Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
பெற்றோர்களே... எச்சரிக்கை!என் தோழி, தன், 12 வயது மகளை, விடுமுறைக்கு தங்கை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறாள். ஒரு வாரத்திற்கு பின், வீட்டிற்கு திரும்பியதிலிருந்து யாரிடமும் பேசாமல், பிரமை பிடித்தது போல் இருந்துள்ளாள் சிறுமி. பேய் பிடித்திருக்கும் என்று எண்ணி, அதற்கு பரிகாரம் செய்தும், பயன் இல்லை.தோழியின் மகளிடம், தனிப்பட்ட முறையில் பேசினேன் வெகு நேரத்திற்கு பின், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். சாவித்திரியின் இல்லம், அரண்மனை போன்று அட்டகாசமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
அது ஒரு மாலை நேரம்... திருச்சி பெமினா ஓட்டலின், நியூ பிளாக்கில், நீச்சல் குளத்தை பார்த்து அமைந்த அறை...மதியம், மூக்கு முட்ட, 'வெட்டி' இருந்ததால், 'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு...' என, அண்ணாதுரை சொன்னது போல, சுகமாக தூங்கி எழுந்தேன்.கண்ணாடி ஜன்னலை மறைத்திருந்த திரைச் சீலையை விலக்கி, நீச்சல் குளத்தைப் பார்த்தேன். பளிங்கு போல உடலமைப்பு கொண்ட, 30 - 32 வயது மதிக்கத்தக்க பெண் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
கே.ரகுபதி, திருவான்மியூர்: சில பெண்கள், ஆண்களை கண்டவுடன் உரத்த குரலில் பேசுகின்றனரே... அதன் காரணம் என்ன?'ஆண்களின் கவனத்தைக் கவர...' என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்!கி.ராஜேந்திரகுமார், சைதாப்பேட்டை: குடும்ப கஷ்டம், நிதி நிலை பற்றி குழந்தைகளுக்குத் தெரிவிப்பது சரியா?தெரிவிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளித் தோழன், எதிர் வீடு, அக்கம், பக்கம், உறவு குழந்தைகள் போல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
இரு நபர்களுக்குள் பணப் பரிமாற்றம் நடந்தது. கணிசமான தொகையுடன் சென்றவர், சாலையில் பைக்கில் அடிபட்டு இறந்து போனார். பணம் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. விபத்தின் போது உதவுகிறேன் பேர்வழி என முன் வந்த, முன்பின் தெரியாத ஒருவன் அமுக்கி விட்டான் என்றனர் சிலர். போக்குவரத்துப் போலீசார் கைப்பற்றினர் என்றனர் வேறு சிலர்மொத்தத்தில் ஆளும் காலி; பணமும் காலி. ஆனால், உயிரை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
செல்லமாய் சிணுங்கிய அலைபேசியின் அழைப்பைக் கேட்ட அட்ஷயா, 'யாருடைய அழைப்பாய் இருக்கும்...' என எண்ணியவாறே, அதை எடுக்கச் சென்றாள்.அப்போது, ''அட்ஷயா...'' என்ற கணவனின் கோபக் குரல் கேட்டு, அலைபேசி அழைப்பை அலட்சியப்படுத்தி, வேகமாக அவன் அறைக்குள் ஓடினாள்.அட்ஷயாவின் கணவன் அக் ஷய் ராஜ், இன்றைய தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் ஐந்து இடத்தில் இருப்பவன். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
'அப்பு' கெட்டப்பில், ஷாரூக் கான்!அபூர்வ சகோதரர்கள் படத்தில், கமல் நடித்த, அப்பு கெட்டப்பைப் போன்று, ஒரு படத்திலேனும் நடித்து விட வேண்டுமென்பது, பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் நீண்ட கால ஆசை. இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய், அதே பாணியில் ஒரு கதை கூற, தற்போது, அப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ஷாரூக் கான். இப்படத்தில், அப்பு கெட்டப்பிலேயே, படம் முழுக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
நம் முயற்சியும், இறையருளும் இருந்தால், மனக்கவலையில் இருந்து விடுபட முடியும். கவலை என்பது, சாதாரண இல்லறத்தானை மட்டுமல்ல, மாபெரும் முனிவர்களைக் கூட ஆட்டிப் படைக்க கூடியது.தன் அன்பிற்குரிய மனைவியான அகலிகையை, கல்லாக போகும்படி சபித்து விட்டோமே என நினைத்து, கவலையில் ஆழ்ந்தார் கவுதமர். தவத்தில் ஆழ்ந்தாலும், அவர் மனம் அமைதியில்லாமல் தவித்தது. இதனால், சில நேரங்களில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
