Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
செல்வத்தினுள் சிறந்தது, மக்கள் செல்வம் என்றார் வள்ளுவர். மற்ற செல்வங்களை விட, மக்கள் செல்வம் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. தன் மகன் குழந்தையாக இருந்த போது, அதன் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்வான்; குழந்தை, பால பருவம் வரும் போது, அது தத்தித் தத்தி நடப்பதைக் கண்டு மகிழ்வான்; பிறகு, அவன் பள்ளி சென்று, படித்து, பரீட்சை எழுதி, பாஸ் செய்ததும் மகிழ்வான். அதே பையன், நல்ல உத்யோகம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
ஏப்., 18 - அழகர் வைகை வைபவம்!மலைகளில் சிறந்தது அழகர்மலை. தன் பக்த கோடிகளுக்கு தீர்த்தம் வழங்கி அருள்வதற்காக, ஏப்., 18 அன்று, மதுரை வைகையாற்றில் இறங்குகிறார் கள்ளழகர். இறைவனைத் தேடி பக்தர்கள் செல்வதும், பக்தனைத் தேடி இறைவன் வருவதும் என்றும் உள்ள கதை. இறைவனை அடைவதற்காக, ரிஷிகள், தங்கள் உடல், பொருள், ஆவியைத் துறக்க தயாராக இருந்தனர். வால்மீகி போன்ற ரிஷிகள், தங்களைச் சுற்றி, புற்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
"ப்ளாக் -பெல்ட்' பெண் என்றால்...என் உறவினரின் பெண், படிப்பிலும், விளையாட்டிலும் படுசுட்டி. அதோடு, கல்லூரிக்கு பைக்கில் தான் செல்வாள். கல்லூரியில் நடைபெற்ற தற்காப்புக் கலை பயிற்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக கற்றுக் கொண்டாள். அதைத் தொடர்ந்து, கராத்தே கலையை விடாமுயற்சியோடு கற்று, ப்ளாக் - பெல்ட் பட்டம் பெற்று விட்டாள்.கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று முடித்ததும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
பரபரப்பான நகர வாழ்க்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் போன்ற காரணங்களால் தான், இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு வருவதாக இப்போது பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால், 3,500 ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்களுக்கு இதய நோய் உண்டு என, ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.அதுவும் எப்படிப்பட்ட ஆராய்ச்சி தெரியுமா? எகிப்து நாட்டில் பிரமிடுகளில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது என்பர்; ஆனால், உங்களிடம் நான்கு கோடி ரூபாய் இருந்தால், நல்ல, "நண்பனை' விலைக்கு வாங்க முடியும். ஆம்... கோடீஸ்வரர் ஒருவர், நான்கு கோடியே, 25 லட்சம் ரூபாய் கொடுத்து, நாய் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். உலகிலேயே, மிகவும் விலை உயர்ந்த நாய் இதுதான்.மிகவும் அடர் சிவப்பு நிறம் கொண்ட, திபெத்திய மஸ்திப் இன வகையைச் சேர்ந்த இந்த நாயின் பெயர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
தஞ்சை மாவட்ட வாசகி அவர்; கணவர் விவசாயி... ஒரு குழந்தை உண்டு! படிப்பதில், எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது சிறுகதைகள் பல இதழ்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் இவர் வசிப்பவராக இருந்தால், இந்நேரம் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவராகி இருப்பாரோ என, இவரைப் பற்றி நான் நினைப்பதுண்டு.தன் உறவினர் ஒருவரது வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள, சென்ற வாரம் சென்னை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
** என்.அருண்குமார், பல்லடம்: பெண், தனித்து, சுயமாக, தைரியமாக வாழ, இந்த சமூகம் அனுமதிப்பதில்லையே... ஏன்?உங்களது கூற்று முற்றிலும் உண்மை இல்லை; சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளை நெருக்கும் போது, சுயமாகிறாள்; தன் காலிலேயே நிற்கிறாள்... சமூகத்தின் அங்கீகாரத்தையும் பெறுகிறாள்.****எஸ்.கார்த்திகேயன், கிணத்துக்கடவு: உங்களின் எதிரி யார்?24 மணி நேரம் தான்; இதுவே, 36 மணி நேரம் ஒரு நாள் என இருக்கக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
இதுவரை: ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகருக்கு, நடன நிகழ்ச்சிக்காக சென்றிருந் தாள் மதுரிமா. அங்கிருந்து, நரேனுக்கு போன் செய்தாள். தான், கவிதா வீட்டிற்கு சென்றதையும், அங்கு, அவளது மாஜி கணவன் ஆண்டர்சனை சந்தித்தது பற்றியும் கூறினான் நரேன். இது, மதுரிமாவிற்கு குழப்பத்தை அளித்தது. அதனால், நடக்க இருந்த இரண்டு நாட்டிய நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யப் போவதாக, தன் தாயிடம் கூறினாள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
அண்ணாதுரை எழுதிய, "சந்திரமோகன்' என்ற நாடகத்தில், அவர், காகப்பட்டர் என்ற முக்கிய வேடத்தில் நடித்தார். காகப்பட்டருக்கு பிரதம சீடனாக, ரங்கு என்பவன் வருவான். அதில், திரவுபதியைப் பற்றிய உரையாடல், காகப்பட்டருக்கும், ரங்குவிற்கும் இடையில் நடைபெறும்..."திரவுபதிக்கு, ஐந்து கண வர்கள். ஒரே சமயத்தில் தருமர் சொக்கட்டான் ஆடவும், பீமன் சாப்பாடு போடவும், அர்ச்சுனன் உலாவப் போகவும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
