Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
மனிதனுடைய ஆயுள், குறைந்த காலமே. இதை உணர்வதில்லை மனிதன்; ஆனால், மகான்கள் உணர்ந்திருக்கின்றனர். உலக சுகத்தில் ஆசை வைப்பதில்லை மகான்கள். மனிதனுக்கு மட்டும் ஆசை குறைவதில்லை. இதன் காரணமாக, குடும்பம், மனைவி, மக்கள் மீது ஆசை வைக்கிறான். மனைவியின் மீதுள்ள ஆசையால், எத்தனையோ துன்பங்களை ஏற்றுக் கொள்கிறான்; எத்தனையோ செலவு செய்கிறான். மனைவிக்கு பத்தாயிரம் ரூபாயில் ஒரு புடவை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
ஏப்.,- 17 - திருநாவுக்கரசர் குருபூஜை"மாசில் வீணையும் மாலை மதியமும்...' என்ற தேவாரப்பாடலை இசைக்காத பக்த நெஞ்சங்களே இல்லை. இந்த இனிய பாடலை எழுதிய திருநாவுக்கரசர் குருபூஜை, சித்திரை சதய நட்சத்திரத்தில் நடக்கும். இந்த நன்னாளில், அவர் அவதரித்த திருவாமூர் தலத்துக்கு சென்று வரலாம். நாவுக்கரசரின் தந்தை பெயர் புகழனார், தாயார் மாதினியார், சகோதரி திலகவதியார். இவருக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
உணவு வீணாவதை தவிர்ப்பீர்!சமீபத்தில் அரசுத்துறையும், தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய ஒரு முகாமில், நிபுணர் பிரிவில், நானும் கலந்து கொள்ள நேர்ந்தது. காலை முதல் நடந்த முகாம், மதியம் முடிவடைந்ததும், அரசுத்துறை அலுவலர்கள், நிபுணர்கள், தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் ஆகியோர் அடங்கிய முப்பது பேருக்கு, பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது. அதை வாங்கி, மேசையில் அமர்ந்து சாப்பிட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
நாங்கள் மூன்று உதவி ஆசிரியர்களும், கடற்படைத் தளபதி, நிலப்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி போல நின்று, ஆசிரியரை லஞ்ச்சுக்கு வழியனுப்புவது வழக்கம்.அதை ஒரு மரியாதையாக நாங்கள் கருதியதோடு, ஆசிரியர் புறப்பட்டாயிற்று என்பதை, இரு கண்களால் பார்த்து உறுதி செய்து கொள்வதும் உள்நோக்கம்.பிற்பகல், "டான்' என்று, நாலு மணிக்கு திரும்பி விடுவார் ஆசிரியர் .அந்த இடைப்பட்ட நேரத்தில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
இலங்கை - அதுதாங்க, ஸ்ரீலங்கா செல்வதற்கு சென்னையில் முன் கூட்டியே விசா எடுக்கத் தேவையில்லை. கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய பின், அங்கேயே விசா வாங்கி, ஊருக்குள்ளே செல்லலாம்.கண்மூடித் திறப்பதற்குள் - அதாவது, இன்று போய், நாளை திரும்புவதான கொழும்புப் பயணம் அவசியமாயிற்று... யாரையும் உடன் அழைத்துச் செல்ல அவகாசமும் இல்லை... இந்த அழகில், உடல் நலமும் பூரண சுகம் இல்லை!ரூம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
** ம.ஜோதி, திருத்தணி: வருமானத்திற்கு ஏற்ப செலவை குறைக்க வேண்டும் என்கிறார் என் கணவர். செலவுக்கேற்ப வருமானத்தை பெருக்க வேண்டும் என்கிறேன் நான். எது சரி?உங்கள் கணவர் சொல்வது தான் சரி; இந்த கிணற்றில் எவ்வளவு ஊறும், எவ்வளவு தான் இறைக்க முடியும் என்பது அவருக்கே தெரியும்! மாதம், 25 ஆயிரம் ரூபாய் நீங்கள் செலவு செய்ய ஆசைப்படுகிறீர்கள்; அவருக்கு அதைக் கொடுக்க ஆசை இருந்தாலும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
பாரதியாரை முதன் முதல் சந்தித்ததை, வ.உ.சிதம்பரம் நினைவு கூர்கிறார்...அது, கடந்த 1906ம் ஆண்டின் ஆரம்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்போது, தூத்துக்குடியிலிருந்து, சென்னை சென்றிருந்தேன். நான் தூத்துக்குடியில், வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்தேன். சென்னை திருவல்லிக்கேணியில், சுங்குராம செட்டித் தெருவில், என் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நான் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
