Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
அந்த காலத்தில் ராஜா, மந்திரியைப் பார்த்து, "மாதம் மும்மாரி பெய்கிறதா மந்திரி?' என்று கேட்பாராம். "ஆம் மகாராஜா!' என்று பதில் சொல்வாராம் மந்திரி. "ராஜா என்றால் அரண்மனையை விட்டு வெளியே போவதே இல்லையா? மழை பெய்வதும், வெயில் காய்வதும் கூட தெரியாமல் ஒரு ராஜாவா?' என்று கேட்காதீர்கள்; அது அந்தக் காலம்.மாதம் ¬மும்மாரி என்பது என்ன கணக்கு என்றால், வேதம் ஓதும் வேதியற்கொரு மழை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
ஏப்.24 - அட்சய திரிதியை!சந்திரனின் வளர்ச்சியை, 15 பாகங்களாகப் பிரித்தனர். அந்தப் பாகமே, "திதி' எனப்படுகிறது. இதில், மூன்றாவது திதி, திரிதியை. ஆங்கிலத்தில் மூன்றை, "த்ரீ' என்கிறோம். அதுவும், சமஸ்கிருதப் பெயரான திரிதியையும் ஒத்துப்போகிறது. "அக்ஷய' என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு, "வளர்தல்' என்று பெயர். உலகத்தில், தர்மம் வளர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
மனதை தொட்ட இளைஞர் மன்றம்!உறவினர் ஒருவரின் தாய் இறந்த துக்கத்திற்காக, சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். வறுமையில் வாடும் என் உறவினர், தன் தாயின் இறந்த செலவை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்! இந்நிலையில், அந்த கிராமத்தின் இளைஞர் மன்ற தலைவராக உள்ள இளைஞர் ஒருவர், தம் மன்ற ஆட்களுடன் வந்து, என் உறவினரிடம் ஒரு பெரிய தொகையை தந்து, "கவலைப்படாமல், ஆக வேண்டிய வேலையை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
அமிதாப் பச்சன் மாதிரி உயரம். முகச்சாயல் கூட, ஏறக்குறைய அப்படித்தான். நிறம் நல்ல சிவப்பு. "தசா புசா'வென்று, முழங்கால் வரை கிடந்த குர்தா. வெகு கம்பீரமான தோற்றம். இப்படி ஒரு பேர்வழி, எங்கள் ஆபீசுக்கு டிரைவராக வந்து சேர்ந்தார்.சில பேருக்கு, தோற்றம் பிரமாதமாக அமைந்து விடுகிறது. அதுவே அவர்களுக்கு, துரதிருஷ்டமாகவும் ஆகி விடுகிறது.புதிய டிரைவரின் விஸ்வரூபத்துக்கும், என் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
அன்று, வழக்கமாக நண்பர்கள் கூடும் இடத்திற்கு, முன் கூட்டியே சென்று விட்டோம் நானும், லென்ஸ் மாமாவும். குறிப்பிட்ட நேரமாகாததால் நண்பர்களின் கார், பைக் எதையுமே காணோம். ஆனால், எங்களது பகுதியைத் தாண்டி, தூரத்தில் ஒரு, 118 என்.இ., கார் நின்றிருந்தது.கார் முழுவதும் அடிப்பட்ட தடங்களும், கோடுகளும் இருக்கவே, அது அறிமுகம் உள்ள ஒரு அன்பரின் கார் தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
*சி.ராம், இனாம் மணியாச்சி: பத்திரிகை ஆசிரியருக்கு திருப்தி தருவது எது?செய்தி வெளியிடுவதில், செய்தி சேகரிப்பதில், வெளியீட்டாளர் மற்றும் பத்திரிகை அதிபர் தலையீடு இல்லாமல் இருப்பது; செய்தி சேகரிக்க, தாராளமாக செலவு செய்ய நிர்வாகம் அனுமதிப்பது... தன் பத்திரிகை, விற்பனையில் முதலிடம் வகிப்பது... இவையே திருப்தியைத் தரும்!***** என்.மோகன், மவுலிவாக்கம்: மனிதனுடைய கொடிய விரோதியாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
வட ஆப்ரிக்காவின் மொராக்கோ நாட்டில், கேசபிளான்கா என்ற நகரில் உள்ள ஷாப்பிங் மாலில், அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மீன் தொட்டி, ஆச்சரியத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த ஷாப்பிங் மாலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில், ஷாப்பிங் மாலின் கீழ் தளத்தில், அதிசயிக்கதக்க வகையிலான, பிரமாண்டமான மீன் தொட்டி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
ஈ.வெ.ரா.,வும், ராஜாஜியும் அரசியல் களத்தில் கீரியும், பாம்பும் போல இருந்தனர். தொடக்க கால அரசியலில் இருவரும், அத்யந்த நண்பர்களாக இருந்தனர்.ராஜாஜி தான், என் குரு என்று, ஈ.வெ.ரா.,வே சொல்லியிருந்தார். அவர்களுக்குள் பிறகு ஏன் பிரிவு ஏற்பட்டது என்று, சென்னை பொதுக்கூட்டம் ஒன்றில், ஈ.வெ.ரா.,வே சொன்னார்:அந்தக் காலத்தில் ஆச்சாரியாருக்கு, என்னை விட சிறந்த நண்பர் எவரும் இல்லை. இப்போது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
சிறைக்கைதிகளுக்கு சினிமா!தமிழகத்திலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும், கைதிகளுக்காக, நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படங்களை திரையிட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தவறு செய்தவர்கள் திருந்தி வாழ முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இதன் முன்னோட்டமாக, சமீபத்தில், சேலம் சிறைச்சாலையில், "நண்பன்' படம், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