தங்கர்பச்சான் இயக்கும் தொலைந்து போனவர்கள்!தங்கர்பச்சான் இயக்கியுள்ள, களவாடிய பொழுதுகள் படம், இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், தான் எழுதிய, தொலைந்து போனவர்கள் என்ற நாவலை மையமாக வைத்து, அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார். இது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, மகன், தாத்தா ஆகியோரை பற்றிய கதை.— சினிமா பொன்னையா.கமலுக்கு ஜோடியாக இந்தி நடிகை!செல்வராகவன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
மகாபலிபுரத்தை கால் கடுக்க சுற்றிப் பார்த்துவிட்டு, எட்டு மணிக்கு சென்னைக்குப் போகும் பஸ்சை பிடிக்க போய்க் கொண்டிருந்த போது, மீண்டும் கேட்டாள் ஜானகி...""ஏங்... அந்தக் கிழவி பொய் சொல்லி இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா?''களைப்பில் உறங்கிப் போன குழந்தையை, தோளில் போட்டு நடந்து கொண்டிருந்த நான், என்ன பதில் சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தேன். உண்மையைச் சொன்னால், அவளால் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
அன்புள்ள ஆன்ட்டி —நான் ஒரு டாக்டர். என் கல்லூரி வாழ்க்கையில், நான் செய்த தவறு, என் எதிர்காலத்தையே பாதித்து விடும் முன், என் வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் எழுதுகிறேன். இக்கடிதம், என்னைப் போன்று தவறு செய்யும், தவறு செய்யவிருக்கும் மற்ற மாணவியருக்கு, ஒரு பாடமாக அமையட்டும்.தஞ்சாவூரில், நல்ல குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவள். நான், அண்ணன், தம்பி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
வருடத்திற்கு ஒருநாள் மட்டும், அதுவும், குறிப் பிட்ட நேரம் மட்டுமே திறந்திருக்கும் மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா, வரும், 18ம் தேதி நடை பெறுகிறது.மாநாய்க்கன் மகளாய் பிறந்து, மாசாத்துவன் மகனான கோவலனை திருமணம் செய்து கொண்ட கண்ணகி, கணவருக்காக சகலத்தையும் இழந்த போதெல்லாம் பொறுமை காத்தவர். ஆனால், கணவரை இழந்ததும், பொங்கி எழுந்து, அதற்கு காரணமான பாண்டிய நாட்டு மன்னர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தேசிய ஒட்டக பரிசோதனை மையத்தில், மேவாரி இனத்தைச் சேர்ந்த ஒரு ஒட்டகம் உலகிலேயே மிகவும் அரிதான வெள்ளை நிற குட்டியை ஈன்றுள்ளது. இதுபோன்று வெள்ளை நிற ஆண் ஒட்டக குட்டி பிறந்துள்ளது, கடந்த, 27 ஆண்டில் இதுவே முதன் முறை. என்.ஆர்.சி.சி., என்ற தேசிய ஒட்டக மையத்தின் இயக்குனர் என்.வி.பாட்டீல் கூறுகையில், "இது ஒரு அபூர்வ சம்பவம்...' என, தெரிவித்தார். வெள்ளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
மொத்தம், 315 பேர் உயிரைக் குடித்த மின்சார நாற்காலி ஒன்று, முதல்முறையாக மியூசியம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில், ஓகியோ மாநிலத்தில், வரலாற்று மையம் ஒன்றில், சமீபத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. வழக்கமாக மியூசியங்களில் காணப்படாத, மிகவும் அபூர்வமான, அதே நேரத்தில் கொடூரமான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.அதில் முக்கியமானது, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
அறைக்குள் தடுமாறிக் கொண்டே நுழைந்த பிரசன்னா, கட்டிலை நெருங்குகையில் நிதானித்தான்... "யார்... யார் இது?' பால்கனியில் எரிந்த ஜீரோ வாட் பல்பின் ஒளிக்கீற்று, மூடிய கண்ணாடிக் கதவு வழியே லேசாக கசிந்து கொண்டிருந்தது அறை முழுவதும். கண்களை இடுக்கி பார்த்தான்... யாரோ படுத்திருப்பது, கோட்டோவியம் போல புலப்பட்டது. யோசனையுடனேயே, லுங்கிக்கு மாறியவன், "அட ஜென்னி... 8 மணி போல வந்தவள், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
படத்தைப் பாருங்கள்... ஒரு ஆட்டின் இரண்டு பக்கமும் ஆபத்தான துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டின் உடலில் கட்டப்பட்டுள்ள துப்பாக்கியை வைத்து என்ன செய்ய முடியும் என குழம்புகிறீர்களா? அந்த ஆட்டை வைத்து ஆப்ரிக்காவில், நைஜீரியா நாட்டில் வேட்டையாடு கின்றனர். கொடிய மிருகங்களை வேட்டையாட செல்லும் போது, ஆட்டின் உடலில் இது போல் துப்பாக்கியை கட்டி கூட்டிச் செல்வர். ஆட்டை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
விடியல்தானே வாசல் தட்டும்!* மனம் எட்ட முடியாதமலை முகடுதிருப்தி!* வயிறோடு வாழ்வதுகஷ்டமென்று கருதிபழைய இலக்கியம்பழி போட்டது!* மனதோடு மல்லுக்கட்டஅன்றைக்குஅதிகம் அவசியமில்லை!* வயிறு நிறைந்தால்வாழ்க்கை முடிந்தது!இன்றோ —இருக்கக் கைமண் இடம்சொந்தமாய் இல்லை!* வாழ்ந்தோர் குறைவு...தேவையும் குறைவு...மனது பெரிதாய்மலைப்பைத் தரவில்லை!* பண்டிகை வந்தால் மட்டுமேபட்சணம், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X