தேச ஒற்றுமை ஆல்பம்!இசையமைப்பாளர் ஜார்ஜ் பீட்டர் என்பவர், இந்தியர்களை ஒன்றிணைக்கும் வகையிலான தேச ஒற்றுமை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆல்பத்தில், விக்ரம், மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, விவேக் ஓபராய், சுதிஷ், மம்தா, லட்சுமிராய் உள்ளிட்ட பல நடிகர்கள்- நடிகையர் இணைந்து பின்னணி பாடியுள்ளனர்.— சினிமா பொன்னையா.ப்ரியாமணி தவிர்த்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
அழுது அழுது கண்கள் சிவந்து, உடல் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா.""அம்மா, அம்மா, அப்பா எங்கம்மா. இனி வர மாட்டாங்களா...'' மழலையில் கேட்கும் மகனின் வார்த்தைகள், அவள் சோகத்தைக் கிளற, மகனை மார்போடு அணைத்து தேம்பினாள்.""சுமி... என்னம்மா இது, மனசை தேத்திக்கம்மா. சந்திரனின் காரியங்கள் முடிச்சாச்சு. வந்த ஜனமும் கிளம்பி போயிருச்சு. இனியும் இப்படியே இடிஞ்சு போய் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
மனதை சந்தோஷமாகவும், எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளும் யாரும், நூறு வயதையும் தாண்டி வாழலாம் என்கிறார், இந்தியாவில் முதன் முதலாக, "மிஸ்டர் யூனிவர்ஸ்' பட்டம் பெற்றவரும், நூறு வயதை தொட்டவருமான மனோகர், கோல்கட்டாவைச் சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். மற்றவர்களின் சராசரி உயரத்தை விட, சற்றுக் குறைவு என்பதால், (150 செ.மீ.,) தன்னை எல்லாரும் கேலியுடன் பார்ப்பதை அறிந்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு —வாழ்வில் முக்கியமான முடிவு எடுக்க முடியாமல், தவித்துக் கொண்டிருக்கும் உங்கள் மகன் எழுதுகிறேன். என் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை விரிவாக எழுதுகிறேன். நான் தங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன்.நான் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த போது, என்னுடன் டியூஷனில் படித்த ஒரு பெண், என்னைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதாகவும், அடிக்கடி பார்ப்பதாகவும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
பிரசவம் என்பது, பெண்களுக்கு மறு பிறவி என கூறுவதுண்டு. வயிற்றில் கரு உருவானதிலிருந்து, பத்து மாதங்கள் கடந்து, குழந்தை வெளியில் வரும் வரை, பெண்களுக்கு ஏற்படும் வலியையும், துன்பத்தையும், வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.பிரசவத்துக்காக, உலகில் உள்ள மற்ற பெண்கள் அனுபவிக்கும் வேதனையை விட, பல மடங்கு அதிகமான வேதனையை அனுபவித்திருக்கிறார், போலந்து நாட்டைச் சேர்ந்த, ஜோயான்னா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
