Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
ஒரு கோவிலில், நிறைய பக்தர்கள் வந்து போய் கொண்டிருந்தனர். ஒரு சிலர், கோவிலுக்காக எண்ணை, திரி, பழம், தேங்காய் என்று சிலவற்றை கொண்டு வந்தனர்; சிலர், ஒரு ஆழாக்கு அரிசி, ஒரு பிடி பருப்பு இப்படியாக கொண்டு வந்து, அதற்கான கூடைகளில் போட்டு சென்றனர்; எல்லாமே கைங்கர்யம் தான்.ஒருவர், வேட்டி மடியில் கொஞ்சம் புஷ்பங்களை கொண்டு வந்து, அங்கிருந்த புஷ்பக் கூடையில் போட்டார். இதைப் பார்த்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
ஏப்., 7 - மதுரை சித்திரை திருவிழா ஆரம்பம்!மீனாட்சி - மதுரையின் அரசி. இவளுக்கு, இந்தப் பெயர் வந்ததே, அவளது கண்களின் சிறப்பால் தான்!காசி விசாலாட்சியை, "விசாலம்+அட்சி' என்று பிரிப்பர். "அட்சம்' என்றால் கண்கள். விசாலமான கண்களால் உலகைப் பாதுகாப்பவள் என்று அர்த்தம். காஞ்சி காமாட்சியை, காமம்+அட்சி என்பர். இதற்கு, "பக்தர்களின் விருப்பங்களை, தன் கண் அசைவிலேயே நிறைவேற்றுபவள்...' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
மொபைல் போனை பயன்படுத்தும் போது...மொபைல் போனை எப்படி பயன்படுத்தக் கூடாது என்பதற்கு, உலக அளவில் உதாரணமாக இருப்பவர்களில் முதல் இடம் இந்தியர்களுக்கு; இரண்டாவது இடம் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களுக்கு என, ஒரு சர்வே சொல்கிறது.ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள், அங்குள்ள உள்ளூர் இளைஞர்களால் தாக்கப் படுகின்றனர்; படுகொலை செய்யப்படுகின்றனர் என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
நூறு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி., 1880 - 1890களில், நாடக அரசியாக விளங்கிய பாலாமணி அம்மையாரின் புகழ், கொடிகட்டிப் பறந்தது.கும்பகோணத்தில், முழுக்க முழுக்க பெண்களை வைத்தே நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார். என் தந்தையாராகிய கந்தசாமி முதலியாரிடம், "மனோகரா' நாடகம் நடத்துவதற்கான பயிற்சியைக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அந்த அழைப்பை ஏற்று, என் தந்தை, பாலாமணி நாடகக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
பேக்ஸ், ஈ-மெயில் என, தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகி விட்ட நிலையில், அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலிருந்து, கனமான தபால் ஒன்று என் பெயருக்கு வந்தது. கடிதம் எழுதி இருந்த வாசகி பெயர் சவிதா...கணவர் கம்ப்யூட்டர் துறையில் இருப்பதாக கடிதத்தில் எழுதி இருக்கும் இவர், ஈ-மெயில் செய்யத் தெரிந்தவராகத்தான் இருக்க வேண்டும்... இருந்தும், கையால் எழுதிப் போடுவதில் அன்யோன்னியம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
** ஜான் சஞ்சீவி, திண்டிவனம்: நான் ஒரு பாத்ரூம் பாடகன்; ஓரளவு பாடுவேன். "ஏதோ ஒரு காலத்தில் வாய்ப்பு கிடைக்காதா?' என்ற எண்ணத்தில், கல்யாணத்திற்கு முன்பும் பாடினேன்; இப்போதும் பாடுகிறேன். இது, என் மனைவிக்கு பிடிக்கவில்லை; அநாகரிகம் என்கிறாள். அவளுக்காக என் குறிக்கோளை அடகு வைப்பதா அல்லது செவிடன் காது சங்காக விட்டு விடலாமா?இரண்டாவதையே செய்யுங்கள்! வாய்ப்பு கிடைப்பது ஒரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
இதுவரை: நாட்டிய நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகருக்கு சென்றிருந்தாள் மதுரிமா. வீட்டில் தனியாக இருப்பது சிரமமாக இருந்ததால், விமான பணிப்பெண்ணான கவிதாவை தேடி, அவளது வீட்டிற்கு சென்றான் மதுரிமாவின் கணவன் நரேன். அவளுடன் பேசிக் கொண்டிருந்த போது, கவிதாவின் மாஜி கணவன் டேவிட் ஆண்டர்சன் அங்கு வந்தான் —வீட்டிற்குள் நுழைந்த கவிதாவின் மாஜி கணவன், டேவிட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
பொதுவாக, பத்திரிகையாளர்கள்தான் மற்றவர்களை பிரபல மாக்குவர்; ஆனால், இந்த கிரிக்கெட் சீசனில், பார்வை இல்லாத, பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரபலமாகி உள்ளார்; அவர்தான், சானியா ஷல்மாதி, வயது 28.பாகிஸ்தானில் பிறந்த இவர், சிறுவயதில் கண்ணில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பார்வையை இழந்தார்; ஆனால், நம்பிக்கையை இழக்காமல், கல்வியில் கவனம் செலுத்தியதை தொடர்ந்து, தகவல் தொடர்பு துறையில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
