Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
மாற்றுத் திறனாளியின் மனிதநேயம்!என் மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்க, மாற்றுத்திறனாளியான என் பள்ளித் தோழியை சந்திக்க, அவளது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டின் முகப்பில், 'மாற்றுத்திறனாளி ஏழை மாணவ - மாணவியருக்கு இங்கு இலவசமாக டியூஷன் எடுக்கப்படும்...' என்ற 'போர்டு' பளிச்சிட்டது. அதுபற்றி தோழியிடம் விசாரித்த போது, 'ஒரு காலத்தில், ஊனமாக பிறந்து விட்டோமே என, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர் இன்பா.சென்னை, லேடி வெலிங்டன் மருத்துவமனை - மாலை நேரப் பணிக்காக, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
மதுரை வாசகி ஒருவர், வித்தியாசமான சிந்தனையுடன், ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் இதோ:பெண் விடுதலை, பெண்ணியம், பெண்மை என்று பேசும் ஆண், பெண் பேச்சாளர், எழுத்தாளர் முயற்சிகள் எல்லாம், விரயமாக போவதற்கு காரணம், அவர்கள் செக்கு மாட்டை போல, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வளைய வருவது தான்.முன்னோர் வழியையும் விடாது, புதுமையையும் விடாத இரு வாழ்வு தான் அதற்கு காரணம். ஏனெனில், கணவன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
வி.சியாமளன், மதுரை: எடுத்த காரியத்தை நிறைவேற்ற, என்னென்ன செய்ய வேண்டும்?ஊசியின் துளைக்குள், நூலை நுழைத்த அனுபவம் உண்டா? நூலின் நுனி பிரிந்திருந்தால், ஊசியில் கோர்க்க முடியாது அல்லவா? அதுபோல, காரியத்திலேயே கவனமாக இருங்கள்; நிறைவேறும்!கே.ஜெகஜீவன், ஆலங்குளம்: போயிங் விமானங்கள் ஒரு மணி நேரம் பறக்க, எவ்வளவு எரிபொருள் செலவாகும்?மயக்கம் போட்டு விழுந்து விடாதீர்கள்... 14,200 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
வழக்கறிஞர் என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்வர் சிலர். வழக்குரைஞர் என்பதை உரியவர்கள் சொல்ல, அறிஞர் என்று பிறர் தான் அழைக்க வேண்டும்.தத்துவமேதை, மருத்துவ மேதை என்று எவரும் தங்களை அழைத்துக் கொள்வதில்லை. பிறர் இப்படி அழைக்கும் போது தான் பெருமை. சரி... விஷயத்துக்கு வருவோம்.வழக்குரைஞர் என்பவர் கட்சிக்காரர் பக்கம் நிற்பவர்; சரியோ, தவறோ தம் கட்சிக்காரருக்காக வாதிடுவது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
வீட்டினுள் நுழைந்ததும் அதிர்ந்து நின்றான் பரணி. பாத்திரங்கள் தாறுமாறாக சிதறி கிடக்க, குழந்தைகளை அணைத்தவாறு அழுது கொண்டிருந்த அண்ணியை பார்த்து, ''என்னாச்சு அண்ணி... ஏன் அழுதுட்டு இருக்கீங்க... வீடு வேற அலங்கோலமாக கிடக்கு... என்ன நடந்தது?'' என்று பதற்றத்துடன் கேட்டான் பரணி.''தம்பி... அந்த வேலுத்துரை, 'ஆறு மாசமா வாடகை பணம் தர முடியாத உங்களுக்கு எல்லாம் எதுக்கு வீடு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
வெயிலின் தாக்கத்தால், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, எண்ணெய்ப் பசையான உடம்பு என்றால், பருக்கள் எளிதாக தோன்றும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்க, பப்பாளிப் பழச்சாறை முகத்தில் பூசவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது; அப்படிச் செய்தால், பருக்கள் அதிகமாகும்.* நாம் பயன்படுத்தும் படுக்கை, தூய்மையான காட்டன் தயாரிப்பாக இருக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து வருகிறார், 90 வயது ஏழை பாட்டி!ஈரோட்டில் இருந்து, 46 கி.மீ., பயணித்தால், காங்கேயம் வரும். அங்கிருந்து பழனி போகும் பாதையில், 8 கி.மீ., தொலைவில் இருக்கிறது வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில்.இங்கு தரிசிக்க வேண்டியவர்கள் இருவர். ஒன்று, முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அருள்புரியும் முருகன்; இரண்டாவது, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
