்... தேவாமிர்தம் தான்!மலைகளின் அரசியான ஊட்டி, வர்க்கிக்கும் பிரபலமானது. கோடை கால சீசனில், நாள் ஒன்றுக்கு, 8,000 கிலோ அளவுக்கு வர்க்கிகள் விற்பனை ஆகின்றன. நெய் வர்க்கி, இனிப்பு, சதுரம், எண்ணெய், ரிப்பன் மற்றும் மசாலா வர்க்கி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
* வெயிலில் அலைவதால் தலையில் ஏற்படும் எண்ணெய் பிசுக்கை போக்க, கசகசாவை ஊற வைத்து, அரைத்து குளிக்கலாம். வடித்த அரிசி கஞ்சியை, வாரத்திற்கு ஒரிரு முறை தேய்த்து குளிப்பதும், பிசுபிசுப்பை நீக்கும். இரவு, விளக்கெண்ணையை உள்ளங்காலில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க, நல்ல தூக்கம் வரும்.* கோடையின் முக்கிய பிரச்னை, 'டீ ஹைட்ரேட்' என, சொல்லப்படும், உடம்பின் நீர் வற்றுதல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X