பட்டாபட்டி 50-50, போட்டா போட்டியாக மாறியது!கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், கதாநாயகனாக நடித்துள்ள படம், பட்டாபட்டி 50-50. பல மாதங்களாக வியாபாரம் ஆகாமல் இழுத்தடித்த அப்படம், இப்போது ரிலீசுக்குத் தயாராகியுள்ளது. அதோடு, படத்தின் தலைப்பையும், போட்டா போட்டி என்று மாற்றியுள்ளனர். கிரிக்கெட் வாசனையே இல்லாத இரண்டு கிராமங்களுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியே, இப்படத்தின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
"ரெசிடன்சி கிளப்'பின் அந்த அரை வெளிச்சமான, "பாரில்" அமர்ந்து, தனியாக உற்சாக பானம் பருகிக் கொண்டிருந்தார் விசுவம். ஆயிற்று... இன்றோடு அவர் வேலையிலிருந்தும் ஓய்வு பெற்று, ஆறு மாதங்கள் முடிந்து விட்டன."ஒவ்வொரு சமயம், காலம் இறக்கை கட்டி பறக்கிறது; சில சமயங்களில், ஆமை, நத்தை இவற்றை விட மெதுவாக நகர்கிறது... இதுதான், "ரிடையர்ட் லைப்" என்று கொள்ள வேண்டுமா?' என நினைத்துக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —எனக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. என் திருமணம், காதல் திருமணம் என்பதால், இதுவரை, என் வீட்டில் என்னை ஏற்கவில்லை. என்றாலும், அந்த குறை தெரியாது, என் கணவர் பார்த்துக் கொள்கிறார். எனக்கு, ஒரு வயதில், பெண் குழந்தை உண்டு. என் மாமியார், மாமனாரை அம்மா, அப்பாவாக எண்ணி, அவர்களை அப்படித்தான் கூப்பிடுவேன்.என் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
இயற்கையோடு இயைந்த வாழ்வு இதுதானா?* இருண்டு கிடந்த சமூகத்தின்விடியல் கண்டான்...சின்னச் சின்ன ஆசைகளில்சிம்மாசனமிட்டான்!* கல்லை சிற்பமாக்கினான்...மின்னலை கைது செய்துமின்சாரம் கண்டான்!* நிர்வாணத்திற்கு விடை கொடுத்துதாவரங்களுக்குள்ஒளிச்சேர்க்கை செய்யும்உத்தி கண்டான்!* கண்ணீர் சந்தோஷத்தின்சமிக்ஞையை தரிசித்துமனிதனின் மகத்துவத்தைபதிவு செய்தான்!* சூரியன் தடுக்கி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
அதிகாலை மணி, 5.30 —இரட்டைப் படுக்கையில் படுத்திருந்த சோமநாதன், எழுந்து சம்மணமிட்டு அமர்ந்தான்; வயது 35. விருதுநகர் நிறம்; பழனி உயரம். பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியையும், ஒன்பது வயது மகனையும், ஓரு பார்வை பார்த்தபடி, இறைவனை வணங்கினான்."இன்றைய பொழுது எல்லாருக்கும் நல்லா இருக்கணும். தீயவை களிலிருந்து விலகி நிற்கும் மன வலிமையை, மக்களுக்கு வாரி வழங்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
நம்ப முடியாதுதான்... ஆனால், முடியும் என நிரூபித்துள்ளனர் இரண்டு மாணவர்கள். வெறும், ஐந்தாயிரம் ரூபாய்க்கு, "லேப்டாப்' எனப்படும் மடிக்கணினியை தயாரிக்க முடியுமாம்.ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகர் பாண்டா என்ற மாணவரும், சஸ்வத் ஸ்வைன் என்ற மாணவரும் கடந்த, 10 மாதங்களாக ஆராய்ச்சி செய்து, புதிய லேப்டாப் ஒன்றை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சுக்கும், அவர் காதலி கேத் மிடில்டனுக்கும், ஏப்., 29ம் தேதி, கோலாகலமாக திருமணம் நடக்க உள்ளது. வழக்கமாக திருமணம் நடக்கும் சர்ச்சுக்கு வரும் அரச புது மண தம்பதியினர், குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கார வண்டியில் தான் வருவர்; ஆனால், கேத் மிடில்டன், பழைய ரோல்ஸ் ராய்ஸ் காரில் வர விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த கார், இளவரசர் சார்லசுக்கு சொந்தமானது.கடந்த, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
இப்போது பெரும்பாலான இளைஞர்களும், இளைஞிகளும் அணியும், "டீ-சர்ட்'டில் இதய வடிவிலான ஓவியம் இருப்பதை காணலாம். காதலை வெளிப்படுத்தும் இந்த இதயத்தோடு, பென்குயின் ஒன்று நடமாடி வருகிறது.கடும் குளிர் பிரதேசத்தில் வசிக்கும் அந்த பென்குயின் உடலில், இயற்கையிலேயே இவ்வாறு இதயம் போன்று வடிவம் தோன்றியுள்ளது. பல லட்சம் பென்குயின்களில் இதுபோல் ஏதாவது ஒன்றிற்குத்தான் இப்படி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X