அரசியல் சர்ச்சையில் விஜயசேதுபதி!விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைய தளங்களில் மோதிக் கொள்வதைப் பார்த்து, நடிகர் விஜயசேதுபதி, 'ரசிகர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை விட்டு, ஏதாவது அரசியல் கட்சியில் சேருங்கள்...' என்று, 'அட்வைஸ்' செய்திருந்தார். விளைவு, விஜயசேதுபதி ஒரு கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக, ஒரு செய்தி, காட்டுத்தீயாய் பரவியது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
ஆணவம் என்பது, அறிவை சிதைத்து, மனிதனின் அழிவுக்கு வித்திடும். அத்தகைய ஆணவத்தை அழித்து, மனதை வென்றோரே மகான்கள்.கர்நாடக மாநிலத்தில், 12ம் நூற்றாண்டில் வசவண்ணர் என்ற மகான் ஒருவர் இருந்தார். மனம், மொழி மற்றும் மெய் எனும் மூன்றையும், சிவபெருமானின் திருவடியில் பதித்த இவர், விஜ்ஜல மன்னரிடம் அமைச்சராக பணியாற்றினார்.ஒருநாள், மேல்மாடத்தில் நின்றிருந்தார் விஜ்ஜல மன்னர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
அன்புள்ள அக்காவுக்கு —என் வயது, 41; எனக்கு, பிளஸ் 1 படிக்கும் ஒரே மகள் உண்டு. என் கணவர் சொந்த தொழில் செய்து, நஷ்டம் ஆனதால், வேலைக்கு செல்கிறார். நான், சிறிய அளவில் கடை வைத்துள்ளேன். இருவரும் காலையில் சென்றால், இரவு தான் வீடு திரும்புவோம். சில சமயம், இரவு வேலை இருந்தால், அதிகாலை வந்து, பின், திரும்ப வேலைக்குச் சென்று விடுவார் என் கணவர்.என் பிரச்னை என்ன வென்றால், நாங்கள் வாடகை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
ஏப்., 4 - தண்டியடிகள் குருபூஜைகடந்த சில மாதங்களுக்கு முன், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகள், வெள்ளத்தில் திக்குமுக்காடின. இப்போது, கோடை வந்து விட்டது. பல இடங்களிலும், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், தண்ணீரை முறையாக சேமித்து வைக்காததே!இதனால் தான், மழைநீரை சேமித்து வைக்க கோவில்கள் முன், குளங்களை வெட்டினர் நம் முன்னோர். மழை நீரை சேகரித்ததால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
காதலிக்காதீர்கள்!காதலிக்காதீர்கள்...நான் சொல்லவில்லைதினம் தினம் ரத்தக்கறையுடன்பயணிக்கும்ரயிலின் சக்கரங்கள்சொல்கின்றன!காதலிக்காதீர்கள்...நான் சொல்லவில்லைவிஷ மருந்துகளால்நரம்புகளை அறுத்துதுடித்து கதறும்இதயம் சொல்கிறது!காதலிக்காதீர்கள்...நான் சொல்லவில்லைஅடுக்குமாடிகளில் நின்றபடிபூமி அதிர கீழே தள்ளும்உயர்ந்த கட்டடங்கள்சொல்கிறது!காதலிக்காதீர்கள்...நான் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
எட்டயாபுரம், பா.நா.கணபதி எழுதிய, 'நினைவுகள்' நூலிலிருந்து: ஒரு முதிய காங்கிரஸ் தியாகி, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும்போது, தன் பெயருடன், மே/பா. காமராஜர், தலைவர், சத்தியமூர்த்திபவன், சென்னை என, பதிவேட்டில் எழுதி கொள்ளும்படி கூறினார்.ஒருநாள், அம்முதியவர் திடீரென்று இறந்து விட்டார். அவர் தந்த முகவரிப்படி காமராஜருக்கு தகவல் தரப்பட்டது. அதைக் கேட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