இயற்கையோடு இயைந்த வாழ்வு இதுதானோ?* இருண்டு கிடந்த சமூகத்தின்விடியல் கண்டான்...சின்னச் சின்ன ஆசைகளில்சிம்மாசனமிட்டான்!* கல்லை சிற்பமாக்கினான்...மின்னலை கைது செய்துமின்சாரம் கண்டான்!* சூரியன் தடுக்கி விழுகையில்சிந்தித்தான்...சிந்தித்ததெல்லாம்சித்திரமாக்கினான்!* இயற்கையின்முதுகில் சவாரி செய்துகணினிமயமாக்கினான்!* பூமியின் தோளில் வெயில் போர்த்தி,பகலின் மடியில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
""என்ன... கிரஹப்பிர வேச பத்திரிகையை எடுத்துகிட்டு, நீ மட்டும் வந்திருக்க... உன் மனைவி நளினி வரல?'' என்று, தம்பி வரதனை பார்த்து கேட்டார் ரகுபதி.வரதன் கொஞ்சம் தயங்கி, ""அவள் கிரஹப்பிர வேசத்துக்கே வருவாளான்னு சந்தேகமாக இருக்கு அண்ணா,'' என்றார்.""ஏன்... ஏன்?''""அவளுக்கு வீடு பிடிக்கல... நிறைய சொல்றாள்... எனக்கும் கொஞ்சம் அதிருப்திதான்.''""புரியும்படியாதான் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
பிரிட்டனின் பிளின்ட் என்ற நகரத்தில் வசிப்பவர் கேட்டி டெல். 27 வயதான இந்த பெண், விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமாக கருதப்படும் தண்ணீர், இவருக்கு மட்டும் பரம விரோதி.ஒரு சொட்டு தண்ணீர், இவரது உடலில் பட்டால் போதும், தண்ணீர் பட்ட இடத்தில், தோல் எரிச்சல் ஏற்படும். அடுத்த சில நிமிடங்களில், அந்த இடத்தில் தீயால் சுட்டது போன்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
காதலின் மிகவும் பொன்னான நேரம் எது தெரியுமா? தங்கள் அன்புக்குரிய காதலியிடம், காதலர்கள், முதன் முதலில், காதலை வெளிப்படுத்தும் நேரம் தான். காதலை வெளிப்படுத்திய அந்த சுகமான நிமிடங்களை, வாழ்நாள் முழுவதும், நினைத்து நினைத்து இன்பம் காண்பதில், காதலர்களுக்கு அப்படி ஒரு இஷ்டம். அதற்காக, இன்றைய இளைஞர்கள், ரொம்பவே மெனக்கெடுகின்றனர். சீனாவைச் சேர்ந்த ஜியாவோ பாண்ட் என்ற இளைஞர், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் விக்கி ஆண்ட்ரூஸ். வயது 25. இவருக்கு குழந்தைகள் மீது கொள்ளை ஆசை. எப்போதும் குழந்தைகளுடன் இருப்பதையே விரும்புவார். மூன்று ஆண்டுகளுக்கு முன், இவரை பரிசோதித்த டாக்டர்கள், கருப்பையில் குறைபாடு இருப்பதாகவும், இதனால், இவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர். ஆண்ட்ரூவால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. ஆயிரக்கணக்கில் செல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
அமெரிக்காவில் உள்ள, பெவலி ஹில்சில் ஏலம் விடப்பட்ட, மர்லின் மன்றோவின் புகைப்படம் ஒன்று, மூன்றரை லட்சம் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. மறைந்த ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோ, திரைப்பட நடிகையாகி விட வேண்டும் என ஆசைப்பட்டு முயற்சித்துக் கொண்டிருந்த, 1946ல், எடுக்கப்பட்ட புகைப்படம் அது."ப்ளூ புக் மாடலிங் ஏஜன்சி' என்ற மாடலிங் நிறுவனத்தில் உறுப்பினராக பதிவு செய்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST
மன அழுத்தத்தை போக்குவதற்கும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கும், தைவானில் உள்ள சிலர், புதுமையான சிகிச்சை முறையை கையாளுகின்றனர். மாமிசம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும், கூர் தீட்டிய கத்திகளை, சிகிச்சைக்கு வருவோரின் உடலில், சரமாரியாக, பத்து நிமிடங்கள் வெட்டுகின்றனர். படிக்கும்போதே நடுக்கமாக இருக்கிறதா? "பயப்பட வேண்டாம். இந்த பத்து நிமிட கத்தி தாக்குதலில், உடலில் எந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X