Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
நாம் ஒரு காரியமாக ஒருவரிடம் போகிறோம். அவரிடம் ஏதேதோ பேசிவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வருகிறோம். வீட்டுக்கு வந்த பிறகுதான், "அடடா, அவரிடம் இதைக் கேட்க மறந்து விட்டோமே...' என்ற, ஞாபகம் வருகிறது. அப்போது ஞாபகம் வந்து என்ன பயன்?பாண்டவர்கள் வனவாசத்தின்போது, பர்ண சாலையில், ஒரு முனிவர் இருந்தார். அவர், தினமும் அக்னி ஹோத்ரம் செய்வது வழக்கம். ஒரு நாள் அவரிடமிருந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
ஏப்., 23 - மீனாட்சி திருக்கல்யாணம்உலகத்தலைவியான பார்வதி, மதுரை மன்னனின் மகளாய் பிறந்தாள். அவளுக்கு தடாதகை, அங்கயற்கண்ணி, மீனாட்சி என்று பல பெயர்கள் உண்டு. சிவபெருமானும், சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் பூமிக்கு வந்தார். அவர் சொக்க வைக்கும் அழகைக் கொண்டவர் என்பதால், சொக்கநாதர் என்றும் பெயர் பெற்றார்.இந்த தெய்வங்களின் திருமணம், கயிலாயத்தில் நடந்ததாக புராணம் கூறுகிறது. அதை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
மொட்டை மாடி மாமா!நாற்பத்தைந்து வயதான என் மாமா, காலை 6:00 மணிக்கு, மொட்டை மாடியில் ஏறினார் என்றால், 8:30 மணி வரை, வயது வித்தியாசமின்றி, எங்கள் காலனி பெண்களை பார்த்து, "ஜொள்ளு' விட்டுக் கொண்டிருப்பார். வயதானவர்களும், மாமாவின் பார்வைக்கு தப்பாததால், காலனிவாசிகள் அனைவரும் சேர்ந்து, "ஜொள்ளு மாமா' என, பெயர் வைத்து விட்டனர். இதையறிந்து வெட்கமடைந்த மாமி, மாமாவை திருத்த, எத்தனையோ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
மனவளர்ச்சி குன்றியோர், டவுன் சின்ட்ரோம், ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் எண்ணிக்கை, இப்போது அதிகப் படியாகி வருவது வருத்தத்திற்குரிய செய்தி என்றால், அவர்களுக்கான பயிற்சி பள்ளிகள் குறைவாக இருப்பது, மேலும் வேதனையான விஷயம்.இந்த வகையான குழந்தைகளுக்கு, மருந்து மாத்திரையுடன், அன்பும், அரவணைப்புமே முக்கிய தேவை. இப்பிரச்னைகளுடன், பிறக்கும் குழந்தைக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
"பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும்' என்றொரு நூல், சென்ற நூற்றாண்டு வரை, நம்மூரில், பெண்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை, விலாவாரியாக விளக்கியுள்ளது. அதில்:உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் முதலிய மாநிலங்களில், பெண் சிசுக் கொலைகள் அதிகமாகக் காணப்பட்டன என்று, ஆங்கிலேய அரசின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
*கா.தமிழ்ச்செல்வன், திருப்பூர் : மனைவி அடித்தால் வலிக்காது என்கிறார்களே... உண்மையா?ப்ளீஸ் வெயிட்... லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்கிறேன்!****எல்.ராஜேஸ்வரி, அரசரடி : நம்ம சமூகத்தில், ஒரு மெடிக்கல் ஸ்டூடண்டுக்கோ, இன்ஜினியர் ஸ்டூடண்டுக்கோ கிடைக்கும் மதிப்பு, ஒரு, "லா' ஸ்டூடண்டுக்கு கிடைப்பதில்லையே...இப்போது, ஸ்டூடண்ட் ஸ்டேஜில் கிடைக்கும் மதிப்பெல்லாம் வெறும், "இல்யூஷன்!' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான் 24 வயது பட்டதாரி பெண். என் மாமா வேறொரு பெண்ணை விரும்பி, பெற்றவர்களின் விருப்பப்படியும், என் பிடிவாத குணத்தாலும் அவருடைய அக்கா பெண்ணான என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கல்யாணத்திற்கு முன் என்னிடம் தான் ஒரு பெண்ணை விரும்புவதாக கூறினார். ஆனால், அவர் மேல் உள்ள நம்பிக்கையில் நான் அதை மறுத்து, "உங்களைத் தான் திருமணம் செய்து கொள்வேன்' என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
எகிப்தில் ஒரு பெண்மணி, ஒருவகை செடியின் தோலை சீவி எடுத்து, வெள்ளையாக இருக்கும் உள் தண்டை, தண்ணீரில் போட்டு பதப்படுத்தி, சப்பாத்தி இடுவது போல் உருளை கொண்டு நீட்டி, பின் அழுத்தி, அட்டைபோல் செய்து கொள்கிறார். அதன்பின், வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்து, தன் கைவண்ணத்தால், அழகான ஓவியங்கள் தீட்டி, அமர்க்களமாக விற்பனை செய்து, சாதனை படைத்து வருகிறார். எப்படி செய்வது என்பதையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
ராஜாஜியின், வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நடைப்பயணம், ஏப்., 20,1930 கும்பகோணத்தை அடைந்தது. கும்பேஸ்வரன் கோவில் வாசலில் பூர்ண கும்ப மரியாதையுடன் ஊர்வலத்தினர் வரவேற்கப்பட்டு, தேச பக்தர்கள் பந்துலு ஐயர் (கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்) வீட்டில் தங்க வைக்கப்பட்டனர்.மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜாஜி பேசினார். அப்போது கூட்டத்திலிருந்த சிலர் குழப்பம் விளைவிக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