அன்புள்ள அம்மாவுக்கு,என் வயது, 22; திருமணம் ஆகாத இளைஞன். வெளியூரில் தனியார் நிறுவனத்தில், ஆறு மாதங்களாக பணிபுரிகிறேன். இங்கு, வீட்டு வாடகை அதிகம் என்பதால், சிறிய அறை எடுத்து, நானே சமையல் செய்து சாப்பிட்டு, வேலைக்குச் சென்று வருகிறேன். சிறிய அறை என்பதால், ஒரே கட்டில் தான் போட முடியும். என் தந்தை ரயில்வேயில் பணிபுரிகிறார். எனக்கு, 24 வயதில் அக்காவும், 20 வயதில் ஒரு தங்கையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
ஏப்.,14 தமிழ் புத்தாண்டுதமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; அவ்வகையில், 1956ல் பிறந்த இந்த துர்முகி ஆண்டு, 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் பிறக்கிறது.ஒரு காலத்தில், மனிதர்களில் பெரும்பாலானோர், 120 ஆண்டுகள் தீர்க்காயுளுடன் வாழ்ந்தனர். இதை அடிப்படையாகக் கொண்டே, சூரிய தசை 6 ஆண்டுகள், சந்திர தசை 10 ஆண்டுகள், செவ்வாய் தசை 7 ஆண்டுகள், ராகு தசை 18 ஆண்டுகள், குரு தசை 16 ஆண்டுகள், சனி தசை 19 ஆண்டுகள், புதன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
சித்திரை மகளே வருக!சித்திரை மகள்நித்திரை நீங்கிமுத்திரை பதிக்கதமிழ் புத்தாண்டாகதவழ்ந்து வருகிறாள்!பங்குனி திங்களுக்குவிடை கொடுத்துபொங்கும் புதுவெள்ளமாகபவழவாய் திறந்துசுடர் விடும் சூரியனின்வாழ்த்துடன் வருகிறாள்!சித்திரை மகளைஆதவன் மட்டுமாஆசையோடுஒளிக்கதிர்களோடுவரவேற்கிறான்!அன்பு உள்ளங்கள்ஆடும் மயில்கள்பாடும் குயில்கள்துள்ளி ஓடும்புள்ளி மான்கள்!விரிந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
'சின்ன சின்ன ஆசை... சிறகடிக்கும் ஆசை...முத்து முத்து ஆசை... முடிந்து வைக்க ஆசை...'சப்பாத்திக்கு மாவு பிசைந்தபடி, சமையலறை ஜன்னல் வழியாக, 'டிவி'யில் ஓடும் பாடல் காட்சியை, ஆசையாய் வேடிக்கை பார்த்தாள் கவிதா.ப்ளஸ் டூ முடித்த கையோடு, ஆறு மாசம் தையல் வகுப்புக்கு போய், தலையணை உறை தைத்து பழகுவதற்குள், ரகுவை திருமணம் முடித்து, மாமியார் வீடு வந்த கவிதாவிற்கு, இதுபோன்ற சின்ன சின்ன ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
முல்லை முத்தையா தொகுத்த, 'புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்' நூலிலிருந்து: சைவ சமயத்தில், மிகுந்த பற்றும், வைணவத்தில் மிகுந்த வெறுப்பும் உடைய ஒரு புலவரிடம், தமிழ் கற்றுக் கொள்ள ஒரு மாணவன் வந்தான். அப்புலவர் வைணவப் பெயரைக் கேட்டாலே, 'சிவ சிவா...' என்பார்.மாணவனிடம், 'உன் பெயர் என்ன?' என்று கேட்டார் புலவர்.'சிவராமலிங்கம்...' என்றான் மாணவன்.புலவர் மகிழ்ச்சியுடன், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
கோடை விடுமுறை வந்து விட்டாலே, 'சுற்றுலா கிளம்பலயா?' என்ற விசாரிப்புகள் தான், முன்னே வந்து நிற்கும். உண்மையிலேயே, சுற்றுலாவில் மனம் நிறைய வேண்டும்; அதேசமயம், பர்சுக்கும் பங்கம் வராதிருக்க வேண்டுமா? இதோ... நால்வர் கொண்ட சிறு குடும்பத்துக்கு, இரு நாள் சுற்றுலாவாக குறைந்தது, 5,000 ரூபாய் முதல் அதிகபட்சம், 10,000 ரூபாய்க்குள் அடங்கும் சுற்றுலாத் தலங்கள் சில ஆங்காங்கே இந்த இதழில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
* மலைப்பாதையில் பயணிக்கும் போது, சாலை ஓரத்தில், புத்தம் புதிய கேரட் மற்றும் முள்ளங்கிகளை விற்பனை செய்வர். வயலில் பறித்து, அருகிலுள்ள ஓடைத் தண்ணீரில், அவற்றை சுத்தம் செய்வர். அத்தண்ணீர் மனிதர்கள் மற்றும் விலங்குகளால் அசுத்தப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால், குடற்புழு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X