Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
காரணமில்லாமல் காரியமில்லை. காரணமும், காரியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை மட்டுமல்ல; ஒன்றுக்குள் ஒன்று இணைந்திருப்பவை. இதுகுறித்து, பகவான் கண்ணன் பகவத் கீதையில் கூறும் போது, 'நானே காரணமாகவும், காரியமுமாய் இருக்கிறேன்...' என்கிறார். மனித வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும், ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டே இறைவனால் நடத்தப்படுகின்றன. பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
ஏப்., 8 - ராம நவமிஇன்றைய தினம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவும் செய்திகள், ஏராளமாக உலா வருகின்றன. அந்தக் காலத்தில் தாய், சகோதரி என்ற ஸ்தானம், அவரவர் குடும்பங்களைத் தாண்டி, வெளியிலும் இருந்தது. இதனால், பெண்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். இன்று, நிலைமை தலைகீழாகி விட்டது. இளைய தலைமுறைக்கு, உறவுகளின் மாண்புகள் குறித்த இதிகாச, புராண கதைகளை கற்றுத் தராததன் விளைவே, இத்தகைய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
இது வெயில் காலம்; இளம் பெண்களே ஜாக்கிரதை!நான் ஒரு கல்லூரி மாணவி; சமீபத்தில், நானும் என் தோழியும், பஸ்சில் பயணம் செய்தோம். ஒரு சீட் மட்டுமே காலியாக இருந்ததால், தோழி அமர்ந்து கொள்ள, நான் நின்று கொண்டேன். என் அருகில் நின்றிருந்த இளைஞன், தோழியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்து, திடுக்கிட்டு போனேன்.காரணம், வெயில் காலம் என்பதால், சிறிது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
தமிழ்த் திரைப்பட உலகில், வரலாறு படைத்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கப் படம், உலகம் சுற்றும் வாலிபன்.நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என, திரை உலகின் முப்பெரும் பரிமாணங்களில், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட படம், உலகம் சுற்றும் வாலிபன்.வெளிநாடுகளில் நடப்பது போல கதையை அமைப்பது சுலபம். ஆனால், கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களுக்கே நடிகர்களை அழைத்துச் சென்று, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
'பச்சினி, ஆரத்தி, கன்னல், செந்தனுபி, முகட்டு விசிறி, விலையேற்றஞ்சல், குதியுந்து, நன்னர் தொகை...' - இவை எல்லாம் என்ன என்று முழிக்கிறீர்களா? சட்டினி, ஆப்பிள், பாயசம், ஏர் கண்டிஷன், சீலிங்பேன், வி.பி.பி., ஸ்கூட்டர், போனஸ் இவற்றின் தமிழாக்கமாம்...ஓட்டலுக்குப் போய், 'பச்சினி வையுங்க...' என்றும், பழக்கடையில், 'ஆரத்தி ஒரு டஜன் கொடுங்க...' என்றும் கேட்டுப் பாருங்கள்... 'எங்கிருந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
ரா.பாலாஜி, திருப்பூர்: 'சுத்தத் தமிழன்' எப்படி இருக்க வேண்டும்?அவர்க'ள்' என்பதை, அவர்க'ல்', இவர்க'ல்' என, 'கல்' விட்டெறியக் கூடாது. 'ழ,ள,ல' ஆகிய எழுத்துகளை, சரியாக உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.ம.பங்கஜம், கோவை: அழகான ஆண்களைக் கண்டால், உடனே அவர்கள் மீது, எனக்குக் காதல் வந்து விடுகிறது. இதைத் தவிர்க்க என்ன வழி?கல்யாணம் தான்! கல்யாண ஆசை வந்துவிட்டது உங்களுக்கு; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
அன்று வந்த மூன்று மெயில்களும், ராகவ் மனதில், கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன.முதலாவது, கீர்த்தி அன் கோ. எஸ்டிமேஷன் காஸ்ட் கேட்டு, அவர்கள் அனுப்பிய மெயிலுக்கு, பதினைந்து நாட்களாகியும், இன்னும் பதில் வரவில்லை என்று, சற்று காட்டமாகவே எழுதியிருந்தனர்.அடுத்தது, பூர்ணா என்டர்பிரைசஸ். 'மார்ச் மாதத்து இன்வாய்ஸ் காப்பி இன்னும் வரவில்லை, என்ன நடக்கிறது?' என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