''அது ரொம்ப சுலபம்,'' என்றான் முரளி.பல ஆண்டுகளுக்குப் பின், சொந்த ஊருக்கு திரும்பியிருந்த முரளியை, ஆர்வத்தோடு நோக்கினர், அவன் நண்பர்கள்.அவன் முன்பு இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் பாதாளத்திற்கும், ஆகாயத்திற்கும் உள்ள வித்தியாசம்.முரளி ஊரை விட்டுப் போகும் போது, உடுத்திக் கொள்ள நல்ல உடையோ, உடைமைகளை வைத்துக் கொள்ள நல்ல பெட்டியோ இல்லை. அவனுடைய பரட்டைத் தலைக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
உலக ஆணழகன் பட்டம் பெற்ற, ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கவர்னருமான அர்னால்டுக்கு, பூனையை கண்டால் பயம். அதுவும், 'முகி' என்ற கறுப்பு பூனை என்றால், மிகவும் பயம்.இவரின் அம்மாவிற்கு பூனை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால், வீட்டில் ஏராளமான பூனைகளை வளர்த்து வந்தார். சிறுவன் அர்னால்டுக்கு, 'ஜிம்' போய், உடற்பயிற்சி செய்ய ஆசை. ஆனால், போலீஸ்காரரான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
தேவையான பொருட்கள்:பச்சைப்பயறு - ஒரு கப்பொடித்த வெல்லம் - ஒரு கப்பால் - ஒன்றரை கப்முந்திரி மற்றும் பாதாம் - தலா பத்துசெய்முறை: வெறும் வாணலியில் பச்சைப் பயறை வறுத்து, வேக விடவும். ஆறிய பின், வெல்லத்தை கரைத்து வடிகட்டி, அதனுடன் கலக்கவும். முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை பாலில் ஊற வைத்து அரைத்து, வேக வைத்த பயறுடன் கலக்கவும். இதை, அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, இறக்கினால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
தேவையான பொருட்கள்:துருவிய இளம் வெள்ளை பூசணி - அரை கப்அவல் - ஒரு கப்எலுமிச்சை சாறு - சிறிதளவுதயிர் - ஒரு தேக்கரண்டிகேரட் - ஒன்று (துருவியது)நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவுமஞ்சள் தூள் மற்றும் உப்பு - சிறிதளவுதாளிக்க:காய்ந்த மிளகாய் - இரண்டுகடுகு, பெருங்காயத்தூள் மற்றும் எண்ணெய் - சிறிதளவுசெய்முறை: பூசணி மற்றும் கேரட் துருவல், உப்பு, அவல், எலுமிச்சை சாறு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
தேவையான பொருட்கள்:சாதம் - ஒரு கப்கறிவேப்பிலை - ஒரு கப்மிளகு - ஒரு தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு - இரண்டு தேக்கரண்டிதுவரம்பருப்பு - ஒரு தேக்கரண்டிநெய் மற்றும் எண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுசெய்முறை: கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுக்கவும். மிளகு, உளுத்தம்பருப்பு மற்றும் துவரம்பருப்புடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும். ஆறிய பின், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
இளநீரில், எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால், வயிற்று கடுப்பு நிற்பதுடன், உடல் சூடு குறையும். மேலும், இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அரைத்து சாப்பிட்டாலும், உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று கடுப்பு தீரும்.* குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி பேதிக்கு, இளநீர் சிறந்த மருந்து.* இளநீரின் வாய்ப்பகுதியில் துளையிட்டு, ஒரு கரண்டி சீரகத்தை உள்ளே போட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X