மாலை 5:00 மணிக்கு முடிய வேண்டிய வேலை, 5:30 வரை இழுத்து விட்டது. எப்படியோ நேர்ந்து விட்ட சிறு பிழை, சரி செய்வதற்குள் மென்னி முறிந்தது. சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும். அம்மாவுக்கு மூட்டு வலி. 7:00 மணிக்கு டாக்டரிடம் அப்பாய்ன்மென்ட் வாங்கியிருக்கிறது.மேஜையை பூட்டிக் கொண்டிருக்கும் போது, சொல்லி வைத்தது போல, அவன் வந்தான்.""இந்தா பிரதர். இந்த பைலை கொஞ்சம் பார்த்துட்டு போ...'' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
துருக்கியில் ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 23ம் தேதியை, குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். "பைராமி' என்றால், துருக்கி மொழியில், தேசிய பொது விடுமுறை நாள் என்று பொருள். 1920ல், துருக்கி சுதந்திரம் அடைந்த போது, அதன் அன்றைய தலைவர், முஸ்தபாமெகல் அட்டூர்க், "இனி, குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம்...' எனக் கூறி, ஏப்., 23ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும், இனி, குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
மறுநாள் நடக்க இருந்த, "சர்வாதிகாரி' பட ஷூட்டிங்குக்காக, நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியை, "முதலியார் தோப்பு' என்ற இடத்துக்கு அனுப்ப புரொடக்ஷன் மானேஜர் வேணுவிடம், முதல் நாளே கூறியிருந்தார் டி.ஆர்.”ந்தரம். மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் சாரட் வண்டி வராததால் கோபத்திற்கு ஆளானார் அவர். ஆனால், புரொடக்ஷன் மானேஜர் வேணு, வண்டிகளை காலை ஏழு மணிக்கே, "குடுவம்பட்டி' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
மீண்டும் படம் இயக்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!ஆரோகணம் படத்தை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த படத்தை தொடர்ந்து, குறள் 786 என்ற படத்தை இயக்குகிறார். முந்தைய படத்தை போலவே, இதுவும் கதாநாயகியை சுற்றி பின்னப்பட்ட கதை. அதனால், பிரபல நடிகை யாராவது நடித்தால், படத்தின் வியாபாரத்திற்கு உதவியாக இருக்குமென்று, அமலாபால் உள்ளிட்ட சில நடிகைகளிடம், கால்ஷீட் கேட்டு வரும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
பழைய பேப்பர், புட்டிகள், குப்பைகள் கொடுத்துவிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்கலாம். "எங்கே?' என்று ஆவலாய் கேட்கிறீர்களா? இது, இங்கு அல்ல... ஸ்வீடன் நாட்டில், இந்த முறை அமலில் உள்ளது. அங்கு, ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களிடமிருந்து, 1 கிலோ குப்பை பத்து ரூபாய் வீதம் விலைக்கு வாங்குகிறது. இப்படி பொதுமக்களிடம் இருந்து 45 லட்சம் டன் குப்பையைப் பெற்று, அதை மின்சக்தியாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
சிரிக்க விடுங்கள்!* அவளை கொஞ்சம்சிரிக்க விடுங்கள்வாய் வலிக்கும் மட்டும்சிரிக்கட்டும்!* அடக்கமற்ற சிரிப்பெனஅணை போட்டு விடாதீர்கள்...ஆயுட்காலம் எத்தனையோஅவளின் சிரிப்பிற்கு!* காதல் முகமூடி அணிந்தகள்ளப் பருந்துகளால்அவள் வாழ்வுகருகிப் போய் விடலாம்!* உறவென்ற பெயருக்குள்ஒளிந்திருக்கும்சில ஓநாய் கூட்டத்தால்உயிரை இழந்து விடலாம்!* அறிவை வளர்க்கச் சென்றுசில ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
நம் உடலின் உட்பகுதியில் இருக்கும் பெரிய திண்ம உறுப்பு கல்லீரல். "அதிகம் மது அருந்தினால், கல்லீரல் கெட்டுப் போகும்' என்பது தான், சாதாரண மக்களுக்கு, கல்லீரல் பற்றிய அதிகபட்ச விழிப்புணர்வு. மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்று, கல்லீரல் நோய்கள் தொடர்பாக, நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.இதயமாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்று, கல்லீரல் மாற்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
ஐதராபாத் நோக்கி டிரெயின் சென்று கொண்டிருக்க, மனதில் பலவித குழப்பங்களுடன் அமர்ந்திருந்தாள் பத்மா. அருகில் அமர்ந்திருந்த கிருஷ்ணன், மனைவியைப் பார்த்தார்.""என்ன பத்மா... என்ன யோசனை, நம்ப நிலைமை இப்படி ஆயிடுச்சேன்னு கவலைப்படறியா. கடைசி வரை ஒரு ராணியாக வலம் வரணும்ன்னு நினைச்சே... ஆனா, அந்தக் கடவுள் வேறு மாதிரியாக நினைச்சுட்டாரே. காசு, பணம் கொட்டிக் கிடக்கு. வியாபாரமும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X