கடந்த, 1967ல் நடத்த பொதுத் தேர்தலில், தி.மு.க., அடைந்த வெற்றிக்கு காரணமே அண்ணாதுரை தான். 51 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுகளைப் பெற்ற காங்கிரஸ், ஆட்சியைப் பிடிப்பதற்குக் காரணம், காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிப் போவதால் தான் என்பதை, புரிந்து கொண்ட அண்ணாதுரை, அந்த கணக்கையே ஆயுதமாக்கி, காங்கிரசைத் தாக்கி வீழ்த்தினார்.சுதந்திரா, முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி - கமல்!விஸ்வரூபம் - 2 மற்றும் ஜெய்ஹிந்த் - 2 என, பல படங்களின் இரண்டாம் பாகம் வளர்ந்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து தற்போது, ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கருக்கும், ஏற்கனவே தான் இயக்கி, கமல் நடித்த, இந்தியன் மற்றும் ரஜினி நடித்த, எந்திரன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர், ரஜினி, கமலிடம் பேச்சுவார்த்தை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
உங்கள் பணம், 'செக்' மற்ற டாக்கு மென்ட்ஸ், உடைகள் அனைத்தும் ஒரே பெட்டியில் வைக்காமல், பிரித்து வைக்கவும்.* நாம் போகும் இடத்தின் தட்பவெப்பத்திற்கு ஏற்ற வகையில், உடை இருக்க வேண்டும். பெண்கள் உடை விஷயத்தில், சில விதிமுறைகளை தளர்த்திக் கொள்ளலாம். ஏனென்றால், புடவை பல இடங்களில் அசவுகரியமாக இருக்கும். சுடிதார், குர்த்தா, ஜீன்ஸ் போன்றவை, சவுகர்யமாகவும் இருக்கும். இரண்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
குற்றால டூர் வாசகர்களை, மகிழ்வித்து வந்த மதுரை காமெடி பாய்ஸ் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் சத்யபாஸ்கர், காதலுக்காக, தன்னையே உருக்கி, இறந்து போனார் என்பதை, கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.சத்யபாஸ்கர் இறந்து விட்டார் என்று, ஒற்றை வரியில் சொல்லி விட்டாலும், அவரது நினைவுகளை, அவ்வளவு எளிதில் மறக்க முடிய வில்லை.தான் ரொம்ப படித்தவன், அறிவாளி என்பது போன்ற, எந்த வித கர்வமும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
அன்பு வணக்கம்.— எனக்கு வயது 50; இரண்டு பெண்கள்; இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன், என் காலில், சிறிய அளவில், வெண்ணிற படை ஒன்று இருந்தது. அதை நான் கண்டு கொள்ளவில்லை.நான்கு மாதங்களுக்கு முன், எதேச்சையாக அதை பார்க்க நேரிட்டபோது, அது பெரிய அளவில் பரவி இருந்தது. எங்கள் குடும்ப டாக்டரை அணுகினேன். அவர் பரிசோதித்துப் பார்த்து, அது, 'லெப்ரஸி' என்று கூறி, இரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
தேர்(தல்) திருவிழா!மற்றுமொரு தேர்(தல்) திருவிழா வந்துவிட்டது!சாமியெல்லாம் கூடி தேரிழுக்கஆசாமிகள் வீதியுலா வரும்அதிசயத் திருவிழா!குடிமக்கள் காணாமல் போகும்கோலாகலத் திருவிழா!வாருங்கள் மக்களே வேடிக்கை பார்ப்போம்!(அந்த)ரங்க ராட்டினம்குடை (சாயும்) ராட்டினம்பாம்பு, கீரி சண்டைமனித முகமும்ஓநாயின் உருவமுமாய்வினேத விலங்கு...அதிர்வேட்டாய் வெடிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
அலுவலகத்தில், வேலையில் மூழ்கிருந்த பிரசன்னாவின், மொபைல் போன், அதிர்ந்தது. தங்கை வினிதா தான் அழைத்திருந்தாள்.''சொல்லு வினிதா,'' என்றான்.''அண்ணே... ஒரு ரெண்டு நிமிஷம், பேசலாமா?'' என்றாள். ''ம்... சொல்லு.''''அண்ணே, சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காத... புதுசா ஸ்கூட்டி வாங்கினதுலேர்ந்து அண்ணிதான், என்னை தெனமும் கல்லூரியில கொண்டு போய் விட்டாங்க. ஆனா, இப்ப, ஒருவாரமா, ஏதோ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, 'குளு குளு' பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா? பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள்.கோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
