Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
ஆங்கிலம் கற்க, இதுதான் வழியா?சமீபத்தில், என் தோழியை சந்திக்க, அவளது வீட்டுக்கு சென்றிருந்தேன். தோழி வீட்டில் இல்லை; அவளது மகனும், மகளும், 'டிவி'யில் ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். தோழி வரும் வரை நானும் படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன், இரண்டு முறை, முத்தக் காட்சிகள் வந்தன; எனக்கே சங்கோஜமாக இருந்தது. என்ன நினைத்தானோ, சட்டென எழுந்து போய் விட்டான் அந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
யார் மகன்? நாடகத்தில், சிறப்பாக நடித்த மனோரமாவை விடுத்து, 'இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு, வீணை எஸ்.பாலசந்தர் வெள்ளி டம்ளர் ஒன்றை அன்பளிப்பாக வழங்குவார்...' என்று அறிவித்ததும், வேதனையில், மனோரமாவின், கண்களில் கண்ணீர் துளிர்த்தது; மவுனமாக விம்மினார். அப்போது, இருக்கையிலிருந்து எழுந்து பேசத் துவங்கினார் பாலசந்தர்...'நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
அந்துமணி வாசகியான மாணவி ஒருவர் நீண்ட கடிதத்துடன், தம் கல்லுாரி நுாலகத்தில் படித்த, 'எஜுகேஷன் வேர்ல்ட்' என்ற மாத இதழில் வெளியான கட்டுரை ஒன்றின் போட்டோ காப்பியையும் அனுப்பி வைத்திருந்தார்.'கடிதத்தில், 'இன்டியாஸ் ஒர்ஸ்ட் கெப்ட் சீக்ரெட்' என்ற கட்டுரையை இணைத்துள்ளேன். இக்கட்டுரை, என் மனதை மிகவும் பாதித்து விட்டது. இதைப் படித்துப் பார்த்து ஒரு பக்கமாவது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
பி.பாஸ்கரன், கன்னியாகுமரி: வெட்டிப் பேச்சு பேசி, நம் நேரத்தை வீணடிப்பவரிடம் இருந்து தப்பிப்பது எப்படி?உங்கள் அலுவலக மேஜை மீது, 'எனக்கு நிறைய வேலை இருக்கிறது; உங்களுக்கு?' என, ஒரு போர்டு வைக்கலாம்; 'உங்களுடன் நிறைய பேச ஆசை தான்; ஆனால், அவசர வேலைகள் நிறைய இருக்கு. பிறகு பேசுவோமா...' என, நாசூக்காக கழற்றி விடலாம்; ஜாமின் கொடுக்க ஒரு ஆளை தயாராக வைத்திருக்கலாம். 'வெட்டி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும், வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பர், அதற்கு காரணம், வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவர்; அவ்வாறு ஊஞ்சலில் ஆடிய தேவதைகள் வீட்டிற்கு நல்லது செய்வர் என்பது நம்பிக்கை. இன்றும் சில இடங்களில் சுப காரியங்களை பற்றி பேசும்போது, ஊஞ்சலில் அமர்ந்து பேசுவது வழக்கம்.முன்பெல்லாம், ஊருக்கு வெளியே ஆல மரத்தில், ஊஞ்சல் கட்டி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
'மின் ரயிலின் படிக் கட்டில் நின்றபடி பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து மரணம்; மொபைல் போன் பேசிக் கொண்டே பயணித்ததால் நடந்த விபரீதம்!' என்ற செய்தியை நீங்கள் வாசித்திருக்கலாம்; இளைய தலைமுறையினர் ஏன் தான் இப்படி மொபைல் போனை கட்டிக்கொண்டு அழிந்து போகின்றனரோ என்று திட்டி, அடுத்த செய்திக்கு தாவியிருக்கலாம்.ஆனால், என்னால் அப்படி கடந்து போக முடியவில்லை. ஏனென்றால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
சிவகார்த்திகேயன் திடீர் முடிவு! தன் படங்களில், பெண்களை கிண்டல் செய்வது, புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது என்றெல்லாம் நடித்திருப்பார், நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால், இனிமேல் அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். 'குறிப்பாக, சமூக நோக்கமுள்ள, இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளிலும், காட்சிகளிலும் தான் நடிப்பேன்...' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
இதிகாச காலத்தில், இந்தியாவின் சில பகுதிகளில் யட்சர்கள் எனும் இனத்தினர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் சாதாரண மனிதர்களை விட, பல மடங்கு பலம் நிறைந்தவர்கள். இவ்வினத்தை சேர்ந்தவர், தனபாலன்; செல்வ வளம் மிகுந்த இவர், தெய்வ பக்தி மிகுந்தவராகவும், கல்வி மற்றும் அரசியல் நுணுக்கங்களில் மேதாவியாகவும் விளங்கினார். அத்துடன், 'குருவும், தாரமும் தலைவிதிப்படியே...' எனும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