ஆற்றில் குளிக்க போவதற்காக, சைக்கிளை எடுத்தான் சிவஞானம்.தெருவில் சைக்கிளை இறக்கியவன், தெற்கே பார்த்தால், சைக்கிளில் இசக்கி வருவது தெரிந்தது.இசக்கி இந்த நேரம் வந்ததால், சிவஞானம் புரிந்து கொண்டான்.இசக்கியின் சைக்கிள் நெருங்கியது; சைக்கிளின் பின், தென்னை ஓலை இருந்தது.""யாருடே?'' என்றான் சிவஞானம்.""நம்ம காபி கிளப் பாட்டையா...'' என்றான்.""பிரமநாயகம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு —எனக்கு, வயது: 30. திருமணமாகி, 10 வருடங்கள் ஆகிறது. எனக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவர் தங்கமானவர். என் மேல் உயிரையே வைத்திருக்கிறார்; நானும் அப்படித்தான்; அவர் மேல் உயிரையே வைத்திருக்கிறேன். கடந்த மூன்றாண்டுகளாக, ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறேன். ஆறு மாதத்திற்கு முன், என் கடை முதலாளி, என்னை பார்த்து, "உன்னை எனக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
மூப்பை அடையாளம் காட்டும் நரை விழுந்த தலைமுடி, தலையை மறைக்கும் வகையில் முக்காடு, ஆண்கள் அணியும் முழுக்கை சட்டை, மூக்கில் பெரிய மூக்குத்தி என, வட மாநிலத்திலிருந்து, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், தீர்த்தமாட வந்த மூதாட்டியை நினைவுபடுத்துகிறார், 78 வயதான சந்திரா தோமர் என்ற பெண்மணி. இவருக்கு, 15 பேரக் குழந்தைகள் உள்ளனர். உ.பி.,யில், ஒரு குக்கிராமத்தில் உள்ள சின்னஞ்சிறிய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
சொன்னது நீதானா?* சில நாட்களாகவேஉன் முகத்தாமரைமலராத மொட்டாகவேமுகிழ்த்திருக்கிறது!* புன்னகை முத்துக்களைசிரித்துச் சிந்தாமல்உன் இதழ்களுக்குள்ளேநீ சேமித்துக் கொண்டதனால்மனதால் மட்டுமேநான் நஷ்டப்பட்டிருக்கிறேன்!* என் ஞாபகக் குளிரில்உன் நினைவுகளையேபோர்வையாக்கிக் கொள்கிறேன்!* என் உதடுகள்உச்சரித்த வார்த்தைகளில்ஏதாகிலும் ஒன்று,உன் இதயத்தைதைத்திருக்கக்கூடும்!* ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
மாடு கன்றுகளை மேய்த்துத்தான், மகனை படிக்க வைத்தார் இசக்கி. கொடிமுத்து நன்கு படித்தான். உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே, அவன் ஆசிரியர்கள் அங்கலாய்ப்பர்."யோவ் இசக்கி... நீ வெறும் கை நாட்டு; ஒன் மவன் பெரிய படிப்பாளியா... அவன் தான்யா கிளாஸ்லே பர்ஸ்ட். நீ மட்டும் அவனை மேலே படிக்க வெச்சே... அவன் எங்கேயோ போயிடுவான்யா. அவ்வளவு புரிஞ்சிக்கற சக்தி...'இசக்கியை, இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
சீனாவில் மக்கள் தொகை அதிகரித்துள்ள அளவுக்கு, வேலை வாய்ப்புகள் இல்லை. அங்குள்ள இளைஞர்கள், "எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை, கை நிறைய காசு கிடைத்தால் சரி...' என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். சீனாவில், இறந்தவர்களை அடக்கம் செய்யும் கல்லறைகளுக்கு, பெரும்மரியாதை தரப்படுகிறது. உடல்களை அடக்கம் செய்வதற்காக, கல்லறைக்கு வருவோர், துக்கம் தாளாமல் கதறி அழுவது, அனைத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
ஆர்யா சகாய முல்யா சுகியர்தோ! என்ன, பெயரை படிக்கும்போதே தலை சுற்றுகிறதா? இந்த ஏழு வயதுச் சிறுவனின் சாதனையை கேட்டால், மயக்கமே வந்து விடும். ஆர்யா, இந்தோனேசியாவைச் சேர்ந்த சிறுவன். இவன் தந்தை, மலையேற்ற வீரர்.இதனால், இந்த சிறுவனுக்கும், பால் மணம் மாறாத வயதிலேயே மலையேறும் ஆசை வந்து விட்டது. தன் தந்தையிடம் கற்றுக் கொண்ட வித்தையை உதவியாக வைத்து, இதுவரை உலகின் மிகவும் பிரபலமான, 14 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள பிரபலமான ஷூ நிறுவனம், தங்களால் தயாரிக்கப்படும் ஷூக்களின் விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்காக, புதுமையான விளம்பர தந்திரத்தை கையாளுகிறது.ஷூ வடிவத்திலேயே பிரமாண்டமான, எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது. இதன் விலை, 3.2 லட்சம். இரண்டு பேர், இந்த காரில் பயணம் செய்ய முடியும். ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்வதன் மூலம், இந்த காரில் அதிகபட்சமாக, 250 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X