பச்சை மாமலைபோல் மேனி என்று, கொல்லி மலையைப் பார்த்துத்தான், ஆழ்வார்கள் பாடி இருப்பார்களோ என்னவோ! அப்படி ஒரு பசுமை. எங்கு பார்த்தாலும், பச்சைப் படுதாவை போட்டு மூடியது போல் காணப்படும் கொல்லிமலைத் தொடர், நாமக்கல்லிலிருந்து, 40 கி.மீ., தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 1,190 மீ. உயரத்தில் உயர்ந்து நிற்கும், கொல்லிமலையின் பரப்பளவு ஏறத்தாழ, 400 சதுர மைல்கள். 28 கி.மீ., வடமேற்காக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
ஓர் ஓவியக் கோட்டினைப்போலத் தோன்றும் இது, ஆசியாவின் மிக நீளமான குறுக்குப் பாலம். 115 அடி உயரமும், 1 கி.மீ. நீளமும் உடையது. திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில், அருவிக்கரை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாத்தூர் என்ற இடத்தில் இருப்பதனால், இதற்கு மாத்தூர் தொங்கு பாலம் என்று பெயர். பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இப்பாலம் வழியே, பட்டணம்கல் மலையிலிருந்து, இன்னொரு பக்கத்திற்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
அமெரிக்கா முழுவதும், லோரா கஸ்பர்ஸ்க் என்ற பெண்ணைப் பற்றித் தான், இப்போது, பரபரப்பாக பேசப்படுகிறது. நியூஜெர்சியை சேர்ந்த, இந்த பெண், முறைப்படி, யோகா கற்றவர். ஆனால், இவரின் ஆசனங்கள், மிகவும் வித்தியாசமான முறையில் உள்ளன. உடலை, ரப்பர் போல் வளைத்து, விதம், விதமான ஆசனங்களை செய்து காண்பித்து, பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார். இவர் மட்டுமல்லாமல், தன், நான்கு வயது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
பறவைகள் எங்கிருந்தால் என்ன? பார்க்கப் பார்க்க அழகுதான். தஞ்சாவூருக்கு வடக்கே, 35 கி.மீ. , தொலைவில் உள்ளது காரைவெட்டி பறவைகள் சரணாலயம். இதன் மொத்தப் பரப்பளவு, 454 ஹெக்டேர். ஒவ்வொரு நவம்பர் மாதமும், பெரும்பாலான நீர்ப்பறவைகள், சீதோஷ்ணம் மற்றும் குஞ்சு பொரிப்பதற்காக இங்கு வருகின்றன. பின், ஏப்ரல் மாதம், தன் குஞ்சுகளோடு கிளம்பிச் செல்லும் இப்பறவைகளை பார்ப்பதே கொள்ளை அழகு! ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
'என்ன தான், ராத்திரியில அனாவசியமாக எரிகிற விளக்குகள் மற்றும் பாத்ரூமில் கெய்சரை அணைத்திருந்தாலும், சகல குழாய்களை மூடி இருந்தாலும், சமையலறை, 'எக்சாஸ்ட்' விசிறியை அணைத்திருந்தாலும், கதவுகள் அனைத்தையும் தாழிட்டிருந்தாலும், எங்கேயாவது, எதையாவது அணைக்க மறந்திருப்போம்.முன்தினம், அப்பளம் சுட்டுவிட்டு, மைக்ரோ ஓவனை அணைக்காமல் விட்டு விட்டேன்; மனைவி ஏக அமர்க்களம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
காட்டில் சுதந்திரமாக சுற்றித் திரியும் விலங்குகளைப் பார்ப்பது எத்தகைய ஆனந்தம் என்பதை, ஆனைமலைக்குச் சென்றால், உணர்வீர்... யானை, காட்டெருது, தேவாங்கு, கரடி, பொன்னிறப் பறவைகள், எறும்புத் தின்னி போன்றவற்றை இங்கே காணலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில், 1,400 மீட்டர் உயரத்தில், 958 ச.கி.மீ., பரப்பளவில், பொள்ளாச்சி அருகே இச்சரணாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள அமராவதி நீர்த் தேக்கத்தில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
* வெள்ளரி, முள்ளங்கி, புடலங்காய், சவ்சவ் போன்ற நீர்ச்சத்து காய்களை, கட்டாயமாக சாப்பாட்டில் சேர்க்க வேண்டும். காரணம், மனிதனுக்கு, இந்த சீசனில், என்ன தேவை என்பதை கணித்து, இயற்கையே விளைவிக்கும், காய்கள் அவை.* வெயிலில் வெளியே செல்ல வேண்டி இருந்தால், தண்ணீரில் இரண்டு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் கொஞ்சம் தேன் கலந்த தண்ணீரை கையோட எடுத்துச் செல்லலாம்.* வெப்பத்தால் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X