ப.சிவனடி எழுதிய, 'இந்திய சரித்திரக் களஞ்சியம்' நுாலிலிருந்து: கிழக்கிந்திய கம்பெனியில் ஊழியம் புரிய வந்தவர்களில் மருத்துவரும் இருந்தனர். அக்காலத்தில், மருத்துவர்களை இப்பணியில் அமர்த்தும் பொறுப்பு, லண்டனில் இருந்த, 'சர்ஜன் ஜெனரல்' என்ற தலைமை மருத்துவ அலுவலரின் கையில் இருந்தது. அவரே மருத்துவர்களுக்கு, மருத்துவப் பெட்டியையும் அளித்தார். இம்மருத்துவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு -என் வயது, 29; திருமணமாகி விட்டது. பெற்றோருக்கு ஒரே பெண். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், என் கணவர். நான், ஐ.டி., கம்பெனியில் வேலை செய்கிறேன். கை நிறைய சம்பளம்; திறமையானவள் என, பெயரெடுத்துள்ளேன்; பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.இந்நிலையில், நான் வேலைக்கு செல்வது, என் கணவருக்கு பிடிக்கவில்லை; வேலையை விட்டு விட கூறுகிறார். இத்தனைக்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையிலுள்ள கொட்டந்தளம் எனும் இடத்தில் இருக்கிறது, கல்யாண தீர்த்தம்! இதைப் பார்த்தாலே திருமணம் நடந்து விடும் என்பது, தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.சிவன் - பார்வதி திருமணத்திற்கு, உலகிலுள்ள அனைவரும் இமயமலைக்கு சென்றதால், வடக்கு தாழ்ந்து, தெற்கு திசை உயர்ந்தது. இதைச் சமன்படுத்த, அகத்தியரை, தெற்கிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்பினார், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயங்களில், வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவம் மட்டுமல்லாது, உடலை வளப்படுத்தும் நல்ல விஷயங்களும் அடங்கியுள்ளன.தாம்பூலம் தரிப்பதில் கூட, இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கியுள்ளது.பொதுவாக, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும்போது, அந்த சுவை உடலையும், மூளையையும் சுறுசுறுப்படைய செய்வதுடன், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
இயற்கையும், மனிதனும்! விதை...செடியாக, மரமாகபூ பூக்ககாய் காய்க்ககனி கொடுக்க மறுப்பதில்லை!சூரியன்...ஒளி கொடுக்கஉயிர் கொடுக்கவாழ வைக்க மறுப்பதில்லை!மழை...மண் நனைக்ககுளிர வைக்கநன்னீர் கொடுக்கவயல் நிறைக்க மறுப்பதில்லை!நிலவு...குளிர்ச்சி தரதண்ணொளி தரதென்றல் தரநல்லுறக்கம் தர மறுப்பதில்லை!மனிதனே...மரங்களை அழித்தாய்நீர் தடங்களை அடைத்தாய்காற்றை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
சென்னை - மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகே, கல்லுாரி மாணவன் போல் தோற்றமளித்த இளைஞன் ஒருவன், தன் கையில் இருந்த பொருளை, போவோர், வருவோரிடம் காட்டியபடி இருந்தான்.அடாது மழை பெய்தாலும், மெரினா கடற்கரையில் விடாது நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களில், வினோத்தும் ஒருவர்.கடற்கரைக்கு அருகில் உள்ள திருவல்லிக்கேணியில் குடியிருக்கிறார்; 45 வயதை கடந்து விட்ட அவர், மத்திய அரசின் மனித வள ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
கேரள மாநிலம், திரிச்சூரை சேர்ந்தவர், 32 வயதான, ரம்யா; மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், ஆஸ்திரேலியா ராணுவத்தில் அதிகாரியாக அசத்துகிறார். திருச்சூரில் கல்லுாரி படிப்பை முடித்து, அரபு நாட்டில் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றியபோது தான், இவருக்கு ராணுவத்தில் பணியாற்றும் ஆசை ஏற்பட்டது. உடனே, தன் கணவரின் அனுமதியுடன், ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். 'ப்ராவோ 15' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல டிசைனர், டெபி விங்கம். வித்தியாசமான ஆடைகள், ஷூக்களை வடிவமைப்பதில் வல்லவர். தற்போது இவர், அரேபிய நாட்டு மணமகளைப் போன்ற தோற்றத்தில், ஆள் உயர சிலையை கேக்கில் உருவாக்கி, அதற்கு, லுல்லா என, பெயரிட்டுள்ளார்.சாக்லேட், பருப்பு வகைகள் உள்ளிட்ட, பொருட்களை வைத்து இச்சிலையை தயாரித்துள்ளார். இதன் விலை, பல லட்சம் ரூபாய்.இந்த கேக் சிலை, ஐக்கிய அரபு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
அட்சய திருதியை நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் மேற்கொள்ளலாம். பூஜை அறையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமமோ, அஷ்டோத்தரமோ சொல்லுங்கள். பாயசம் அல்லது பொங்கல் நைவேத்யமாக சமர்ப்பிக்கலாம். அன்று முழுதும், 'ஓம் நமோ நாராயணா... ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ...' என சொல்ல, நன்மைகள் கிடைக்கும்.இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால், ஆண்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
படத்தில் நீங்கள் காண்பது, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரைந்த ஓவியம்! இதுபோன்ற ஏராளமான குகை ஓவியங்கள், மத்திய பிரதேசம், போபாலில் இருந்து, 42 கி.மீ., துாரத்தில் உள்ள, பீம்பெட்க் என்ற மலைப் பகுதியில் உள்ளது.இந்த மலை பகுதிகளில் ஏராளமான குகைகளும், வியக்க வைக்கும் பழங்கால ஓவியங்களும் காணப்படுவதால், இங்கு, சுற்றுலா பயணியர் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.— ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X